1
00:00:01,126 --> 00:00:04,086
நத்தாலி சொன்னதை கேட்டாய் தானே,
திடீர் அசைவுகள், மாற்றங்கள் கூடாது.

2
00:00:04,171 --> 00:00:06,965
நத்தாலி மருத்துவர் கிடையாது.
என் தங்கைக்கு தரமான பராமரிப்பு தேவை.

3
00:00:07,049 --> 00:00:08,509
அவள் பிரார்த்திக்கிறாள்.
நான் அவளை பார்த்தேன்.

4
00:00:08,592 --> 00:00:10,761
நம் உலகிற்கு ஒரு சின்ன கடவுளை
அவள் கொண்டு வருவதால் என்ன ஆகிவிடும்?

5
00:00:10,844 --> 00:00:12,221
இது மிரட்டலாக இருக்குமோ?

6
00:00:12,304 --> 00:00:14,056
-நீ அதை வைத்து கொள்ள விரும்புகிறாய் தானே?
-நீ அப்படி செய்ய மாட்டாயா?

7
00:00:16,475 --> 00:00:17,643
நீ இங்கே இருந்தாயா?

8
00:00:17,726 --> 00:00:19,186
நீ ஏதாவது பார்த்தாயா?

9
00:00:20,229 --> 00:00:21,396
ஹலோ, சின்ன மலரே.

10
00:00:21,480 --> 00:00:25,025
மாமாக்கள். ஏதாவது ஒரு துயரம் ஏற்படும்
போது, நாம் தான் முன்வருவோம்.

11
00:00:25,108 --> 00:00:26,527
அவன் லியனை நம்மிடத்தில் இருந்து
கூட்டி செல்ல விரும்புகிறான்.

12
00:00:26,610 --> 00:00:29,530
-நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்.
-இது கடவுள் இல்லாத வீடு.

13
00:01:37,598 --> 00:01:38,599
டொரோதி.

14
00:01:43,854 --> 00:01:44,855
பாரு...

15
00:01:48,901 --> 00:01:50,152
அவனுக்கு ஒன்றுமில்லை.

16
00:01:53,655 --> 00:01:54,656
பாரு?

17
00:01:57,326 --> 00:01:58,786
ஜெரிகோ நன்றாக இருக்கிறான்.

18
00:02:18,305 --> 00:02:21,141
நான் இப்பொழுது ஒரு நல்ல இடத்தில்
இருப்பதை போல உணர்கிறேன்.

19
00:02:22,559 --> 00:02:25,395
பல வருடங்களில் இல்லாத அளவிற்கு நான்
இப்பொழுது சீராக, நிலையாக இருக்கிறேன்.

20
00:02:27,106 --> 00:02:31,777
நான் அவனுக்கு தாய்ப்பால் கொடுப்பதை
நிறுத்துகிறேன் என்பது தான் பெரிய செய்தி.

21
00:02:31,860 --> 00:02:35,656
எனக்கு தெரியும், எனக்கு தெரியும், நான்...
வேதனை அடைந்தேன்.

22
00:02:35,739 --> 00:02:38,575
ஆனால், செல்லும் வழியிலேயே தாய்ப்பாலை
பிழிந்து வைப்பது சிரமமான வேலை.

23
00:02:38,659 --> 00:02:41,412
அந்த பாலில் பாதிக்கும் மேல் வடிகாலில்
நேராக விழுந்து, குடிநீரில் கலக்கிறது.

24
00:02:41,495 --> 00:02:43,038
ஃபிலடெல்ஃபியாவிற்கு வரவேற்கிறேன்.

25
00:02:43,664 --> 00:02:44,957
இழுத்துப் பிடி.

26
00:02:46,792 --> 00:02:50,129
அப்புறம் ஷான் இருக்கிறான். நானும் அவனும்
அவ்வளவாக தொடுவது கூட இல்லை.

27
00:02:51,296 --> 00:02:54,508
சில நேரங்களில், நான் அவனை அணைத்து, நான்
இருக்கிறேன் என்று சொல்ல விரும்புகிறேன்.

28
00:02:54,591 --> 00:02:56,051
ஆனால், நெருக்கமாக இருக்க நான் துவங்கினால்,

29
00:02:56,135 --> 00:02:58,178
அவனுடன் உடலுறவு கொண்டாக வேண்டுமா
என்று நான் எப்பொழுதும் யோசிப்பேன்.

30
00:02:59,138 --> 00:03:00,139
சரி தான், டொரோதி.

31
00:03:01,515 --> 00:03:06,895
உனக்கு மன அழுத்தம் ஏற்படுத்துகிற ஒரு
சூழ்நிலையை யோசித்துப் பார்.

32
00:03:08,063 --> 00:03:09,064
அந்த ஒன்றை மட்டுமா?

33
00:03:10,315 --> 00:03:12,067
நகைச்சுவையைப் பற்றி நாம் என்ன
சொல்லி இருக்கிறோம், டொரோதி?

34
00:03:13,110 --> 00:03:14,111
சரி.

35
00:03:17,239 --> 00:03:20,701
அந்த மன அழுத்தம் உன் உடலுக்கு என்ன
செய்கிறது என்பதை நீ தொடர்புப்படுத்து.

36
00:03:21,660 --> 00:03:24,538
மூச்சை உள்ளிழு. வெளியே விடு.

37
00:03:26,957 --> 00:03:27,958
உள்ளே இழு.

38
00:03:32,254 --> 00:03:34,131
ஓ, கடவுளே. நான் வருத்தப்படுகிறேன்.

39
00:03:36,675 --> 00:03:38,886
இது ஒரு பைத்தியக்கார வீடு.

40
00:03:41,180 --> 00:03:42,765
இது முன்பெல்லாம் மிக எளிதாக இருந்தது.

41
00:03:43,182 --> 00:03:44,308
சின்ன இடைவெளி எடுக்க வேண்டுமா?

42
00:03:44,391 --> 00:03:48,729
இல்லை, அது லியன் தான். அவள் எலி
போல நிசப்தமாக இருப்பாள்.

43
00:03:49,146 --> 00:03:50,272
லியன்?

44
00:03:50,355 --> 00:03:53,484
நான் சொன்னேனா? ஷானும், நானும்
ஒரு ஆயாவை வேலைக்கு எடுத்திருக்கிறோம்.

45
00:03:55,903 --> 00:03:58,280
ஜெரிகோ முற்றிலுமாக அவளை விரும்புகிறான்.

46
00:04:07,873 --> 00:04:11,001
சரி. இங்கே படுத்துக்கொள்.

47
00:04:11,919 --> 00:04:15,130
என்னால் அடுத்த வெள்ளிக்கிழமை
உன்னை பார்க்க வர முடியும்.

48
00:04:15,798 --> 00:04:18,967
தற்போதைக்கு நாம் அதை தள்ளிப்போடுவோம்.

49
00:04:20,469 --> 00:04:24,765
நீ செய்த உதவிக்கு எல்லாம், கொஞ்சம்
கூடுதலான பணத்தை நான் வைத்திருக்கிறேன்.

50
00:04:25,849 --> 00:04:28,644
உடல் இயக்கவியல் என்பது கடவுள் தந்த வரம்.

51
00:04:28,727 --> 00:04:30,854
மற்றும் அந்த கர்ப்பக்காலம், அனைத்தையும்
மாற்றி அமைத்துவிட்டது,

52
00:04:30,938 --> 00:04:35,984
ஆனால் நான் சுயமாக குணமடையும் ஒரு
புதிய கட்டத்தினுள் நுழைவதாக உணர்கிறேன்.

53
00:04:36,485 --> 00:04:39,363
என் சொந்த நலத்திற்கு நானே பொறுப்பு
எடுத்துக் கொள்கிறேன்.

54
00:04:39,863 --> 00:04:41,573
உனக்கு புரிகிறது தானே?

55
00:04:42,408 --> 00:04:43,909
அது என்னை அழைத்து செல்லும் வண்டி.

56
00:04:45,160 --> 00:04:50,373
லியன்! லியன்! ஒரு முறை அணைப்பதற்கு
அவனை கீழே கொண்டு வர முடியுமா?

57
00:04:50,457 --> 00:04:52,126
டொரோதி, நாம் இதைப் பற்றி பேச வேண்டும்.

58
00:04:52,209 --> 00:04:54,211
ஒருவேளை, அவனை அவள் தூங்க
செய்கிறாள் போல.

59
00:04:54,294 --> 00:04:56,839
அதாவது, உன் தோழியாக, நான் உன்னை...

60
00:04:56,922 --> 00:04:59,007
அவனை சாலையில் வழியை மறிக்கிறான்.
நான் உடனே செல்ல வேண்டும்.

61
00:05:01,218 --> 00:05:04,555
ஷான் இப்பொழுது வீட்டிற்கு வரும் நேரம்
தான், அவன் உணவை எடுத்து வைக்க உதவுவான்.

62
00:05:05,180 --> 00:05:07,391
நாம் சீக்கிரமே டின்னர் சாப்பிடலாம்,
நாங்கள் தான் வழங்குவோம்.

63
00:05:52,436 --> 00:05:53,562
ஹே!

64
00:06:04,531 --> 00:06:06,784
நத்தாலி! மேலே நீ என்ன செய்து
கொண்டிருக்கிறாய்?

65
00:06:09,369 --> 00:06:11,663
கேடுக்கெட்ட அந்த சின்ன பெண் திடீரென வந்து
அதிர்ச்சி தந்தாள்.

66
00:06:11,747 --> 00:06:13,248
சரி, நீ மேலே என்ன செய்து கொண்டிருந்தாய்?

67
00:06:13,332 --> 00:06:15,167
ஏதோ ஒரு சத்தம் கேட்டது போல இருந்தது.

68
00:06:16,627 --> 00:06:17,920
அது லியனா?

69
00:06:20,923 --> 00:06:22,508
டொரோதி அவளை பற்றி உன்னிடம் சொன்னாளா?

70
00:06:22,591 --> 00:06:25,719
நீ ஒரு ஆயாவை வேலைக்கு எடுத்துள்ளாயா, ஷான்?
ஓரு பொம்மைக்காகவா?

71
00:06:27,429 --> 00:06:31,892
ஆமாம், லியன் வீட்டு வேலைகளில் உதவுவாள்.
எங்களுடன் சேர்ந்து அவளும் நடிக்கிறாள்.

72
00:06:31,975 --> 00:06:33,852
ஏனென்றால், இதெல்லாம் அந்த மாயையின் ஒரு
பகுதி தானே?

73
00:06:33,936 --> 00:06:35,145
மாயத்தோற்றம்.

74
00:06:35,854 --> 00:06:38,524
தற்காலிக சிகிச்சை தருவதற்கே அந்த
பொம்மையை நாம் பயன்படுத்தினோம்.

75
00:06:39,024 --> 00:06:41,902
அது ஒரு நிரந்தர சிகிச்சையையோ, தீர்வையோ
தராது என்று அச்சமயத்திலேயே விளக்கினேன்.

76
00:06:41,985 --> 00:06:45,322
ஆனால் அது வேலை செய்கிறது. டொரோதியை தான் நீ
பார்த்தாயே. மறுபிறப்பு எடுத்திருக்கிறாள்.

77
00:06:45,405 --> 00:06:47,908
நீ இதை நேர்க்கொள்ள விரும்பவில்லை என்று
தெரியும், யாருமே தான் விரும்பவில்லை,

78
00:06:47,991 --> 00:06:50,119
ஆனால், எவ்வளவு காலத்திற்கு விடுகிறோமோ,
நமக்கு அத்தனை கடினமாகி விடப்போகிறது.

79
00:06:59,002 --> 00:07:01,213
என் மனைவிக்கு எது சிறந்தது என்று எனக்கு
தெரியும் என்று நினைக்கிறேன்.

80
00:07:01,296 --> 00:07:02,548
உனக்கு தெரியும் என்று எனக்கு தோன்றவில்லை.

81
00:07:03,424 --> 00:07:06,885
அவளை போலவே நீயும் அந்த பொம்மையை மனதிற்கு
ஆறுதல் தருவதற்காக பயன்படுத்துகிறாய்,

82
00:07:06,969 --> 00:07:09,763
அது நிஜம் என்று உனக்கு நீயே சொல்லிக் கொள்ள
தொடங்குகிறாய்.

83
00:07:10,848 --> 00:07:13,892
அந்த நேரத்திற்கு சரியென தோன்றியதை
நாம் செய்தோம்.

84
00:07:14,726 --> 00:07:19,648
ஆனால் இது அதிக தூரம் சென்றிருக்கிறது. நாம்
டொரோதிக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும்.

85
00:07:25,320 --> 00:07:26,321
ஹே.

86
00:07:46,091 --> 00:07:47,092
ஹே.

87
00:07:47,509 --> 00:07:49,845
என் மார்பகங்கள் உண்மையில்
வெடிக்க போகின்றன.

88
00:07:49,928 --> 00:07:51,555
தயவுசெய்து, மீனின் மீது வேண்டாம்.

89
00:07:55,184 --> 00:07:58,270
அதை பாரு. இயற்கை, அழகு வாய்ந்தது தானே?

90
00:07:58,353 --> 00:08:00,105
ஆனால் அது மது இல்லை, சரி தானே?

91
00:08:03,066 --> 00:08:06,361
பையோ ஃபீட்பேக் சிகிச்சை பற்றி நீ
ஏதாவது கேள்விப்படுகிறாயா?

92
00:08:06,779 --> 00:08:09,323
புற்றுநோய் இருக்கிறதா என்று பார்க்க மலத்தை
பரிசோதனைக்கு அனுப்புவதா?

93
00:08:10,699 --> 00:08:13,118
அது உடல் இயக்கங்களின் மின்னணு கண்காணிப்பு.

94
00:08:13,202 --> 00:08:15,788
வேலையிடத்தில் ஒரு பெண்ணிற்கு ஒற்றை தலைவலி,
இப்பொழுது அந்த சிகிச்சையில் உள்ளாள்.

95
00:08:16,872 --> 00:08:18,415
அதனால் தான் நத்தாலியை வேலையை
விட்டு நீக்கினாயா?

96
00:08:19,333 --> 00:08:21,043
நான் நத்தாலியை பணிநீக்கம் செய்யவில்லை.

97
00:08:21,835 --> 00:08:23,754
என் தேவைகளை மறுபரிசீலனை செய்கிறேன்.

98
00:08:23,837 --> 00:08:27,674
என் அழகான, வடுக்கள் உள்ள உடலை
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறேன்.

99
00:08:27,758 --> 00:08:28,926
உனக்கு நல்லது தான்.

100
00:08:29,009 --> 00:08:32,096
நத்தாலியை போன்றோர், உனக்கு கேட்க நன்றாக
இருப்பதை மட்டுமே சொல்வார்கள்.

101
00:08:32,179 --> 00:08:34,264
அவளின் பாராட்டிற்கும் மேலாக
நீ வலிமையானனவள்.

102
00:08:35,808 --> 00:08:36,850
நன்றி.

103
00:08:39,061 --> 00:08:41,980
அவள் இன்னமும் எனக்கு ஒரு தோழி என்பதால்,
எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

104
00:08:42,397 --> 00:08:44,191
அதனால் தான் நாளை இரவு டின்னருக்கு
நான் அவளை அழைத்தேன்.

105
00:08:44,274 --> 00:08:45,609
நீ அவளை இங்கு அழைத்தாயா?

106
00:08:46,944 --> 00:08:47,945
அது ஒரு பிரச்சனையா?

107
00:08:48,028 --> 00:08:50,989
இல்லை. இல்லை, ஒரு புதிய உணவகம் உள்ளது.
அது அழகாக இருக்கும்.

108
00:08:51,073 --> 00:08:53,242
இல்லை, உன்னுடைய எந்த புதிய உணவகத்திற்கும்
நான் வர விரும்பவில்லை.

109
00:08:53,325 --> 00:08:55,411
ஒரு உணவகத்தில் நம்மை இருட்டில் சாப்பிட
வைத்தார்களே, அது அருவருப்பாக இருந்தது.

110
00:08:55,494 --> 00:09:00,165
ஒரு மாற்றத்திற்காக, என் சொந்த வீட்டில்,
முன்பு போலவே விருந்து தர விரும்புகிறேன்.

111
00:09:02,292 --> 00:09:04,503
என் செய்தி ஒளிபரப்பை பார்.
உண்மையில் கண்ணீர் வரவழைக்கும்.

112
00:09:11,468 --> 00:09:12,469
டாகி பவுன்ட் ப்ளூஸ்

113
00:09:12,552 --> 00:09:14,179
அழகான நாய்க்குட்டியை பார்த்து
மயங்காதவரே இல்லை.

114
00:09:14,263 --> 00:09:18,725
நம் வீதிகளில் திரியும் வேண்டாத நாய்களின்
படை நகரெங்கிலும் பரவியுள்ளது.

115
00:09:18,809 --> 00:09:21,770
ஆனால் உள்ளூர் அதிகாரிகள்
கடிந்து கொள்கின்றனர்.

116
00:09:21,854 --> 00:09:23,939
இது டொரோதி டர்னர், 8 நியூஸ்.

117
00:10:11,445 --> 00:10:14,281
உணவு பஞ்சம் வந்த போது, கடைசி பருக்கையை,

118
00:10:14,364 --> 00:10:17,326
இருதயத்தை, கல்லீரலை, வயிற்றைக்
கூட உண்டனர்.

119
00:10:17,409 --> 00:10:20,829
இப்பொழுது, நிறைய இனப்பெருக்கம் செய்கிறோம்,
நிறைய விளைவிக்கிறோம், நிறைய எறிகிறோம்.

120
00:10:20,913 --> 00:10:22,623
பழைய வாழ்க்கை முறையை
மக்கள் மறந்துவிட்டனர்.

121
00:10:24,249 --> 00:10:26,001
அதை என்னால் சாப்பிட முடியாது.

122
00:10:26,668 --> 00:10:28,128
அது ஒரு சவாலாக தெரிகிறது.

123
00:10:29,296 --> 00:10:32,007
இன்றிரவு டின்னருக்கு ஒரு விருந்தினர் வர
உள்ளார். உனக்கு தனியாக எடுத்து வைக்கிறேன்.

124
00:10:32,591 --> 00:10:33,675
யார் வருகிறார்கள்?

125
00:10:33,759 --> 00:10:35,803
நத்தாலி, சிகிச்சை தருபவர்.

126
00:10:36,929 --> 00:10:39,139
ஓ, ஆமாம், நீங்கள் இருவரும் ஏற்கனவே
சந்தித்து விட்டீர்கள்.

127
00:10:39,223 --> 00:10:41,058
அவள் ஜெரிகோவிற்கு அச்சுறுத்தலாக இருப்பாள்
என்று நான் நினைத்தேன்.

128
00:10:41,141 --> 00:10:42,810
ஆமாம், அவள் அச்சுறுத்தல் தான்.

129
00:10:43,560 --> 00:10:46,688
இந்த வீட்டில் சிறுநீர் நிறைந்த டையப்பரை
அவள் முகர்ந்துவிட்டால், கதை முடிந்தது.

130
00:10:46,772 --> 00:10:48,232
அதை நான் மூடிவைக்க முடியாது.

131
00:10:49,650 --> 00:10:50,734
நான் உதவலாமா?

132
00:10:52,736 --> 00:10:55,572
ஒரு நிமிடம் கூட, நத்தாலியுடன் நான்
டொரோதியை தனியே விடமாட்டேன்.

133
00:10:57,241 --> 00:10:59,243
ஆனால் எனக்கு யாராவது உணவு வழங்குவதற்கு
உதவியாக இருந்தால்,

134
00:10:59,326 --> 00:11:00,786
சமையலறையில் ஒரு கண் வைத்துக் கொண்டால்...

135
00:11:01,745 --> 00:11:03,080
வரவேற்பாளர் போலவா?

136
00:11:03,622 --> 00:11:05,749
ஆமாம், வரவேற்பாளர் போலத்தான்.

137
00:11:08,627 --> 00:11:11,463
காட்டுத்தனமானவை மற்றும் மூர்க்கதனமானவை
8 நியூஸ்

138
00:11:11,547 --> 00:11:14,007
நான் ஃபேர்மவுண்ட் பார்க்கில், ஏரிக்குக்
கிழக்கே இருக்கிறேன்,

139
00:11:14,091 --> 00:11:18,762
உள்ளூரை சேர்ந்த இருவரை, அவர்கள் ஓடிக்
கொண்டிருந்த போது, கொடூரமாக ஒரு காட்டு நாய்

140
00:11:18,846 --> 00:11:20,848
தாக்கியதில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன.

141
00:11:20,931 --> 00:11:22,808
விலங்கு கட்டுப்பாட்டு துறையினர்
பெருந்திரளாக செயல்பட்டு வருகின்றனர்

142
00:11:22,891 --> 00:11:25,894
உள்ளூர் மக்களுக்கு தொல்லை தருகின்ற
காட்டு விலங்குகளை

143
00:11:25,978 --> 00:11:27,521
அவர்கள் சமாளிக்க முயற்சிக்கின்றனர்.

144
00:11:28,647 --> 00:11:31,191
ஜார்ஜ் க்ரேசன் என்பவரை பற்றி எந்த
தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.

145
00:11:31,275 --> 00:11:33,318
ஏனெனில், அது அவனின் நிஜப்பெயர்
கிடையாது, சரியா?

146
00:11:35,904 --> 00:11:38,907
இரு, தானியங்கி பார்க்கிங்க்
செய்யப்படுகிறது. நான் இதை நம்பவே மாட்டேன்.

147
00:11:40,576 --> 00:11:42,161
அவன் ரயிலில் வந்ததாக சொன்னான்.

148
00:11:43,036 --> 00:11:45,372
30வது தெருவில் உள்ள கண்காணிப்பு
கேமராக்களை ஹாக் செய்து

149
00:11:45,456 --> 00:11:47,082
அவன் எங்கிருந்து வந்தான் என்பதை
நீ கண்டுபிடிக்க முடியாதா?

150
00:11:47,166 --> 00:11:51,003
என்னால் முடியாது. இதற்கெல்லாம் உன்னிடம்
கட்டணம் வசூலிப்பேன் என தெரியும் தானே?

151
00:11:51,086 --> 00:11:54,798
என் மச்சினர் அனைத்து செலவுகளையும் பார்த்து
கொள்வார். அவனை கண்டுப்பிடிக்க ஏதாவது செய்.

152
00:11:56,925 --> 00:11:59,845
எனக்கு ஒரு டின்னர் உள்ளது. நான் நாளை
உன்னை அழைக்கிறேன்.

153
00:12:23,660 --> 00:12:26,038
20 ஆயிரம். உன்னிடம் எவ்வளவு உள்ளது?

154
00:12:27,247 --> 00:12:28,457
எட்டாயிரம்.

155
00:12:28,540 --> 00:12:29,666
எட்டாயிரம் தானா?

156
00:12:29,750 --> 00:12:32,544
நான் பண பரிவர்த்தனை செய்ய வேண்டும். டொரோதி
அதை கவனிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

157
00:12:32,628 --> 00:12:34,838
உனக்கு தெரியுமா, திருமணம் ஆனாலே
சிக்கல் தான்.

158
00:12:35,506 --> 00:12:36,965
அவன் ஒருவேளை ஒரேடியாக போய்விட்டானா?

159
00:12:37,466 --> 00:12:39,843
அல்லது தெருவிற்கு எதிரே காரை பார்க் செய்து
விட்டு நம்மை கண்காணிக்கிறானா?

160
00:12:39,927 --> 00:12:41,512
அவன் குழந்தையின் தொட்டிலில்
தூங்கினான், ஷான்.

161
00:12:41,595 --> 00:12:42,930
அவன் உண்மையில் உன்னை பயமுறுத்திவிட்டான்,
அப்படி தானே?

162
00:12:43,013 --> 00:12:44,681
அவன் இங்கு வீட்டை நோட்டமிட வந்தான்.

163
00:12:44,765 --> 00:12:47,434
நோட்டமிட்டு விட்டதால், 28 ஆயிரத்திற்கும்
மேலாக அவன் கேட்க போகிறான்.

164
00:12:47,518 --> 00:12:50,020
சரி, நான் எதையாவது விற்கிறேன்,
அந்த மது பாட்டில்கள்.

165
00:12:50,104 --> 00:12:52,106
நாம் அளவுக்கு அதிகமாக
எதுவும் செய்ய வேண்டாம்.

166
00:12:56,610 --> 00:12:58,362
இன்றிரவு யார் பலியாக தயாராக இருப்பது?

167
00:12:58,821 --> 00:13:01,949
அவள் வெறுக்கின்ற கச்சிதமான, அந்த பயிற்சி
எடுக்கும் பெண். அவள் பெயர் என்ன, இஸபெல்லா?

168
00:13:03,575 --> 00:13:04,576
நத்தாலி.

169
00:13:05,244 --> 00:13:07,538
நத்தாலியா? நம் நத்தாலியா?

170
00:13:08,288 --> 00:13:10,040
அவளை எதுக்காக நீ இங்கு
வர வைக்கிறாய்?

171
00:13:10,124 --> 00:13:13,752
டொரோதி அவளை பணிநீக்கம் செய்ததனால் அவளுக்கு
உண்மையை உணர்த்த நத்தாலி நினைக்கிறாள்.

172
00:13:14,169 --> 00:13:16,046
அது வெறும் பொம்மை தான் என்று அவளை
காண வைக்க விரும்புகிறாள்.

173
00:13:16,130 --> 00:13:17,756
அது ஒரு பிரச்சனையாகிவிடும் போலிருக்கிறது.

174
00:13:18,507 --> 00:13:22,010
நத்தாலியை நாம் சமாளிக்க முடியும்.
லியன்... லியன் உதவுவதாக சொன்னாள்.

175
00:13:22,094 --> 00:13:23,887
அவளை எப்பொழுதிலிருந்து நாம் நம்ப
தொடங்கியுள்ளோம்?

176
00:13:23,971 --> 00:13:24,972
அதாவது நான்...

177
00:13:29,852 --> 00:13:31,937
மாலை வணக்கம், நான் லியன்.

178
00:13:36,775 --> 00:13:39,653
அன்று நடந்ததிற்கு நான்
மிகவும் வருந்துகிறேன்.

179
00:13:40,821 --> 00:13:42,948
அக்கம் பக்கத்தில் நடக்கின்ற தொடர்ச்சியான

180
00:13:43,031 --> 00:13:44,283
கொள்ளைகளை பற்றி டொரோதி சொல்லியிருந்தார்.

181
00:13:44,366 --> 00:13:46,910
நான் உங்களை வீட்டிற்குள் ஊடுருவியவர்
என்று நினைத்தேன்.

182
00:13:47,870 --> 00:13:49,455
நீ இங்கு என்ன செய்கிறாய்?

183
00:13:50,247 --> 00:13:52,040
டர்னர்கள் சொல்லும் எதையும் செய்வேன்.

184
00:14:00,382 --> 00:14:02,301
இதோ வந்துவிட்டாள்.

185
00:14:02,718 --> 00:14:04,928
நீ பிரமாதமாக இருக்கிறாய்.

186
00:14:05,721 --> 00:14:08,557
உன் சிகை அலங்காரம் எனக்கு பிடித்துள்ளது.

187
00:14:09,016 --> 00:14:11,310
கடவுளே, எனக்கும் அவ்வளவு தன்னம்பிக்கை
இருந்திருக்கலாம்.

188
00:14:11,727 --> 00:14:12,811
நத்தாலி.

189
00:14:14,062 --> 00:14:15,063
ஜூலியன்.

190
00:14:16,023 --> 00:14:19,109
இன்றிரவு நமக்கு நிறைய குதூகலம் இருக்க
போகிறது. நான் அதை உணர்கிறேன்.

191
00:14:48,764 --> 00:14:52,893
வேலை எப்படி போகிறது, டொரோதி? உன்னை காணத்
தான் நினைக்கிறேன், ஆனால் தவற விடுகிறேன்.

192
00:14:53,769 --> 00:14:58,232
திரும்ப வந்ததில் மகிழ்ச்சி. ஆனால் அதிகமாக
குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.

193
00:14:58,315 --> 00:14:59,900
ஜெரிகோவிற்கு உண்மையில் நான்
தேவைப்படுகிறேன்.

194
00:14:59,983 --> 00:15:04,738
சேதத்தை விளைவிக்கிற நடத்தையை நிறுத்த
குற்ற உணர்வு தான் ஊக்கத்தை தரும்.

195
00:15:05,155 --> 00:15:07,991
ஓ, ஆமாம், "மிக நீண்ட பயணம், ஒரு அடியில்
தான் துவங்கும்."

196
00:15:08,075 --> 00:15:09,785
மற்றும் "அன்பு அனைத்தையும் வெல்லும்."

197
00:15:11,412 --> 00:15:14,915
லியன் இந்த சுவையாஅ உணவை நமக்காக
அறிமுகப்படுத்துவார். தயவுசெய்து...

198
00:15:16,166 --> 00:15:19,044
இன்று, நீங்கள் சாப்பிடபோவது ஸ்காட்லேந்தின்
பாரம்பரிய உணவு, அது ஆட்டின் பாகங்கள்,

199
00:15:19,128 --> 00:15:21,296
உருளைக்கிழங்கு மற்றும்
முள்ளங்கி நிறைந்தது.

200
00:15:21,839 --> 00:15:25,217
வெங்காயம், ஆட்டின் கல்லீரல், நுரையீரல்
மற்றும் இருதயம், ஓட்ஸ்

201
00:15:25,300 --> 00:15:27,678
மற்றும் கேரமல் சேர்த்த உலர்ந்த ப்ளம்கள்
கொண்டு ஹக்கீஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.

202
00:15:28,262 --> 00:15:30,556
அந்த பலூனுக்குள் இருப்பது, ஹெதரின் வாசனை,

203
00:15:30,639 --> 00:15:33,559
இந்த உணவின் ஸ்காட்லேந்து பாரம்பரியத்தை
வலியுறுத்தவே அது வைக்கப்பட்டுள்ளது.

204
00:15:49,324 --> 00:15:52,619
எங்களை ஆசிர்வதியுங்கள், கடவுளே,
உங்களின் பரிசுகளான இவை எல்லாம்,

205
00:15:52,703 --> 00:15:57,708
எங்களுக்கு தங்களின் அருளாலேயே
கிட்டியவை. ஆமென்.

206
00:15:59,334 --> 00:16:00,335
ஆமென்.

207
00:16:05,674 --> 00:16:08,135
இன்றிரவிற்கு வேறு ஏதாவது உங்களுக்கு
இருக்கிறதா, திரு. மற்றும் திருமதி. டர்னர்?

208
00:16:08,218 --> 00:16:10,345
மது. ஏராளமாக இருக்கிறது.

209
00:16:11,555 --> 00:16:14,475
நிலவறையில் ஒரு பாட்டில் ஆஸ்திரேலிய மது
காற்றார வெளியே வைக்கப்பட்டுள்ளது.

210
00:16:14,558 --> 00:16:15,893
அதை மேலே கொண்டு வருகிறாயா?

211
00:16:15,976 --> 00:16:17,603
-சரி.
-நன்றி.

212
00:16:20,105 --> 00:16:21,982
இந்த வீட்டில் கடவுள் எப்பொழுது நுழைந்தார்?

213
00:16:22,316 --> 00:16:24,943
அதாவது, எங்களுக்கு எப்பொழுதுமே தனிப்பட்ட
சொந்த நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன.

214
00:16:25,027 --> 00:16:26,320
அது சரி தானே, ஷான்?

215
00:16:54,598 --> 00:16:57,518
மிக மிக அருமை, செல்லம். துணிகரமானது.

216
00:16:57,601 --> 00:16:58,894
நீ சொல்வதை நம்புகிறேன்.

217
00:17:00,020 --> 00:17:03,941
ஷானால் எதையும் சுவைக்க முடியாது. அது
அவன் செய்யும் வேலையை கெடுக்கிறது.

218
00:17:04,024 --> 00:17:07,111
அதீத மன அழுத்தம் நம் அடிப்படை உணர்வுகளை
முடங்க செய்துவிடும்.

219
00:17:07,820 --> 00:17:11,323
என் நோயாளி ஒருவருக்கு, தன் கணவர் இறந்த
துக்கத்தில், உடனடியாக பார்வை போய்விட்டது.

220
00:17:12,950 --> 00:17:15,119
-அடக்கடவுளே.
-இது ஒரு வைரஸ் தான்.

221
00:17:15,202 --> 00:17:16,203
அப்படியா?

222
00:17:17,413 --> 00:17:19,415
இது குதூகலமாக உள்ளது.

223
00:17:20,082 --> 00:17:22,543
நாம் அனைவரும் இறுதியாக ஒன்றாக
இருந்து நீண்ட நாட்கள் ஆனது போல இருக்கிறது.

224
00:17:22,626 --> 00:17:24,503
உண்மையில், டொரோதி, நீண்ட
நாட்கள் ஆகவில்லை.

225
00:17:24,586 --> 00:17:26,922
-ஒருவேளை உனக்கு நினைவில்லை...
-நத்தாலி, நீ இன்னும் புகைக்கிறாய் தானே.

226
00:17:27,005 --> 00:17:28,841
இதை அப்படியே தொடர விட முடியாது.

227
00:17:28,924 --> 00:17:29,925
எதை தொடர விட முடியாது?

228
00:17:30,008 --> 00:17:32,302
இனிப்புகள் சாப்பிடாமல் இருப்பதை தான்.
நாம் க்ரனாக்கன் சாப்பிடலாம். லியன்?

229
00:17:32,386 --> 00:17:33,929
நீங்கள் இருவரும் என்னிடம் இருந்து எதையோ
மறைக்க பார்க்கிறீர்களா?

230
00:17:34,012 --> 00:17:35,681
ஏனென்றால், இது நல்ல யோசனை என்று
நீ மட்டும் தான் நினைக்கிறாய்.

231
00:17:35,764 --> 00:17:36,974
என்ன நடக்கிறது?

232
00:17:37,515 --> 00:17:39,601
டொரோதி, நாம் பேச வேண்டும், சரியா?

233
00:17:39,685 --> 00:17:43,272
நீ நலமாக இல்லை என்று நான் சொல்வதை
நீ கேட்க வேண்டும்.

234
00:17:50,320 --> 00:17:52,447
-எனக்கு புரிகிறது.
-புரிகிறதா?

235
00:17:53,866 --> 00:17:55,784
உங்கள் எல்லோரையும் பாருங்கள்.

236
00:17:56,577 --> 00:17:58,495
உங்கள் முகங்களை பாருங்கள்.

237
00:17:58,579 --> 00:18:01,874
ஒரே நேரத்தில் என்னை எதிர்க்கொள்வதை
நினைத்து பெருமையுடன் இருக்கிறீர்கள்.

238
00:18:02,291 --> 00:18:04,793
முக்கியமாக எனக்கு உன்னிடத்தில் தான்
ஏமாற்றம், ஷான்.

239
00:18:06,170 --> 00:18:07,921
நான் என்ன செய்வதாக நீ நினைக்கிறாய்?

240
00:18:08,922 --> 00:18:14,386
ஒருமுறை நிலைமையை கட்டுப்படுத்த பார்த்தால்
அதற்கு கிடைக்கிற எதிர்வினை இது தானா?

241
00:18:14,970 --> 00:18:17,598
என்னால் சமாளிக்க முடியாது என்று
நீங்கள் எல்லாம் நினைக்கிறீர்கள்.

242
00:18:18,766 --> 00:18:21,226
பாவம், பாவம் டொரோதி.

243
00:18:21,310 --> 00:18:23,771
அவளுக்கு எது சிறந்தது என்று
அவளுக்கே தெரியாது.

244
00:18:24,188 --> 00:18:27,858
உன்னை நீக்கியது என் முடிவு தான், நத்தாலி,
அதில் எந்த மாற்றமும் இல்லை.

245
00:18:28,400 --> 00:18:32,654
நான் இப்பொழுது ஒரு தாய்.
நான் ஒரு மூர்க்கத்தனமான பெண் சிங்கம்.

246
00:18:32,738 --> 00:18:34,615
நானே என்னை குணப்படுத்திக் கொள்வேன்.

247
00:18:34,698 --> 00:18:38,327
எனக்கு ஹோமியோபதியோ, உடல் இயக்கவியல்
சிகிச்சையோ தேவையில்லை.

248
00:18:38,410 --> 00:18:41,371
அல்லது எவனோ ஒருவன் என் மலத்தை
மைக்ரோஸ்கோப்பில் ஆராய தேவையில்லை.

249
00:18:41,455 --> 00:18:43,207
நான் வலிமையானவள், சக்திவாய்ந்தவள்.

250
00:18:43,290 --> 00:18:46,251
உங்களுக்கு எல்லாம் தெரிந்ததை விட நான்
வலிமையானவள்.

251
00:19:00,390 --> 00:19:01,600
அவள் சொல்வது சரி தான்.

252
00:19:03,185 --> 00:19:05,354
டொரோதிக்கு சிறந்தது எது என்று
நம்மில் எவருக்கும் எப்படி தெரியும்?

253
00:19:05,813 --> 00:19:09,316
அந்த பெண்ணிற்கு சரிசெய்ய முடியாத
ஒரு கேடை நாம் செய்திருக்கிறோம்.

254
00:19:09,942 --> 00:19:11,944
அதாவது, அவள் உன் தங்கை. ஏதாவது செய்.

255
00:19:12,027 --> 00:19:15,948
அவள் எப்படி இருந்தாள் என்பதை பார்த்தாய்.
அவளின் தற்போதைய நிலையே மேலானது.

256
00:19:16,990 --> 00:19:19,618
மன்னிக்கவும். நான் சென்று என் மனைவியை
பார்க்க வேண்டும்.

257
00:19:22,830 --> 00:19:23,831
ஹாய்.

258
00:19:28,585 --> 00:19:29,586
நீ என்ன செய்கிறாய்?

259
00:19:29,670 --> 00:19:33,257
நான் அவனை ஒரு தழுவுதலுக்கு கீழே கொண்டு
வருகிறேன். நீ வழியை விடு.

260
00:19:33,340 --> 00:19:34,716
நீ குடித்துக் கொண்டிருந்தாய்.

261
00:19:34,800 --> 00:19:37,261
ஹீல்ஸ் வைத்த காலணிகள் அணிந்திருக்கிறாய்.
அந்த படிகளில் இறங்க போகிறாயா?

262
00:19:37,803 --> 00:19:39,513
அவனுக்கு ஏதாவது நடந்துவிட்டால்
என்ன செய்வாய்?

263
00:19:39,930 --> 00:19:41,515
இங்கே வா. அப்படி தான்.

264
00:19:41,932 --> 00:19:43,851
உன்னை நீயே மன்னிக்க மாட்டாய்.

265
00:19:43,934 --> 00:19:45,727
அவன் தூங்கி வழிகிறான். வா.

266
00:19:48,730 --> 00:19:49,857
ஆமாம்.

267
00:19:50,607 --> 00:19:52,651
நான் அவனை காட்ட விரும்பினேன்.

268
00:19:53,318 --> 00:19:54,319
நாம் காட்டுவோம்.

269
00:19:55,737 --> 00:19:57,322
சீக்கிரம். வா.

270
00:20:17,926 --> 00:20:20,345
உனக்கு இதெல்லாம் வேடிக்கையாக
இருக்க வேண்டும்.

271
00:20:21,054 --> 00:20:22,181
மன்னிக்கவும்?

272
00:20:22,848 --> 00:20:25,768
அவள் சில நேரங்களில் மோசமாக
நடந்துக் கொள்கிறாள், இல்லையா?

273
00:20:26,977 --> 00:20:29,938
ஆனால் இதெல்லாம் உண்மையில் ஒரு நாடகம்.
அவள் சற்று பலவீனமானவள்.

274
00:20:32,441 --> 00:20:34,234
டொரோதி மிகவும் வலிமையானவர் என்று
நான் நினைக்கிறேன்.

275
00:20:35,736 --> 00:20:38,280
நடந்தைப் பற்றி எந்தளவிற்கு அவர்கள்
உன்னிடம் சொன்னார்கள்?

276
00:20:39,615 --> 00:20:40,616
ஒன்றும் சொல்லவில்லையா?

277
00:20:41,700 --> 00:20:42,993
இப்பொழுது புரிகிறது.

278
00:20:43,952 --> 00:20:45,579
அவர்கள் அழைத்தது என்னை தான்.

279
00:20:46,163 --> 00:20:48,415
பயத்தில் நடுங்கி கொண்டிருந்த அவர்களுக்கு,
என்ன செய்வதென்றே தெரியவில்லை.

280
00:20:48,499 --> 00:20:52,002
அவர்களை நிதானப்படுத்தி, பிரச்சனையில்
இருந்து வெளியேற்றியது நான் தான்.

281
00:20:54,046 --> 00:20:55,380
அவர்கள் என்ன செய்தார்கள்?

282
00:20:56,298 --> 00:20:57,382
இங்கு இருக்கிறாயா.

283
00:20:58,675 --> 00:21:00,594
டொரோதி நாம் விளையாடலாம் என்று
நிர்பந்திக்கிறாள்.

284
00:21:03,430 --> 00:21:05,182
நாம் அவளை ஏமாற்றக்கூடாது.

285
00:21:06,600 --> 00:21:09,561
செல்லம், நான் உன் இடத்தில் இருந்தால்,
வேறு ஒரு நிலையான வேலையை தேடுவேன்.

286
00:21:22,783 --> 00:21:23,951
ஒரு நிமிடம்!

287
00:22:35,647 --> 00:22:36,690
ஜீலியன்!

288
00:22:37,483 --> 00:22:38,484
ஜூலியன்.

289
00:22:39,485 --> 00:22:40,486
அடக்கடவுளே.

290
00:22:46,158 --> 00:22:47,326
அடக்கடவுளே.

291
00:22:59,588 --> 00:23:02,966
அடக்கடவுளே, ஜெரிகோ. கடவுளே.

292
00:23:03,050 --> 00:23:04,426
-ஜூலியன்.
-நான் பார்த்துக்கொள்கிறேன்.

293
00:23:08,847 --> 00:23:11,308
நாம் இன்றிரவு இனிப்புகள் சாப்பிட
போவதில்லை, லியன்.

294
00:23:24,530 --> 00:23:27,950
அவன் நன்றாக தான் இருக்கிறான். கையிலும்,
காலிலும் பத்து விரல்கள் இருக்கின்றன.

295
00:23:28,367 --> 00:23:29,576
அது என்னது?

296
00:23:29,660 --> 00:23:30,661
தெரு நாய்.

297
00:23:30,744 --> 00:23:32,913
அது பக்க வாயிலின் வழியாக நுழைந்திருக்கும்.
தெருக்களில் திரிந்து கொண்டிருந்தது.

298
00:23:32,996 --> 00:23:33,997
நீ தானே அப்படி சொன்னாய்.

299
00:23:34,081 --> 00:23:35,082
அது வந்து...

300
00:23:35,749 --> 00:23:38,252
விலங்கு கட்டுப்பாட்டு துறையை அழைப்போம்.
அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

301
00:23:39,837 --> 00:23:42,506
அடக்கடவுளே. அவனுக்கு ஒருவேளை
ஏதாவது நடந்திருந்தால்.

302
00:23:44,007 --> 00:23:47,803
எதுவுமே ஆகாது. நான் இருக்கும் போது.

303
00:23:51,557 --> 00:23:52,558
அது யாருடையது?

304
00:23:54,017 --> 00:23:55,436
அது கழுத்தில் பட்டை எதுவும் இல்லை.

305
00:23:55,519 --> 00:23:58,313
அந்த குழந்தை, ஜூலியன்.
அது யாருடையது?

306
00:24:00,107 --> 00:24:01,567
ஆமாம், நாங்கள்...

307
00:24:02,443 --> 00:24:04,570
இங்கு நடந்து கொண்டிருப்பதை நாங்கள்
முன்பே உன்னிடம் சொல்லிருக்க வேண்டும்.

308
00:24:04,653 --> 00:24:07,614
ஆனால் என்னை நம்பு, அதெல்லாம் உன்
நன்மைக்காக தான்.

309
00:24:08,073 --> 00:24:09,700
அந்த ஆயா தான். அந்த பெண்.

310
00:24:11,118 --> 00:24:14,997
ஆமாம். அவள் தான் அதனுடன் வந்தாள்.

311
00:24:15,414 --> 00:24:18,625
ஏதோ குடும்பத்தினராலேயே
கற்பழிக்கப்பட்ட சூழ்நிலை.

312
00:24:18,709 --> 00:24:19,877
எனக்கு எல்லா விவரங்களும் தெரியாது,

313
00:24:19,960 --> 00:24:25,340
ஆனால் ஷான் மற்றும் டோட்டி, அதற்கு ஒரு
முறையான வீட்டை ஏற்படுத்த இருக்கின்றனர்.

314
00:24:25,424 --> 00:24:27,426
எல்லாம் சட்டப்பூர்வமாகவும்
முறையாகவும் தான்.

315
00:24:30,512 --> 00:24:32,097
அது ஜெரிகோ என்று அவள் நினைக்கிறாள்.

316
00:24:34,767 --> 00:24:37,269
ஒரு சிறிய உருவ ஒற்றுமை இருக்கிறது.

317
00:24:38,103 --> 00:24:39,480
டொரோதிக்கு இதெல்லாம் தேவையில்லாதது.

318
00:24:39,563 --> 00:24:41,148
டொரோதியை விடு!

319
00:24:41,565 --> 00:24:44,485
எங்களுக்கு எல்லாம் என்ன தேவை?
நாங்களும் தான் அங்கு இருந்தோம்.

320
00:24:46,320 --> 00:24:47,946
எனக்கு ஏன் ஒரு பொம்மையை தரவில்லை?

321
00:24:50,991 --> 00:24:52,576
நீ யாரிடமாவது பேசினாயா?

322
00:24:52,659 --> 00:24:53,744
எதை பற்றி?

323
00:24:54,328 --> 00:24:56,163
நீ பார்த்ததை பற்றி.

324
00:24:57,289 --> 00:24:58,499
நாம் செய்ததை பற்றி.

325
00:24:59,792 --> 00:25:01,001
எப்படி என்னால் முடியும்?

326
00:25:04,171 --> 00:25:05,547
நான் தூங்குவதில்லை,

327
00:25:07,299 --> 00:25:08,467
அவ்வளவாக சாப்பிடுவதில்லை.

328
00:25:10,344 --> 00:25:11,762
எதுவும் என்னை பாலியல் ரீதியாக
தூண்டுவதில்லை.

329
00:25:13,347 --> 00:25:15,641
வேறெதுவும் இதை எளிதாக்கிவிடாது. நான்...

330
00:25:16,850 --> 00:25:18,811
நான் அதையே திரும்ப...

331
00:25:19,812 --> 00:25:22,731
திரும்ப திரும்ப... நினைத்து பார்க்கிறேன்.

332
00:25:25,192 --> 00:25:26,860
நான் உன்னை பார்த்துக்
கொள்கிறேன், ஜூலியன்.

333
00:25:32,699 --> 00:25:34,368
எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறாய்?

334
00:25:36,036 --> 00:25:39,915
இது போலீஸிடம் போகும் விஷயம் இல்லை, சரியா?
இந்த விஷயத்தில் எங்களுக்கு வேறு வழி இல்லை.

335
00:25:42,334 --> 00:25:43,335
சரி.

336
00:25:44,211 --> 00:25:47,381
ஆமாம், சரி, நல்லது. வாங்க. சீக்கிரம்.

337
00:25:48,424 --> 00:25:49,842
சரி. நன்றி.

338
00:25:51,844 --> 00:25:53,262
விலங்கு கட்டுப்பாட்டு துறையினர் வந்து
கொண்டிருக்கிறார்கள்.

339
00:25:55,055 --> 00:25:56,807
ஹே, ஹே, ஒன்றுமில்லை.

340
00:25:59,810 --> 00:26:00,978
என்னை பிடித்துக்கொள்.

341
00:27:54,842 --> 00:27:59,096
நான் வருத்தப்படுகிறேன், மக்களே. நான்
தூங்கப்போகிறேன்.

342
00:27:59,638 --> 00:28:01,723
எங்களுக்கு புரிகிறது, டொரோதி. பரவாயில்லை.

343
00:28:02,391 --> 00:28:04,017
உனக்கு ஒரு வாடகை காரை அழைக்கவா?

344
00:28:05,686 --> 00:28:08,856
நான் நத்தாலியை இன்றிரவு என்னுடன்
வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்.

345
00:28:22,119 --> 00:28:24,872
என்னுடைய கோட். அந்த பெண் அதை எடுத்து...

346
00:28:24,955 --> 00:28:25,956
ஓ, ஆமாம்.

347
00:28:33,464 --> 00:28:35,174
நான் உன்னை குணமாக்கும் வரை கைவிடமாட்டேன்.

348
00:28:52,816 --> 00:28:53,817
ஜூலியன்.

349
00:28:54,943 --> 00:28:57,613
ஆனால் ஆண்டவர் புதிதாக ஒன்றை உருவாக்கினால்,

350
00:28:58,238 --> 00:29:01,241
நிலம் அதன் வாயை திறந்து, அதற்கு
சொந்தமானதை எல்லாம் தன்னுடனே

351
00:29:01,325 --> 00:29:03,285
விழுங்கி கொண்டுவிட்டால்,

352
00:29:03,702 --> 00:29:06,663
அவர்கள் உயிருடன் நரகத்திற்கு செல்லும் போது

353
00:29:07,456 --> 00:29:13,253
அவர்கள் ஆண்டவருக்கு துரோகம் இழைத்தனர்
என்பது உனக்கு தெரிய வரும்.

354
00:29:43,409 --> 00:29:45,327
தமிழில் மொழிப்பெயர்ப்பு
தேவி நரேஷ்

