1
00:00:07,550 --> 00:00:11,762
த சம்மர் ஐ
டெர்ன்ட் ப்ரிட்டி

2
00:00:22,815 --> 00:00:23,733
வணக்கம், பெல்ஸ்.

3
00:00:26,694 --> 00:00:27,611
ஜெரமையா?

4
00:00:27,987 --> 00:00:29,071
என்ன செய்யறே...

5
00:00:37,246 --> 00:00:39,540
-இரு, கான்ராட், எதெல்லாம்--
-பராவால்ல.

6
00:00:43,169 --> 00:00:44,712
நானும் நீயும்தான்.

7
00:00:46,756 --> 00:00:47,590
பெல்லி, இரு.

8
00:00:48,549 --> 00:00:49,759
எப்பவுமே நாம்தான்.

9
00:00:50,634 --> 00:00:51,969
உனக்கு புரியாம போனதேன்?

10
00:00:58,309 --> 00:01:00,478
என் கனவு வாழ்வு கூட குழப்பமாகுது.

11
00:01:07,401 --> 00:01:10,654
அந்த முத்தத்தின் பின்,
எல்லாமே சிக்கலாகியது உண்மை.

12
00:01:10,738 --> 00:01:11,781
கான்ராட் - ஜெரமையா

13
00:01:11,864 --> 00:01:15,951
மறக்க இயலாத ஒரு முத்தம்.
என் கனவுகளை நிஜமா ஆக்கிரமிப்பது!

14
00:01:16,035 --> 00:01:17,912
எல்லாத்தையும் ஆக்கிரமிக்கிறது!

15
00:01:24,877 --> 00:01:25,711
வணக்கம்.

16
00:01:26,837 --> 00:01:29,340
வணக்கம், கண்ணு. ஒரு நொடி பேசலாமா?

17
00:01:29,423 --> 00:01:31,592
க்ளீவ்லண்ட் கூப்பிட்டார், போகணும்.

18
00:01:33,009 --> 00:01:34,345
ஒரே நொடி போதும்.

19
00:01:35,179 --> 00:01:38,223
நீ பெல்லியிடம் புதுமுக
நடனத்துக்கு அவளது துணையா

20
00:01:39,183 --> 00:01:41,101
-போகக் கேட்கணும்.
-முடியாதும்மா.

21
00:01:41,769 --> 00:01:43,354
ஏன்?

22
00:01:44,021 --> 00:01:45,271
ஜெரமையாவை சொல்லுங்க.

23
00:01:45,356 --> 00:01:48,442
கானி, நீயா இருந்தா
அவளுக்கு நல்லா இருக்கும் இல்லயா.

24
00:01:48,526 --> 00:01:50,485
அவ மனங்கவர் இளவரசன் நீதான். தெரியும்.

25
00:01:50,569 --> 00:01:53,155
-அப்படி இல்ல--
-அவகிட்ட எப்பவுமே கனிவா இருப்பியே.

26
00:01:53,239 --> 00:01:56,491
உன் சகாக்கள் கூட அவளை
சேர்த்துக்கறவன் நீ மட்டும்தானே?

27
00:01:56,575 --> 00:01:58,828
இது அவளுக்கு நல்லா அமையணும்.

28
00:01:59,703 --> 00:02:01,372
எனக்காக செய்யேன்?

29
00:02:03,082 --> 00:02:04,291
யோசிக்கிறேன்.

30
00:02:04,375 --> 00:02:05,793
என் கானின்னா கானிதான்.

31
00:02:05,876 --> 00:02:07,044
கேட்கிறேனு சொல்லல.

32
00:02:07,127 --> 00:02:10,214
போட்டிக்கு தாமாதமாயிடாதே.
ஏற்பாடு செய்ய ஆள் வேணும்.

33
00:02:10,297 --> 00:02:11,131
தெரியும்.

34
00:02:11,715 --> 00:02:12,925
எதிர்பாராம உதவு!

35
00:02:13,425 --> 00:02:14,760
எதிர்பாராம உதவு.

36
00:02:14,844 --> 00:02:17,054
சேர இன்னும் நேரமிருக்கு.

37
00:02:17,429 --> 00:02:18,848
வேணாம்மா.

38
00:02:20,015 --> 00:02:20,933
பரவாயில்ல.

39
00:02:25,020 --> 00:02:26,605
-மன்னி.
-வணக்கம்.

40
00:02:27,106 --> 00:02:28,190
ஹை!

41
00:02:28,274 --> 00:02:30,609
-எப்படி தூங்கினே?
-நல்லா, அருமையா!

42
00:02:30,693 --> 00:02:31,861
கனவே இல்லை.

43
00:02:32,236 --> 00:02:35,656
தள்ளிக்கோ.

44
00:02:37,116 --> 00:02:40,244
இன்றைய வாலிபால் போட்டி உற்சாகம் தருதா?

45
00:02:40,327 --> 00:02:41,537
பெல்லி!

46
00:02:43,163 --> 00:02:45,583
ஏன் உன் முடியை ஷவர் சுவரில் வைக்கிறே?

47
00:02:45,666 --> 00:02:47,793
-பொறுமை!
-இல்ல, அருவருப்பா இருக்கு.

48
00:02:47,877 --> 00:02:50,588
மறுபடி செஞ்சே, உன் தலையணைல போடுவேன்.

49
00:02:50,671 --> 00:02:51,589
ஸ்டீவன்!

50
00:02:53,048 --> 00:02:55,301
உன்னை முடிவெடுக்க எல்லாம் சொல்லல,

51
00:02:55,384 --> 00:02:59,138
அன்றிரவு நடந்தததை பத்தி
கண்டிப்பா நாம் பேசணும்.

52
00:02:59,221 --> 00:03:00,389
ஆம். அதாவது,

53
00:03:00,472 --> 00:03:04,393
டேய்லர் ஊருக்கு வர்றா, போட்டி வேற,
இதெல்லாம் இருக்கே, இப்பவா.

54
00:03:04,476 --> 00:03:06,687
புரியுது. இதெல்லாம் முடிஞ்ச பிறகு...

55
00:03:06,770 --> 00:03:08,272
ஆம். அது நல்லாருக்கும்.

56
00:03:08,355 --> 00:03:09,815
-சரி.
-அருமை.

57
00:03:12,026 --> 00:03:17,156
சரி, உடுத்திக்கணும்.
உங்கம்மா எனக்காக காத்திருப்பாங்களே.

58
00:03:17,239 --> 00:03:18,949
-ஆம், சரி, பார்ப்போம்.
-பை.

59
00:03:24,747 --> 00:03:26,206
ஆம், இந்த கட்டை சொத்தை.

60
00:03:26,749 --> 00:03:28,667
உள்ள இவ்ளோ உளுத்துப் போயிருக்கே?

61
00:03:28,751 --> 00:03:32,838
இது மோசம்பா. சுத்தமான கட்டை
வர்ற வரைக்கும் சுரண்டி எடுத்திடணும்.

62
00:03:34,757 --> 00:03:35,966
அய்யோ!

63
00:03:36,050 --> 00:03:37,718
ரொம்ப படபடப்பா இருக்கே.

64
00:03:37,801 --> 00:03:39,261
இது மோசமான வாரம்.

65
00:03:39,345 --> 00:03:41,889
-உங்கப்பா வந்துட்டாரா?
-இல்ல, வேற விஷயம்.

66
00:03:42,305 --> 00:03:45,309
-அந்தப் பெண்ணோட எப்படி போகுது?
-சரியில்ல.

67
00:03:46,435 --> 00:03:50,272
இதுகூட சரியில்ல.
சுரண்ட சுரண்ட போயிட்டேயிருக்கு.

68
00:03:50,356 --> 00:03:52,775
மொத்தமா உளுத்துப்போச்சு, கவனிக்கல நான்.

69
00:03:52,858 --> 00:03:55,736
-எல்லாமே, நான் பார்க்கல.
-கான்ராட், இருக்கட்டும்!

70
00:03:56,820 --> 00:03:58,280
என்ன ஆச்சுப்பா?

71
00:03:58,739 --> 00:04:00,658
என் நெஞ்சு வேகமா அடிக்குது...

72
00:04:03,577 --> 00:04:05,454
மூச்சு விட கஷ்டமா இருக்கு.

73
00:04:06,455 --> 00:04:07,373
ஹேய்.

74
00:04:09,667 --> 00:04:12,169
இது சகஜம். பதட்ட அதிர்ச்சி இது.

75
00:04:13,545 --> 00:04:15,464
சரியாகும். சரி. என்னைப் பார்.

76
00:04:16,173 --> 00:04:18,050
ஆழமா மூச்சு விடணும், சரியா?

77
00:04:18,926 --> 00:04:19,843
மூச்சை இழு.

78
00:04:20,803 --> 00:04:21,762
மூச்சை விடு.

79
00:04:22,471 --> 00:04:23,430
மூச்சை இழு.

80
00:04:25,224 --> 00:04:26,141
மூச்சை விடு.

81
00:04:26,850 --> 00:04:27,768
இழு.

82
00:04:29,269 --> 00:04:30,187
விடு.

83
00:04:31,981 --> 00:04:32,940
நல்லா விடுப்பா.

84
00:04:35,526 --> 00:04:37,569
கான்ராட், என்ன ஆச்சு?

85
00:04:48,122 --> 00:04:49,707
எங்க அம்மாவால். அவங்க...

86
00:04:57,881 --> 00:04:59,091
எல்லாம் சரியா?

87
00:05:00,009 --> 00:05:01,552
இன்று வெக்கையா இருக்கு.

88
00:05:02,219 --> 00:05:03,470
இன்னும் கொஞ்ச நேரம்.

89
00:05:06,515 --> 00:05:08,559
அந்த உடை பிடிச்சிருக்குதானே?

90
00:05:10,644 --> 00:05:11,937
ஆம், பிடிச்சிருக்கு.

91
00:05:13,564 --> 00:05:15,649
வாலிபால் போட்டி உற்சாகம் தருதா?

92
00:05:16,567 --> 00:05:20,112
ஆம். காத்திருக்கேன். மத்தவங்களை விட
நிறைய நன்கொடை வாங்கணும்.

93
00:05:21,030 --> 00:05:22,823
ஸ்டீவன் பத்தியே கவலையாச்சு.

94
00:05:22,906 --> 00:05:24,867
எந்த கொடை நிறுவனத்துக்கு செய்யறே?

95
00:05:25,534 --> 00:05:28,287
நீங்க உதவறீங்களே அது.
வீடற்ற பெண்கள் காப்பகம்.

96
00:05:29,705 --> 00:05:31,957
அது இனிமை. நன்றி, பெல்லி.

97
00:05:33,876 --> 00:05:37,796
இப்ப அசையாம உட்கார்.
அந்த ஃப்ரில் வரைய ரெண்டு நிமிஷம்.

98
00:05:42,551 --> 00:05:45,596
பதட்ட அதிர்ச்சிக்கு, மூச்சு
விடும் முறைகள் இருக்கு.

99
00:05:46,472 --> 00:05:50,893
மூக்கு வழி நாலு நொடி மூச்சை உள்வாங்க,
ஏழு நொடி அடக்க, எட்டு நொடி வெளியே விட.

100
00:05:52,603 --> 00:05:54,438
இவை உங்களுக்கு எப்படி தெரியும்?

101
00:05:54,521 --> 00:05:56,398
என் ரெண்டாம் புத்தகம் வெளியானப்ப.

102
00:05:56,482 --> 00:05:59,318
அப்பதான் எனக்கு முதல் முழு
பதட்ட அதிர்ச்சி வந்தது.

103
00:05:59,401 --> 00:06:02,112
அவசர அறைக்கு
மாரடைப்பு வந்ததா நினைச்சு போனேன்.

104
00:06:02,196 --> 00:06:04,198
அத சமாளிக்கும் வழி பிறகு தெரிஞ்சது.

105
00:06:09,828 --> 00:06:12,206
உனக்கு தெரியும்னு அம்மாவிடம் சொல்லலாமே.

106
00:06:12,581 --> 00:06:14,166
ஆம். தெரியுது. சொல்லணும்.

107
00:06:15,125 --> 00:06:17,920
சத்தியமா. எப்ப முயன்றாலும்,
எப்படினுதான் தெரியல.

108
00:06:19,421 --> 00:06:22,007
எனக்கோ தம்பிக்கோ
தெரிய வேணாம்னு நினைக்கறாங்க.

109
00:06:22,091 --> 00:06:24,760
தெரிஞ்சா இடிஞ்சு போவாங்க. எல்லாம் போகும்.

110
00:06:28,263 --> 00:06:34,228
சொல்றேனே, அதை அப்படியே
உள்ளேயே போட்டு, மறைத்தா...

111
00:06:39,191 --> 00:06:41,193
அதுவே அவங்களை வாழ வைக்கும் போல.

112
00:06:44,738 --> 00:06:46,698
கெட்ட சகுனமாயிடும்னு பயப்படற போல.

113
00:06:47,032 --> 00:06:49,784
உன்னாலயே அது நடந்துடும்னு உனக்கு ஒரு பயம்.

114
00:06:52,579 --> 00:06:54,790
இதைக் கட்டுப் படுத்த முடியாது.

115
00:06:55,916 --> 00:06:59,002
நீ வெளியே சொன்னாலும்,
சொல்லாவிட்டாலும் நடந்தே தீரும்.

116
00:07:00,087 --> 00:07:03,757
கான்ராட், உன் கையில் எதுவுமில்லை.

117
00:07:05,259 --> 00:07:06,176
சரியா?

118
00:07:14,726 --> 00:07:15,811
என் கையில் இல்லை.

119
00:07:19,773 --> 00:07:20,941
பொகாரி ஸ்வெட்

120
00:07:21,024 --> 00:07:23,068
எதிர்பாராம உதவு
வாலிபால் போட்டி

121
00:07:23,735 --> 00:07:24,736
பெல்லி
அணி

122
00:07:24,820 --> 00:07:25,696
ஹேய், பெல்லி.

123
00:07:26,113 --> 00:07:27,030
ஹேய்.

124
00:07:27,906 --> 00:07:28,740
என்ன அது?

125
00:07:29,533 --> 00:07:30,534
என் ரகசிய ஆயுதம்.

126
00:07:32,911 --> 00:07:35,789
-போட்டிக்கு ஆர்வமா இருக்கியா?
-ஆம், நான் தயார்.

127
00:07:35,873 --> 00:07:38,584
தயாராவே இருக்கறப்ப,
தயார்படுத்திக்க தேவையில்லை.

128
00:07:42,504 --> 00:07:43,672
ஏதோ உளறல்.

129
00:07:43,755 --> 00:07:47,676
ஆம். உற்சாகப் படுத்த
மூளையில்லாத வார்த்தைகள்தான் தேவை.

130
00:07:49,178 --> 00:07:50,179
யோசிக்கிறேன்.

131
00:07:52,764 --> 00:07:53,765
யோசிக்கிறேன்...

132
00:07:55,100 --> 00:07:55,976
பெல்லி.

133
00:07:56,768 --> 00:07:57,728
சொல்லு?

134
00:07:59,438 --> 00:08:00,272
மன்னிச்சுக்கோ.

135
00:08:00,772 --> 00:08:02,024
மூளையில்லாததுக்கா?

136
00:08:04,151 --> 00:08:05,819
அன்று மடையனா நடந்ததுக்கு.

137
00:08:05,903 --> 00:08:09,615
எல்லாம் நினைவிருந்தும்
நினைவில்லாதது போல் நடித்ததுக்கு.

138
00:08:10,240 --> 00:08:13,243
அதே திரும்ப திரும்ப மனசுல ஓடிட்டிருக்கு.

139
00:08:14,953 --> 00:08:16,455
என்ன சொல்ல எனக்கு தெரியல.

140
00:08:16,914 --> 00:08:19,582
தெரியும். ஆறிய கஞ்சி, பழங்கஞ்சி. புரியுது.

141
00:08:25,631 --> 00:08:27,424
உன் புதுமுக துணையா வரவா?

142
00:08:30,385 --> 00:08:31,303
என்னது?

143
00:08:31,762 --> 00:08:34,722
எனக்கு எல்லா நடனமும் தெரியுமே.
பிரச்சினை இல்ல.

144
00:08:38,602 --> 00:08:40,979
-யோசிக்கிறேன்.
-யோசி.

145
00:08:44,149 --> 00:08:46,944
இப்படி உடுத்தியிருக்கியே, சிண்டர்பெல்லி?

146
00:08:47,361 --> 00:08:49,029
நீ வந்தது எவ்ளோ மகிழ்ச்சி.

147
00:08:49,446 --> 00:08:52,199
என் சட்டை எங்கே?
எல்லாரையும் தோற்கடித்துடுவோம்.

148
00:08:52,282 --> 00:08:53,992
சரி. போவோம்.

149
00:08:58,664 --> 00:09:00,082
-நலம்தானே டேய்லர்?
-ஹேய்.

150
00:09:03,877 --> 00:09:05,754
என்னானது ரெண்டு பேருக்கும்?

151
00:09:06,380 --> 00:09:08,006
சொல்ல நிறைய இருக்கு.

152
00:09:09,675 --> 00:09:11,260
என்ன கிண்டலா!

153
00:09:11,760 --> 00:09:12,761
முழு உண்மை.

154
00:09:12,844 --> 00:09:14,638
ஜாலியா சொன்னானா, திணறினானா?

155
00:09:14,721 --> 00:09:17,391
இல்ல கெஞ்சினானா?
கெஞ்சின்னான்னுதான் சொல்லேன்.

156
00:09:17,474 --> 00:09:18,850
கெஞ்சல அவன்.

157
00:09:20,269 --> 00:09:21,979
ஆனா, கொஞ்சம் திணறினான்தான்.

158
00:09:22,062 --> 00:09:26,149
இது இன்னும் சுவாரசியமாகுது,
ஏன்னா நீ வேணாம்னு சொல்லணும்.

159
00:09:32,823 --> 00:09:35,117
பெல்லி, வேணாம்னுதானே சொல்லப் போறே?

160
00:09:35,200 --> 00:09:38,370
போனவாரம் உன்னை
எப்படி சொதப்பினான் கான்ராட்.

161
00:09:38,453 --> 00:09:39,413
புரியுது.

162
00:09:39,496 --> 00:09:44,042
அதோட உணர்வுபூர்வமான,
இனிமையான ஜாலி அழகு தம்பி,

163
00:09:44,126 --> 00:09:48,171
உன் வார்த்தைக்காக உன் காலடியில் விழுந்து
கிடப்பதை சொல்லவா வேணும்.

164
00:09:48,714 --> 00:09:50,590
தயாரா? உங்களை அழைச்சு போகணும்.

165
00:09:51,216 --> 00:09:53,176
-நான் ஓட்டறேனே?
-வேணாம்.

166
00:09:56,346 --> 00:09:59,308
பார், இதப் பத்தி இப்ப பேச வேணாம்.

167
00:09:59,391 --> 00:10:01,727
-நீ அதுக்கு வரல.
-அதுக்குத்தான் வந்தேன்.

168
00:10:01,810 --> 00:10:04,438
நாம் போட்டியை வெல்ல
நீ வந்ததுதான் மகிழ்ச்சி.

169
00:10:04,521 --> 00:10:07,983
இல்ல, உன்ன ஜெரமையா அணியில
சேர்க்க வந்த உற்சாக தலைவி நான்,

170
00:10:08,066 --> 00:10:10,402
அதுக்குதான் நீ மகிழணும்.

171
00:10:15,657 --> 00:10:17,034
சரி, நாம் தயார்.

172
00:10:25,375 --> 00:10:26,543
வெயில் தொப்பி அருமை.

173
00:10:26,626 --> 00:10:27,461
ஷேலா
அணி

174
00:10:27,544 --> 00:10:29,296
நன்றி. இன்று காலை வந்தது.

175
00:10:29,379 --> 00:10:31,882
ஸ்டீவன் பச்சைல வேணும்னான்.
கண்ணை பறிக்குமாம்.

176
00:10:31,965 --> 00:10:34,092
ஆம், உண்மைல பறிக்குது.

177
00:10:39,306 --> 00:10:41,725
ஊர்ல எத்தனை நாள் இருப்பே டேய்லர்?

178
00:10:42,476 --> 00:10:44,853
தெரியல. போறப்ப பார்த்துக்கலாம்.

179
00:10:48,774 --> 00:10:52,402
ஒருவழியா உன்னை சந்திப்பதில்
ரொம்ப மகிழ்ச்சி. நீ பரிச்சயமாவாய்.

180
00:10:52,486 --> 00:10:53,403
ஆம்.

181
00:10:54,529 --> 00:10:57,032
-உனக்கு வெயில் பூச்சு தேய்த்துவிடறேன்.
-சரி.

182
00:11:02,788 --> 00:11:04,456
ஜோடியா நல்லா இருக்கீங்க.

183
00:11:04,790 --> 00:11:05,707
அப்படியா சொல்றே?

184
00:11:06,083 --> 00:11:08,335
அது அழகு. சரி. மைதானத்துல பார்ப்போம்.

185
00:11:12,255 --> 00:11:13,465
மதிய வணக்கம்.

186
00:11:13,548 --> 00:11:14,966
நான் சூஸானா ஃபிஷர்.

187
00:11:15,050 --> 00:11:17,636
கிளப்பின் சமுதாய சேவை அமைப்பின் தலைவி,

188
00:11:17,719 --> 00:11:21,264
உங்களை எதிர்பாராம உதவு நிகழ்ச்சிக்கு
வரவேற்பதில் மகிழ்ச்சி.

189
00:11:23,225 --> 00:11:25,685
சொல்வேன், என் அம்மா சொல்வது போல,

190
00:11:25,894 --> 00:11:29,356
"கடற்ரையில் இருக்கும்
அதிர்ஷ்டமே, அதிர்ஷ்டம்."

191
00:11:29,439 --> 00:11:32,234
நாம் அதிர்ஷ்டம் படைத்தவர்கள்தான்.

192
00:11:32,317 --> 00:11:35,070
-ஆக, வேடிக்கைக்காகவும்...
-நீங்க அசத்திடுவீங்க.

193
00:11:35,153 --> 00:11:38,782
...நட்பான போட்டிக்கும் தோதாக,
நம் இதயத்தை, பர்சை திறப்போம்,

194
00:11:38,865 --> 00:11:41,618
அவ்வளவா அதிர்ஷ்டம்
செய்யாதோருக்கு அத படைப்போம்.

195
00:11:41,701 --> 00:11:45,539
அனாதைகள், வீடில்லாதவர்கள்,
பெண்கள் காப்பகம், சுற்றுச்சூழல் கொடைக்கான

196
00:11:45,622 --> 00:11:48,083
அணிகளோடு இன்னும் பல்வேறு அணிகள் இருக்கு.

197
00:11:48,165 --> 00:11:51,795
எதிர்பாராம உதவு போட்டி,
வெல்பவர்களது நன்கொடை திரட்டலுக்கு

198
00:11:51,878 --> 00:11:53,839
இணையாக நன்கொடை தரும்.

199
00:11:56,258 --> 00:11:59,553
நன்கொடை மேஜையில் இப்பவும் அளிக்கலாம்,
தாராளமா அளியுங்கள்.

200
00:12:00,262 --> 00:12:01,304
இதைச் சொல்லி,

201
00:12:01,638 --> 00:12:03,473
ஆட்டங்களை தொடங்கி வைக்கிறேன்!

202
00:12:08,228 --> 00:12:10,147
அந்தப் பதக்கம் எனக்குத்தான்.

203
00:12:11,022 --> 00:12:12,816
அந்த ரெண்டு பேரிடம் ஜாக்கிரதை.

204
00:12:12,899 --> 00:12:14,192
செமயா எம்பி அடிப்பா.

205
00:12:15,735 --> 00:12:16,611
செய்வோம்.

206
00:12:22,993 --> 00:12:23,827
ஹை.

207
00:12:25,620 --> 00:12:28,039
-நல்லா இருக்கே, ஜெரமி.
-நலமா, டேய்லர்?

208
00:12:33,170 --> 00:12:36,214
கவலையே படாதே. அவன் பழங்கதை.

209
00:12:36,798 --> 00:12:38,049
நிச்சயமாவா சொல்றே?

210
00:12:39,634 --> 00:12:43,013
ஆம், நான் ஜெல்லி அணி,
என் ஆதரவு உனக்கே, சரியா?

211
00:12:43,638 --> 00:12:44,723
நன்றி.

212
00:12:53,106 --> 00:12:54,024
ஹேய்.

213
00:12:54,149 --> 00:12:55,066
ஹேய்!

214
00:12:56,985 --> 00:12:58,987
இப்ப, ஒரு விஷயம் சொல்லிடறேன்.

215
00:12:59,070 --> 00:13:03,325
என் அம்மா, பெல்லிக்கு நடன
துணை இல்லன்னு புலம்பறாங்க.

216
00:13:03,533 --> 00:13:04,451
அவங்க சரிதான்.

217
00:13:04,868 --> 00:13:06,828
உன்னை முடிவெடுக்க வைக்கணுமே.

218
00:13:06,912 --> 00:13:08,538
விஷயம், அவ ஒரு மாதிரி...

219
00:13:09,372 --> 00:13:11,750
என் அம்மா பெல்லிக்கு துணையாக சொன்னாங்க.

220
00:13:11,833 --> 00:13:13,585
ஜெரமையா இல்லையா?

221
00:13:14,544 --> 00:13:16,046
ஆமாம். அது வந்து...

222
00:13:16,713 --> 00:13:19,299
ஜெர் பத்தி தெரியுமே, இது பிடிக்காது. அதோட,

223
00:13:20,509 --> 00:13:22,385
நான் ஏற்கனவே நடனம் தெரிந்தவன்.

224
00:13:22,469 --> 00:13:25,639
ஆம். கவனமிருக்கு. நல்லா ஆடுவியே.

225
00:13:26,932 --> 00:13:28,808
-இதை மறந்துடாதே.
-மாட்டேன்.

226
00:13:29,768 --> 00:13:31,228
-ஏதும் குடிக்கிறயா?
-சரி.

227
00:13:31,311 --> 00:13:32,145
குடிக்கணும்.

228
00:13:37,192 --> 00:13:38,360
எதிர்பாராம உதவு
வாலிபால் போட்டி

229
00:13:39,444 --> 00:13:40,362
சரி, போவோம்.

230
00:13:41,696 --> 00:13:42,906
ஆரம்பிப்போம், பெல்லி, ஆகட்டும்.

231
00:13:44,115 --> 00:13:44,950
ஆம்.

232
00:13:45,283 --> 00:13:47,077
உஷாரா ஆடு. சமர்த்தா ஆடு.

233
00:13:50,038 --> 00:13:51,456
-ஆடு, பெல்லி.
-தயாரா?

234
00:13:51,957 --> 00:13:54,209
-நல்லா அடிச்சே, ஆம்!
-அருமை.

235
00:14:03,677 --> 00:14:04,594
அடி, பெல்லி.

236
00:14:05,971 --> 00:14:08,139
அருமை. நல்லாஅடிச்சீங்க. அருமை!

237
00:14:10,642 --> 00:14:13,436
அருமை! தொடர்வோம், பெல்லி அணி.

238
00:14:18,233 --> 00:14:19,359
உன்னிடம், டேய்லர்.

239
00:14:20,902 --> 00:14:22,320
-ஒண்ணுமில்லயே?
-ஏதுமாகலயே?

240
00:14:23,572 --> 00:14:25,031
இல்ல, கணுக்கால்தான்...

241
00:14:25,824 --> 00:14:27,617
-உதவவா?
-ஒண்ணுமில்லயே, டேய்லர்?

242
00:14:27,701 --> 00:14:29,536
-பிசகிடுச்சு, அவ்ளோதான்.
-சரி.

243
00:14:30,120 --> 00:14:30,954
நடக்க முடியுமா?

244
00:14:32,414 --> 00:14:34,833
-மாற்றமா ஆடுவியா?
-சரி.

245
00:14:36,751 --> 00:14:39,087
-உதவி வேணுமா?
-உனக்கு ஒண்ணுமில்லயே?

246
00:14:39,170 --> 00:14:41,339
இல்ல, முடியும். நீ ஆடு.

247
00:14:51,558 --> 00:14:53,101
முடிப்போம்!

248
00:14:58,523 --> 00:14:59,858
-அருமை!
-சரி, தயாரா?

249
00:15:01,276 --> 00:15:03,194
மேலே. கீழே. இடுப்பு.

250
00:15:04,696 --> 00:15:06,364
அப்படிதான்!

251
00:15:10,410 --> 00:15:11,828
-இந்தா.
-நன்றி.

252
00:15:11,911 --> 00:15:12,746
இருக்கட்டும்.

253
00:15:12,829 --> 00:15:13,747
அருமை.

254
00:15:18,543 --> 00:15:20,253
-நல்ல ஆட்டம்!
-செம அடி!

255
00:15:20,337 --> 00:15:22,839
-ஆஹா.
-முடித்தோம்!

256
00:15:22,922 --> 00:15:24,007
நல்ல ஆட்டம்.

257
00:15:24,090 --> 00:15:25,175
பெல்லி அணி

258
00:15:25,258 --> 00:15:26,509
ஆகட்டும், பெல்லி அணி.

259
00:15:48,782 --> 00:15:49,699
நல்ல முயற்சி.

260
00:15:55,747 --> 00:15:57,915
பாய்ந்து அடிக்கணும்! மணல்ல ஆடறோமே.

261
00:15:57,999 --> 00:15:58,917
சரிதான்.

262
00:16:04,923 --> 00:16:06,758
பாய கத்துக்கணும், சரியா?

263
00:16:06,841 --> 00:16:08,843
கவனிச்சு ஆடு, அவங்க நல்லா ஆடறாங்க.

264
00:16:15,850 --> 00:16:16,768
சரிதான்.

265
00:16:17,310 --> 00:16:20,063
-என்னைப் பார்க்காதே பந்தைப் பார்.
-புரியுது.

266
00:16:20,146 --> 00:16:21,189
ஜெர், கவனி!

267
00:16:33,034 --> 00:16:34,661
இதோ. என்னிடம்.

268
00:16:43,670 --> 00:16:44,838
நடுவரே. நாங்க...

269
00:16:52,887 --> 00:16:54,639
மன்னி. நான் இதை ஜெயிக்கணும்.

270
00:16:54,723 --> 00:16:56,891
-என் நன்கொடை இரட்டையாகும்.
-புரியுது.

271
00:16:56,975 --> 00:16:59,310
கான்ராட் நீ மாற்றா வரணும்.

272
00:16:59,394 --> 00:17:00,437
இப்போ.

273
00:17:08,903 --> 00:17:10,155
நல்லா ஆடினே, ஜெர் கரடி.

274
00:17:11,698 --> 00:17:13,742
-நான் எங்க நிக்கணும்?
-நீ ஆரம்பி.

275
00:17:13,825 --> 00:17:15,034
முடிப்போம்.

276
00:18:10,298 --> 00:18:11,257
-ஆம்!
-வென்றோம்!

277
00:18:15,011 --> 00:18:16,971
பெல்லி அணி - ஸ்விஃப்டி அணி

278
00:18:24,437 --> 00:18:26,397
பெல்லி அணி - அணி ஏ-அணி

279
00:18:46,334 --> 00:18:48,795
-ஆஹா!
-ஆஹா! அட, அடேங்கப்பா!

280
00:18:49,003 --> 00:18:50,922
பெல்லி அணி எதிராக ஷேலா அணி

281
00:19:05,478 --> 00:19:06,479
அருமை.

282
00:19:18,867 --> 00:19:19,826
அப்படி!

283
00:19:23,788 --> 00:19:25,415
கலக்கு, கண்ணு! ஆடுவோம்!

284
00:19:40,555 --> 00:19:41,848
அப்படி!

285
00:19:44,767 --> 00:19:46,728
அப்படிதான். நல்லா செய்தே.

286
00:20:15,131 --> 00:20:17,342
-நல்ல, ஆட்டம், பெல்ஸ்.
-வென்றது, இசபெல் கான்க்லின்,

287
00:20:17,425 --> 00:20:18,801
உடன் கான்ராட் ஃபிஷர்!

288
00:20:21,220 --> 00:20:23,598
அடஅடஅடா! நம்ப முடியாம ஆடினீங்க.

289
00:20:23,681 --> 00:20:25,433
அருமையான அணியானீங்க.

290
00:20:25,850 --> 00:20:27,143
அவளை கேட்டாயா?

291
00:20:27,226 --> 00:20:29,354
-என்னை என்ன கேட்கணும்?
-நடன துணையாக.

292
00:20:29,771 --> 00:20:33,066
நீ முடிவெடுக்க நாளானதால்,
அவனை கேட்கச் சொன்னேன்.

293
00:20:33,441 --> 00:20:34,692
பாராட்டுக்கள்!

294
00:20:37,111 --> 00:20:38,988
-பெருமை தந்தே.
-மகிழ்ச்சி தந்தே.

295
00:20:46,120 --> 00:20:47,997
-கணுக்கால் எப்படி இருக்கு?
-பராவால்ல.

296
00:20:48,081 --> 00:20:50,583
பெல்லி, ஹேய், பெல்லி.

297
00:20:51,250 --> 00:20:52,335
ஹேய், நிகோல்.

298
00:20:52,418 --> 00:20:54,671
-தோழி டேய்லர், நினைவிருக்கா?
-ஓ, ஹை.

299
00:20:55,213 --> 00:20:57,632
அப்பாவின் படகு ஆங்விலாலிருந்து வந்தது.

300
00:20:57,715 --> 00:21:00,510
கொஞ்ச நேரத்தில பிட்சா
ரோஸ் பானம் அருந்தலாமே?

301
00:21:02,053 --> 00:21:05,723
தினத்தை வேடிக்கையா முடிக்க.
உன்ன ரொம்ப எதிர்பார்ப்பேன் டேய்லர்.

302
00:21:05,807 --> 00:21:07,183
கேலாவும் இருப்பாளா?

303
00:21:07,725 --> 00:21:11,521
ஷேலாவை சொல்றியா. இல்ல, அவளுக்கு
லீயம் மத்த பசங்களோட வேற ஏதோ.

304
00:21:11,604 --> 00:21:13,648
-சரி, நாங்க வர்றோம்.
-சரி.

305
00:21:15,149 --> 00:21:18,528
இது அற்புதமா இருக்கு.
அதை இன்னொரு முறை தேய்த்து தரீங்களா?

306
00:21:18,611 --> 00:21:19,988
அடடே, கண்டிப்பா.

307
00:21:20,446 --> 00:21:22,991
-அவ மாதிரி இருக்க பிடிக்கல.
-அதுக்கு கவலைப் படாதே.

308
00:21:23,074 --> 00:21:24,075
-பெக்!
-என்ன?

309
00:21:24,158 --> 00:21:26,160
கசங்கி போயிருக்கே. வேற வழி இல்ல.

310
00:21:26,244 --> 00:21:27,328
சரி, போகட்டும்.

311
00:21:28,162 --> 00:21:30,790
-உன் சருமம் பழுப்பானது. பாரு.
-அப்படியா?

312
00:21:30,873 --> 00:21:33,626
-சரி, பெண்களே, இந்தாங்க.
-ரொம்ப நன்றி.

313
00:21:47,974 --> 00:21:50,601
கான்ராட் நிஜ நடனத்துல என் துணையா வரணும்னு,

314
00:21:50,685 --> 00:21:54,605
வாழ்க்கை முழுக்க நினைச்சது ஒரு விஷயம்.

315
00:21:55,064 --> 00:21:57,483
ஆனா, அவன் அம்மா சொன்னதால இப்ப கேட்கிறான்.

316
00:21:57,567 --> 00:22:00,820
அதான் சொல்லிட்டேனே,
ஜெல்லி நடக்கும், பான்ராட் நடக்காது.

317
00:22:01,195 --> 00:22:04,073
-பான்ராட் ஜோடியாக ஒத்துவராத பெயர்.
-துல்லியம்.

318
00:22:04,157 --> 00:22:07,785
ஜெல்லி கவரும் அழகு. இன்ஸ்டகிராம்ல
ஜெல்லி அணி பக்கம் போட்டேன்.

319
00:22:10,830 --> 00:22:11,956
கடவுளே, டேய்லர்.

320
00:22:12,040 --> 00:22:12,957
இன்ஸ்டகிராம்
வெல்க ஜெல்லி

321
00:22:14,167 --> 00:22:15,626
-அடேங்கப்பா!
-தெரியும்.

322
00:22:17,962 --> 00:22:19,422
என்ன செய்யணும்?

323
00:22:19,505 --> 00:22:23,843
அதாவது, ஒரேயடியா எப்படி
ஜெரமையாகிட்ட நெருங்க முடியும்...

324
00:22:25,053 --> 00:22:28,056
என் மனதின் ஒரு ஓரம் அவன்
அண்ணனுக்காக துடிக்கிறப்போ?

325
00:22:28,931 --> 00:22:33,102
என் மனமும் உன் அண்ணனுக்காக
எப்பவும் ஒரு ஓரத்தில துடிக்கும்தான்.

326
00:22:33,186 --> 00:22:37,982
அதுக்காக நான் அவனை விட பிரமாதமானவனை
காதலிக்கக் கூடாதுனு அர்த்தமில்ல.

327
00:22:38,066 --> 00:22:39,192
-டேய்லர்.
-என்ன?

328
00:22:41,819 --> 00:22:42,653
பெல்லி!

329
00:22:43,905 --> 00:22:45,156
-அட்டகாசம்!
-செம்ம.

330
00:22:52,622 --> 00:22:55,291
ஜெர், பார்ட்டிக்கு வந்துட்டே.
கலக்கல்தான் இனி.

331
00:22:55,374 --> 00:22:57,752
ஷேலா லீயம் ஐஸ் குழலை வரவழைச்சதா சொன்னா.

332
00:22:58,711 --> 00:22:59,754
நல்லா இருக்குமே.

333
00:23:01,130 --> 00:23:02,340
என்ன பிரச்சினை உனக்கு?

334
00:23:03,424 --> 00:23:06,094
ஒண்ணுமில்ல. இன்றிரவு வர சுரத்தில்லை.

335
00:23:06,177 --> 00:23:09,305
என்ன? இல்லடா, நீ வேணும்டா.

336
00:23:09,388 --> 00:23:10,807
வேடிக்கை நீ இல்லாமயா.

337
00:23:11,516 --> 00:23:15,228
ஷேலா இருப்பாடா.
எல்லோருக்கும் அவளைக் கண்டா பயம்.

338
00:23:21,067 --> 00:23:24,237
பார்டா! உன் கவனம் சிதறினா என்னாகுதுன்னு?

339
00:23:26,739 --> 00:23:28,950
அது சரி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.

340
00:23:29,283 --> 00:23:30,243
ஆடுங்க.

341
00:23:30,660 --> 00:23:31,536
இரு. என்ன?

342
00:23:36,791 --> 00:23:37,834
என்னாச்சு அவனுக்கு?

343
00:23:38,584 --> 00:23:40,294
தெரியல. ஒரு மாதிரி பண்றான்.

344
00:23:40,920 --> 00:23:43,881
ஆனா, இன்றிரவு அவன் வரல, நீயும் நானும்தான்.

345
00:23:43,965 --> 00:23:45,424
ஆம், அது பத்தி, சகோதரா.

346
00:23:46,384 --> 00:23:47,718
நானும் ஜூட் விடுவேன்.

347
00:23:48,136 --> 00:23:51,305
-சகோதரா, கோடை முழுதும் கூட இருக்கலயே.
-அது இல்ல...

348
00:23:51,389 --> 00:23:55,768
கான்ராட், இதோ பாரு,
நீ வரலன்னா ரொம்ப கோபப் படுவேன்.

349
00:23:56,769 --> 00:23:57,687
-சரி.
-நிஜமாவா?

350
00:23:57,770 --> 00:23:58,604
சரி. வர்றேன்.

351
00:23:59,730 --> 00:24:00,940
ஒரு வழியா, வர்றே!

352
00:24:01,274 --> 00:24:03,192
என்னை விட்டு ரொம்ப ஒதுங்கி போறேடா.

353
00:24:04,318 --> 00:24:05,778
அப்படிதான்!

354
00:24:06,487 --> 00:24:09,699
பார்த்தாயா? அருமை.

355
00:24:11,742 --> 00:24:13,536
ஒரே நாளில் ரெண்டு பேரோடு...

356
00:24:14,203 --> 00:24:17,665
சரசமாடியிருந்தா, ஒரு விரலை மடியுங்க.

357
00:24:21,294 --> 00:24:22,128
நானும்.

358
00:24:22,587 --> 00:24:26,507
சரி, ஒரு விரலை மடியுங்க,
அடைத்த பொம்மையை...

359
00:24:27,383 --> 00:24:28,301
புரியுது இல்ல.

360
00:24:28,926 --> 00:24:31,387
அவன் பேரு ஹேரி பேர் ஸ்டைல். அதாவது...

361
00:24:31,637 --> 00:24:33,055
நீ என்ன பெயர் சொல்வே?

362
00:24:33,639 --> 00:24:34,807
என்னது?

363
00:24:36,392 --> 00:24:39,103
சரி, உறவு செய்திருந்தா,
ஒரு விரலை மடியுங்க.

364
00:24:45,443 --> 00:24:47,153
மூணாம் நிலை எட்டியிருக்கீங்களா?

365
00:24:51,157 --> 00:24:53,701
இரண்டாம் நிலை போயிருந்தா ஒரு விரலை மடிங்க?

366
00:24:55,828 --> 00:24:58,998
எப்பாவது ஜெரமையாவை
கொஞ்சியிருந்தா, விரலை மடிங்க!

367
00:25:02,501 --> 00:25:04,420
-இது வேணாம்!
-ஆஹா!

368
00:25:04,503 --> 00:25:07,048
இரு, பெல்லி, நாம் எல்லா வம்பும் அளப்போம்.

369
00:25:08,674 --> 00:25:10,968
-மன்னி, ஜிஜி.
-இல்ல, பரவாயில்ல.

370
00:25:11,719 --> 00:25:15,181
அதாவது சொல்ல குறிப்பா ஏதும் இல்ல.
அவன் என் நண்பன் மாதிரி.

371
00:25:15,264 --> 00:25:16,474
எப்ப அது ஆரம்பமாச்சு?

372
00:25:17,516 --> 00:25:21,729
ஒரு வாரம் போல்.
வீட்டு நீச்சல் குளத்தில முத்தமிட்டோம்.

373
00:25:22,980 --> 00:25:26,400
உனக்கும் கான்ராடுக்கும்
ஏதோ இருக்கும்னு எனக்கு தோணும்,

374
00:25:26,859 --> 00:25:29,403
ஆனா, வேற சகோதரனே எனக்கு கிடைத்தான்.

375
00:25:31,739 --> 00:25:33,115
அதான், இல்ல, அது...

376
00:25:33,658 --> 00:25:34,909
நான் வெறுமனே...

377
00:25:35,993 --> 00:25:36,994
தெரியல.

378
00:25:37,078 --> 00:25:38,871
ஏதோ, ஜெரமையாவை இதோட விடுங்க.

379
00:25:38,955 --> 00:25:41,832
ஒண்ணுமில்லாம நீச்சல் போயிருந்தா
ஒரு விரலை மடிங்க?

380
00:25:42,291 --> 00:25:46,754
ஹாப்பர்ஸ் கோவ்ல ஒண்ணுமில்லாம
நீச்சல் போயிருந்தா ஒரு விரலை மடியுங்க.

381
00:25:47,588 --> 00:25:48,756
அது சவாலா?

382
00:25:49,382 --> 00:25:50,466
கண்டிப்பா.

383
00:25:52,843 --> 00:25:54,720
உன்னிடம் தப்பேதும் இல்லை, லிசா.

384
00:25:54,804 --> 00:25:57,265
இந்த நகரே உன் உள்ளங்கைல இருக்கு.

385
00:25:59,100 --> 00:26:00,935
ஒண்ணும், அப்படி இல்லனு தோணுது.

386
00:26:04,021 --> 00:26:06,816
நீ கானி, ஸ்டீவன் கூட
போயிருப்பேனு நினைச்சேனே.

387
00:26:06,899 --> 00:26:09,402
பார்ட்டிக்கு போக சுரத்தில்லை.

388
00:26:09,485 --> 00:26:11,279
நீயா இப்படி சொல்றே.

389
00:26:13,447 --> 00:26:15,408
போட்டியால ரொம்ப சோர்வானேன்.

390
00:26:17,076 --> 00:26:18,744
-பரவாயில்லயா?
-ஆம். கொஞ்ச...

391
00:26:19,745 --> 00:26:20,997
சோர்வாதான் இருக்கு.

392
00:26:22,206 --> 00:26:24,000
ஒரு படம் பார்ப்போமா?

393
00:26:25,334 --> 00:26:27,837
இல்ல சில பூதங்களை கொல்வோமா?

394
00:26:31,340 --> 00:26:33,467
சரி, இதை எப்படி ஆடணும்?

395
00:26:34,010 --> 00:26:36,512
தேடி பார்க்க இதை உயோகிக்கணும்.

396
00:26:37,221 --> 00:26:38,222
இது நகர.

397
00:26:38,973 --> 00:26:40,266
குறி பாருங்க. சுடுங்க.

398
00:26:41,767 --> 00:26:42,727
சரியா, தயாரா?

399
00:26:42,810 --> 00:26:44,562
ஸாம்பி டெத் ப்ளேக்

400
00:26:45,354 --> 00:26:46,272
வந்துட்டாங்க.

401
00:26:46,355 --> 00:26:48,482
-எங்கே?
-இங்கதான், எனக்கு இடதில்.

402
00:26:48,566 --> 00:26:50,651
-இடது எனக்கா, உனக்கா?
-அதோ, என் இடதில்.

403
00:26:55,364 --> 00:26:56,574
பழகினா சரியாயிடும்.

404
00:26:57,950 --> 00:27:01,245
வீடற்றவர் காப்பகத்துக்கு
எவ்ளோ வசூல் பண்ணீங்க தெரியுமா?

405
00:27:01,329 --> 00:27:02,913
5000 டாலர்.

406
00:27:03,998 --> 00:27:06,709
உங்களால் பெருமை. பெல்லியும் ஜெயிச்சா.

407
00:27:08,127 --> 00:27:10,546
நடனவிழாவின் நிஜமான அழகி அவள்.

408
00:27:11,714 --> 00:27:13,424
அவகூட யார் வர்றாங்கனு சொன்னாளா?

409
00:27:13,716 --> 00:27:15,634
ஆம். கானியை அவளோட போக சொன்னேன்.

410
00:27:16,469 --> 00:27:19,722
உன்னை சொல்லியிருப்பேன்,
உனக்கு இந்த வழக்கம் பிடிக்காதே.

411
00:27:20,181 --> 00:27:21,265
ஆமாம்.

412
00:27:22,808 --> 00:27:24,935
கான்ராடும் பெல்லியும் போறாங்களா?

413
00:27:25,019 --> 00:27:26,312
அப்படி நம்புவோம்.

414
00:27:27,229 --> 00:27:31,317
கானி இன்று பழைய மாதிரி ஆனான் இல்ல?
ரொம்ப மகிழ்ச்சியா இருந்தான்.

415
00:27:32,276 --> 00:27:33,319
ஆம், அப்படி தோணுது.

416
00:27:35,237 --> 00:27:38,866
அவனை செமயா குழப்பியிருக்கும் புயல்,
உன் பக்கம் அடிக்கலதானே?

417
00:27:40,201 --> 00:27:41,077
இல்லை.

418
00:27:42,495 --> 00:27:43,871
இருக்கலாம். தெரியல.

419
00:27:44,997 --> 00:27:46,582
நான் ஏதும் செய்யணுமா?

420
00:27:48,501 --> 00:27:50,252
இல்ல. இன்று ஏதோ வினோதமா இருக்கு.

421
00:27:50,336 --> 00:27:52,421
அப்படியா? நான் இங்கதானே இருக்கேன்?

422
00:27:56,592 --> 00:27:59,428
சொல்றேனே, நான் பார்ட்டிக்குப் போறேன்.

423
00:27:59,887 --> 00:28:02,264
-நீங்களும் வர்றீங்களா?
-வேணாம்.

424
00:28:04,767 --> 00:28:05,893
தூக்கம் வருது.

425
00:28:06,894 --> 00:28:07,812
சரி.

426
00:28:17,029 --> 00:28:18,072
கடவுளே.

427
00:29:08,414 --> 00:29:12,126
கராஜ்ல இருந்த காரை பார்த்தாயா, சகோதரா?
அது டைனோ 246தானே.

428
00:29:12,209 --> 00:29:14,253
லீயம் குடும்பம் ஜம்பமடிப்பவங்க.

429
00:29:14,336 --> 00:29:16,839
இந்த மாதிரி வளர எனக்குப் பிடிக்காதுடா.

430
00:29:16,922 --> 00:29:18,424
அதிக கிறுக்குத்தனம் இல்ல?

431
00:29:18,966 --> 00:29:20,926
இருந்தாலும், நீயும் பணக்காரன்தானே?

432
00:29:21,343 --> 00:29:25,389
இவ்ளோ இல்ல. இந்த
பசங்களுக்கு போர்டிங் பள்ளியே வாழ்வு.

433
00:29:25,473 --> 00:29:27,641
வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்ல.

434
00:29:27,725 --> 00:29:30,311
அதனாலதான், மண்டுன்றது.
மகிழ்ச்சியா இருப்பதில்லை.

435
00:29:30,394 --> 00:29:31,562
மட்டம் தட்டறியே.

436
00:29:36,066 --> 00:29:38,652
அடடே! என் நண்பன் வருவான்னு தெரியும்! ஆம்!

437
00:29:41,363 --> 00:29:42,490
ஆமாம்!

438
00:29:46,785 --> 00:29:49,580
-ஜெரமையா இப்ப யாருகூட சுத்தறான்?
-யாருமில்ல.

439
00:29:49,872 --> 00:29:54,919
உண்மைல, இல்ல. ஷேலா ஒண்ணு எடுத்து விட்டா.
அவன் என் தங்கை கூட சுத்தறானாம்.

440
00:29:55,878 --> 00:29:58,255
-நிஜமா?
-தெரியுதுடா. எனக்கும் பிடிக்கல.

441
00:29:58,339 --> 00:30:00,299
அது... அப்படியா.

442
00:30:00,382 --> 00:30:02,384
ஷேலா இப்படி நெறய எடுத்து விடுவா.

443
00:30:02,468 --> 00:30:05,679
என் தங்கைய அவன் தொட்டா
கொன்னுடுவேனு, ஜெர்க்கு தெரியும்.

444
00:30:05,763 --> 00:30:08,224
பசங்களா, டேய்! இதோ பார், ஐஸ் குழல்.

445
00:30:08,307 --> 00:30:10,059
நீயும் வாயேன்! ஸ்டீவன், வா.

446
00:30:10,142 --> 00:30:11,602
ஹேய், நான் போகணும்.

447
00:30:27,368 --> 00:30:28,953
-இருக்கட்டும்.
-சரி.

448
00:30:30,246 --> 00:30:31,539
இருக்கட்டும்! அய்யோ.

449
00:30:31,622 --> 00:30:34,750
அய்யோ! இடம் முழுதும் களியாட்டமா இருக்கே.

450
00:30:34,833 --> 00:30:36,460
அது அப்படித்தான்.

451
00:30:36,544 --> 00:30:37,503
ஹேய்!

452
00:30:38,879 --> 00:30:43,425
நிலவறைல ஒரு ஆட்டம் போயிட்டுருக்கு.
இங்கே போதும்னா போகலாம்.

453
00:30:45,135 --> 00:30:46,136
வருகிறாயா?

454
00:30:46,845 --> 00:30:47,721
போ.

455
00:30:48,430 --> 00:30:49,765
ஆம், நானும் வர்றேன்.

456
00:30:50,015 --> 00:30:50,933
அருமை.

457
00:30:54,687 --> 00:30:55,563
ஆடுங்க.

458
00:31:20,170 --> 00:31:21,964
ஜெல்லி மீன் இருக்கா பார்!

459
00:31:22,047 --> 00:31:24,800
உங்க மேல ஒண்ணுக்குப் போயிடக் கூடாது.

460
00:31:24,883 --> 00:31:26,635
மத்த ரெண்டு பொண்ணுங்க காணோம்.

461
00:31:26,719 --> 00:31:28,887
டாரா வரமாட்டானு தெரியும், ஆனா மரிஸா?

462
00:31:28,971 --> 00:31:31,307
-ஆம். அதேதான் நினச்சேன்!
-நிகோல்.

463
00:31:31,515 --> 00:31:33,183
-சொல்?
-கான்ராட் செய்தி, உனக்கு!

464
00:31:33,267 --> 00:31:34,310
இதோ வர்றேன்.

465
00:31:41,900 --> 00:31:43,027
இது ரொம்ப அருமை.

466
00:31:44,278 --> 00:31:45,821
உன் நட்புகள் பிடித்திருக்கு.

467
00:31:45,904 --> 00:31:49,450
-பிடிக்கும்னு தெரியும்.
-நீ, ஜெரமையாவோடுனா ஒத்துக்கறாங்களே.

468
00:31:49,533 --> 00:31:53,370
கேட்டதுமே ரொம்ப கோபப் பட்ட ஜிஜிக்கு கூட.

469
00:31:53,787 --> 00:31:55,122
-அடேங்கப்பா!
-என்ன?

470
00:31:55,205 --> 00:31:59,585
ஒண்ணு தெரிஞ்சது.
ஜெல்லி ஃபிஷர் அணியை பின்பற்றுவது.

471
00:32:00,044 --> 00:32:01,003
ஜெல்லி ஃபிஷர்.

472
00:32:01,670 --> 00:32:05,257
-டேய்லர், அது ரொம்ப மட்டம்.
-இல்ல, உண்மையா ரொம்ப நல்லாருக்கு.

473
00:32:08,427 --> 00:32:11,096
-அவளுங்க சிறுக்கிங்கனு தெரியுமே!
-என்ன ஆச்சு?

474
00:32:12,139 --> 00:32:13,015
இரு...

475
00:32:17,186 --> 00:32:18,479
டேய்லர், என்ன நடக்குது?

476
00:32:18,562 --> 00:32:21,315
எல்லாத்தையும் எடுத்து போனாங்க.
உன் ஃபோன் தவிர.

477
00:32:21,940 --> 00:32:24,860
அதில கான்ராடிடமிருந்து
அம்பலப்படுத்தும் செய்தி.

478
00:32:25,402 --> 00:32:26,862
இரு, என்னன்னு பாரு?

479
00:32:27,279 --> 00:32:30,407
"நான் நடனத்துக்கு உன்னை
அழைத்தது எங்கம்மா சொன்னதால

480
00:32:30,491 --> 00:32:32,409
"மட்டும் அல்ல. என் ஆசையும்தான்."

481
00:32:32,993 --> 00:32:34,036
அடக் கடவுளே!

482
00:32:35,162 --> 00:32:36,747
பெல்லி, மெதுவா யோசி.

483
00:32:38,290 --> 00:32:39,458
-பெல்லி!
-என்ன?

484
00:32:40,000 --> 00:32:44,129
சரி, என்ன செய்யறது? அம்மணமா போக முடியாதே.

485
00:32:44,213 --> 00:32:46,006
அதைவிட மோசமாகலாமே.

486
00:32:46,090 --> 00:32:49,259
-நாம் போறோம்.
-இதைவிட எது மோசம், டேய்லர்?

487
00:32:53,722 --> 00:32:55,224
சரி. அது...

488
00:32:56,350 --> 00:32:57,893
அதுக்கு என்ன?

489
00:32:58,018 --> 00:32:58,894
அய்யோ!

490
00:33:11,699 --> 00:33:12,616
ஹேய்.

491
00:33:14,118 --> 00:33:15,035
என்ன ஆச்சு?

492
00:33:16,537 --> 00:33:17,454
ஒண்ணுமில்ல.

493
00:33:20,457 --> 00:33:24,837
சரி, ஹேய், அம்மாவைப் பத்தி
சமீபமா ஏதும் வித்தியாசமா கவனித்தாயா?

494
00:33:26,171 --> 00:33:28,173
என்ன? எதைச் சொல்றே நீ?

495
00:33:28,716 --> 00:33:30,551
ரொம்ப தூங்கறாங்க.

496
00:33:31,343 --> 00:33:32,886
இது கோடைக்காலம், ஜெர்.

497
00:33:32,970 --> 00:33:35,472
விடுமுறைன்னா அதிகம் தூங்குவாங்களே.

498
00:33:35,556 --> 00:33:37,349
விடு. அது சரி. போடா.

499
00:33:40,394 --> 00:33:42,229
உன் வெற்றிக்குப் பாராட்டுக்கள்.

500
00:33:42,604 --> 00:33:44,356
தோக்கறதே உனக்குப் பிடிக்காதே.

501
00:33:44,440 --> 00:33:46,191
எனக்கு அது வெற்றி பற்றியல்ல.

502
00:33:48,277 --> 00:33:50,529
வேலைகளை சரியான வழியில செய்யறதப் பத்தி.

503
00:33:52,698 --> 00:33:53,699
ஆம், நிச்சயமா.

504
00:34:00,956 --> 00:34:03,041
-ரொம்ப மோசம்.
-அவளுங்க மட்டம்.

505
00:34:03,125 --> 00:34:04,042
போதும்.

506
00:34:04,585 --> 00:34:06,086
புரியுது. நீ சொல்றது சரி.

507
00:34:06,170 --> 00:34:08,672
ஜெரமையாவை கூப்பிடலாமே? நாம கொல்லப்படுவோம்.

508
00:34:08,755 --> 00:34:11,300
இல்ல. ஜெரமையாவை
கூப்பிட்டா, நிறைய பிரச்சினை.

509
00:34:12,009 --> 00:34:14,011
மூணு கிலோமீட்டர் நடக்க முடியாது.

510
00:34:14,511 --> 00:34:17,014
-நடந்துதான் ஆகணும்.
-ஆ, ஐயோ.

511
00:34:22,770 --> 00:34:23,645
வாயை மூடு.

512
00:34:24,480 --> 00:34:27,107
இதனாலதான் கான்ராட்னா சொதப்பல்னு சொல்றது.

513
00:34:27,190 --> 00:34:30,694
அவன் கவர்ச்சி, மர்மமானவன்,
புரியுது. தெரியும்.

514
00:34:31,445 --> 00:34:34,239
ஆனா அவன் எதை தொட்டாலும்
அப்படியே குப்பையாகுது.

515
00:34:34,782 --> 00:34:37,868
ஆம். ஏன்தான் அவன் இழுப்புக்கு
போறேனோ தெரியல.

516
00:34:38,659 --> 00:34:42,080
இன்று பழைய கான்ராடா இருந்த மாதிரி இருக்கு.

517
00:34:42,164 --> 00:34:44,500
அது பழகிப் போச்சு, சொல்றேனே.

518
00:34:44,583 --> 00:34:46,627
உன்னை எப்படியோ மந்திரம் போட்டான்.

519
00:34:46,918 --> 00:34:48,545
அந்த மந்திரம் கலைஞ்சதும்,

520
00:34:48,629 --> 00:34:52,591
அவனுக்காக ஜெரமையாவை
ஓரமா தள்ளிவிட்டேன்னு புரியுது.

521
00:34:52,674 --> 00:34:54,467
ஒருவிதத்தில அப்படிதான் செய்தே.

522
00:34:55,719 --> 00:34:56,594
சொல்லட்டுமா...

523
00:34:59,097 --> 00:35:01,350
நான் கான்ராடை கனவு கானும் வழக்கம்,

524
00:35:01,433 --> 00:35:04,436
அதை கற்பனை செய்தா,
ஆதரவா இருப்பது போல இருக்கும்.

525
00:35:04,520 --> 00:35:06,271
நடக்கவே முடியாதது என்பதால்.

526
00:35:06,355 --> 00:35:09,107
நான் நினைப்பது போல
அவன் என்னை நினைப்பதில்லை.

527
00:35:10,275 --> 00:35:11,985
நான், ஜெரமையா முத்தமிட்டப்ப...

528
00:35:13,362 --> 00:35:14,321
அது நிஜம்.

529
00:35:16,573 --> 00:35:19,576
ஆனா நிஜம், அச்சம் தருதே.

530
00:35:23,163 --> 00:35:25,874
ஆனா, காதல் எப்பவும் அச்சமுறுத்துவதுதானே?

531
00:35:30,337 --> 00:35:31,505
நீ சொல்றது சரி.

532
00:35:31,922 --> 00:35:34,508
நான் எப்பவுமே சரி,
குறைந்தது 98 சத நேரங்களில்.

533
00:35:37,135 --> 00:35:38,011
வாயை மூடு.

534
00:35:39,805 --> 00:35:40,722
சரி.

535
00:35:42,391 --> 00:35:43,392
நல்ல வேளை.

536
00:35:45,519 --> 00:35:48,522
கான்ராட், உன்னோட தனியா பேசணும்.

537
00:35:49,815 --> 00:35:51,567
பிறகு பேசு. இப்ப வேலை இருக்கு.

538
00:35:59,825 --> 00:36:00,826
ஹேய், பெல்லி.

539
00:36:04,454 --> 00:36:05,372
என்னது?

540
00:36:09,084 --> 00:36:10,002
என்ன விஷயம்?

541
00:36:10,085 --> 00:36:12,880
ஹாப்பர்ஸ் கேவ்ல, பெல்லிக்கு
உன் செய்தியை பார்த்தேன்.

542
00:36:13,422 --> 00:36:14,840
அப்பட்டமா புளுகியிருக்க.

543
00:36:15,257 --> 00:36:17,885
நல்லா தெரிஞ்சே வேணும்னே பொய் சொன்னே. நான்

544
00:36:17,968 --> 00:36:21,930
ஒப்புக்கு சப்பாணி. என்னை ஏதோ
பெரிசா இருக்கும்னு நினைக்க வைத்தாய்.

545
00:36:22,014 --> 00:36:25,517
பெல்லிக்கு நடனத் துணையா
உங்கம்மா போகச் சொன்னதா கதை விட்டே.

546
00:36:25,601 --> 00:36:28,520
-நிகோல், சத்தியமா எங்கம்மா சொ--
-போதும் நிறுத்து!

547
00:36:28,604 --> 00:36:32,316
கோடை முழுதும் இதை புரிஞ்சுக்க
முயற்சித்தேன். என்னதான் "இது"ன்னு.

548
00:36:32,399 --> 00:36:35,444
ஆனா, அது எப்பவுமே
பெல்லி பத்திதான், இல்லையா?

549
00:36:36,111 --> 00:36:41,158
நான் இதில் மாட்டிக்கிறது எரிச்சலாக்குது,
நான் ஒண்ணும் தெரியாதவ அல்ல.

550
00:36:42,576 --> 00:36:44,119
உன்னை புண்படுத்த விரும்பல.

551
00:36:44,202 --> 00:36:46,163
வேணாமே. நீ என்னை புண்படுத்தல.

552
00:36:46,538 --> 00:36:48,248
என் நேரத்தை வீண்டித்தாய்.

553
00:36:48,332 --> 00:36:49,583
வித்தியாசம் இருக்கு.

554
00:36:50,083 --> 00:36:52,210
நிறைய பசங்க என்னை விரும்பினாங்க.

555
00:36:52,294 --> 00:36:55,505
அழகான ஆக்ஸ்ஃபோர்ட் பையன்,
என் மேல பைத்தியமா இருந்தான்.

556
00:36:55,589 --> 00:36:57,507
என்ன வேணும்ன்றதை தெரிஞ்சவன்.

557
00:36:58,675 --> 00:36:59,593
சரி.

558
00:37:00,552 --> 00:37:01,386
சரின்னா?

559
00:37:01,970 --> 00:37:03,013
புரியுது.

560
00:37:03,764 --> 00:37:06,725
தப்பா வழி காட்டினேன்.
எல்லாத்தையும் சொதப்பினேன்.

561
00:37:07,893 --> 00:37:11,897
எனக்கு எவ்வளவோ பிரச்சினைகள், ஆனா அதை...

562
00:37:11,980 --> 00:37:13,982
சால்ஜாப்பா சொல்ல முடியாது. மன்னி.

563
00:37:16,401 --> 00:37:17,736
உன்னிடம் நியாயமா இல்ல.

564
00:37:20,989 --> 00:37:21,990
வருந்தறேன்.

565
00:37:31,249 --> 00:37:33,877
உன் காதலிக்கும், அவள் தோழிக்கும் இது தேவை.

566
00:37:45,222 --> 00:37:46,348
நான் 20 வெக்கிறேன்.

567
00:37:48,100 --> 00:37:50,560
எத்தனை நாளா நீங்க ஒண்ணா ஆடிட்டுருக்கீங்க?

568
00:37:50,644 --> 00:37:54,147
சோட்ல முதல் ஆண்டிலிருந்து.
லீயம் போக்கர் சங்க தலைவன்.

569
00:37:57,150 --> 00:37:58,777
ஒரு கை ஆடமாட்டாயா?

570
00:38:01,446 --> 00:38:03,782
ஆம். மொத்தம் வைக்கிறேன்.

571
00:38:08,412 --> 00:38:12,082
பென்சில்வேனியா ஸ்டீவன் யோகம்
தொடருதா பார்ப்போம்.

572
00:38:21,174 --> 00:38:22,134
அடச்சே.

573
00:38:24,302 --> 00:38:25,137
ஆஹா!

574
00:38:30,684 --> 00:38:33,145
கவலைப் படாதே. யானைக்கும் அடி சறுக்கும்.

575
00:38:33,228 --> 00:38:34,187
ஆம்.

576
00:38:35,272 --> 00:38:36,189
ப்ரேக்கா?

577
00:38:38,108 --> 00:38:41,903
பிறகு, ஏத்து. இன்னொரு 200, சரியா?

578
00:39:10,974 --> 00:39:12,601
அய்யோ, பெல்லி, ஒண்ணுமாகலியே?

579
00:39:15,312 --> 00:39:18,356
-இங்கே எதுக்கு வந்தீங்க?
-நிகோல், சொன்னா...

580
00:39:20,484 --> 00:39:22,611
அவளை ஜாக்கிரதையா இருக்க சொல்லு.

581
00:39:23,278 --> 00:39:24,279
இந்தாங்க.

582
00:39:27,074 --> 00:39:28,700
சரி. கொஞ்சம் திரும்பிக்க...

583
00:39:29,576 --> 00:39:30,911
-உதவணுமா?
-பரவாயில்ல.

584
00:39:34,915 --> 00:39:36,291
நான் ஜெரமையாவோட போகவா?

585
00:39:36,374 --> 00:39:39,419
அட, என்ன கிண்டலா? 1000 சதம், சரி.

586
00:40:02,651 --> 00:40:04,152
மோசமான இரவு.

587
00:40:04,528 --> 00:40:05,862
அப்படி இருக்க வேணாம்.

588
00:40:06,071 --> 00:40:08,532
நீ அலைக்கழிக்காம அவ இஷ்டமா விட்டிருந்தா,

589
00:40:08,615 --> 00:40:10,492
நல்ல இரவாகியிருக்கும்.

590
00:40:25,674 --> 00:40:28,009
போட்டியில நடந்ததுக்கு வருந்தறேன்.

591
00:40:28,093 --> 00:40:30,846
என் போட்டி மனப்பான்மைல முழுகிட்டேன்...

592
00:40:33,098 --> 00:40:34,057
உனக்கு கோபமா?

593
00:40:34,808 --> 00:40:35,976
எல்லாம் பரவாயில்ல.

594
00:40:36,726 --> 00:40:38,812
கான்ராட்தானே நல்ல ஆட்டக்காரன்.

595
00:40:42,149 --> 00:40:44,317
உன் நடனத்துக்கு துணைன்னு சொன்னாங்க.

596
00:40:44,401 --> 00:40:45,694
யார் சொன்னது உனக்கு?

597
00:40:46,027 --> 00:40:46,987
என் அம்மா.

598
00:40:49,072 --> 00:40:50,031
இல்ல. அவன் இல்ல.

599
00:40:51,408 --> 00:40:53,201
எனக்கு இன்னும் டேட் ஏதுமில்ல.

600
00:41:02,794 --> 00:41:03,879
நிறுத்தறியா?

601
00:41:06,006 --> 00:41:06,923
இதோ.

602
00:41:20,228 --> 00:41:22,063
கூட்டிப் போக வந்ததுக்கு நன்றி.

603
00:41:25,692 --> 00:41:27,861
பெல்லி, உனக்காக எப்பவும் வருவேன்.

604
00:41:36,703 --> 00:41:37,829
உனக்கு கேட்குதா?

605
00:41:40,582 --> 00:41:41,458
எது கேட்குதா?

606
00:41:45,253 --> 00:41:46,463
என் இதயம் துடிப்பது.

607
00:41:54,304 --> 00:41:56,181
ஆம். வேகமா அடிக்குது.

608
00:42:13,156 --> 00:42:14,074
பரவாயில்லையா?

609
00:42:24,000 --> 00:42:27,379
இந்த தருணத்துக்காக
எப்பவும் பயந்துகிட்டிருந்தேன்,

610
00:42:27,462 --> 00:42:29,923
ஆனா வினோதமா, எனக்கு நல்லாவே இருந்தது.

611
00:42:30,006 --> 00:42:32,092
அது ஜெரமையா என்பதால்.

612
00:42:34,219 --> 00:42:35,136
ஆக...

613
00:42:37,681 --> 00:42:39,933
துணையா புதுமுக நடனத்துக்கு வருவியா?

614
00:43:05,959 --> 00:43:08,003
கான்ராட்
விழித்திருக்கியா?

615
00:43:25,228 --> 00:43:26,146
ஹேய்.

616
00:43:27,314 --> 00:43:28,440
செய்தி அனுப்பாதே.

617
00:43:29,065 --> 00:43:31,443
எரிச்சலாகுது. நீ செய்தி தந்தா தீமைதான்.

618
00:43:31,526 --> 00:43:32,944
எனக்குத் தெரியும்.

619
00:43:34,029 --> 00:43:35,030
மன்னிச்சுடு.

620
00:43:37,073 --> 00:43:40,285
நீன்னா எனக்கு தப்புதப்பாவே நடக்குது.

621
00:43:44,247 --> 00:43:45,290
இது உன்னோடது.

622
00:43:51,254 --> 00:43:54,591
நீ அதை வெச்சுக்கணும்னுலாம் இல்ல.

623
00:43:54,924 --> 00:43:58,011
குப்பைல போட்டு, எரிச்சுடலாம்...

624
00:44:02,974 --> 00:44:03,975
நான் ஒண்ணு...

625
00:44:05,477 --> 00:44:06,394
என்ன?

626
00:44:11,483 --> 00:44:12,484
நான் ஒண்ணு...

627
00:44:15,820 --> 00:44:17,113
உன்னை இழக்க பிடிக்கல.

628
00:44:36,508 --> 00:44:37,592
ரொம்ப தாமதம்.

629
00:46:42,300 --> 00:46:44,302
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்

630
00:46:44,385 --> 00:46:46,387
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

