1
00:00:01,000 --> 00:00:03,760
இத்தொடரில் தற்கொலை தொடர்பான காட்சிகள்
இடம்பெற்றுள்ளன.

2
00:00:03,840 --> 00:00:04,960
பார்வையாளர்கள் கவனத்திற்கு.

3
00:00:22,800 --> 00:00:23,920
சட்டன்?

4
00:00:36,840 --> 00:00:38,240
சட்டன்!

5
00:00:39,160 --> 00:00:40,320
ஓ, கடவுளே.

6
00:00:56,160 --> 00:00:57,200
அப்பா!

7
00:01:12,600 --> 00:01:13,760
அவ இறந்துட்டா.

8
00:01:16,120 --> 00:01:17,240
சட்டன் இறந்துட்டா.

9
00:01:20,840 --> 00:01:22,160
டாக்டர் லாசரஸ்?

10
00:01:24,680 --> 00:01:25,840
டாக்டர் லாசரஸ்?

11
00:01:25,920 --> 00:01:28,840
தற்போது

12
00:01:28,920 --> 00:01:30,840
புதிய நோயாளி தயாரா இருக்காங்க.

13
00:01:33,040 --> 00:01:34,040
ஆர்லோ ஜோன்ஸ் வழக்கு-
தண்டனை

14
00:01:34,120 --> 00:01:35,040
நீதிபதி தீர்ப்பு

15
00:01:35,120 --> 00:01:36,000
ஜோன்ஸ் - ஆயுள் தண்டனை

16
00:01:54,200 --> 00:01:57,160
பாதுகாப்பான மனநல பிரிவு

17
00:02:17,200 --> 00:02:19,880
வரும் அழைப்பு
அப்பா

18
00:02:37,400 --> 00:02:38,600
அப்ப, சரி.

19
00:02:40,160 --> 00:02:41,160
ஆர்லோ.

20
00:02:43,320 --> 00:02:44,600
இங்கிருந்து என்னை கூட்டிட்டு போ.

21
00:02:44,680 --> 00:02:46,960
இப்ப என்னால அதை செய்ய முடியாது.

22
00:02:47,480 --> 00:02:49,160
அப்ப நீ எதுக்கு பிரயோசனம்?

23
00:02:49,240 --> 00:02:53,000
நீ உன் உணர்வுகளைப்பற்றி பேசுவதற்காக
நான் இங்கே வந்தேன்,

24
00:02:53,080 --> 00:02:57,000
அது… உங்க மனதில் இருக்கும்
எண்ணங்களைப் பற்றி.

25
00:02:57,640 --> 00:02:58,680
என்ன எண்ணங்கள்?

26
00:02:58,760 --> 00:03:00,600
என்ன எண்ணங்களை பற்றி
விவாதிக்க விரும்பறீங்க?

27
00:03:03,520 --> 00:03:04,360
கடவுள்.

28
00:03:05,200 --> 00:03:06,880
நான் அவரோடு பேசிட்டு இருந்தேன்.

29
00:03:06,960 --> 00:03:10,120
கடவுளோட எதைப்பற்றி பேசிட்டு இருந்தீங்க?

30
00:03:13,400 --> 00:03:14,400
உங்க குற்றங்களா?

31
00:03:15,640 --> 00:03:16,640
உன்னை பற்றி.

32
00:03:19,000 --> 00:03:20,240
ஏன் என்னைப்பற்றி?

33
00:03:20,320 --> 00:03:23,160
உன்னை நம்பலாமா என அவரிடம் கேட்டேன்.

34
00:03:23,240 --> 00:03:24,920
அவர் பதில் சொன்னாரா?

35
00:03:25,400 --> 00:03:29,080
அவர் இல்லைன்னார்.

36
00:03:29,760 --> 00:03:32,400
நீ போலின்னு சொன்னார்,

37
00:03:32,480 --> 00:03:35,680
உனக்கு தண்டனை தரும்படி கேட்டேன்,
என்ன சொன்னார் தெரியுமா?

38
00:03:36,720 --> 00:03:38,280
என்ன சொன்னார்?

39
00:03:40,520 --> 00:03:42,040
எனக்காக மட்டும்,

40
00:03:42,760 --> 00:03:46,800
அதை செய்வாராம்.

41
00:04:02,200 --> 00:04:03,160
ஹேய்.

42
00:04:03,840 --> 00:04:05,000
அது அப்பா.

43
00:04:05,080 --> 00:04:08,240
ஆமாம், என்னை அழைத்தார்.
நான் எடுக்கலை. என்ன விஷயம்?

44
00:04:08,320 --> 00:04:10,600
லாஸ், அவர் இறந்துட்டார்.

45
00:04:11,920 --> 00:04:12,800
என்ன?

46
00:04:12,880 --> 00:04:16,680
தன் அலுவலகத்தில் தன்னை சுட்டுக் கொண்டார்.

47
00:04:25,960 --> 00:04:27,800
நீ இருக்கியா?

48
00:04:31,680 --> 00:04:37,680
ஹார்லன் கோபென்'ஸ் லாசரஸ்

49
00:04:46,600 --> 00:04:49,160
பிரபல மருத்துவர்,
டாக்டர் ஜோனதன் லாசரஸ்,

50
00:04:49,240 --> 00:04:51,160
தன் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது.

51
00:04:51,240 --> 00:04:54,920
25 ஆண்டுகள் முன்பு கொடுமையாக கொல்லப்பட்ட
சட்டன் லாசரஸின் தந்தையாக

52
00:04:55,000 --> 00:04:57,680
சோகமயமாக நினைவு கூரப்படுகிறார்.

53
00:04:57,760 --> 00:05:00,520
அவரது கொலையாளியின் தேடல்
தேசிய கவனத்தை தூண்டியது,

54
00:05:00,600 --> 00:05:02,640
ஆனால் இன்றுவரை பிடிபடவில்லை.

55
00:05:02,720 --> 00:05:06,760
டாக்டர் ஜோனதன் லாசரஸின்
இரு பிள்ளைகள் உள்ளனர்,

56
00:05:06,840 --> 00:05:08,440
ஜோயல் மற்றும் ஜென்னா.

57
00:05:10,560 --> 00:05:14,160
அடுத்து வருவது வானிலை,
நாம் செல்வோம்…

58
00:05:29,720 --> 00:05:31,200
இடதுபுறம் நகர்ந்துட்டே இரு.

59
00:05:31,920 --> 00:05:33,360
அட வா. வா, நண்பா.

60
00:05:33,440 --> 00:05:34,960
வளைவாக சுற்றி இடதுபுறம் போ.

61
00:06:18,120 --> 00:06:20,240
அர்த்தமே இல்லை.

62
00:06:22,120 --> 00:06:23,600
எப்போதிலிருந்து துப்பாக்கி இருந்தது?

63
00:06:25,000 --> 00:06:25,960
அவரிடம் இல்லை.

64
00:06:27,200 --> 00:06:28,360
குறிப்பு எங்கே?

65
00:06:28,440 --> 00:06:31,760
அசல் போலீஸிடம் இருக்கு, ஆனால்
இந்த நகலை எனக்கு தந்தனர்.

66
00:06:31,840 --> 00:06:34,400
மனிதர்களின் மனங்களை ஆராய்வதை
தொழிலாக கொண்டவருக்கு,

67
00:06:34,480 --> 00:06:36,640
இன்னும் கொஞ்சம் தெளிவை அவர்
நமக்கு தந்திருக்கலாம்.

68
00:06:37,120 --> 00:06:38,120
"இது இன்னும் முடியவில்லை."

69
00:06:38,200 --> 00:06:39,760
இது இன்னும் முடியவில்லை.

70
00:06:39,840 --> 00:06:41,320
அதுக்கு என்ன அர்த்தம்?

71
00:06:42,400 --> 00:06:43,280
நீ சொல்லு.

72
00:06:43,360 --> 00:06:46,760
அந்த மேஜை? மூன்று கால்கள்.
ஏதோ குறியீடு போல.

73
00:06:47,960 --> 00:06:49,800
இது இருந்தது…

74
00:06:52,640 --> 00:06:54,520
வேலையில் அவர் மேஜையில்.

75
00:07:02,240 --> 00:07:06,480
பள்ளிப்பெண் கொலையில் சந்தேக நபர் விடுதலை,
மேலும் துப்புகள் இல்லை என்கிறது போலீஸ்

76
00:07:06,560 --> 00:07:08,240
அவர் சட்டன் பற்றி பேசினாரா?

77
00:07:08,320 --> 00:07:09,840
அவளைப்பற்றி பேசியதே இல்லை.

78
00:07:10,680 --> 00:07:13,120
ஏன் அவர் இதை செய்தாரென எனக்கு புரியலை.

79
00:07:16,360 --> 00:07:18,960
இது இன்னும் முடியவில்லை.

80
00:07:29,080 --> 00:07:30,240
சட்டன்?

81
00:07:48,480 --> 00:07:49,520
என்ன இது?

82
00:09:06,720 --> 00:09:08,160
சேத்
வேலை முடிய போகுது. நீ என்ன பண்ற?

83
00:09:08,240 --> 00:09:13,360
லேடீஸ், இது சோகமான தினம், ஏன்னா சேத்,
அதிகாரப்பூர்வமாக மார்க்கெட்ல் இல்லை.

84
00:09:13,720 --> 00:09:15,800
நான் என்ன சொல்வது? ஜென்னாவுக்கு நல்ல ரசனை.

85
00:09:16,400 --> 00:09:17,640
-வாயை மூடு.
-அதை கொடு.

86
00:09:21,360 --> 00:09:22,320
சேத்!

87
00:09:22,400 --> 00:09:25,600
அதோ இருக்கான். வா, கட்டிக்கோ.

88
00:09:25,680 --> 00:09:27,920
-உன்னை பாரு.
-பற்களை பிடிக்குது. யாரோடது?

89
00:09:29,080 --> 00:09:31,760
தாடி பிடிச்சிருக்கு, டபுள் சினை மறைக்குது.

90
00:09:31,840 --> 00:09:32,800
என்ன தைரியம்.

91
00:09:34,000 --> 00:09:35,840
வாழ்த்துக்கள். எப்ப பிறக்கும்?

92
00:09:35,920 --> 00:09:38,960
விடு. அது என் பீர் பேபி.
அட வா. ரோஸி க்யூ'ஸ்?

93
00:09:39,360 --> 00:09:40,480
வேறு எங்கே?

94
00:09:56,280 --> 00:09:59,000
இன்னும் புதுப்பிப்பு இங்கே வரலைன்னா
பார்க்க நல்லா இருக்கு.

95
00:09:59,080 --> 00:10:01,160
ஆமாம். உனக்கு பெல்லாவை தெரியுமே.
"மாற்றம் மரணம்."

96
00:10:04,640 --> 00:10:05,880
நீ என்ன குடிக்கிறே?

97
00:10:06,440 --> 00:10:07,440
வோட்கா டானிக்.

98
00:10:08,920 --> 00:10:10,080
ஏன்?

99
00:10:10,160 --> 00:10:12,200
ஃபாட்மேப் உணவு. கோதுமை இல்லை.

100
00:10:13,200 --> 00:10:16,360
பார்க்கு வந்துட்டு டயட் மெயின்டெய்ன்
பண்றியா நீ?

101
00:10:16,440 --> 00:10:19,160
வயிறு வீக்கத்தோட அராஜகவாதியா இருந்து பார்.

102
00:10:22,360 --> 00:10:23,680
பெல்லா அதோ இருக்கா.

103
00:10:24,800 --> 00:10:27,160
நான் ட்ரிங்க்ஸை எடுத்துட்டு வரேன். போ,
போய் ஹலோ சொல்லு.

104
00:10:38,640 --> 00:10:39,680
நீ நலமா?

105
00:10:39,760 --> 00:10:40,880
-சிறப்பா இருந்ததில்லை.
-சரி.

106
00:10:45,080 --> 00:10:46,080
ஹலோ, அழகே.

107
00:10:48,280 --> 00:10:51,400
லாஸ்! உளவியலாளர் திரும்பிட்டார்.

108
00:10:51,480 --> 00:10:52,840
மனநல மருத்துவர்.

109
00:10:52,920 --> 00:10:54,960
என்னவோ. நீ திரும்பி வந்து என்ன பண்றே?

110
00:10:56,280 --> 00:10:57,840
எங்கப்பா இறந்துட்டார்.

111
00:11:00,000 --> 00:11:01,200
ஓ, கடவுளே.

112
00:11:02,640 --> 00:11:06,040
நாம பிரிந்த போது, எனக்கு கிடைக்க கூடிய
சிறந்த பெண்ணை இழந்தேன் என்றார்.

113
00:11:08,000 --> 00:11:09,280
அவர் சொன்னது சரி.

114
00:11:11,080 --> 00:11:12,320
ஒருவேளை இருந்திருப்பார்.

115
00:11:13,280 --> 00:11:14,280
பெல்லா!

116
00:11:16,160 --> 00:11:17,440
நான் சேவை செய்ய தொடங்கணும்.

117
00:11:23,240 --> 00:11:24,880
நான் ரொம்ப வருந்தறேன், லாஸ்.

118
00:11:30,360 --> 00:11:32,760
ரோஸி கியூ

119
00:11:33,640 --> 00:11:35,760
அவர் தெளிவா சட்டனை பற்றி நினைத்திருப்பார்.

120
00:11:36,680 --> 00:11:38,280
இது அவர் மேஜை மீது இருந்தது.

121
00:11:46,120 --> 00:11:49,600
அன்றிரவு நடந்ததை நம்மில் யாருமே
மறக்கலைன்னு நினைக்கிறேன்.

122
00:11:52,120 --> 00:11:54,680
அவர் அதனால் அழிந்து போனார்.
சட்டன் அவருக்கு பிடித்தவர்.

123
00:11:54,760 --> 00:11:55,880
இல்லை, நண்பா.

124
00:11:55,960 --> 00:11:57,760
அவர் சொல்லலை, ஆனால்
எல்லாருக்கும் தெரியும்.

125
00:11:57,840 --> 00:12:01,200
"பிடித்த இரட்டையர் இல்லைங்கிறத",
என்னை நம்பு, கண்டிப்பா நோட்டீஸ் பண்ணிடுவ.

126
00:12:02,840 --> 00:12:06,160
அவருக்கு முடிவு கிடைத்திருக்கலாம்,
யாராவது அதற்கு பிடிபட்டிருக்கலாம்.

127
00:12:08,720 --> 00:12:10,400
கேட்க நினைத்தேன்,
ஜென்னா எப்படி இருக்கா?

128
00:12:11,600 --> 00:12:12,880
அவ நல்லா இருக்கா.

129
00:12:13,960 --> 00:12:15,200
அவளை அழைக்கணுமா?

130
00:12:15,280 --> 00:12:17,960
தெரியல, அது சோகமான செக்ஸ்ல போய் முடியும்னு
நினைச்சன்னா பண்ணு.

131
00:12:18,040 --> 00:12:20,360
என்ன? அவ தோழிதான், சரியா?

132
00:12:20,440 --> 00:12:22,080
நான் கேட்கிறேன்

133
00:12:22,160 --> 00:12:24,560
அவ அழைப்பை பாராட்டுவான்னு
நீ நினைக்கிறியான்னு.

134
00:12:25,600 --> 00:12:27,480
ஆமாம், நீ அழைக்கணும்னு நினைக்கிறேன்.

135
00:12:29,000 --> 00:12:31,840
துக்க உறவு என்பது ஒரு விஷயம்.
உண்மையில், அது பொதுவானது.

136
00:12:32,240 --> 00:12:34,400
உயிரோட இருக்க வேண்டிய அவசியத்தோடு
செய்ய வேண்டியது.

137
00:12:34,480 --> 00:12:35,560
தெரியும்.

138
00:12:36,640 --> 00:12:37,720
நல்லா இருக்குல்ல?

139
00:12:41,480 --> 00:12:43,080
-இன்னும் ஒன்று?
-இயற்கையாக.

140
00:12:43,160 --> 00:12:44,400
ஃபாட்மேப்பா அராஜகமா?

141
00:12:45,520 --> 00:12:46,920
நாம காட்டுத்தனமா ஆவோம்.

142
00:13:02,920 --> 00:13:05,280
தன் அலுவலகத்தில் தன்னை சுட்டுக் கொண்டார்.

143
00:14:09,800 --> 00:14:12,360
தி ஜூனிபர் புஷ்

144
00:14:45,040 --> 00:14:46,800
டாக்டர் எல்? தாமதத்துக்கு மன்னிக்கணும்.

145
00:14:47,160 --> 00:14:48,600
இல்லை, சாரி, நான் அவர் மகன்.

146
00:14:48,680 --> 00:14:52,440
என்னையே வெறுக்கறேன். எனக்கே சொல்றேன்,
"கசாண்ட்ராா, நீ கிளம்ப பத்து நிமிடங்களே."

147
00:14:52,520 --> 00:14:55,360
-நான் அவர் மகன்…
-ஒரு நிமிடம் இருக்கும் வரை விளையாடுவேன்.

148
00:14:55,440 --> 00:14:58,320
-கசாண்ட்ர, நான் அவர் மகன்,
-பிறகு பாதுகாப்பா சிறுநீர் போகணும்…

149
00:14:58,400 --> 00:15:01,600
-மன்னிக்கணும்?
-அப்புறம் மூன்று நிமிடங்கள் நான் தாமதம்.

150
00:15:01,680 --> 00:15:03,040
அப்புறம் அது வந்து…

151
00:15:04,200 --> 00:15:05,720
நீ வேணும்னே செய்யறே.

152
00:15:05,800 --> 00:15:10,920
ஆமாம். சரி! அதாவது, எனக்கு அழுத்தமா
இருக்கணும், கவலையா இருக்கணும்.

153
00:15:11,000 --> 00:15:12,880
வேறு எந்த வழியிலும் என்னால
செயல்பட முடியாது.

154
00:15:17,760 --> 00:15:21,440
நான் வருந்தறேன் உங்களுக்கு
செய்தி வெச்சிருக்கேன் டாக்டர் லா…

155
00:15:21,520 --> 00:15:23,560
எனக்கு மீண்டும் இந்த எண்ணங்கள் வருது.

156
00:15:28,480 --> 00:15:31,240
நான் சொன்னது கேட்டதா, எனக்கு
மீண்டும் இந்த எண்ணங்கள் வருதுன்னேன்.

157
00:15:34,880 --> 00:15:36,400
என்த எண்ணங்கள்?

158
00:15:36,960 --> 00:15:40,320
அந்த… கொலை எண்ணங்கள்.

159
00:15:42,680 --> 00:15:43,800
அப்படியா.

160
00:15:51,760 --> 00:15:54,320
இந்த எண்ணங்களில் என்ன இருக்கு?

161
00:15:56,480 --> 00:15:58,880
அவன். இறந்து.

162
00:15:59,480 --> 00:16:01,800
அவனோட இறந்த முகத்தை பார்க்கிறேன்.

163
00:16:01,880 --> 00:16:04,520
நான் அவனை அடித்த இடத்தில் ரத்தம் வருகிறது,

164
00:16:04,600 --> 00:16:07,200
அவனை தரையில் முறைக்கிறேன்,
நான் உணர்வது…

165
00:16:10,720 --> 00:16:12,040
எதையுமில்லை.

166
00:16:12,920 --> 00:16:14,960
மகிழ்ச்சி இல்லை, நிவாரணம் இல்லை,
எதுவும் இல்லை.

167
00:16:15,680 --> 00:16:16,920
யார் அந்த ஆள்?

168
00:16:20,280 --> 00:16:21,280
அவன்.

169
00:16:22,840 --> 00:16:26,400
நீல், என் காதலன். அந்த கிறுக்கன்.

170
00:16:27,040 --> 00:16:31,520
இந்த எண்ணங்கள், அவை நினைவுகளா?

171
00:16:31,600 --> 00:16:33,480
இருந்துட்டா மட்டும்.
அவன் இன்னும் இருக்கான்.

172
00:16:34,840 --> 00:16:37,960
எனக்காக வீட்டில் காத்திருக்கான்,
தாமதமா கூடாதுன்னு எச்சரித்தான்.

173
00:16:39,720 --> 00:16:43,080
கூடவே, ஒரு ஆள் என்னை பின்தொடர்றான்னு
நான் சொல்லணும்.

174
00:16:44,800 --> 00:16:45,800
உன்னை பின்தொடர்றானா?

175
00:16:45,880 --> 00:16:49,360
என்னை பார்க்கிறான், சில சமயம்
என்னை தொடர்றான்,

176
00:16:49,440 --> 00:16:51,200
என் மனதில், நான் அவரை கொல்றேன்.

177
00:16:52,360 --> 00:16:57,320
திரும்பி அவரை குத்திட்டேன், எதுவும் உணரலை.

178
00:17:00,360 --> 00:17:03,920
அதாவது… அதாவது, ஏன்,
நான் ஏன் இந்த விஷயங்களை நினைக்கணும்?

179
00:17:04,000 --> 00:17:05,920
அதுக்கு அர்த்தமே இல்லை.

180
00:17:06,000 --> 00:17:08,600
கசாண்ட்ரா, அந்த ஆள்,

181
00:17:08,680 --> 00:17:12,520
நீல் பற்றிய உங்க உணர்வுகள்

182
00:17:13,200 --> 00:17:16,520
இந்த புது ஆர்வலர் மீது தெறிக்கிறதா?

183
00:17:21,160 --> 00:17:22,240
நான் எடுத்துக்கவா?

184
00:17:25,960 --> 00:17:26,960
உங்களுக்கு ஒன்று வேணுமா?

185
00:17:34,600 --> 00:17:36,280
ஏன் கூடாது? சின்னது.

186
00:17:50,160 --> 00:17:54,360
நான் அவரை கொல்றேன், அவரை பார்க்கிறேன்,

187
00:17:57,600 --> 00:17:59,520
எதுவும் உணரலை.

188
00:18:09,200 --> 00:18:11,080
நான் உங்க கிளாஸை நிரப்பறேன்.

189
00:18:15,240 --> 00:18:16,800
நீங்க முன்பு சொன்னது போலத்தான்.

190
00:18:17,400 --> 00:18:21,920
வாழ்வை வலியோடு வாழ்வதை பற்றி
நீங்க என்ன சொல்லுவீங்க?

191
00:18:23,400 --> 00:18:24,560
எனக்கு நினைவூட்டுங்க.

192
00:18:38,440 --> 00:18:39,280
கசாண்ட்ரா?

193
00:18:46,440 --> 00:18:47,560
கசாண்ட்ரா?

194
00:19:08,800 --> 00:19:10,400
நேற்றிரவு நீ என்ன செய்தே?

195
00:19:14,240 --> 00:19:17,840
நான்… பெல்லாவை கண்டேன்.

196
00:19:17,920 --> 00:19:20,320
என்ன? அவ பார்லையா?

197
00:19:21,760 --> 00:19:23,720
அவ அங்கே இருப்பதற்கான வாய்ப்புகள்.

198
00:19:24,920 --> 00:19:27,320
அவ… அவ இன்னும் இருக்காளா…

199
00:19:27,400 --> 00:19:30,000
அவன் பெயர் என்ன? பால்.

200
00:19:31,120 --> 00:19:33,360
எப்பவும் "அவன் பெயர் என்ன?"

201
00:19:33,680 --> 00:19:34,720
பால்.

202
00:19:35,520 --> 00:19:37,680
அப்ப ஏன் "அவன் பெயர் என்ன"வை சேர்க்கணும்?

203
00:19:37,760 --> 00:19:41,680
ஆமாம், இன்னும் பாலோடதான் இருக்கா.
நீ அவனை வெறுக்கிறே.

204
00:19:42,400 --> 00:19:46,080
அவனை வெறுக்காதே. சும்மா…
அவன் சாதாரணமானவன்னு நினை.

205
00:19:46,160 --> 00:19:49,640
"சாதாரணமானவனா"? என்ன,
லாஸ் போல கூல் இல்லையா?

206
00:19:50,520 --> 00:19:53,200
ஹேய், பெல்லா கூல்தான். அவ…

207
00:19:54,040 --> 00:19:55,440
அவ கூலான நபர்.

208
00:19:55,520 --> 00:20:00,520
பால் அடிப்படையில் கோல்ஃப் விரும்பி. எப்படி
சேர்ந்து இருக்காங்கன்னு தெரியலை.

209
00:20:00,600 --> 00:20:02,920
உங்க ரெண்டு பேரை விட அதிகமா
கல்யாணமாகி இருக்காங்க.

210
00:20:03,000 --> 00:20:05,720
ஹை பார், ஜென். நாங்க ரொம்ப சின்ன வயசில
கல்யாணம் பண்ணிட்டோம்.

211
00:20:05,800 --> 00:20:09,520
அது நீடித்திருக்காது, இப்ப
நாங்க சந்திச்சிருந்தா, யாருக்கு தெரியும்.

212
00:20:12,800 --> 00:20:16,280
குழந்தைக்கு வயசு என்ன… அவன் பெயர் என்ன?

213
00:20:18,560 --> 00:20:21,680
எய்டன். பதினைந்து.

214
00:20:23,080 --> 00:20:24,440
ஏதாவது விசித்திரமா ஆயிருக்கானா?

215
00:20:24,520 --> 00:20:30,360
அவன் விசித்திரமானவன் இல்லை, லாஸ்.
தன் சொந்த வகையில் தனித்துவமானவன்.

216
00:20:31,040 --> 00:20:32,200
அப்ப விசித்திரமா ஆயிட்டான்.

217
00:20:32,960 --> 00:20:34,120
ஆமாம்.

218
00:20:36,000 --> 00:20:40,840
இப்ப பாரு… நான் மார்கோவிடம்
பேச விரும்பினேன்,

219
00:20:40,920 --> 00:20:45,040
அப்பாவின் இறுதி நாட்களைப் பற்றி.

220
00:20:46,480 --> 00:20:51,120
அவரை கண்டதை பற்றி மிக அதிர்ச்சியில்
இருக்காங்கன்னு எச்சரிக்கணும்.

221
00:20:52,120 --> 00:20:53,760
அவங்களுக்கு ரெய்கி தந்தேன்.

222
00:20:53,840 --> 00:20:58,280
அவங்க ஒளி வந்து…
இந்த சாம்பல் நிறைந்த மஞ்சள்.

223
00:20:58,360 --> 00:20:59,960
ஓ, கடவுளே, அப்படியா?

224
00:21:00,960 --> 00:21:05,400
ஆமாம், இருந்தது. நீ பிரபஞ்சத்தின்
ஆற்றல்களுக்கு உன்னை திறந்து கொண்டால்,

225
00:21:05,480 --> 00:21:06,880
உன் வாழ்வை மாற்றும்.

226
00:21:07,480 --> 00:21:09,840
-மாற்றுமா?
-ஆமாம்.

227
00:21:11,400 --> 00:21:13,240
என் ஒளி என்ன நிறம்?

228
00:21:17,800 --> 00:21:19,560
அது கிறுக்கன் நிறம்.

229
00:21:21,000 --> 00:21:22,440
ஆழம்.

230
00:21:47,240 --> 00:21:49,840
நோயாளிகள் கோப்புகள்
இங்கே மேலே இருக்கு.

231
00:21:49,920 --> 00:21:53,840
உன் தந்தை ஒழுங்குபடுத்தும்
துறையில் ஆசீர்வதிக்கப்படலை.

232
00:21:54,640 --> 00:21:57,360
தெரியும், மார்கோ, ஆனால்
அதிர்ஷ்டவசமா, அவருக்கு நீங்க இருந்தீங்க.

233
00:21:57,440 --> 00:21:58,600
இருந்தேன்.

234
00:22:02,560 --> 00:22:04,320
நாங்க ஒரு நல்ல அணி.

235
00:22:08,640 --> 00:22:11,240
மன்னிக்கணும், அது…
அது இங்கே திரும்பி வந்தது…

236
00:22:12,240 --> 00:22:15,000
கசாண்ட்ரான்னு சொல்றே. குடும்ப பெயர்?

237
00:22:15,640 --> 00:22:16,600
தெரியலை.

238
00:22:16,680 --> 00:22:19,760
சரி, அது அதை சிக்கலானதாக்குது.
குடும்ப பெயர் மூலம் ஒழுங்கமைப்போம்.

239
00:22:19,840 --> 00:22:22,280
அப்ப, தரவுத்தளமோ, கணினி அமைப்போ இல்லையா?

240
00:22:22,360 --> 00:22:23,840
உங்கப்பாவுக்கு காகித அமைப்புதான்.

241
00:22:23,920 --> 00:22:28,440
அடிக்கடி குறிப்புக்கு அமர்வுகளை பதிவு
செய்தார், தொழில்நுட்பம் பற்றி கவலை இல்லை.

242
00:22:33,800 --> 00:22:35,640
நீ நல்ல பையன், ஜோயல்.

243
00:22:37,480 --> 00:22:40,560
நீங்க இருவரும் பிஸின்னு தெரியும்,
விரும்பிய அள வு பேச முடியலை,

244
00:22:40,640 --> 00:22:42,920
ஆனால் உன்னை பற்றி பெருமை
பட்டார், தொழில்முறையாக.

245
00:22:45,720 --> 00:22:48,680
தொழிலை தேர்வு செய்தது, அவரை போலிருக்க
விரும்பினேன்னு நினைக்கிறேன்.

246
00:22:49,480 --> 00:22:50,840
ஆமாம், ஒருவேளை.

247
00:22:52,880 --> 00:22:55,840
அவர் சிறப்பானவர், தெரியுமா,
மனதிற்குள் நுழைவதில்.

248
00:22:57,080 --> 00:22:58,400
நீங்க அவர் மனதில் நுழைந்தீங்களா?

249
00:23:00,760 --> 00:23:01,920
எப்போதாவது.

250
00:23:02,600 --> 00:23:08,280
சட்டன் மற்றும் அவள் கொல்லப்பட்ட இரவு பற்றி
எப்போதாவது பேசினாரா?

251
00:23:10,320 --> 00:23:12,920
கொஞ்சம். ஏன்?

252
00:23:14,160 --> 00:23:16,120
நான் எப்போதும் உணர்ந்தது அவர்…

253
00:23:16,200 --> 00:23:17,760
உன்னை குற்றம் சாட்டியதாகவா?

254
00:23:22,040 --> 00:23:24,320
அது, அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

255
00:23:26,960 --> 00:23:28,840
இப்ப, என்னை மன்னிக்கணும்.

256
00:23:29,360 --> 00:23:31,920
இங்கே திரும்ப வந்ததில்
உணர்ச்சிப்பூர்வமா உணர்றேன்.

257
00:24:00,240 --> 00:24:02,680
நோயாளியின் பெயர்
கசாண்ட்ரா ரோட்ஸ்

258
00:24:05,680 --> 00:24:06,520
கடைசி அமர்வு

259
00:24:06,600 --> 00:24:07,920
1999.

260
00:24:12,880 --> 00:24:14,480
என்ன இது.

261
00:24:20,920 --> 00:24:23,960
வழக்கு முடிந்தது
12/06/99

262
00:24:29,320 --> 00:24:32,680
நோயாளியின் பெயர்: கசாண்ட்ரா ரோட்ஸ்
முகவரி: ஃப்ளாட் 43, 68, ஹேசெல்டன் தெரு

263
00:24:32,760 --> 00:24:38,760
ஹேசெல்டன்
தெரு

264
00:24:51,320 --> 00:24:52,680
ஹாய். ஆமாம்…

265
00:24:53,440 --> 00:24:55,320
நான் கசாண்ட்ராவை தேடறேன்.

266
00:25:10,800 --> 00:25:11,880
ஹலோ.

267
00:25:11,960 --> 00:25:16,360
ஹேய். கசாண்ட்ரா இன்னும்
இங்கே இருக்காங்களா?

268
00:25:16,960 --> 00:25:18,280
கசாண்ட்ரா?

269
00:25:18,360 --> 00:25:20,200
ஆமாம், கசாண்ட்ரா ரோட்ஸ்.

270
00:25:21,760 --> 00:25:24,160
சரி. வாவ்.

271
00:25:25,680 --> 00:25:26,920
நீங்க இல்லை…

272
00:25:29,760 --> 00:25:31,240
அது, வந்து, 20 வருஷம் முன்னாடி.

273
00:25:31,320 --> 00:25:33,720
தெரியும். அவங்க என் தந்தையின்
வாடிக்கையாளர்,

274
00:25:33,800 --> 00:25:36,720
என் தந்தை இறந்துட்டார், நான் வந்து…

275
00:25:36,800 --> 00:25:39,840
கவனிங்க, மன்னிக்கணும்,
ஆனால் அவங்க இறந்துட்டாங்க.

276
00:25:42,600 --> 00:25:43,440
இறந்துட்டாங்களா?

277
00:25:44,920 --> 00:25:45,920
உண்மையா, கொல்லப்பட்டாங்க.

278
00:25:51,480 --> 00:25:52,640
இல்லை…

279
00:25:55,680 --> 00:26:00,160
நான் அவங்களோட இருந்தேனே… நேற்று.

280
00:26:01,760 --> 00:26:03,400
கசாண்ட்ரா ரோட்ஸா?

281
00:26:03,480 --> 00:26:06,720
என்னை நம்புங்க, அவங்க 20 வருஷம் முன்
கொல்லப்பட்டாங்க.

282
00:26:08,080 --> 00:26:10,720
நாங்க மட்டும்தான் இந்த இடத்தை
வாங்க தயாரா இருந்தோம்.

283
00:26:10,800 --> 00:26:12,840
அது மலிவா கிடைச்சுது, நிஜமா.

284
00:26:12,920 --> 00:26:15,280
பல காலமா காலியா இருந்தது.

285
00:26:15,360 --> 00:26:18,000
மற்றும் பரணில் விடப்பட்ட பொருட்களை தவிர.

286
00:26:19,280 --> 00:26:22,640
நிச்சயமா நேற்று நீங்க அவங்களோட இல்லை.

287
00:26:23,480 --> 00:26:24,640
சரி.

288
00:26:41,360 --> 00:26:43,520
கொலை செய்யப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு

289
00:26:49,000 --> 00:26:51,480
கசாண்ட்ராவின் கொலையாளியை கண்டுபிடி

290
00:26:54,600 --> 00:26:55,440
ஒலிக்கிறது…
மார்கோ

291
00:26:55,520 --> 00:26:57,560
-ஹலோ.
-கசாண்ட்ரா ரோட்ஸ் கழுத்து நெறிக்கப்பட்டார்

292
00:26:57,640 --> 00:26:59,440
அவள் கொலையாளி கண்டுபிடிக்கப்படலை.

293
00:26:59,520 --> 00:27:01,920
அது நினைவில்லையா?
வாடிக்கையாளர் கொல்லப்படுவது?

294
00:27:02,000 --> 00:27:03,800
ஏன்னா அது மறக்க முடியாததா தெரியுது.

295
00:27:03,880 --> 00:27:06,040
மன்னிக்கணும், நீ பேசறது கேட்கலை.

296
00:27:06,120 --> 00:27:08,120
கசாண்ட்ரா ரோட்ஸ் கொல்லப்பட்டார்னு
சொல்றேன்.

297
00:27:08,200 --> 00:27:10,560
-மற்றும் நீ-
-மன்னிக்கணும், ப்ரேக் ஆகுது.

298
00:27:11,440 --> 00:27:12,440
ஹலோ?

299
00:27:17,680 --> 00:27:20,560
கூடவே, ஒரு ஆள் என்னை பின்தொடர்றான்னு
நான் சொல்லணும்.

300
00:27:31,320 --> 00:27:33,200
வரும் அழைப்பு
சேத் மெக்கவர்ன்

301
00:27:33,880 --> 00:27:34,760
ஆமாம்.

302
00:27:34,840 --> 00:27:39,040
ஹேய். உன் அப்பாவின் உடலை
அண்டர்டேக்கர்ஸிடம் பிணவறை தந்துட்டாங்க.

303
00:29:27,120 --> 00:29:32,880
சட்டன் லாசரஸ்
1980-1998

304
00:30:05,040 --> 00:30:08,040
அப்பாவின் பழைய கோப்புகளை பார்த்தேன்,
அவர் அலுவலகத்தை சுத்தம் செய்தேன்,

305
00:30:08,120 --> 00:30:09,760
இதை கண்டேன்.

306
00:30:09,840 --> 00:30:14,080
இன்னொரு தீர்க்கப்படாத கொலை,
1999, நான்கு மைல்கள் தள்ளி.

307
00:30:14,560 --> 00:30:16,960
எனினும் சூழ்நிலைகள் மிக வித்தியாசமானவை,
சட்டனுக்கு.

308
00:30:17,040 --> 00:30:19,840
ஆமாம், ஆனால் இரண்டு தீர்க்கப்படாத கொலைகள்.

309
00:30:19,920 --> 00:30:23,040
ஒரு வருட இடைவெளியில், இரண்டுக்குமே,
குற்றவாளியை பிடிக்கவில்லை.

310
00:30:23,520 --> 00:30:25,120
ஆமாம், 25 வருஷம் முன்பு.

311
00:30:25,880 --> 00:30:29,800
அவங்க அப்பாவோட நோயாளிகளில் ஒருவர்.
பின்தொடர்பவன் இருந்ததா நினைச்சாங்க.

312
00:30:29,880 --> 00:30:31,520
அது தனிப்பட்ட விஷயமில்லையா லாஸ்?

313
00:30:31,600 --> 00:30:32,840
அவங்க இறந்துட்டாங்க, சேத்.

314
00:30:34,240 --> 00:30:38,600
நீ… அவங்க வழக்கில் என்ன ஆச்சுன்னு
கண்டுபிடிக்கிறியா?

315
00:30:38,680 --> 00:30:41,720
1999லிருந்தான கோப்புகளுக்குள்
நான் மூக்கை நுழைக்கணுமா?

316
00:30:41,800 --> 00:30:45,200
நான் பங்கேற்காக விசாரணைகள் வேற.
உனக்கு பைத்தியமா?

317
00:30:45,280 --> 00:30:46,440
நான் வந்து…

318
00:30:47,200 --> 00:30:48,200
ஜோயல்.

319
00:30:48,920 --> 00:30:50,160
ஆலிசன்.

320
00:30:50,240 --> 00:30:51,720
நான் ரொம்ப வருந்தறேன்.

321
00:30:56,520 --> 00:30:58,280
-மேடம்.
-சேத்.

322
00:31:01,080 --> 00:31:03,680
அவர் போனதை நம்பவே முடியலை.
குறிப்பாக இப்படி.

323
00:31:04,160 --> 00:31:05,920
குறிப்பிலிருந்து என்ன புரிந்தது?

324
00:31:06,000 --> 00:31:10,200
குழப்பமா இருக்கு. ஒருவேளை…
மறுபிறவி விஷயமா?

325
00:31:10,280 --> 00:31:12,400
அதாவது. அப்பா எப்போதும்
ரகசியத்தை விரும்பினார்,

326
00:31:12,480 --> 00:31:14,800
ஆனால் இறுதியில் கொஞ்சம்
அதிகமா செய்தாரென நினைக்கிறேன்.

327
00:31:14,880 --> 00:31:18,960
யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கிறேன்,
அங்கே மேலே என்ன நடக்குதுன்னு.

328
00:31:22,920 --> 00:31:24,320
உங்களை பார்க்க மகிழ்ச்சி.

329
00:31:29,480 --> 00:31:30,800
-ஜென்னா, ஹாய்.
-ஹலோ, ஆலிசன்.

330
00:31:30,880 --> 00:31:32,640
உங்க அப்பாவுக்கு அவகூட
தொடர்புனு நெனச்சேன்.

331
00:31:34,920 --> 00:31:37,880
அம்மா இறந்த பிறகு, வீட்டுக்கு வந்த
ஒவ்வொரு பெண்ணும் என் புது அம்மாவா

332
00:31:37,960 --> 00:31:39,600
இருப்பாங்கன்னு நினைச்சேன்.

333
00:31:40,240 --> 00:31:43,520
மனைவியை இழந்தவர்களை ஒரு குறிப்பிட்ட
வகை பெண்ணுக்கு பிடிக்கும்னு புரியுது.

334
00:31:46,520 --> 00:31:48,600
அந்த தகவலை பெற்றுத் தர முடியுமா?

335
00:31:49,120 --> 00:31:52,400
ஒரு போலீஸ் அதிகாரியை ஊழல் செய்ய வைக்க
உன் முயற்சிகளை பற்றி நாம பேசணும்…

336
00:31:53,400 --> 00:31:56,560
பின்னர், ஒரு பைன்டுடன்.

337
00:31:58,760 --> 00:31:59,600
என்ன?

338
00:32:06,880 --> 00:32:09,040
லாஸ், அழகான சேவை.

339
00:32:09,480 --> 00:32:12,200
நன்றி. நன்றி. ஹேய், பால்.

340
00:32:12,280 --> 00:32:13,440
ஜோயல்.

341
00:32:13,840 --> 00:32:16,240
நீ வந்து- லாஸ், தயவுசெய்து.

342
00:32:16,320 --> 00:32:17,640
நான் ஜோயல்னே கூப்பிடறேன்.

343
00:32:19,440 --> 00:32:21,960
அப்ப, கோல்ஃப் எப்படி போகுது?

344
00:32:22,040 --> 00:32:24,000
நல்லா. இப்ப பத்து புள்ளி குறைஞ்சிருக்கு.

345
00:32:24,920 --> 00:32:25,840
சிறப்பு.

346
00:32:25,920 --> 00:32:28,640
ஆமாம். மாண்ட்கோமரியில்
புல்வெளி கச்சிதமா இருக்கு.

347
00:32:28,720 --> 00:32:31,320
அதிக பொட்டாசியம் மற்றும் ஃபாஸ்ஃபேட்
உரங்களை பயன்படுத்தறாங்க.

348
00:32:31,400 --> 00:32:33,760
வளரும் பருவத்தில் எந்த
குறைபாடுகளையும் சரி செய்யுது.

349
00:32:34,880 --> 00:32:36,080
உனக்கு பானம் கொண்டு வரவா?

350
00:32:36,760 --> 00:32:38,720
வேண்டாம். நன்றி.

351
00:32:39,040 --> 00:32:41,240
-நமக்கு நிரப்பறேன்.
-சரி.

352
00:32:41,840 --> 00:32:44,120
-பால், நீயும் கூட வர்றியா?
-ஆமாம். சரி.

353
00:33:14,200 --> 00:33:17,760
அன்றிரவு நடந்ததை நம்மில் யாருமே
மறக்கலைன்னு நினைக்கிறேன்.

354
00:33:27,720 --> 00:33:28,960
லாஸ்.

355
00:33:32,520 --> 00:33:33,520
லாஸ், நாம போலாம்.

356
00:33:48,840 --> 00:33:50,840
சாம் ஆல்சன், சட்டன் லாசரஸை கொலை செய்த

357
00:33:50,920 --> 00:33:53,360
சந்தேகத்தில் உங்களை கைது செய்யறேன்.

358
00:33:54,000 --> 00:33:55,760
நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.

359
00:33:55,840 --> 00:33:57,640
சொன்னால், அது உங்களக்கு எதிராக இருக்கும்.

360
00:34:00,760 --> 00:34:02,240
அவனை விடுவிச்சிட்டாங்க.

361
00:34:02,720 --> 00:34:04,480
அவனை விடுவிச்சிட்டாங்க!

362
00:34:18,200 --> 00:34:21,240
நேற்றிரவு நான் போன பிறகு,
சாம் ஆல்சன் வீட்டு வழியா நடந்தேன்.

363
00:34:23,280 --> 00:34:26,560
உன் தந்தையின் இறுதிச்சடங்கின் இரவு, நீ
நம் சகோதரியை கொன்றதாக

364
00:34:26,640 --> 00:34:28,520
குற்றம் சாட்டப்பட்டவன் வீட்டுக்கு போனியா?

365
00:34:28,600 --> 00:34:30,960
இரண்டு விஷயங்களும் இணைந்தவை இல்லை
என்பது போலில்லை.

366
00:34:31,040 --> 00:34:33,160
ஆனால், தெரியுமா, நான் அங்கே
டந்துட்டு இருந்தேன்.

367
00:34:33,760 --> 00:34:36,400
மீண்டும் இடத்தை பார்க்க விரும்பினேன்.

368
00:34:37,520 --> 00:34:39,400
அவனுக்கு விடுதலை கிடைத்தது, லாஸ்.

369
00:34:39,840 --> 00:34:43,880
தடயவியல் இல்லை, சாட்சிகள் இல்லை,
அப்ப அவன்தான்னு நம்பவே இல்லை.

370
00:34:44,440 --> 00:34:47,400
தனிப்பட்ட முறையில், அவன் அணியும்
கார்டிகன்களுக்கு அவனை சிறையில் போடுவேன்,

371
00:34:47,480 --> 00:34:49,520
ஆனால் சட்டங்களை நான் இயற்றலை.

372
00:34:52,720 --> 00:34:55,640
நீ இறுதிச்சடங்கில் நன்றாக செய்தே.

373
00:34:57,560 --> 00:35:00,960
அது நல்ல உரை. ஹிப்பி விஷயங்கள் எல்லாம்
எனக்கு பிடித்தன.

374
00:35:03,320 --> 00:35:07,200
நாம் வாழ்கிறோம், லாஸ், ஆமாம்.
இந்த உடல்களை விட்டு வெளியேறியதும்.

375
00:35:09,800 --> 00:35:10,960
நிஜமாகவா?

376
00:35:11,040 --> 00:35:12,040
நிஜமாக.

377
00:35:13,560 --> 00:35:15,080
சட்டன் இங்கிருக்கான்னு எனக்கு தெரியும்.

378
00:35:16,680 --> 00:35:18,640
அவளை சில சமயம் உணர முடியுது.

379
00:35:24,200 --> 00:35:26,320
சரி, இதை உன்னிடம் கேட்கிறேன்.

380
00:35:27,920 --> 00:35:32,640
மக்கள் இறந்தவர்களை
பார்ப்பாங்கன்னு நினைக்கிறியா?

381
00:35:34,480 --> 00:35:37,040
உண்மையில் அவர்களை பார்ப்பது
போல? அவங்க வந்து…

382
00:35:38,480 --> 00:35:40,400
தெரியுமா, கண் முன்னே இருப்பது போல?

383
00:35:41,760 --> 00:35:46,800
நீ துக்கத்தில் இருக்கே. நீ அப்பாவை
பார்க்கிறதா நினைச்சா, அப்ப…

384
00:35:46,880 --> 00:35:50,680
வருத்தத்தில் மாயம் தெரிவது பற்றி எல்லாம்
தெரியும். அதை நான் கேட்கலை.

385
00:35:50,760 --> 00:35:52,680
சரி, அப்ப என்ன கேட்கிறே?

386
00:35:55,560 --> 00:35:59,200
மறந்துடு. இறந்துட்டா, இறந்தாச்சு.

387
00:36:04,840 --> 00:36:07,960
கசாண்ட்ரா கழுத்து நெறிக்கப்பட்டார்,
அவள் கொலையாளி கண்டுபிடிக்கப்படலை.

388
00:36:08,040 --> 00:36:10,560
அது நினைவில்லையா,
வாடிக்கையாளர் கொல்லப்படுவது?

389
00:36:10,640 --> 00:36:13,360
நிச்சயமா நேற்று நீங்க அவங்களோட இல்லை.

390
00:36:41,600 --> 00:36:43,080
ஓய்! நீ எய்டனா?

391
00:36:47,480 --> 00:36:49,000
நீ பெல்லாவின் மகன்.

392
00:36:52,520 --> 00:36:53,880
நீ இங்கே என்ன பண்றே?

393
00:36:55,400 --> 00:36:57,640
நீங்க எப்படி இருப்பீங்கன்னு
பார்க்க விரும்பினேன்.

394
00:37:05,440 --> 00:37:07,440
நீங்க இங்கே திரும்பி வந்திருக்க கூடாது.

395
00:37:11,840 --> 00:37:13,120
எங்கப்பா இறந்துட்டார்.

396
00:37:14,440 --> 00:37:17,200
தெரியும். கேள்விப்பட்டேன்.

397
00:37:20,320 --> 00:37:22,880
உங்கம்மா இறுதிச் சடங்கில் இருந்தாங்க.
உங்கப்பாவும்.

398
00:37:24,160 --> 00:37:25,640
நான் வரலாமான்னு கேட்டேன்.

399
00:37:25,720 --> 00:37:27,120
எங்கப்பா இறுதிச்சடங்கிற்கா?

400
00:37:28,440 --> 00:37:29,760
அவை என்னை கவரும்.

401
00:37:29,840 --> 00:37:31,560
அது சாதாரணமானதுதான்.

402
00:37:31,640 --> 00:37:33,760
நீ எத்தனைக்கு போயிருக்கேன்னு தெரியாது,

403
00:37:34,480 --> 00:37:36,720
ஆனால் எல்லாம் வழக்கமானதுதான்,

404
00:37:37,760 --> 00:37:41,800
சவப்பெட்டி, சில நல்ல வார்த்தைகள்,
கொஞ்சம் இசை.

405
00:37:42,720 --> 00:37:43,640
தெரியுமா.

406
00:37:46,000 --> 00:37:47,360
நீங்க என்ன பண்றீங்க?

407
00:37:49,160 --> 00:37:53,280
நான் தடயவியல் மனநல மருத்துவர்.

408
00:37:54,920 --> 00:37:56,120
பைத்தியக்காரங்களிடம் பேசுவியா?

409
00:37:57,080 --> 00:37:58,480
ஆமாம். ஆமாம், ஒரு மாதிரி.

410
00:37:58,920 --> 00:37:59,880
சீரியல் கொலையாளிகள்?

411
00:38:01,280 --> 00:38:03,760
பெரும்பாலானோர் சீரியல் கொலையாளிகள் இல்லை.

412
00:38:06,400 --> 00:38:11,160
பைத்தியக்காரர்களை கையாள்வது,
உங்களை பைத்தியமாக்கும்னு நினைக்கிறேன்.

413
00:38:12,800 --> 00:38:14,240
நீ சொல்வது சரி.

414
00:38:16,720 --> 00:38:18,320
வீடு இனிமையான வீடு.

415
00:38:18,920 --> 00:38:21,000
நீங்க திரும்ப வந்திருக்க கூடாது.

416
00:38:21,520 --> 00:38:23,360
அதைப்பற்றி மோசமான உணர்வு இருக்கு.

417
00:38:28,600 --> 00:38:31,840
உள்ளே போ ப்ளீஸ், எய்டன். நான்…

418
00:38:31,920 --> 00:38:35,920
மன்னிக்கணும். நீ இங்கே வந்ததா சொன்னேன்,
அவனுக்கு பல யோசனைகள் வரும்.

419
00:38:36,000 --> 00:38:38,480
பரவாயில்லை. ஹேய், பால்.

420
00:38:38,560 --> 00:38:39,640
ஜோயல்.

421
00:38:39,720 --> 00:38:41,160
ஆகட்டும். உள்ளே போ.

422
00:38:41,440 --> 00:38:43,240
சரி, அப்ப. நான் கிளம்பறேன்.

423
00:38:43,320 --> 00:38:46,240
அவனை திரும்ப கூட்டி வந்ததுக்கு நன்றி,
அதை பாராட்டறேன்.

424
00:38:47,560 --> 00:38:49,840
எனக்கு இரு கணவர்கள் இருந்தது
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு.

425
00:38:50,400 --> 00:38:52,840
ஒரு குழந்தைக்கு அது விசித்திரம்தான்.

426
00:38:52,920 --> 00:38:54,080
அது, ஆமாம்.

427
00:38:55,480 --> 00:38:56,320
என்ன?

428
00:38:56,400 --> 00:38:58,720
"அது, ஆமாம்"னு நீ சொன்ன விதம்.

429
00:38:59,440 --> 00:39:01,280
எனக்கு மீண்டும் 19 வயது போலிருந்தது.

430
00:39:03,760 --> 00:39:05,920
ஆமாம். தெரியும். மன்னிச்சிடு.

431
00:39:10,680 --> 00:39:11,720
பை.

432
00:39:22,440 --> 00:39:25,720
ஹேய்பா. என்னை ரோஸி க்யூஸில் சந்தி.
உனக்கு ஒன்று வெச்சிருக்கேன்.

433
00:39:27,080 --> 00:39:28,360
நல்லா அனுபவி.

434
00:39:28,440 --> 00:39:29,480
நீ ஒரு சூப்பர்ஸ்டார்.

435
00:39:31,160 --> 00:39:33,640
சரி. உனக்கு சுருக்கமான பதிப்பு வேணுமா?

436
00:39:33,720 --> 00:39:38,480
அவ பைத்தியம், கசாண்ட்ரா, சரியான கிறுக்கு.
சிக்கல் குழந்தை, வளர்ப்புக்கு போய் வருவா.

437
00:39:38,560 --> 00:39:39,400
கசாண்ட்ரா
ரோட்ஸ்

438
00:39:39,480 --> 00:39:41,960
இரண்டு தவறான உறவுகள்,
இறந்து போனா,

439
00:39:42,040 --> 00:39:44,760
நிச்சயமா அவள் காதலன்,
நீல் கிராஃப்ட், கைகளில்.

440
00:39:44,840 --> 00:39:46,440
அவனை குற்றம் சாட்டலை,
காணாம போயிட்டான்.

441
00:39:46,520 --> 00:39:47,400
சந்தேக நபர் பட்டியல்

442
00:39:47,480 --> 00:39:49,400
இது வருத்தமான மற்றும் மோசமான கதை.

443
00:39:50,160 --> 00:39:52,280
காகிதத்தில். ஆனால் அவன் மனுஷி.

444
00:39:53,600 --> 00:39:57,200
இதை சிறைகளில் பார்ப்பேன், எப்படி இருக்கோ,
எப்பவும் அப்படி நடந்திருக்காது.

445
00:39:57,280 --> 00:39:59,240
சில சமயம், இந்த மக்களை பிடிக்கும்.

446
00:39:59,320 --> 00:40:01,440
இதற்கும் எதற்கும் என்ன சம்பந்தம்?

447
00:40:01,520 --> 00:40:02,800
உங்கப்பா அவளோடு உறவு வைத்தாரா?

448
00:40:02,880 --> 00:40:04,680
எப்பவுமே உறவுதான் உனக்கு, இல்லையா?

449
00:40:04,760 --> 00:40:07,200
உறவையும் பணத்தையும் எடுத்துட்டா,
எனக்கு வேலையே இல்லை.

450
00:40:07,760 --> 00:40:10,720
எனக்கு தெரியலை. அந்த சட்டன் விஷயம்,
இணைப்பு…

451
00:40:10,800 --> 00:40:12,880
எதுவும் இல்லை. இந்த பெண் பிரச்சினை.

452
00:40:12,960 --> 00:40:17,040
பிரச்சினை அவளை தேடிக், கொன்றது. வழக்கு
மூடப்பட்டது. 25 வருடங்கள் முன்.

453
00:40:19,360 --> 00:40:20,480
நீ போறியா?

454
00:40:20,560 --> 00:40:21,960
வேலை இருக்கு.

455
00:40:23,120 --> 00:40:24,880
நீ ஜென்னாவை சந்திக்கிறே, இல்லையா?

456
00:40:25,480 --> 00:40:26,360
என்ன?

457
00:40:26,440 --> 00:40:31,560
உன் பயங்கரமான பொய் சொல்லும் முகத்தை பார்.
குற்றமே செய்யாதே, சேத்.

458
00:40:31,640 --> 00:40:35,040
சரி. இது ரொம்ப வினோதம்,
ஏன்னா அவ சொன்னா

459
00:40:35,120 --> 00:40:39,360
பிரபஞ்சம் அவ வாழ்வில் கருணையை கொண்டு
வரப் போகுதென,

460
00:40:39,440 --> 00:40:43,200
சில நிமிடங்கள் பிறகு, நான் அவளை அழைத்து,
பானம் குடிக்க அழைத்தேன்.

461
00:40:43,280 --> 00:40:44,600
விதி.

462
00:40:44,680 --> 00:40:48,080
ஆமாம், லாஸ், விதி. ரொம்பவே விதி.

463
00:40:48,160 --> 00:40:51,240
-உனக்கு அது என்னன்னே தெரியாது, இல்ல?
-சுத்தமா.

464
00:40:51,320 --> 00:40:53,200
ஆனால் அதை உன் சகோதரி மீது பயன்படுத்துவேன்.

465
00:40:54,480 --> 00:40:56,640
சியர்ஸ், நண்பா. பை!

466
00:41:53,160 --> 00:41:54,200
ஹேய்!

467
00:41:56,680 --> 00:41:59,000
என்னை பின்தொடர்றியா? ஓய்!

468
00:42:00,600 --> 00:42:03,120
ஹேய்! ஹேய்!

469
00:42:08,320 --> 00:42:09,160
நீ நலமா?

470
00:42:23,000 --> 00:42:24,720
ஓய்! ஓய்!

471
00:43:08,440 --> 00:43:09,840
ஹலோ!

472
00:43:17,080 --> 00:43:18,120
நீ எங்கிருக்கே?

473
00:43:33,240 --> 00:43:38,200
தி ஜூனிபர் புஷ்
தி லாஸ் ஆஃப் இன்னசென்ஸ்

474
00:44:19,160 --> 00:44:22,280
"தீயிடுபவனை உங்கள் வீட்டுக்குள் அழைத்தால்,

475
00:44:23,280 --> 00:44:25,520
அவன் அறையில் தீக்குச்சிகளை வைக்காதீர்கள்."

476
00:44:41,560 --> 00:44:43,720
அப்ப, நீ கசாண்ட்ராவை சந்திச்சியா?

477
00:44:44,720 --> 00:44:46,840
மற்றவர்கள் இருப்பார்கள், மகன

478
00:44:47,920 --> 00:44:49,240
அவங்களும் உன்னிடம் வருவாங்க.

479
00:44:50,800 --> 00:44:53,240
கொலை செய்யப்பட்ட மற்றவர்கள்.

480
00:44:54,640 --> 00:44:56,160
கசாண்ட்ரா போல.

481
00:45:00,160 --> 00:45:01,360
மற்றும் நான்.

482
00:45:56,960 --> 00:45:58,960
வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன்

