1
00:00:05,600 --> 00:00:08,720
18 வருடங்கள் முன்பு
தில்லியில் ஒரு குளிர்காலக் காலை

2
00:00:08,800 --> 00:00:11,040
உங்களை ரொம்ப மதிக்கிறேன்,
தேவ்கி ப்ஹாய்!

3
00:00:12,040 --> 00:00:16,520
ஆனா என் மக்களுக்கு என்னால
துரோகம் செய்ய முடியாது.

4
00:00:24,440 --> 00:00:27,040
மந்திரியா ஆக எனக்கு
ஆயுள் முழுசும் இருக்கு.

5
00:00:32,520 --> 00:00:35,280
-ஹலோ, காகா
-ஹேய், திரும்பி வந்துட்டியாபா?

6
00:00:36,840 --> 00:00:38,360
ஒரேடியா வந்துட்டேன், காகா.

7
00:00:38,440 --> 00:00:42,040
-படிப்பே முடிச்சிட்டானா ஆக்ஸ்ஃபோர்ட்ல?
-ஹார்வர்ட். ஹார்வர்ட்!

8
00:00:42,080 --> 00:00:45,360
ரோஹ்தக்கில் இருக்கும் சாதாரண
மக்களுக்கு எல்லாம் ஒண்ணுதான்

9
00:00:46,040 --> 00:00:48,320
-அவனுக்கு கல்யாணம்.
-நிஜமாவா?

10
00:00:48,400 --> 00:00:50,160
அவனே ஏற்பாடு பண்ணிட்டான்.

11
00:00:50,600 --> 00:00:52,360
அவருக்கு அழைப்பிதழை காட்டு.

12
00:00:53,160 --> 00:00:54,280
எப்போ அது?

13
00:00:54,360 --> 00:00:56,800
-பொண்ணு எந்த ஊர்?
-அதுல எழுதியிருக்கு.

14
00:00:58,120 --> 00:00:59,920
உங்களுக்குத்தான் முதல் அழைப்பு.

15
00:01:00,960 --> 00:01:03,080
ஆனா உங்களுக்கு குடுக்கவே கூடாது.

16
00:01:04,360 --> 00:01:05,720
குடும்பத்தில ஒருத்தர்.

17
00:01:07,200 --> 00:01:09,920
உங்க விரலைப் பிடிச்சு நடக்க
கத்துக்கிட்டான் சமர்

18
00:01:13,520 --> 00:01:16,200
குடும்பத்தில ஒருத்தராவே
இருந்திருக்கணும்.

19
00:01:19,200 --> 00:01:20,200
இல்லையா?

20
00:01:31,440 --> 00:01:34,480
சந்தோஷமா இரு. சந்தோஷமா வெச்சுக்கோ!

21
00:01:38,400 --> 00:01:39,560
பார்ப்போம், சகோதரா.

22
00:01:40,760 --> 00:01:42,040
நிச்சயமா, சகோதரா.

23
00:01:49,720 --> 00:01:51,760
-குர்பால்...
-சொல்லுங்க.

24
00:01:52,440 --> 00:01:55,280
இப்பல்லாம் ரோஹ்தக்-தில்லி
நெடுஞ்சாலைலே...

25
00:01:56,960 --> 00:01:58,400
பனிமூட்டமா இருக்காமே.

26
00:01:58,480 --> 00:02:01,120
-இப்ப ரொம்ப மோசமா ஆயிடுச்சு.
-இல்லையா?

27
00:02:02,680 --> 00:02:04,480
விபத்துக்கள் சாதாரணமா நடக்கும்.

28
00:02:06,440 --> 00:02:08,960
-ஆமாம், ஸர்.
-அப்ப சரி.

29
00:02:09,400 --> 00:02:11,080
அவரை "காகா"ன்னு (மாமா)
கூப்பிடறேன்.

30
00:02:13,160 --> 00:02:14,400
இவன் ஒருத்தன்.

31
00:02:16,880 --> 00:02:19,800
அரசியலில் நீ உறவைத் தேடினா,

32
00:02:20,520 --> 00:02:21,800
நீ அழிஞ்சே.

33
00:02:22,960 --> 00:02:25,120
முக்கியமான உறவுங்கறது...

34
00:02:26,360 --> 00:02:28,000
ஆட்சியும்..

35
00:02:31,120 --> 00:02:32,160
அதிகாரமும் தான்.

36
00:02:34,080 --> 00:02:36,040
போ, அழைப்பிதழ்களை குடு.

37
00:02:44,680 --> 00:02:48,240
அரசியலில் நீ உறவைத் தேடினா,
நீ அழிஞ்சே!

38
00:02:48,320 --> 00:02:52,120
முக்கியமான உறவுங்கறது, ஆட்சியும்
அதிகாரமும் தான்.

39
00:02:57,800 --> 00:03:00,840
பார்த்துட்டே இருக்கேன், ஸர்,
முடியவே மாட்டேங்குது.

40
00:03:01,400 --> 00:03:04,880
ரெண்டு டாக்டர், நாலு கேமரா அப்புறம்
மூன்னு நாள் பதிவு, ஸர்.

41
00:03:05,800 --> 00:03:07,080
ஸர்?

42
00:03:08,360 --> 00:03:09,600
என்ன?

43
00:03:09,680 --> 00:03:12,960
தினமும் ஆறு மணி நேரம் பார்த்தாலும்,
இரண்டு மாசமாகும்.

44
00:03:13,040 --> 00:03:15,960
அப்படீனா ஹாஸ்பிடல் பதிவுகளை மட்டுமே
நம்ப முடியாது.

45
00:03:16,040 --> 00:03:17,320
ஆமாம், ஸர்.

46
00:03:18,680 --> 00:03:20,080
அப்ப திட்டம் என்ன?

47
00:03:20,840 --> 00:03:24,280
டாக்டர் வீட்ல எல்லாம் கேமராவை
மறைச்சு வெச்சிருக்கோம், ஸர்.

48
00:03:24,360 --> 00:03:25,800
ஏதாவது கிடைச்சுதா?

49
00:03:25,880 --> 00:03:27,560
ரெண்டு பேரும் மோசமானவனுங்க.

50
00:03:28,840 --> 00:03:31,360
ஒருத்தனுக்கு இன்னொருத்தன்
மனைவியோட தொடர்பு.

51
00:03:31,440 --> 00:03:33,280
அவனுக்கு தெரியவே இல்லை.

52
00:03:34,280 --> 00:03:35,840
நம்மள பத்தி ஒன்னுமில்லை ஸர்

53
00:03:37,000 --> 00:03:38,480
சிவா சேகர் என்ன ஆனான்?

54
00:03:38,960 --> 00:03:40,480
அவன் இடதுசாரி ஆள், ஸர்.

55
00:03:40,960 --> 00:03:42,600
எஸ்ஏஐ கார்ட் வச்சிருக்கான்.

56
00:03:43,360 --> 00:03:45,360
ஆனால் அவனை நான் பார்த்துக்கறேன்.

57
00:03:46,960 --> 00:03:48,280
உயர்ந்த பண்புடையவன்,

58
00:03:48,360 --> 00:03:49,960
கொஞ்சம் பிடிவாதமானவன்,

59
00:03:50,680 --> 00:03:51,920
உணர்ச்சி வசப்படுறான்.

60
00:03:52,000 --> 00:03:54,640
ஆனா அரசியலில் சேர விருப்பமில்லை, ஸர்.

61
00:03:59,160 --> 00:04:02,240
-பத்திரிக்கையாளர் சந்திப்பு எப்போ?
-11:00 மணிக்கு.

62
00:04:03,720 --> 00:04:05,320
அலுவலகத்தில சந்திக்கிறேன்.

63
00:04:06,440 --> 00:04:08,000
நானும் கிளம்பறேன், ஸர்.

64
00:04:08,640 --> 00:04:09,640
குர்பால்.

65
00:04:10,200 --> 00:04:11,320
ஸர்?

66
00:04:18,080 --> 00:04:19,720
நீ வருத்தப்படவே மாட்டியா?

67
00:04:21,480 --> 00:04:23,520
நீ வாழ்க்கையில நிறைய மோசமான...

68
00:04:25,120 --> 00:04:26,640
விஷயங்களை செய்திருக்கே.

69
00:04:27,560 --> 00:04:29,080
பூனை வளர்க்கிறேன், ஸர்.

70
00:04:31,080 --> 00:04:32,360
அதுக்கு உணவளிப்பேன்.

71
00:04:33,480 --> 00:04:36,360
அது என்கிட்ட வந்து,
உரசிகிட்டு உட்காரும்.

72
00:04:38,440 --> 00:04:40,480
எல்லாம் சரியா ஆயிடும், ஸர்.

73
00:05:30,760 --> 00:05:36,480
தாண்டவம்

74
00:05:58,960 --> 00:05:59,840
போலீஸ் நிலையம்
மஹந்த் குஞ்ச்

75
00:05:59,920 --> 00:06:01,440
நீ இப்ப நட்சத்திரம்.

76
00:06:01,520 --> 00:06:04,600
உன் வீடியோவை குறைஞ்சது
25 முறை பார்த்திருப்பேன்.

77
00:06:06,760 --> 00:06:08,600
நண்பா, நீ ஒரு வைரஸ்!

78
00:06:08,680 --> 00:06:10,160
-வைரஸா?
-ஆமாம்...

79
00:06:11,400 --> 00:06:14,400
ஹேய், கஸ்தூரி, பசங்க இப்ப அதை
என்னன்னு சொல்றாங்க?

80
00:06:14,480 --> 00:06:17,080
-சர், அது...
-வைரல். வைரல் வீடியோ.

81
00:06:17,800 --> 00:06:19,120
வைரல் வீடியோ.

82
00:06:19,200 --> 00:06:20,280
நீ வைரலா பரவிட்டே!

83
00:06:21,240 --> 00:06:23,440
எப்படி நம்ம பையனை அவங்க
கைது பண்ணாங்க?

84
00:06:25,080 --> 00:06:26,720
நீ எங்கிட்ட வந்திருக்கணும்.

85
00:06:26,800 --> 00:06:28,800
நேரா எங்கிட்ட வந்திருக்கணும்.

86
00:06:28,880 --> 00:06:30,920
பையனை தில்லியில் கைது பண்ணாங்க.

87
00:06:31,000 --> 00:06:33,560
அப்ப எங்கிட்ட முதல்ல உதவி கேட்டிருக்கணும்.

88
00:06:34,440 --> 00:06:36,480
-நன்றி, ஸர்.
-பரவாயில்லைப்பா.

89
00:06:37,960 --> 00:06:39,600
இப்ப கவலை இல்லை.

90
00:06:39,720 --> 00:06:42,080
ஏதாவது பிரச்சினைன்னா,
நான் இருக்கேன்.

91
00:06:42,160 --> 00:06:44,400
மஹந்த் குஞ்ச் போலீஸ் உங்களுக்குத்தான்.

92
00:06:44,840 --> 00:06:45,960
-நல்லது.
-நன்றி.

93
00:06:46,040 --> 00:06:47,560
நன்னாளாகட்டும்.

94
00:06:51,800 --> 00:06:53,440
-கஸ்தூரி.
-சொல்லுங்க, ஸர்?

95
00:06:53,520 --> 00:06:54,760
இவங்க யார்?

96
00:06:55,680 --> 00:06:58,480
-அவங்க மாணவர்கள், ஸர்.
-அவங்க மாணவர்கள் இல்லை.

97
00:06:58,560 --> 00:07:01,280
இப்ப தீவிரவாதிங்க எல்லைக்கு
அப்பாலிருந்து வர்றதில்லை.

98
00:07:01,360 --> 00:07:03,520
நம்ம பல்கலைக்கழகங்களில்
உருவாகறாங்க.

99
00:07:03,840 --> 00:07:06,040
புரியுதா? அவங்க மேலே ஒரு கண்
வச்சுக்கோ.

100
00:07:06,120 --> 00:07:09,040
-அவங்க மேல ஒரு கண் இருக்கட்டும்.
-சரிங்க ஸர்.

101
00:07:09,520 --> 00:07:10,960
ஆகட்டும், நகருங்க!

102
00:07:12,520 --> 00:07:13,880
சீக்கிரம்ப்பா.

103
00:07:15,960 --> 00:07:17,120
ஆமாம்.

104
00:07:19,280 --> 00:07:20,880
இங்கே என்ன நடக்குது?

105
00:07:21,640 --> 00:07:24,280
-நாம கொண்டாடணும்லே?
-துக்கத்தில இருக்கோம்.

106
00:07:24,360 --> 00:07:27,040
எதுக்கு துக்கம்?
நீங்க பிரதமராகப் போறீங்க.

107
00:07:27,120 --> 00:07:28,440
நாம கொண்டாடணும்லே?

108
00:07:32,000 --> 00:07:34,000
நாம எப்ப பேசப் போறோம்?

109
00:07:34,480 --> 00:07:35,480
சந்தோஷமா இருக்கேல்லே?

110
00:07:35,560 --> 00:07:37,480
ஆமாம். உங்களை விட அதிகமா.

111
00:07:41,520 --> 00:07:42,600
எப்படி செஞ்சீங்க?

112
00:07:45,000 --> 00:07:46,360
என்னை நம்பறீங்கல்லே?

113
00:07:50,320 --> 00:07:52,880
உலகில் உள்ள எந்த அரசியல்வாதியை
விடவும்.

114
00:07:55,440 --> 00:07:57,920
இதையெல்லாம் தூக்கி எறி. இப்பவே.

115
00:08:06,240 --> 00:08:07,480
தூக்கி எறி!

116
00:08:09,400 --> 00:08:10,800
விஎன்யூலேர்ந்து பேசறேன்.

117
00:08:10,880 --> 00:08:11,880
தற்போதைய செய்தி
இம்ரான் சய்தி வீடு திரும்புகிறார்

118
00:08:11,960 --> 00:08:15,320
சிவா சேகரின் வைரல் வீடியோ அவரை
பிரபலமாக்கியிருக்கிறது.

119
00:08:15,400 --> 00:08:18,920
கூடிய அழுத்தத்தினால் போலீஸ்
இம்ரான் சய்தியை விடுதலை செய்தது.

120
00:08:19,000 --> 00:08:22,560
பாருங்க, விஎன்யூவில்
இருக்கிறோம், மக்கள் கொண்டாடுகின்றனர்.

121
00:08:22,640 --> 00:08:23,560
தற்போதைய செய்தி
விஎன்யூவில் கொண்டாட்டம்

122
00:08:23,640 --> 00:08:24,680
தற்போதைய செய்தி
இம்ரான் சய்தி விடுதலையானார்

123
00:08:24,760 --> 00:08:27,320
இம்ரான் சய்தி நம்முடன் இருக்கிறார்.

124
00:08:33,960 --> 00:08:35,240
நண்பர்களே,

125
00:08:35,880 --> 00:08:38,200
உங்களிடம் சொல்ல விரும்பறேன்,

126
00:08:38,280 --> 00:08:41,360
என் பெயர் இம்ரான் சய்தி,

127
00:08:42,160 --> 00:08:43,480
நான் தீவிரவாதி இல்லை.

128
00:08:48,120 --> 00:08:51,320
அவங்க என்னை சிறையில் அடிச்சு
நொறுக்கியது, அது வேற..

129
00:08:57,880 --> 00:08:59,160
பாருங்க...

130
00:08:59,520 --> 00:09:03,600
கடந்த சில தினங்களில், நீங்க
நிருபிச்சிருக்கீங்க,

131
00:09:04,040 --> 00:09:07,880
இந்த போராட்டம் ஒரு சில
கிராமங்களுக்கானது மட்டும் இல்லை,

132
00:09:08,000 --> 00:09:10,280
ஆனால் இது அனைவரின்
போராட்டம்ன்னு!

133
00:09:10,360 --> 00:09:13,640
இது இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான
போராட்டம்.

134
00:09:18,080 --> 00:09:21,280
இந்த நாடு இவர்களுக்கு மட்டும்
சொந்தம் இல்லை..

135
00:09:21,760 --> 00:09:24,240
யார் பெரிய மாளிகைகளில்
வாழுறாங்களோ..

136
00:09:24,760 --> 00:09:27,000
கோடீஸ்வரர்களுக்கு பணி
செய்றாங்களோ..

137
00:09:27,600 --> 00:09:30,520
உண்மையில், நாடு நம்ம
ஒவ்வொருத்தருக்கும் சொந்தம்!

138
00:09:30,880 --> 00:09:34,360
-சிவா! சிவா!
-நானா?

139
00:09:34,440 --> 00:09:36,520
தேசிய செய்தி அமைப்பிலிருந்து
நான் கரிமா.

140
00:09:36,640 --> 00:09:38,440
இன்று என் ஷோவுக்கு வருவியா?

141
00:09:38,520 --> 00:09:40,480
-நானா அவனா?
-நீ! இன்று மாலை.

142
00:09:40,520 --> 00:09:42,320
-சரி.
-சரியா? பார்ப்போம்.

143
00:09:42,400 --> 00:09:47,080
...வீடுகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள்,
போர்க்களங்களிலும்,

144
00:09:47,160 --> 00:09:50,000
நம்ம ரத்தத்தையும் வியர்வையும் சிந்தறோம்!

145
00:09:52,880 --> 00:09:54,640
சுதந்திரம்! சுதந்திரம்!

146
00:09:54,760 --> 00:09:59,120
சுதந்திரம்! சுதந்திரம்!

147
00:09:59,200 --> 00:10:01,880
சுதந்திரம்! சுதந்திரம்!

148
00:10:02,880 --> 00:10:07,240
இரண்டு மணி நேரம் முன்! ஒரு மணி நேரம்
முன்னே எங்கிட்ட சொல்லிருக்கலாமே, சமர்!

149
00:10:07,480 --> 00:10:09,760
என்ன செய்வேன்னு எனக்கே
தெரியலை.

150
00:10:10,240 --> 00:10:12,520
உனக்கெதிரா அவங்ககிட்ட ஏதாவது இருக்கா?

151
00:10:13,520 --> 00:10:14,640
ஏதாவது?

152
00:10:14,720 --> 00:10:17,240
கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருக்காங்க!

153
00:10:18,360 --> 00:10:20,240
கோபால் தாஸ் நினைக்கிறதை செய்றார்.

154
00:10:20,320 --> 00:10:21,960
அனுராதாவும் அப்படித்தான்.

155
00:10:22,080 --> 00:10:24,160
இது கட்சியை சிதைச்சிருக்கும்.

156
00:10:24,240 --> 00:10:27,640
நான் பிரதமரா ஆயிருப்பேன், ஆனா
கட்சி ஒடைஞ்சு போயிருக்கும்.

157
00:10:32,520 --> 00:10:34,080
நீ சொல்லியிருக்கணும்.

158
00:10:34,160 --> 00:10:35,720
உங்கிட்ட பொய் சொல்ல முடியாது.

159
00:10:36,440 --> 00:10:37,520
உனக்கு தெரியுமே.

160
00:10:37,600 --> 00:10:38,640
ஸர்!

161
00:10:39,320 --> 00:10:42,400
பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு முன்
ஷேகாவத் சந்திக்கணுமாம்.

162
00:10:43,200 --> 00:10:45,760
-ஆயிஷா எங்கே?
-உங்க அறையில காத்திருக்காங்க.

163
00:10:49,880 --> 00:10:52,880
பாரு, எனக்கு இதுக்கான சக்தி
இப்ப இல்லை.

164
00:10:53,640 --> 00:10:55,440
கரிமாவும் என்னை துரத்தறா

165
00:10:55,520 --> 00:10:58,840
அந்த கல்லூரி பையன், சிவாகூட
ஒரு பேனல் டிஸ்கஷனுக்கு.

166
00:10:58,960 --> 00:11:00,440
என்னால போக முடியாது.

167
00:11:00,520 --> 00:11:03,360
-என் இடத்தில நீ போ.
-என்ன, விளையாடுறீங்களா?

168
00:11:03,440 --> 00:11:04,880
ப்ளீஸ். இதை செய்.

169
00:11:05,760 --> 00:11:06,760
மாட்டிவிட்றீங்க?

170
00:11:07,880 --> 00:11:11,840
இரண்டு நாள் ஆச்சு சமர் ப்ஹாய்,
உங்களை சந்திக்கணும்னு கேட்டு

171
00:11:11,960 --> 00:11:13,720
நிறைய நடந்திருக்கு, ஷேகாவத்.

172
00:11:14,160 --> 00:11:15,120
நான் விளக்கறேன்.

173
00:11:15,960 --> 00:11:16,920
அப்ப சொல்லுங்க.

174
00:11:23,680 --> 00:11:25,560
தொண்டர்கள் கோபமா இருக்காங்க ஸர்

175
00:11:26,840 --> 00:11:28,400
உங்களை ஆதரிச்சாங்க.

176
00:11:28,960 --> 00:11:30,680
இப்ப எங்க போய்டுவாங்கன்னு
தெரியலே

177
00:11:30,760 --> 00:11:32,760
நான் ஜெய்பூர் வந்து பேசறேன்.

178
00:11:34,400 --> 00:11:35,560
ஜெய்பூரா?

179
00:11:36,920 --> 00:11:40,360
16ம் தேதி என் மகனை
மருத்துவமனையில சேத்தாங்க

180
00:11:41,360 --> 00:11:42,480
மஞ்சள் காமாலை.

181
00:11:43,640 --> 00:11:45,320
நல்ல காய்ச்சல் இருந்தது.

182
00:11:45,400 --> 00:11:48,800
நிலைமை மோசமா இருந்தது.
அவன் முகத்தைகூட நான் பார்க்கலை.

183
00:11:49,760 --> 00:11:51,920
உங்களுக்காக ஆள் சேர்த்துட்டிருந்தேன்.

184
00:11:53,280 --> 00:11:56,400
ஜெய்பூர்ல, அப்புறம் அஹமதாபாதில.

185
00:11:56,760 --> 00:11:59,840
47 பேரை மறுநாள் காலை உங்களுக்கு
ஆதரவா திரட்டினேன்.

186
00:12:01,120 --> 00:12:03,720
ஆனா மீட்டிங்க்லே அனுராதா பெயரை சொன்னீங்க.

187
00:12:07,200 --> 00:12:09,200
எங்களிடம் ஆலோசிக்கக் கூட தோணலை.

188
00:12:10,560 --> 00:12:13,680
உங்களிடம் பேச முயற்சி செஞ்சப்ப,
எங்களை தவிர்த்தீங்க.

189
00:12:18,440 --> 00:12:21,680
சாய்ந்தரம் நான் ஜெய்பூர்
திரும்பி போனப்ப...

190
00:12:24,040 --> 00:12:25,840
அவன் பெயர் குஷ்.

191
00:12:26,560 --> 00:12:27,560
என் மகன்.

192
00:12:29,160 --> 00:12:30,480
அவன் இறந்துட்டான்.

193
00:12:42,920 --> 00:12:44,040
சமர் ப்ஹாய்...

194
00:12:44,520 --> 00:12:48,000
உங்களை ப்ளாக்மெயில் செஞ்சதாவும்,
மிரட்டினதாவும் சிலர் சொல்றாங்க...

195
00:12:48,920 --> 00:12:51,560
என்ன ஆச்சு ஏதா ஆச்சுன்னு
கேட்க மாட்டேன்.

196
00:12:53,320 --> 00:12:55,200
ஜோத்பூர்ல ஒண்ணு சொல்வாங்க.

197
00:12:55,880 --> 00:12:58,800
"நீ விசுவாசமா இருக்கிறவங்ககிட்ட
கேள்வி கேட்காதே."

198
00:12:59,840 --> 00:13:02,400
உங்க வலி புரியுது, ஷேகாவத் ஜி.

199
00:13:03,000 --> 00:13:04,800
தெரிவிக்கனும்னு நினைச்சேன்...

200
00:13:05,440 --> 00:13:07,160
அவன் சடங்கு புதன்கிழமையன்று.

201
00:13:08,560 --> 00:13:10,200
இன்னொண்ணும் சொல்லணும்,

202
00:13:10,920 --> 00:13:12,440
நான் உங்க விசுவாசி...

203
00:13:13,840 --> 00:13:15,240
ஆனா அடிமை இல்லை.

204
00:13:33,880 --> 00:13:36,360
சமர் ப்ரதாப், நீங்க ஏன் பிரதமராகலை?

205
00:13:36,440 --> 00:13:39,920
எங்க கட்சி,
ஒரு குடும்பத்துக்கு சொந்தமில்லை.

206
00:13:40,280 --> 00:13:43,600
என் தந்தையின் மறைவுக்கு பின்,
ஒன்றை சொல்ல நினைத்தோம்...

207
00:13:43,960 --> 00:13:47,800
ஒரு தலைவரின் பதவி என்பது
மரபுரிமை இல்லை.

208
00:13:51,760 --> 00:13:54,360
கட்சிதான் என் குடும்பம்.
என் குடும்பம் கட்சி அல்ல.

209
00:13:54,440 --> 00:13:57,760
நீங்க உள்துறை அமைச்சராகவாவது
ஆவீங்களா?

210
00:13:59,560 --> 00:14:02,840
உள்துறை மட்டுமில்லை, எல்லா இடத்திலும்
எங்களுக்கு சமர் தேவை.

211
00:14:03,520 --> 00:14:07,320
எங்கள் இளைய கட்சி தொண்டர்களுக்கு
அவர் வழிகாட்டல் மிகத் தேவை.

212
00:14:07,960 --> 00:14:11,520
அதனால நாங்க ஒரு சிறப்பு
ஆலோசனை கமிட்டி

213
00:14:11,600 --> 00:14:13,280
அமைப்பதே அதற்காகத்தான்.

214
00:14:15,240 --> 00:14:17,280
அதை சமர் தலமைத் தாங்குவார்.

215
00:14:19,240 --> 00:14:21,120
எல்லாரையும் கண்காணிப்பார்.

216
00:14:27,480 --> 00:14:30,720
அப்ப சமர் ப்ரதாபுக்கு
முக்கியமான போர்ட்ஃபோலியோ இல்லையா?

217
00:14:30,800 --> 00:14:34,600
இந்நாட்டின் இளைஞர்கள்தான் இருப்பதில்
மிக முக்கியமான சொத்து.

218
00:14:34,680 --> 00:14:39,000
அதை கவனிக்க, சமரைவிட சிறந்த நபர்
இல்லையென நினைக்கிறேன்.

219
00:14:47,640 --> 00:14:49,080
ஆலோசனை கமிட்டியா?

220
00:14:50,040 --> 00:14:51,600
வாட் த ஃப்க், சமர்!

221
00:14:52,400 --> 00:14:55,480
உன் அரசியல் வாழ்க்கையை
பூரா அழிச்சிட்டா அந்த அனுராதா

222
00:14:55,560 --> 00:14:57,640
அதுக்கு நாம ஒண்ணுமே செய்யலை.

223
00:14:59,200 --> 00:15:02,880
நம் ஆதரவாளர்களுக்கு எந்த முக்கிய
போர்ட்ஃபோலியோவும் கிடைக்காது.

224
00:15:03,720 --> 00:15:06,040
முதல் ஐந்து அமைச்சகங்கள் எதுவும்
கிடைக்காது.

225
00:15:06,120 --> 00:15:08,680
முதல் ரெண்டு அமைச்சகங்களைத்தான்
கவனிக்கணும்.

226
00:15:09,080 --> 00:15:11,000
உள்துறையும் பாதுகாப்பும்.

227
00:15:11,080 --> 00:15:13,320
உள்துறை, ஏன்னா அது பெரிசு.

228
00:15:13,880 --> 00:15:17,640
பாதுகாப்பு,
ஏன்னா அது ரகுவுக்கு கிடைக்கும்.

229
00:15:18,560 --> 00:15:20,600
நீங்க சமர் முகத்தை பார்த்திருக்கணும்.

230
00:15:21,200 --> 00:15:23,520
உக்காந்திருந்த சேரை தட்டி
விட்டுடீங்க.

231
00:15:28,960 --> 00:15:31,200
பெண்ணுக்கு கீழே வேலை செய்வது

232
00:15:32,040 --> 00:15:36,000
வழக்கமாக ஆண் கர்வத்தை புண்ணாக்கும்.

233
00:15:38,160 --> 00:15:40,200
இது வெறும் ஆரம்பம்தான்.

234
00:15:41,080 --> 00:15:43,760
அவனை என்ன செய்யறேன்னு காத்திருந்து பார்.

235
00:15:44,960 --> 00:15:47,360
எனக்கு சமரை தெரிந்தவரை,

236
00:15:48,240 --> 00:15:51,000
அவன் இரண்டு போர்ட்ஃபோலியோவுக்குத்தான்
அலைவான்.

237
00:15:53,160 --> 00:15:55,200
உள்துறை மற்றும் பாதுகாப்பு.

238
00:15:59,800 --> 00:16:00,800
பிரச்சனையே இல்லே!

239
00:16:02,280 --> 00:16:04,760
நாம கவலைப்பட வேண்டியது
ரெண்டு பேர் பத்தி

240
00:16:05,400 --> 00:16:07,840
கோபால் தாஸும் கைலாஷும்.

241
00:16:10,560 --> 00:16:12,200
நாம அவங்களை உடைக்கணும்.

242
00:16:12,280 --> 00:16:14,560
இன்னொரு பலமான ஆள் இருக்காங்க, மேம்.

243
00:16:15,920 --> 00:16:16,960
அதிதி.

244
00:16:19,360 --> 00:16:23,320
அவனுக்கு பாதுகாப்பு கிடைக்கலைன்னா
ரகு தற்கொலை பண்ணிப்பான்.

245
00:16:26,840 --> 00:16:28,200
தேசிய செய்தி அமைப்பு (என்என்என்)

246
00:16:28,280 --> 00:16:30,280
சிவா, கடைசியா என்ன சொல்ல வறீங்க?

247
00:16:30,360 --> 00:16:33,520
அதாவது, அவங்க கட்சி பல வருடங்களா
ஆட்சியில் இருக்கு,

248
00:16:33,600 --> 00:16:35,760
-என்ன செஞ்சீங்க?
-உங்க வீடியோ பார்த்தேன்.

249
00:16:35,840 --> 00:16:38,880
நல்லா பேசுறீங்க.
உங்களுக்கு என்னதான் பிரச்சினை?

250
00:16:38,960 --> 00:16:41,680
சுதந்திரம், சுதந்திரம்ன்னு
கோஷம் போடுறீங்க.

251
00:16:41,760 --> 00:16:45,040
நம்ப நாடு சுதந்திரமாத்தானே இருக்கு.
அப்ப என்ன கேக்குறீங்க?

252
00:16:45,120 --> 00:16:47,080
சுதந்திரம்னா அந்த மாதிரி
எடுத்துக்காதீங்க.

253
00:16:47,160 --> 00:16:49,680
சாதாரண மனிதனுக்கு
நிறைய கட்டுப்பாடுகள் இருக்கு.

254
00:16:49,760 --> 00:16:52,440
உழவர்களுக்கு வேண்டியதை விளைவிக்கும்
சுதந்திரமில்லை.

255
00:16:52,520 --> 00:16:54,000
அப்ப, சுதந்திரம் இருக்கா?

256
00:16:54,800 --> 00:16:59,560
இப்ப, நம்ம நாட்டுக்கு உங்க அரசிடமிருந்து
சுதந்திரம் தேவைன்னு சொல்லுவேன்.

257
00:16:59,640 --> 00:17:01,840
அவர் செய்யறது ரொம்ப வலிமையான வாதம்.

258
00:17:01,960 --> 00:17:03,520
இருங்க. அது எப்படி வலிமையான வாதம்?

259
00:17:03,600 --> 00:17:06,400
அப்ப வாக்காளர்கள் முட்டாள்கள்னு
சொல்றீங்களா?

260
00:17:06,480 --> 00:17:09,080
எங்க கட்சி மூன்று முறையாக
ஆட்சியில் இருந்திருக்கு.

261
00:17:09,160 --> 00:17:11,280
"சுதந்திர" வாக்காளர்கள்தான்
வாக்களிச்சாங்க!

262
00:17:11,320 --> 00:17:15,560
வாக்காளர்கள் பற்றி பேசலை, ஆனா
எப்படி தேர்தல்ல ஜெயிச்சீங்கன்னு தெரியுமே.

263
00:17:15,640 --> 00:17:17,800
இப்படி பேச தேசிய தொலைக்காட்சியில்
அனுமதிக்க...

264
00:17:17,920 --> 00:17:19,000
ஒரு நொடி, கரிமா.

265
00:17:19,080 --> 00:17:22,560
ஜனநாயகத்தோட புனிதத்தை கேள்வி
கேட்க இவரை அனுமதிக்கிறீங்களா?

266
00:17:22,640 --> 00:17:24,920
-வாக்களிப்பை, ஜனநாயகத்தை இல்லை.
-...தேசிய தொலைக்காட்சியில்!

267
00:17:25,000 --> 00:17:26,080
ஒரு நொடி, கைஸ்...

268
00:17:29,040 --> 00:17:31,080
-நீ கல்லூரிக்கு போறியா?
-ஆமாம்.

269
00:17:31,160 --> 00:17:34,000
-நான் உன்னை விட்டுடறேன்.
-நீங்க என்னை விடுறீங்களா?

270
00:17:34,080 --> 00:17:36,000
நீ விஐபி காரில் ஏறினதுண்டா?

271
00:17:38,800 --> 00:17:41,000
உன்னை பார்த்து பொறாமை
பட்டேன், சிவா.

272
00:17:41,560 --> 00:17:42,920
நீ சொன்னது சரி.

273
00:17:43,480 --> 00:17:45,320
நான் கட்சிக்காக பேசணும்.

274
00:17:46,040 --> 00:17:48,280
கட்சி எப்பவுமே சரின்னு சொல்ல முடியாது.

275
00:17:48,640 --> 00:17:50,520
ஆனா எப்பவுமே தப்பும் இல்லை.

276
00:17:50,640 --> 00:17:53,640
அவங்க எப்பவுமே சரியா இல்லைன்னா,
ஏன் அவங்களோட இருக்கீங்க?

277
00:17:53,720 --> 00:17:56,560
எல்லாமே சரியா இருந்தா,
நான் ஏன் அவங்களுக்கு தேவை?

278
00:17:56,640 --> 00:17:57,960
மத்தவங்க தேவை?

279
00:17:59,160 --> 00:18:01,240
உனக்கு ஜேஎல்டில சேர விருப்பமா?

280
00:18:01,320 --> 00:18:03,200
அது, திடீர்னு தோணிச்சு.

281
00:18:03,800 --> 00:18:06,760
சிவா, நீ நல்ல அரசியல்வாதியாவேன்னு
தோணுது.

282
00:18:06,800 --> 00:18:08,560
அரசியல்வாதியாகவே வேண்டாம்.

283
00:18:09,480 --> 00:18:11,160
உங்களை மதிக்கிறேன், மேம், ஆனா...

284
00:18:12,440 --> 00:18:14,920
எங்க கொள்கைகள் தொலைக்காட்சி
பேச்சோட நிக்காது.

285
00:18:16,200 --> 00:18:18,040
நீங்க பயணிக்கிற விஐபி கார்,

286
00:18:18,720 --> 00:18:22,080
வாழ்நாளில் ஒரு உழவனால அப்படி ஒன்னை
வாங்க சம்பாதிக்க முடியாது.

287
00:18:23,200 --> 00:18:25,160
எனக்கு ஆட்டோரிக்ஷாவே போதும்.

288
00:18:26,280 --> 00:18:27,760
ஒரு அறிவுரை சொல்லவா?

289
00:18:28,680 --> 00:18:32,280
நீ சொல்ல வர்றதை புரிய வைக்க,
மத்தவங்க மனசை புண்படுத்த வேணாம்.

290
00:18:32,320 --> 00:18:35,040
டிவியிலும் வேணாம், நிஜ வாழ்க்கையிலும்
வேணாம்.

291
00:18:35,480 --> 00:18:36,560
பாக்கலாம்.

292
00:18:40,680 --> 00:18:44,240
இந்த பல்கலைக்கழக தேர்தல் கடினமானது.
நிறைய பணம் தேவைப்படும்.

293
00:18:44,320 --> 00:18:45,760
சமர் ஸரிடம் சொல்லிடுங்க.

294
00:18:47,720 --> 00:18:49,160
என்னென்னா...

295
00:18:50,560 --> 00:18:53,880
கல்லூரியில எஸ்ஐஏக்கு பலத்த
ஆதரவு இருக்கு.

296
00:18:53,960 --> 00:18:56,320
அந்த நீல ஜாக்கெட் போட்டவனை
பாக்கறீங்களே,

297
00:18:56,440 --> 00:18:57,560
அவன் புது ஹீரோ!

298
00:18:57,680 --> 00:19:00,880
முதல்வர் வேட்பாளர் யார் இதுல?

299
00:19:02,080 --> 00:19:04,800
-பச்சை சட்டைக்காரன்.
-டார்க் பச்சையா லைட்டா?

300
00:19:05,200 --> 00:19:07,720
டார்க் பச்சை ஜாக்கெட். சேத்தன் க்ராந்தி.

301
00:19:08,080 --> 00:19:11,240
-அவனைப்பத்தி எல்லா விவரமும் சேகரி.
-நிச்சயமா.

302
00:19:16,920 --> 00:19:19,560
கோபால் தாஸ் ஜி,
உள்துறை அமைச்சராகுங்களேன்?

303
00:19:20,760 --> 00:19:22,240
உள்துறை அமைச்சரா?

304
00:19:30,640 --> 00:19:31,920
தங்கம்!!

305
00:19:33,560 --> 00:19:35,080
ஆனா நல்லா இருக்காதுலே

306
00:19:36,320 --> 00:19:39,800
அதாவது, உனக்கு கீழே வேலை செய்றது..

307
00:19:41,880 --> 00:19:44,320
கட்சித் தலைவராக இருப்பதே நல்லது.

308
00:19:45,320 --> 00:19:47,520
நான் பிரதமரானதில்லை.

309
00:19:49,880 --> 00:19:53,480
ஆனா மூன்னு பிரதமர்களை காலி பண்ணிருக்கேன்.

310
00:19:57,080 --> 00:19:58,440
நான் சொல்றதை நல்லா கவனி.

311
00:20:00,200 --> 00:20:02,800
ஒன்னா இருந்து சுமூகமா வேலை
செய்வோம்.

312
00:20:03,960 --> 00:20:07,080
கைலாஷ் உங்க எச்ஆர்டி அமைச்சரா
இருப்பார்.

313
00:20:11,800 --> 00:20:13,080
கோபால் தாஸ் ஜி..

314
00:20:15,400 --> 00:20:18,080
உங்க சீனியாரிட்டியை மதிக்கிறேன்,

315
00:20:19,640 --> 00:20:22,760
ஆனா போர்ட்ஃபோலியோ ஒதுக்க
உங்களை அழைக்கலை.

316
00:20:24,280 --> 00:20:28,960
உங்களே கூப்டது, எந்த
அமைச்சகம் யாருக்குன்னு தெரிவிக்கத்தான்

317
00:20:38,440 --> 00:20:41,520
ஹேய், அதிதி! வா வா.

318
00:20:42,920 --> 00:20:44,760
-ஹல்லோ மேம்.
-அற்புதம்!

319
00:20:45,080 --> 00:20:49,960
இளைய வசீகரமான அரசு
இருக்கும் போல இந்த சமயம்.

320
00:20:52,400 --> 00:20:56,520
என்ன நடக்குது அதிதி ஜி,
தினமும் ஃபிட்டா ஆயிட்டே போறீங்க?

321
00:20:57,320 --> 00:20:59,040
என்ன உடற்பயிற்சி செய்யறீங்க?

322
00:20:59,080 --> 00:21:01,080
இல்ல புது டயட்டா?

323
00:21:01,680 --> 00:21:03,760
கீடோதானே செய்றீங்க?

324
00:21:05,440 --> 00:21:07,000
மைதிலி ஜியைப் பாருங்க.

325
00:21:08,400 --> 00:21:11,040
அசத்தலா இருக்கீங்க, மைதிலி ஜி!

326
00:21:12,080 --> 00:21:14,560
ஸர், உங்களுக்கு வேணும்னா,
டயட் சார்ட் அனுப்பறேன்.

327
00:21:15,040 --> 00:21:16,720
ஓ, இல்லை, வேண்டாம்.

328
00:21:17,800 --> 00:21:19,520
க்ராஸ்-ட்ரெய்னிங் செய்யறேன்.

329
00:21:20,000 --> 00:21:22,280
பாருங்க. தினமும் காலை பத்து நிமிஷம்...

330
00:21:22,320 --> 00:21:24,320
-அதிதி...
-மேம்.

331
00:21:25,400 --> 00:21:27,440
சுமூகமான அறிமுகம் இல்லே
நமக்குள்ள

332
00:21:28,320 --> 00:21:31,320
ஆனா எனென்னா, நீ ரொம்ப திறமையானவ.

333
00:21:32,040 --> 00:21:34,680
திறமையான பெண்கள் வேணும் எனக்கு
என் கேபினெட்டில

334
00:21:35,320 --> 00:21:38,560
-எனக்கு எந்த துறை?
-பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்

335
00:21:41,960 --> 00:21:44,000
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்!

336
00:21:45,000 --> 00:21:46,320
தொடருங்க, தொடருங்க.

337
00:21:49,160 --> 00:21:50,880
யாருக்கு பாதுகாப்பு துறை?

338
00:21:57,840 --> 00:21:59,680
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்!

339
00:22:02,320 --> 00:22:04,240
நீ என் பக்கம்னு அவங்களுக்கு தெரியும்.

340
00:22:05,760 --> 00:22:08,960
உனக்கு இந்த துறைகள் கொடுத்து
என்னை அவமானப்படுத்த நினைக்கிறாங்க.

341
00:22:11,120 --> 00:22:13,320
நமக்கு வலுவான துறை
கொடுக்கவே மாட்டாங்க.

342
00:22:13,400 --> 00:22:16,440
நான் வேற எதையும் ஏற்க மாட்டேன்
சமர், பாதுகாப்பை தவிர

343
00:22:26,000 --> 00:22:27,200
சிவாகிட்ட பேசினியா?

344
00:22:28,280 --> 00:22:30,680
-என்ன சொன்னான்?
-அவன் ஒத்துக்கமாட்டான்.

345
00:22:31,000 --> 00:22:34,040
-நேரா கேட்டியா?
-அவனே நேராவும் சொன்னான்.

346
00:22:34,880 --> 00:22:36,520
அவனுக்கு வேண்டியது தெரியும்

347
00:22:37,280 --> 00:22:38,880
வேண்டியது நல்லாவே தெரியும்.

348
00:22:41,080 --> 00:22:44,480
குர்பால்
அழைப்பு...

349
00:22:45,280 --> 00:22:47,240
-சொல்லுங்க, ஸர்?
-அது..

350
00:22:47,800 --> 00:22:50,000
ஜிகர் சம்பத் இன்னும் விஎன்யூல
இருக்கானா?

351
00:22:50,400 --> 00:22:51,960
கண்டுபிடிக்கிறேன்.

352
00:22:58,640 --> 00:23:00,400
சேத்தன் - 0831

353
00:23:02,160 --> 00:23:03,960
அதைப்பத்தி யோசிச்சியா?

354
00:23:05,760 --> 00:23:09,880
நான் சிவில் சர்வீஸ் பரிட்சைக்கு தயார்
பண்றேன். அரசியலுக்கு நேரமில்லை.

355
00:23:10,000 --> 00:23:11,240
நேரமில்லையா?

356
00:23:11,320 --> 00:23:14,040
நீ சொன்னேலே "அவசியம்னா, சண்டை போடணும்"னு?

357
00:23:14,760 --> 00:23:15,760
அவசியம் வந்திருக்கு

358
00:23:16,120 --> 00:23:17,960
அப்படி என்ன அவசியம்
வந்திருக்கு?

359
00:23:18,440 --> 00:23:20,920
நான் மத்தவங்களைப் போல
வேதாந்தி இல்லை, சிவா.

360
00:23:21,680 --> 00:23:25,040
நமக்கு தெரியும், இந்த தேர்தலை
எஸ்ஏஐ ஜெயிக்கிறதால

361
00:23:25,120 --> 00:23:27,160
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை தீராது.

362
00:23:27,240 --> 00:23:30,320
காஷ்மீர் பாதுகாப்பாகாது, நகர
பெயர்கள் மாறாம இருக்காது.

363
00:23:30,400 --> 00:23:34,040
ஆனா சபீபமா இந்த வளாகத்தில நீதான்
ஹீரோ!

364
00:23:36,360 --> 00:23:37,240
என்னென்னா..

365
00:23:37,320 --> 00:23:41,280
நீ எங்க கட்சியில நின்னா, இந்த
தேர்தல்ல வெற்றி உறுதி.

366
00:23:41,360 --> 00:23:43,680
இந்த வருஷம் நாம பல்கலைக்கழகத்தை
நடத்துவோம்.

367
00:23:46,640 --> 00:23:48,080
ஒரு நாள் டைம் குடு.

368
00:23:49,560 --> 00:23:51,920
நான் கேட்கிறதெல்லாம் ஒரு நாள்தான்.

369
00:23:56,400 --> 00:24:01,480
கைலாஷ் குமாரின் இல்லம்
ஜேஎல்டி கமிட்டி தலைவர்

370
00:24:01,560 --> 00:24:04,320
நான் டீன் பதவியை ஏற்கக்கூடாதுன்னு
நினைக்கிறேன்.

371
00:24:04,720 --> 00:24:05,800
ஏன்? என்ன பிரச்சினை?

372
00:24:06,640 --> 00:24:09,480
நீ எச்ஆர்டி அமைச்சராகி,
நான் டீன் ஆனா,

373
00:24:09,560 --> 00:24:10,920
மக்கள் என்ன நினைப்பாங்க?

374
00:24:11,680 --> 00:24:13,080
உதவின்னு நினைப்பாங்க.

375
00:24:13,360 --> 00:24:14,720
ஆனா நான் உதவி செய்யலை.

376
00:24:14,800 --> 00:24:17,680
தெரியும். ஆனா மக்கள் அப்படி
பேசுவாங்கலே?

377
00:24:22,040 --> 00:24:24,200
உனக்கு கவலை மக்களா இல்லே ஜிகரா?

378
00:24:25,760 --> 00:24:27,680
மக்களைப்பத்தி கவலைப்படுறீன்னா

379
00:24:27,760 --> 00:24:30,400
இன்னும் ஜபல்பூர்ல பசங்களுக்கு
பாடம் எடுத்திருப்பே.

380
00:24:30,480 --> 00:24:34,240
நான், எங்கப்பா கடையில செருப்பு
தெச்சிட்டு இருந்திருப்பேன்.

381
00:24:41,400 --> 00:24:46,000
நாம மக்களைப் பத்தி கவலைப்படலைன்னா
இந்த உறவை நாம மறைக்க மாட்டோம்.

382
00:24:46,600 --> 00:24:49,440
ஸர், கதவுக்கருகே பல
செய்தியாளர்கள்.

383
00:24:55,600 --> 00:24:56,760
ஒரு நாள் விடுமுறை எடு.

384
00:25:20,360 --> 00:25:22,280
நிறுத்து. வலிக்குது ஜிகர்!

385
00:25:23,160 --> 00:25:24,400
ப்ஹா!

386
00:25:30,240 --> 00:25:31,680
என்ன ஆச்சு?

387
00:25:33,240 --> 00:25:34,600
அவளுக்கு விவாகரத்து வேணுமாம்.

388
00:25:43,640 --> 00:25:45,240
அவளை இன்னும் விரும்பறேன்.

389
00:25:46,760 --> 00:25:48,720
என்ன செய்யறது?
கையெழுத்திடவா?

390
00:25:48,800 --> 00:25:50,640
உன்னை பார்த்தது சந்தோஷம்.

391
00:25:50,760 --> 00:25:54,400
சந்தியா என்னை நிறுத்தலைன்னா,
இது லண்டன்ல என் பத்தாவது வருஷம்.

392
00:25:54,480 --> 00:25:56,200
காதலுக்காக நாம விடறதெல்லாம்!

393
00:25:56,920 --> 00:25:59,480
ஆனா அதனால என்ன?
இந்த நாற்காலி, இந்த மேஜை...

394
00:25:59,560 --> 00:26:02,040
வீட்டில் ஒவ்வொரு மூலையும்
உன்னை நினைவூட்டுது.

395
00:26:02,120 --> 00:26:04,720
நீ கடந்த 15 வருஷம் என் வாழ்க்கையில்
இருந்தே,

396
00:26:04,840 --> 00:26:07,560
உன்னை எப்படி மறக்கறதுன்னு
தெரியலைன்னு!

397
00:26:07,640 --> 00:26:09,400
எல்லாம் எப்படி மாத்தறது, சனா?

398
00:26:13,800 --> 00:26:15,360
அப்ப நான் இங்க என்ன
புடுங்குறேன்?

399
00:26:17,640 --> 00:26:18,880
சனா...

400
00:26:20,080 --> 00:26:22,800
நீ தப்பா எடுத்துக்காதே!

401
00:26:23,840 --> 00:26:27,560
நீ இல்லைன்னா இதிலிருந்து நான்
வெளி வந்திருக்க மாட்டேன்.

402
00:26:27,880 --> 00:26:30,240
அப்ப, நான் ஒரு முட்டாள்.

403
00:26:31,120 --> 00:26:34,560
தன் பேராசிரியரின் சொந்த பிரச்சனையே
சரி செய்யும் மாணவி,

404
00:26:34,680 --> 00:26:36,960
இல்லாத ஒரு அப்பாவே அவருக்குள்ள
தேடியே

405
00:26:37,040 --> 00:26:38,480
சனா...

406
00:26:40,640 --> 00:26:42,240
உன்கிட்ட பேசறதா இருந்தேன்

407
00:26:43,680 --> 00:26:47,600
நம் உறவு எங்கே போகுதுன்னு,
என்ன நடக்குதுன்னு.

408
00:26:47,680 --> 00:26:49,520
எதேச்சையா ஆரம்பிச்சுது,

409
00:26:49,600 --> 00:26:52,240
அதைப்பத்தி நாம பேசலை,
அப்புறம் உணர்ந்தேன்...

410
00:26:53,120 --> 00:26:55,920
எனக்கு பெரிசா ஒன்னு
வேணும்னு இல்லை.

411
00:26:56,880 --> 00:26:59,200
ஆனா நானும் ஒரு ஏமாளியாக
விரும்பலே.

412
00:26:59,280 --> 00:27:02,120
-சனா, ப்ளீஸ்...
-என்ன வித்தியாசமா நடந்திடுச்சு?

413
00:27:03,920 --> 00:27:06,200
நாம ஒத்துக்கலேன்னாலும்..

414
00:27:07,560 --> 00:27:10,440
நமக்குள்ள ஒரு ஒத்துமை..

415
00:27:11,480 --> 00:27:14,440
-ரெண்டு பேரும் தோத்துட்டோம்
-சனா, ப்ளீஸ், கொஞ்ச..

416
00:27:17,640 --> 00:27:19,320
-போகாதே..
-விடு..

417
00:27:29,920 --> 00:27:31,080
ஹலோ?

418
00:27:48,760 --> 00:27:50,560
இன்னிக்கு அதை சப்மிட் பண்ணணுமா?

419
00:27:57,320 --> 00:27:58,360
-நமஸ்த்தே
-நமஸ்த்தே

420
00:27:58,440 --> 00:27:59,760
சிவா ஷேகர் எங்கே?

421
00:28:00,640 --> 00:28:02,360
சிவா அவன் அறையில இருக்கான், மாமா.

422
00:28:02,920 --> 00:28:05,160
-அவனை கூட்டிட்ட வர்றேன்.
-பொது அறைக்கு.

423
00:28:05,240 --> 00:28:06,920
நாங்க கூட்டிட்டு வர்றோம்.

424
00:28:40,200 --> 00:28:41,680
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

425
00:28:41,800 --> 00:28:45,600
சந்தோஷமான வாழ்க்கை அமையட்டும்.
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

426
00:28:46,440 --> 00:28:50,440
மகனே, எங்களுக்குத் தெரியலே,
நீ சாதாரண மனிதனோ,

427
00:28:50,560 --> 00:28:52,800
மாணவனோ, அரசியல்வாதியோன்னு.

428
00:28:53,400 --> 00:28:56,600
-எங்களுக்கு, நீ கடவுள்.
-அப்படி சொல்லாதீங்க...

429
00:28:56,720 --> 00:28:59,280
உன்னால, நீதிமன்றம் "ஸ்டே ஆர்டர்"
குடுத்து,

430
00:28:59,360 --> 00:29:01,000
நிலங்களை காப்பாத்தியாச்சு.

431
00:29:01,080 --> 00:29:02,440
ஆமாம், மகனே,

432
00:29:02,520 --> 00:29:07,480
குடுக்க ஒன்னும் இல்லே. என் மீதி
ஆயுள் உனக்கு சேரட்டும்.

433
00:29:07,920 --> 00:29:09,520
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

434
00:29:09,640 --> 00:29:11,960
என்சிஆர்ல இப்ப நீதான்
கெத்து..

435
00:29:12,040 --> 00:29:14,360
-நீடூழி வாழ்க...
-சிவா சேகர்!

436
00:29:14,440 --> 00:29:16,680
-நீடூழி வாழ்க...
-சிவா ஷேகர்!

437
00:29:16,760 --> 00:29:19,200
-நீடூழி வாழ்க...
-சிவா சேகர்!

438
00:29:19,280 --> 00:29:21,160
-நீடூழி வாழ்க...
-சிவா சேகர்!

439
00:29:21,240 --> 00:29:23,240
-நீடூழி வாழ்க...
-சிவா சேகர்!

440
00:29:32,720 --> 00:29:34,480
இன்னிக்கு வருத்தமா இருக்கே..

441
00:29:36,000 --> 00:29:37,080
இல்லை.

442
00:29:38,720 --> 00:29:39,880
அப்படி எதுவும் இல்லை.

443
00:29:44,920 --> 00:29:48,400
நாளைக்கு கடைசி நாள், நாமிநேஷன்
தாக்கல் செய்ய.

444
00:29:50,600 --> 00:29:53,840
நீ அரசியல்வாதியாகப் பிறந்தவன்னு
புரியும்னு நம்பறேன்.

445
00:29:55,240 --> 00:29:56,680
சனா...

446
00:29:57,760 --> 00:30:02,000
இம்ரானை சிறையிலிருந்து வெளியேற்ற
நாம செய்தது தவறு.

447
00:30:04,680 --> 00:30:07,080
அப்ப, நான் அரசியல்வாதியாக
பிறந்தவன்னா...

448
00:30:08,480 --> 00:30:09,840
அரசியலே தப்பு.

449
00:30:13,680 --> 00:30:15,480
அரசியல் சரியோ தப்போ,

450
00:30:16,960 --> 00:30:18,520
அது உன்னை தேர்வு செய்யுது.

451
00:30:22,160 --> 00:30:23,280
கையைத் தூக்குங்க

452
00:30:29,320 --> 00:30:30,440
உங்க மொபைல்.

453
00:30:32,080 --> 00:30:33,520
நான் வச்சிக்குறேன்.

454
00:30:40,840 --> 00:30:44,040
-இங்கே என்ன பண்றே?
-ஒவ்வொரு மாசமும் வருவேன்.

455
00:30:44,960 --> 00:30:46,560
ஆனா தெரியாம செய்வேன்.

456
00:30:47,960 --> 00:30:49,160
அதுதான் நம்ம இடம்.

457
00:30:50,360 --> 00:30:51,760
16 வருஷமாச்சு.

458
00:30:52,080 --> 00:30:53,360
நாம முடிவு செஞ்சோம்

459
00:30:54,080 --> 00:30:56,280
வருஷத்துல ஒரு முறையாவது சந்திக்கணும்னு.

460
00:30:57,880 --> 00:31:00,840
ஆனா என்ன முடிவெடுக்கலைன்னா என்னை
செக் பண்ணி

461
00:31:00,920 --> 00:31:02,520
ஃபோனை எடுத்து வச்சுப்பாங்கனு.

462
00:31:02,960 --> 00:31:06,520
ஆனா நமக்கு தெரியலை ஒருத்தர்
ஆசிரியராவும்

463
00:31:06,600 --> 00:31:08,360
ஒருத்தர் பிரதமராகவும் ஆவோம்னும்.

464
00:31:08,440 --> 00:31:09,360
கிட்டத்தட்ட.

465
00:31:11,120 --> 00:31:13,040
என்னை நக்கலடிக்கிறே, ராஸ்கல்!

466
00:31:13,920 --> 00:31:15,040
கிட்டத்தட்டவா?

467
00:31:17,920 --> 00:31:21,240
"கிட்டத்தட்ட" என்பதை நீங்க
மதிக்கற்துக் கூட இல்லே.

468
00:31:21,320 --> 00:31:24,280
நான் முதல் முறையா அந்த மேடை
ஏறினது நினைவிருக்கா?

469
00:31:24,360 --> 00:31:26,320
-மழைலே..
-மழைலே..

470
00:31:30,040 --> 00:31:32,080
இதுதான் என் உலகம்னு எப்பவும்
தோணும்

471
00:31:33,040 --> 00:31:36,680
இதுதான் நான் வாழ நினைச்ச வாழ்க்கை.
சாதாரண வாழ்க்கை.

472
00:31:36,760 --> 00:31:39,240
ஆனா உன் வாழ்க்கை இப்ப
சாதாரணமா இல்லேயே?

473
00:31:41,600 --> 00:31:43,000
யார் சொன்னாங்க?

474
00:31:43,080 --> 00:31:45,880
அவ பெரிய அரசியல் தலைவரை
பிடிச்சிருக்கா.

475
00:31:45,960 --> 00:31:48,560
அவமானப்படுத்த வந்தியா,
இத்தனை வருடங்கள் பிறகு

476
00:31:48,640 --> 00:31:50,080
இல்லை.

477
00:31:51,000 --> 00:31:54,280
40 வயதில் காதல் எப்படி இருக்கும்னு
பார்க்க நினைச்சேன்.

478
00:32:01,360 --> 00:32:04,440
சாதாரண வாழ்க்கை வாழ்வதன்
பக்கவிளைவு...

479
00:32:06,200 --> 00:32:09,320
மத்தவங்க நம்மளவிட
சக்திவாய்ந்தவராயிடுவாங்க

480
00:32:10,960 --> 00:32:14,440
சுத்தியிருக்கறதை மாத்துற சக்தியை
மட்டும் இல்லே..

481
00:32:15,080 --> 00:32:16,720
பெரிய "லவ்டா"வும் குடுக்கும்.

482
00:32:16,800 --> 00:32:20,640
மன்னிக்கணும், இதை சொல்ல வேறு
வழி தெரியலை,

483
00:32:20,720 --> 00:32:22,720
அது எவ்வளவு பெரிசுன்னா..

484
00:32:23,640 --> 00:32:26,720
பொண்ணுங்க எல்லாம் அதுக்கு
பின்னாடி அப்படி அலைவாங்க!

485
00:32:32,560 --> 00:32:35,400
உன் அன்பு கோபம் நிறைந்ததுன்னா,

486
00:32:35,760 --> 00:32:37,360
என்னால உனக்கு உதவ முடியும்.

487
00:32:39,600 --> 00:32:41,000
எனக்கும் உன் உதவி தேவை.

488
00:32:43,200 --> 00:32:44,720
சரின்னு சொல்லு,

489
00:32:45,840 --> 00:32:47,520
குர்பால் விவரங்களை சொல்லுவான்.

490
00:32:56,160 --> 00:32:57,760
ஒன்னு சொல்லவா?

491
00:33:00,400 --> 00:33:02,720
உன் தலைவிதியை உன்னால
உணர முடியலை.

492
00:33:03,680 --> 00:33:07,080
-ஆனால் மத்தவங்களுக்கெல்லாம் புரியுது.
-என்ன?

493
00:33:10,760 --> 00:33:12,760
1988ஆம் ஆண்டிலே..

494
00:33:13,960 --> 00:33:16,400
சச்சின் ஆடும்போது யாரோ பார்த்தபோது

495
00:33:17,560 --> 00:33:19,680
ஏற்பட்ட அதே உணர்வு.

496
00:33:20,880 --> 00:33:24,000
கடந்த சில நாட்களா நான்
உணர்றேன்.

497
00:33:26,080 --> 00:33:28,200
அப்ப 1988ல, சச்சினுக்கும் தெரியாது

498
00:33:28,960 --> 00:33:30,120
தன் திறமையைப் பற்றி.

499
00:33:41,200 --> 00:33:44,080
விஎன்யூ தேர்தல்
நாமிநேஷன் தினம்

500
00:33:44,200 --> 00:33:46,480
சிவா சேகரோட வீடியோ வைரல்
ஆன பிறகு

501
00:33:46,560 --> 00:33:50,760
விஎன்யூவில் இந்த மாணவர் தேர்தலை
தேசமே தொலைக்காட்சியில் பார்க்கிறது.

502
00:33:57,360 --> 00:34:02,040
எஸ்ஏஐ வேட்பாளர், சேத்தன், தலைவர் பதவிக்கு!

503
00:34:05,160 --> 00:34:08,240
சிவா சேகர், துணைத்தலைவர் பதவிக்கு!

504
00:34:10,800 --> 00:34:13,160
சனா மீர், ஜெனரல் செக்ரடரி பதவிக்கு.

505
00:34:17,520 --> 00:34:20,080
விஷால் அவஸ்தி, ஜாயின்ட் செக்ரடரி பதவிக்கு.

506
00:34:20,160 --> 00:34:23,280
சிவா சேகர் இன்று எஸ்ஐஏ வேட்பாளராக,

507
00:34:23,360 --> 00:34:25,520
துணைத் தலைவர் பதவிக்கு
தாக்கல் செய்தார்.

508
00:34:25,600 --> 00:34:29,040
நூற்றுக்கணக்கான மாணவர்கள் இங்கே
கூடியிருப்பதை காணலாம்.

509
00:34:29,160 --> 00:34:32,280
இது மிகவும் முக்கியமான தினம்,
மாணவர் அரசியலில்.

510
00:34:48,920 --> 00:34:49,840
சொல்லு, குர்பால்?

511
00:34:49,920 --> 00:34:52,160
ஸர், சிவா சேகர்
நாமிநேஷனை தாக்கல் செய்தான்.

512
00:34:53,960 --> 00:34:55,320
இடதுசாரி வேட்பாளராக.

513
00:34:55,920 --> 00:34:57,200
ஆனால் தாக்கல் செய்தான்.

514
00:34:57,320 --> 00:35:00,160
இடதிலிருந்து வலதுசாரிக்கு
மாறுவது கடினமில்லை.

515
00:35:01,840 --> 00:35:05,280
ஒரு கண்ணாடி இருந்தா போதும்,
இடது வலதா ஆயிடும்.

516
00:35:07,320 --> 00:35:11,160
குறைந்தபட்சம், என் சந்த்ரகுப்தன்
போர்க்களத்துக்காவது வந்தானே.

517
00:35:13,480 --> 00:35:16,360
-முழுதும்! முழுதும்!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

518
00:35:16,600 --> 00:35:19,640
-முழுதும்! முழுதும்!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

519
00:35:19,840 --> 00:35:22,440
-முழுதும்! முழுதும்!
-எஸ்ஏஐ! எஸ்ஏஐ!

520
00:37:19,960 --> 00:37:21,960
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

