1
00:00:08,801 --> 00:00:12,930
த சம்மர்
ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

2
00:00:25,317 --> 00:00:26,444
கசின்ஸ் கடற்கரை
கூடாரம் மற்றும் மேஜை

3
00:00:31,615 --> 00:00:33,159
புதுமுக நடனம்

4
00:00:41,417 --> 00:00:42,668
சூஸானா ஃபிஷர்

5
00:00:42,752 --> 00:00:44,670
இசபெல் கான்க்லின்

6
00:00:50,509 --> 00:00:52,052
காலை வணக்கம், பெல்லி.

7
00:00:52,136 --> 00:00:53,596
அடடே, தாமதமாக்கிட்டேனா?

8
00:00:53,679 --> 00:00:54,889
இல்ல, பரவாயில்ல.

9
00:00:57,349 --> 00:00:59,185
உன் முக்கிய தினத்துக்கு தயாரா?

10
00:00:59,769 --> 00:01:00,644
தயாரே இல்லை.

11
00:01:00,728 --> 00:01:01,937
இல்ல, நீ தயார்.

12
00:01:03,355 --> 00:01:04,272
தடுக்கிடுச்சினா?

13
00:01:04,355 --> 00:01:05,274
மாட்டாய்.

14
00:01:05,357 --> 00:01:08,819
ஜெரமையாவின் கையைப் பிடிச்சுக்கோ.
விழாம பார்த்துக்குவான்.

15
00:01:09,612 --> 00:01:10,529
அது உண்மை.

16
00:01:10,613 --> 00:01:12,990
அவனை நீ வர ஒத்துக்க வெச்சதை நம்ப முடியல.

17
00:01:13,073 --> 00:01:15,868
இதுக்கெல்லாம் போகவே மாட்டேன்
என்ற சபதமிட்டவன்.

18
00:01:16,535 --> 00:01:17,828
பரவாயில்லைனு சொன்னான்.

19
00:01:17,912 --> 00:01:20,164
ஆம், அவன் உனக்காக எதையும் செய்வான்.

20
00:01:20,914 --> 00:01:21,999
ரெண்டு பேரும்தான்.

21
00:01:26,795 --> 00:01:27,963
பிரச்சினை இல்லையே?

22
00:01:28,714 --> 00:01:29,548
ஆம்.

23
00:01:31,383 --> 00:01:33,219
இதுக்கு உன்னை வறுபுறுத்தறேனா?

24
00:01:33,301 --> 00:01:34,929
தைரியமா சொல்லலாம்.

25
00:01:36,597 --> 00:01:39,975
முதல்ல அப்படி இருந்தது,
இப்ப, உங்களை மகிழ்ச்சியாக்கணும்.

26
00:01:40,059 --> 00:01:43,479
உண்மைல, இப்பகூட இன்றிரவு போக
வேணான்னா போக வேணாம்.

27
00:01:43,562 --> 00:01:46,774
இல்ல, போகணும்.
நான் ஆரம்பிச்சதை முடிச்சு வைக்கணும்.

28
00:01:47,942 --> 00:01:50,277
பெருமையா எல்லோருக்கும் காட்டிக்கணும்.

29
00:01:56,366 --> 00:01:58,452
என் செல்லம் நீ, அழகுப் பெண்ணே.

30
00:02:01,455 --> 00:02:02,373
சரி...

31
00:02:03,165 --> 00:02:06,293
உன்னை படம் எடுக்கும் போது,
"ப்ரூன்"னு கவனமா சொல்.

32
00:02:06,377 --> 00:02:08,461
அது உன் கன்னங்களை அழகாக்கும்.

33
00:02:08,545 --> 00:02:09,713
-ப்ரூனா?
-ப்ரூன்.

34
00:02:09,797 --> 00:02:13,843
இது மடோன்னாவிடமிருந்து நான் கற்ற
பழைய யுக்தி. இல்ல ஓல்ஸன் ட்வின்ஸா?

35
00:02:14,760 --> 00:02:15,678
யார் அவங்க?

36
00:02:17,304 --> 00:02:18,472
அவங்க ஜாம்பவான்கள்.

37
00:02:18,556 --> 00:02:21,475
நவீனத்தின் இலச்சினைகள்!
2000த்தின் ஆரம்பத்தில்.

38
00:02:21,559 --> 00:02:23,477
ஸ்கார்லெட் விச்சுக்கு சகோதரிகள் போல.

39
00:02:25,771 --> 00:02:28,107
சரி, நான் கிழே இருக்கேன், வா.

40
00:02:28,190 --> 00:02:29,400
உனக்கு ஒரு ஆச்சரியம்.

41
00:02:42,371 --> 00:02:44,164
நான் கேட்ட உடையை வாங்கிட்டீங்களா?

42
00:02:47,418 --> 00:02:50,296
நன்றி! அருமை!

43
00:02:50,379 --> 00:02:52,381
உன் அம்மாவுக்கு சொல். அவ யோசனை.

44
00:02:54,008 --> 00:02:56,969
உன் ஷூக்களை பார்க்கிறேன்.
இளக, அதை ஃப்ரீஸர்ல வெச்சேன்.

45
00:02:59,054 --> 00:03:01,390
நீங்க வாங்குவீங்கன்னு நினைக்கவேயில்ல.

46
00:03:01,473 --> 00:03:04,059
அந்த உடை உனக்கு சங்கடமா இருந்தது.

47
00:03:05,436 --> 00:03:07,438
நீங்க கவனிக்கலனு நினைச்சேன்.

48
00:03:08,480 --> 00:03:09,648
நான் உன் அம்மா.

49
00:03:11,358 --> 00:03:12,443
உன்னை தெரியும்.

50
00:03:18,407 --> 00:03:20,743
என் புதுமுக நடனம் உங்களுக்கு பிடிக்கல--

51
00:03:20,826 --> 00:03:22,202
பிடிக்கல, ஆனா...

52
00:03:27,416 --> 00:03:29,168
உன்னை போக விடறது கடினம்.

53
00:03:39,136 --> 00:03:40,763
ஸ்டீவன், இங்க என்ன பண்றே?

54
00:03:41,430 --> 00:03:42,805
பெரிசா சொதப்பிட்டேன்.

55
00:03:48,187 --> 00:03:49,228
சரி...

56
00:03:49,438 --> 00:03:51,231
லீயமுடன் போக்கர் விளையாடினேன்.

57
00:03:53,734 --> 00:03:54,944
எல்லா ஆட்டமும் தோற்றேன்.

58
00:03:55,235 --> 00:03:57,738
கோடையில சேர்த்து வைத்த
எல்லா பணமும் போச்சு.

59
00:03:57,821 --> 00:03:59,323
டக்ஸிடோக்கு கூட பணமில்ல.

60
00:04:00,574 --> 00:04:02,451
மன்னி. நடனத்துக்கு வர முடியாது.

61
00:04:04,495 --> 00:04:05,871
என்ன கிண்டல் பண்றியா?

62
00:04:05,955 --> 00:04:09,959
தோற்க ஆரம்பித்தேன், ஜெயிக்க முடியும்னு
ஆட ஆட, இன்னும் மோசமானது...

63
00:04:10,042 --> 00:04:11,961
அதோட எழுந்துட வேண்டியதுதானே?

64
00:04:14,463 --> 00:04:15,631
இல்ல, முடியாதுதான்.

65
00:04:15,714 --> 00:04:18,926
உன்னை லீயமும் சகாக்களும்
பணம் அள்ளறவனா பார்க்கணுமே.

66
00:04:19,009 --> 00:04:22,846
-என்ன நினைப்பேன்னு நினைச்சுப் பார்க்கலியா?
-ஷேலா, மன்னி.

67
00:04:22,930 --> 00:04:24,932
ஸ்டீவன், நடனம் இன்றிரவு!

68
00:04:25,015 --> 00:04:25,933
தெரியுது.

69
00:04:27,851 --> 00:04:29,269
நான் பணம் தர்றேன்.

70
00:04:30,145 --> 00:04:32,815
இல்ல. உன்கிட்ட பணம் வாங்கறதா இல்ல.

71
00:04:33,691 --> 00:04:34,900
உன் அம்மா கிட்ட?

72
00:04:35,651 --> 00:04:37,111
அம்மாவா, கொன்னுடுவாங்க.

73
00:04:37,194 --> 00:04:38,988
நான் உன்னை கொல்ல நினைப்பது போலா?

74
00:04:43,117 --> 00:04:45,703
என்னிடம் மறைக்காதே.

75
00:04:45,786 --> 00:04:47,871
நடனத்துக்கு நாம் ஒண்ணா
போக ஆசையாவது இருக்கா?

76
00:04:47,955 --> 00:04:50,499
இருக்கு. எல்லாத்துக்கும் மேல்.

77
00:04:52,334 --> 00:04:54,920
அப்பாவோட பழைய டக்ஸிடோ இருக்கு.
அத போட்டுக்க.

78
00:04:56,672 --> 00:04:57,840
சரியா இருக்குமா?

79
00:04:58,382 --> 00:04:59,675
உனக்கே தெரியும், ஏன்னா...

80
00:05:00,134 --> 00:05:03,595
இல்ல. சரி. சரி. நீ சரிதான். மன்னி.

81
00:05:03,679 --> 00:05:06,974
அது அருமையா இருக்கும். நீ பிரமாதம்.

82
00:05:09,768 --> 00:05:12,104
ஷேலா, இந்த வாய்ப்பை விட தயாரில்லை.

83
00:05:13,689 --> 00:05:15,107
சரியான மண்டு.

84
00:05:16,066 --> 00:05:17,568
ஆம்.

85
00:05:23,574 --> 00:05:24,783
ஹேய், காலை வணக்கம்.

86
00:05:24,867 --> 00:05:27,870
கொஞ்சம் நல்ல மஃப்பின்ஸ் வாங்கினேன்.

87
00:05:31,749 --> 00:05:34,043
வேணாம். நன்றி.

88
00:05:34,668 --> 00:05:36,754
-சரி.
-பெல்லி, கிளம்ப தயாராகணும்.

89
00:05:36,837 --> 00:05:39,381
அதோட, யாரும் புழங்கும் அறைக்கு போகாதீங்க.

90
00:05:39,465 --> 00:05:40,758
உன் படங்களை முடித்தேன்,

91
00:05:40,841 --> 00:05:43,302
இன்றிரவு நடனத்தின் பின் திறந்து வைப்பாங்க.

92
00:05:43,385 --> 00:05:45,637
-அதை லாரலின் காரில் வைக்கிறாயா?
-சரி.

93
00:05:45,721 --> 00:05:46,597
சீக்கிரம்.

94
00:05:46,680 --> 00:05:48,057
நான் வர நீங்க ஓட்டலையா?

95
00:05:48,140 --> 00:05:52,478
நான் சூஸானாவோட போறேன்.
நீயே தனியா ஓட்டி வருவேன்னு நினைச்சேன்.

96
00:05:52,895 --> 00:05:54,688
-உண்மையாவா?
-பக்கத்திலதானே.

97
00:05:54,772 --> 00:05:57,232
-வேணாம்னா பரவாயில்ல.
-ஓட்டுவேன்!

98
00:05:57,316 --> 00:05:59,026
மெதுவா ஒட்டு, சமிக்கைகளை பார்,

99
00:05:59,109 --> 00:06:01,111
-நில் சமிக்ஞைல நாலு நொடி.
-தெரியும்!

100
00:06:01,195 --> 00:06:02,821
கிளப்பில் சந்திப்போம்.

101
00:06:02,905 --> 00:06:03,989
-ஹேய்.
-என்ன?

102
00:06:04,782 --> 00:06:05,824
தூளாக்கு.

103
00:06:06,492 --> 00:06:08,452
என்ன இப்படி சொல்ற. நடனமாட போறேன்.

104
00:06:09,119 --> 00:06:12,122
அதிர்ஷடம் உண்டாகும்னு அரத்தம்.
எல்லோரும் சொல்வது.

105
00:06:14,792 --> 00:06:17,753
எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ,
ஜெர் நல்ல தேர்வு.

106
00:06:19,588 --> 00:06:20,631
ஆம், தெரியும்.

107
00:06:37,397 --> 00:06:40,442
கவலை வேணாம்.
நாமே சிறந்த வால்ட்ஸ் நடன ஜோடியாவோம்.

108
00:06:40,526 --> 00:06:42,236
இல்ல. அது பத்தி இல்ல.

109
00:06:42,861 --> 00:06:45,072
என்ன? பெண்களை பார்ப்பதா?

110
00:06:45,155 --> 00:06:47,574
நடந்தது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.

111
00:06:47,658 --> 00:06:49,284
எல்லாம் என்னை வெறுப்பாங்க.

112
00:06:49,368 --> 00:06:52,913
என்னோட வருவியா? நான் உன் சிகை அலங்கார
நிபுணன், பாதுகாவலன்.

113
00:06:52,996 --> 00:06:55,541
அலங்கார அறைல வர முடியாது! பெண்கள் மட்டுமே.

114
00:06:57,251 --> 00:06:58,377
கவனி, பெல்லி,

115
00:06:59,670 --> 00:07:01,588
உன்னால முடியும். சரியா?

116
00:07:02,297 --> 00:07:04,341
இரவு முழுதும் உன் பக்கமிருப்பேன்.

117
00:07:05,008 --> 00:07:06,802
யாராவது உன்னை ஏதாவது சொன்னா,

118
00:07:06,885 --> 00:07:08,387
-நான்--
-நீ என்ன செய்வே?

119
00:07:10,264 --> 00:07:12,766
"இது சரியில்லடா"ன்னு சொல்வேன்.

120
00:07:13,392 --> 00:07:16,812
உன் கையைப் பற்றிக் கொண்டு,
எல்லோரையும் விலக்கி ஆடுவேன்.

121
00:07:24,236 --> 00:07:26,446
கிளப்ல பார்ப்போம். ஜாக்கிரதையா ஓட்டு.

122
00:07:34,288 --> 00:07:37,040
என்ன அல்பம் இது! கிண்டலா?
நீயும் ஜெரமையாவுமா?

123
00:07:37,124 --> 00:07:39,877
-அப்படி நடந்துவிட்டது.
-எப்போ? இப்பதானா?

124
00:07:40,752 --> 00:07:42,045
ஒரு வாரம் முன்.

125
00:07:43,297 --> 00:07:45,132
அய்யய்யே! கிண்டலா?

126
00:07:46,592 --> 00:07:49,011
-இது மோசம், வாந்தி வருது.
-ஸ்டீவன்.

127
00:07:49,094 --> 00:07:52,514
அய்யய்யே! நீங்க என்ன, ஒளிஞ்சு போனீங்களா?

128
00:07:52,598 --> 00:07:54,266
எனக்கு சொல்லாம?

129
00:07:54,349 --> 00:07:56,226
உனக்கும் இதுக்கும் தொடர்பில்ல.

130
00:07:56,310 --> 00:07:58,770
-நீங்க ஜோடியா?
-இல்ல! எனக்குத் தெரியாது.

131
00:07:58,854 --> 00:08:00,898
சில முத்தங்கள் இட்டுக் கொண்டோம்.

132
00:08:00,981 --> 00:08:04,484
கொஞ்சமா... இரு. அப்ப கான்ராட் என்ன ஆனான்?

133
00:08:05,444 --> 00:08:06,445
அவனுக்கு என்ன?

134
00:08:06,528 --> 00:08:10,115
உன் 10 வயதிலிருந்து
அவனுக்காக அப்படி உருகுவியே.

135
00:08:10,199 --> 00:08:12,117
-இப்ப 10 வயதில்ல.
-என்ன அதிகமாச்சு.

136
00:08:12,201 --> 00:08:15,370
அப்படியா? ஷேலா என் வயதுதான்றதால,

137
00:08:15,454 --> 00:08:18,248
அவளும் குழந்தை,
அப்ப நீயும் அசிங்கமானவன்தானே.

138
00:08:18,332 --> 00:08:21,043
வேற யார் என் வயசு சொல்லு?
டேய்லர். பூடகமானாவனே.

139
00:08:21,126 --> 00:08:22,961
சரி, புரியுது.

140
00:08:25,214 --> 00:08:27,966
எல்லாம் சொதப்பலாக விரும்பல.

141
00:08:28,634 --> 00:08:30,510
அவங்க நம் குடும்பம் போல, பெல்லி.

142
00:08:30,886 --> 00:08:32,721
இதுல பாதிக்க போவது நீ மட்டுமில்ல.

143
00:08:32,804 --> 00:08:33,804
தெரியுது.

144
00:08:35,224 --> 00:08:37,601
யாரோட டேட் செய்வேன்றது உன் கையில் இல்லை.

145
00:08:39,477 --> 00:08:42,188
தேர்ந்தெடுப்பவ நான்,
ஜெரமையாவை தேர்ந்தெடுத்தேன்.

146
00:08:44,691 --> 00:08:46,777
நீ என் மேல நம்பிக்கை வைக்கணும்.

147
00:09:00,582 --> 00:09:01,416
ஆஹா, குட்டி!

148
00:09:07,172 --> 00:09:08,090
இதோ கிளம்பறோம்.

149
00:09:26,233 --> 00:09:28,026
-ஹேய்.
-டேய், என்ன அது?

150
00:09:28,110 --> 00:09:31,029
என் தங்கையோட பழகறத
என்கிட்ட சொல்லத் தோணாதா?

151
00:09:31,113 --> 00:09:32,948
-சொன்னாளா?
-நீ முத்தமிடறத பார்த்தேன்.

152
00:09:33,031 --> 00:09:35,284
அப்ப என்னை அடிக்கப் போறதில்லையே?

153
00:09:36,076 --> 00:09:38,704
-யோசிக்கிறேன்.
-ஸ்டீவன், அவள விரும்பறேன்.

154
00:09:38,787 --> 00:09:40,038
எல்லோரையும் விரும்பறே.

155
00:09:40,122 --> 00:09:42,082
என்ன வேற யாரு கூடவும் பார்த்தாயா?

156
00:09:42,165 --> 00:09:44,918
நிகோல் பார்ட்டில ஒருத்தன் கூட.

157
00:09:45,502 --> 00:09:47,337
சரி. அது ஒரு மாதம் முன்.

158
00:09:47,421 --> 00:09:50,841
பார், ஸ்டீவன், அவ மனசு
புண்பட நடக்க மாட்டேன்.

159
00:09:50,924 --> 00:09:52,718
சத்தியமா. பெல்லியே முக்கியம்.

160
00:09:57,389 --> 00:09:58,932
என்னிடம் சொல்லியிருக்கலாம்.

161
00:10:00,017 --> 00:10:01,143
நான் சொல்லியிருக்கணும்.

162
00:10:02,019 --> 00:10:03,353
என்னை மன்னிச்சிடு.

163
00:10:09,568 --> 00:10:12,696
அய்யோ. என் முன் சரசம் வேணாம்.

164
00:10:35,344 --> 00:10:37,095
மை தப்பா பூசினேன்!

165
00:10:37,471 --> 00:10:40,265
-யாராவது ரேஸர் தாங்களேன்?
-தாங்க.

166
00:10:40,349 --> 00:10:41,350
நன்றி, தேவதையே.

167
00:10:41,725 --> 00:10:43,185
நன்றி.

168
00:10:45,103 --> 00:10:46,438
பெல்லி, இங்கயா இருக்க!

169
00:10:47,939 --> 00:10:49,232
-உன் இடம் இதோ.
-ஹை.

170
00:10:55,864 --> 00:10:58,158
நீங்க ரெண்டு பேரும் பேசிக்கணும்.

171
00:11:03,163 --> 00:11:05,415
நிகோல், உண்மைல வருந்தறேன்.

172
00:11:05,499 --> 00:11:07,667
எதைப் பத்தி? கான்ராடா?

173
00:11:08,627 --> 00:11:11,046
போனது போச்சு. இப்ப இங்கே வேறொருத்தனுடன்.

174
00:11:11,588 --> 00:11:13,256
என்ன நடந்தது சொல்லட்டுமா?

175
00:11:19,012 --> 00:11:21,640
என் வாழ்விலே கான்ராடை
பத்தி மோகமா இருந்தேன்.

176
00:11:22,307 --> 00:11:25,685
அவன் என்னை தங்கை போலத்தான் பார்த்தான்.

177
00:11:27,187 --> 00:11:30,899
பின், இந்த கோடையில் மாறி,
விரும்புவானோன்னு நினைத்தேன்.

178
00:11:32,150 --> 00:11:35,237
இதில, அவனை நான்
விரும்பியதுதான், அவனுக்கு பிடித்தது.

179
00:11:36,029 --> 00:11:38,240
அவனா என்னை எப்பவும் விரும்பல.

180
00:11:40,784 --> 00:11:44,413
அப்படி விரும்புவான்னு முட்டாள்தனமா
நெனச்சதுக்கு வருந்தறேன்.

181
00:11:46,498 --> 00:11:48,625
கான்ராட் அலைபவனாயிருப்பது உன் தப்பா.

182
00:11:50,293 --> 00:11:52,295
நீயுமே அலைபவள்தானே.

183
00:11:54,131 --> 00:11:56,091
கேம், கான்ராட், இப்ப ஜெரமையா.

184
00:11:56,883 --> 00:11:58,969
நீ பல மனங்களோட விளையாடறே, பெல்லி.

185
00:11:59,761 --> 00:12:04,015
சரி, நான் ஏதோ கொஞ்சம்
அலைபவளாதான் இருக்கட்டும்.

186
00:12:04,099 --> 00:12:07,477
ஆனா, நிகோல், சத்தியமா சொல்றேன்,
கான்ராடை மறந்துட்டேன்.

187
00:12:07,561 --> 00:12:09,479
அவன் மறக்கப் பட்டவனே.

188
00:12:10,772 --> 00:12:13,483
உண்மைல முதல் காதலை யாரும் மறப்பதில்லை.

189
00:12:24,161 --> 00:12:25,162
நன்றி, ஸ்டீவன்.

190
00:12:27,706 --> 00:12:29,040
என் அழகு டேட்.

191
00:12:29,124 --> 00:12:30,041
அம்மா!

192
00:12:31,376 --> 00:12:33,587
வணக்கம். இதோ, சர். நன்றி.

193
00:12:37,257 --> 00:12:38,341
எங்களை பார்!

194
00:12:40,927 --> 00:12:41,845
கச்சிதம்.

195
00:12:43,096 --> 00:12:46,349
-அம்மா, அழப்போறீங்கதானே?
-மேக் அப் கலையுமே? நடக்காது.

196
00:12:47,225 --> 00:12:50,854
ஆனா, அடுத்த வருடம் எல்லாமே மாறும்.

197
00:12:51,855 --> 00:12:53,648
கான்ராட் கல்லூரி போகிறான்.

198
00:12:55,692 --> 00:12:57,861
நாம் ஒண்ணா இருக்கும் கடைசி கோடை இதுவோ.

199
00:13:00,113 --> 00:13:02,991
இன்றிரவு உங்களோட ஆடணும், மறக்க வேணாம்.

200
00:13:10,373 --> 00:13:12,709
-அம்மா, ஒண்ணுமாகலயே?
-இல்ல, கொஞ்சம்...

201
00:13:12,792 --> 00:13:16,755
ஆடி ரொம்ப நாளாச்சே. மறந்துடுச்சு போல.

202
00:13:16,838 --> 00:13:19,549
-வாங்க. உள்ளே போகணும்.
-சரி.

203
00:13:24,846 --> 00:13:26,348
-வாங்க, அம்மா.
-நன்றி.

204
00:13:45,450 --> 00:13:47,160
-இது உங்க மேஜையா?
-ஆம்.

205
00:14:04,469 --> 00:14:05,971
பாரை கண்டுபிடிச்சீங்களா.

206
00:14:06,388 --> 00:14:10,058
ஆம். இதுதான் பத்தாம் பசலி பழக்க
விழாவை ஜீரணிக்கும் ஒரே வழி.

207
00:14:11,226 --> 00:14:12,269
விக்டோரியா எங்கே?

208
00:14:12,352 --> 00:14:15,272
அவளுக்கு கடைசி நேரத்தில
தனிமை வாசம் நேர்ந்தது.

209
00:14:15,855 --> 00:14:17,691
நம்ம திருமணத்தைவிட மேலானது.

210
00:14:18,483 --> 00:14:20,735
திருமணம், எங்க பெற்றோர் தேவாலய நிலவறைல.

211
00:14:20,819 --> 00:14:22,904
எங்க திருமணத்தை விட மத்த எல்லாமே மேல்.

212
00:14:23,238 --> 00:14:24,906
அதோட அப்ப நாலு மாத கர்ப்பம்.

213
00:14:25,532 --> 00:14:26,533
அவதூறு அது.

214
00:14:26,616 --> 00:14:28,076
கொரிய தேவாலயத்திலா?

215
00:14:28,702 --> 00:14:31,329
ஸ்டீவன் குறைப்பிரசவம்னு
சொல்ல வேண்டியதாச்சு.

216
00:14:31,413 --> 00:14:34,249
என் அம்மா கண்ணீருடன் அவன் எவ்ளோ திடமா வளமா

217
00:14:34,332 --> 00:14:37,043
இருக்கான்னு கண்ணீரோடு வியந்தாங்க.

218
00:14:37,836 --> 00:14:39,921
எங்க அற்புத பையைன் இதோ வர்றான்.

219
00:14:40,505 --> 00:14:41,464
ஹேய், அப்பா!

220
00:14:42,090 --> 00:14:43,717
வா. பார்க்க மகிழ்ச்சி.

221
00:14:44,134 --> 00:14:45,677
-கஃப்ளிங்க்ஸ் இருக்கா?
-ஆம்.

222
00:14:45,760 --> 00:14:46,761
நன்றி.

223
00:14:46,845 --> 00:14:50,599
ஹை, ஸ்டீவன். நாம் நேரா
சந்திக்கலதானே. நான் க்ளீவ்லண்ட்.

224
00:14:51,933 --> 00:14:52,851
ஹை.

225
00:14:54,561 --> 00:14:58,273
ஆக, உன் அம்மா நீ பிர்ன்ஸ்டன்மேல
ஒரு கண் வெச்சிருக்கேன்றாங்களே?

226
00:14:59,649 --> 00:15:01,568
நான் அந்தஸ்தோட இருக்க அவங்க ஆசை.

227
00:15:02,527 --> 00:15:06,072
அவன் பிரின்ஸ்டனுக்குப் போனா,
அதுக்கு உதவ வழி காணுவோம்.

228
00:15:08,575 --> 00:15:09,492
அப்படியா?

229
00:15:11,453 --> 00:15:12,370
நன்றி அம்மா.

230
00:15:12,454 --> 00:15:13,705
ரொம்ப நல்லா இருக்கே.

231
00:15:14,998 --> 00:15:18,668
எல்லாரும் ஷேலாவைதான் பார்ப்பாங்க.
நான் வெறும் கவர்ச்சிப் பாவை.

232
00:15:20,045 --> 00:15:22,756
அந்த பேச்சு வந்தது, நான் போகணும்.

233
00:15:22,839 --> 00:15:24,299
உங்களை பார்த்தது அருமை.

234
00:15:35,185 --> 00:15:38,271
பெண்கள் தாம் அழகா இல்லயா
தெரிஞ்சுக்கக் கூடாது.

235
00:15:45,779 --> 00:15:48,239
வேற யாராவது அதை சொல்றாங்களா

236
00:15:48,323 --> 00:15:50,742
காத்திருந்தபின், நாமே சொல்லிக்கலாம்.

237
00:15:58,333 --> 00:15:59,876
அது மட்டமானதில்லையா?

238
00:16:00,418 --> 00:16:02,921
நாம் எல்லோருமே அழகுதானே?

239
00:16:03,922 --> 00:16:05,090
நமக்கேயான விதத்தில.

240
00:16:14,349 --> 00:16:16,226
ஜோடி நடனத்துக்கு நீங்க தயாரா?

241
00:16:16,309 --> 00:16:19,104
நீ இதுக்கு இழுத்து விட்டதை
என்னால் நம்ப முடியல.

242
00:16:19,187 --> 00:16:20,689
பெண்களுக்கு பிடிக்கும்.

243
00:16:20,772 --> 00:16:22,565
எல்லோரும் ஒண்ணா சேர்ந்து செய்வோம்.

244
00:16:23,191 --> 00:16:25,235
நாம் நடனத்தை ஆட ஆசையா?

245
00:16:25,318 --> 00:16:26,820
வேணாம்.

246
00:16:29,030 --> 00:16:32,951
அதே அர்த்தத்தில சொல்லல.
நாம் இந்த கோடைல ஒண்ணா பழகல.

247
00:16:34,494 --> 00:16:36,204
ஆமாம், நீ ஆளே காணோம்.

248
00:16:37,122 --> 00:16:40,208
ஆம். அது என் தப்பு.

249
00:16:40,290 --> 00:16:43,753
அதை நினைச்சு பார்த்தேன்.
கோடை இன்னும் ஒரு வாரம் இருக்கு.

250
00:16:43,837 --> 00:16:46,005
ஒரு இரவு மீன்பிடிப்பு பயணம் போவோமா?

251
00:16:46,673 --> 00:16:47,674
ஆமாண்டா, வர்றேன்.

252
00:16:47,757 --> 00:16:48,717
-வர்றியா?
-சரி.

253
00:16:48,800 --> 00:16:49,634
நானும் வர்றேன்.

254
00:16:49,718 --> 00:16:50,635
நல்லது.

255
00:16:52,971 --> 00:16:55,390
ஆம். நீங்க கலக்கப் போறீங்க.

256
00:16:55,849 --> 00:16:56,933
நன்றிடா.

257
00:17:00,645 --> 00:17:01,563
நன்றி, கானி.

258
00:17:06,943 --> 00:17:08,069
நல்லா இருக்கீங்க.

259
00:17:09,279 --> 00:17:10,113
கலக்கு.

260
00:17:23,292 --> 00:17:25,670
ப்ரூன்...

261
00:17:27,338 --> 00:17:28,381
ப்ரூன்.

262
00:17:28,464 --> 00:17:30,508
... உலகின் மிகப் பெரிய கொல்லாமை,

263
00:17:30,592 --> 00:17:34,429
தத்து எடுக்கும் காப்பக அமைப்பான,
நார்த் ஷோர் அனிமல் லீக் உடன்.

264
00:17:38,433 --> 00:17:42,645
ஜிஜி பூஷரான்,
ரிச்சர்ட், செசிலி பூஷரானின் மகள்.

265
00:17:43,271 --> 00:17:46,065
ஜிஜி, நார்த்ஃபீல்ட் ப்ரெப் ஸ்கூல் மாணவி.

266
00:17:46,149 --> 00:17:49,277
ஒற்றையர் டென்னிஸ்ல மாநில
அளவில் முதலில் வந்தவர்,

267
00:17:49,360 --> 00:17:50,945
திறமையான பாடகியும் கூட.

268
00:17:51,571 --> 00:17:55,450
நார்த் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடலுக்கு
4000 டாலர் திரட்டினார்.

269
00:17:58,328 --> 00:18:02,582
இசபெல் கான்க்லின்,
ஜான் கான்க்லின், லாரல் பார்க்கின் மகள்.

270
00:18:03,416 --> 00:18:05,460
செஸ்டர்ப்ரூக் ஹைஸ்கூல் மாணவி,

271
00:18:05,543 --> 00:18:08,588
அங்கே, பல்கலைக்கழக வாலிபால் அணியின் தலைவி.

272
00:18:09,506 --> 00:18:10,507
நீ ஒரு தேவதை.

273
00:18:11,049 --> 00:18:14,219
இன்னொரு முறை சொன்னே,
உன் மேல முழுக்க வாந்தி எடுப்பேன்.

274
00:18:27,732 --> 00:18:30,151
இசபெல், நீச்சல் ஆர்வலரும் கூட.

275
00:18:30,235 --> 00:18:34,322
இந்த கோடையில், 5000 டாலர்,
வட்டார பெண்கள் காப்பகத்துக்கு திரட்டினார்.

276
00:18:35,573 --> 00:18:37,325
ஏன் பெல்லி முகம் ஒரு மாதிரி போகுது?

277
00:18:38,910 --> 00:18:40,245
தெரியலயே.

278
00:18:41,204 --> 00:18:42,372
ப்ரூன்.

279
00:18:48,378 --> 00:18:52,257
டாரா ஜோன்ஸ்,
ஃபிலிப், ஜிஞ்சர் ஜோன்ஸின் மகள்.

280
00:18:52,715 --> 00:18:55,051
பென்கோம்ப் அகாடெமி மாணவி,

281
00:18:55,134 --> 00:18:58,054
அங்கே பேச்சு, விவாத அணியின் தலைவி,

282
00:18:58,137 --> 00:19:00,890
பல்கலைக் கழக தரை
ஹாக்கி அணி வீராங்கனையும் கூட.

283
00:19:01,432 --> 00:19:05,103
ஆல் யூத் கேன் கோட் திட்டத்துக்கு,
6000 டாலர் திரட்டினார்.

284
00:19:05,186 --> 00:19:08,773
வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு
கோட் கற்றுத்தரும் லாபமில்லா அமைப்பு.

285
00:19:14,237 --> 00:19:15,446
குனிந்த வணக்கம் எப்படி?

286
00:19:15,989 --> 00:19:17,490
ராணி பெருமைப்படுவார்.

287
00:19:17,866 --> 00:19:21,578
ஷேலா வேங், ராபர்ட், மெலிஸ்ஸா வேங் மகள்.

288
00:19:23,121 --> 00:19:25,164
நைட்டிங்கேல் பாம்ஃபர்ட் மாணவி,

289
00:19:25,248 --> 00:19:28,585
குதிரையேற்ற ஆர்வலர், வளரும் நவீன ஊக்கதாரி.

290
00:19:31,379 --> 00:19:34,549
ஹார்ட் ஆஃப் டின்னருக்கு
ஷேலா 8000 டாலர் திரட்டினார்,

291
00:19:34,632 --> 00:19:38,970
நியூ யார்க்ல அது வயோதிக கிழக்காசிய
முதியவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பு.

292
00:19:44,642 --> 00:19:49,022
மரிஸா பெல்ஸ்னர்,
ஹேரல்ட், சில்வியா பெல்ஸ்னர் மகள்.

293
00:19:52,442 --> 00:19:54,944
மரிஸா செர்ரி ஒரு ஹில்ஸ் அகாடெமி மாணவி.

294
00:19:55,653 --> 00:19:58,823
தன் பள்ளி சாக்கர் அணியில
சென்டர் ஃபார்வர்ட் வீராங்கனை.

295
00:19:58,907 --> 00:20:02,577
பள்ளியில், மாற்றுப் பாலினத்தவர்
சங்கத்தை தோற்றுவித்தவர்.

296
00:20:02,660 --> 00:20:03,953
-நன்றி.
-பரவாயில்லை.

297
00:20:19,052 --> 00:20:20,178
இதோ வந்துடறேன்.

298
00:20:20,261 --> 00:20:25,642
பள்ளி வளாகத்தில், மூன்றாம் பாலின
கழிவறை நிறுவ 4000 டாலர் திரட்டினார்.

299
00:20:27,185 --> 00:20:28,394
எங்கே போறாங்க?

300
00:20:28,478 --> 00:20:29,312
எனக்கு தெரியல.

301
00:20:40,907 --> 00:20:43,868
இவ்வருட கசின்ஸ் கடற்கரை கவுன்டி கிளப்
புதுமுகங்களை

302
00:20:43,952 --> 00:20:46,537
அறிமுகப் படுத்த வாய்த்தது,
எனக்குப் பெருமை.

303
00:21:12,981 --> 00:21:13,856
லாரல்?

304
00:21:16,234 --> 00:21:18,486
இலையுதிர்காலத்தில உன் உதவி தேவையாகும்.

305
00:21:18,945 --> 00:21:21,155
-பாஸ்டன்ல அதிகம் இருப்பேன்.
-தெரியுமே.

306
00:21:21,239 --> 00:21:23,992
விக்டோரியாவுக்கு பதின்ம
பசங்களோடு ஒத்துப் போகுமோ?

307
00:21:24,450 --> 00:21:26,995
விக்டோரியா... இனி அவ எவளோ.

308
00:21:30,373 --> 00:21:31,290
மன்னிச்சுடு.

309
00:21:32,041 --> 00:21:34,335
நீ ஒரு டேட்டோட வருவேன்னு நினைக்கல.

310
00:21:34,419 --> 00:21:37,171
-அதுக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.
-இல்லைதான்.

311
00:21:38,089 --> 00:21:39,799
அப்படீன்னா?

312
00:21:40,299 --> 00:21:44,387
நீ உண்மைல நேசித்தது சூஸானா
மட்டும்தான்னு சில சமயம் நினைப்பேன்.

313
00:21:45,555 --> 00:21:46,723
அது உண்மையல்ல.

314
00:21:47,265 --> 00:21:49,517
நம் மணவாழ்வில மூணு பேர்தான் எப்போதும்,

315
00:21:51,227 --> 00:21:53,813
அவளை நேசித்ததால,
நானும் அத ஏத்துக்கிட்டேன்.

316
00:21:56,399 --> 00:22:00,486
ஆனா, சூஸானா ரொம்ப நாள்
இருக்கப் போவதில்லைன்றத நீ எதிர்கொள்ளணும்.

317
00:22:00,570 --> 00:22:02,488
-அப்படி சொல்லாதே.
-அதுதான் உண்மை.

318
00:22:05,283 --> 00:22:06,242
லாரல்?

319
00:22:08,745 --> 00:22:09,912
ஜெரமையா.

320
00:22:10,913 --> 00:22:11,831
என்ன விஷயம்?

321
00:22:12,331 --> 00:22:16,544
ஜோடி நடனம் இதோ ஆரம்பமாகுது.
நீங்க பாக்காம விட்டுடக் கூடாதுன்றா பெல்லி.

322
00:22:17,545 --> 00:22:19,255
நன்றி. இதோ வந்துவிடுவோம்.

323
00:22:20,089 --> 00:22:20,965
சரி.

324
00:22:22,884 --> 00:22:27,346
ஆக இப்போ, இந்த ஆண்டின்
புதுமுக துணை இளைஞர் அறிமுகம்.

325
00:22:35,438 --> 00:22:38,274
-என் அம்மா நல்லாருப்பதா தோணுதா?
-கண்டிப்பா, ஏன்?

326
00:22:38,357 --> 00:22:40,777
நிறைய தூங்கறாங்க, அதிக போதை எடுக்கறாங்க.

327
00:22:40,860 --> 00:22:42,153
நல்லாதான் தோணறாங்க.

328
00:22:42,236 --> 00:22:46,032
உன் பெற்றோர் அத பத்தி பேசினதை கேட்டேன்.
உன் அம்மா கவலையில இருக்காங்க.

329
00:22:46,115 --> 00:22:47,116
நான் அதை...

330
00:23:24,195 --> 00:23:25,571
அதே!

331
00:23:52,306 --> 00:23:53,349
அடேங்கப்பா.

332
00:24:55,536 --> 00:24:56,579
அற்புதமா இருந்தது.

333
00:24:57,079 --> 00:25:00,208
உன்னைதான், இங்கே வா.

334
00:25:04,378 --> 00:25:05,296
இரு.

335
00:25:13,262 --> 00:25:15,097
நம்பவே முடியல.

336
00:25:15,181 --> 00:25:16,766
நீ நம்பற்கரியவன்.

337
00:25:19,685 --> 00:25:21,395
கொன்னுட்டீங்கப்பா!

338
00:25:21,479 --> 00:25:22,521
கொன்னுட்டீங்க.

339
00:25:22,605 --> 00:25:24,440
ஹேய், நன்றி.

340
00:25:24,815 --> 00:25:27,360
வெள்ளை உடை அருமை.
ப்ராம் நாள் நினைவு வருது.

341
00:25:30,112 --> 00:25:33,282
பொருந்துது. உனக்கு பொருத்தமா
டக்சிடோவை அவ தரலையே.

342
00:25:34,617 --> 00:25:36,702
உண்மைல அதுதான் திட்டம். ஆனா...

343
00:25:38,496 --> 00:25:40,373
போக்கர் ஆடிய பின் காசு இல்லை.

344
00:25:41,374 --> 00:25:43,709
மன்னி. உன்னை போண்டியாக்க நினைக்கல.

345
00:25:43,793 --> 00:25:46,629
அதானே, உனக்கு எப்படி தெரியும்?

346
00:25:48,172 --> 00:25:50,258
உன் பணத்தை வாங்கிக்க. கவலை வேணாம்.

347
00:25:50,341 --> 00:25:52,051
-ஜாலிக்கு ஆடினோம்.
-பரவாயில்ல.

348
00:25:53,511 --> 00:25:54,971
ஜெயித்தது, வெச்சுக்குங்க.

349
00:26:10,736 --> 00:26:14,282
அக்டோபர்ல சான்டா பார்பரால
நடக்கும் புத்தக விழாவில்

350
00:26:14,365 --> 00:26:16,450
மைய உரை ஆற்ற போகிறேன்.

351
00:26:16,534 --> 00:26:18,786
நான் நினைத்தது...

352
00:26:20,746 --> 00:26:22,206
நீயும் என்னோடு வரலாமேனு.

353
00:26:23,457 --> 00:26:26,043
இலையுதிர் காலத்தை இன்னும்
சரியா திட்டமிடலை.

354
00:26:28,087 --> 00:26:29,005
லாரல்,

355
00:26:31,215 --> 00:26:32,925
அதைப் பத்தி நாம பேசணும்.

356
00:26:33,968 --> 00:26:35,428
உன்னிடம் ஒண்ணு சொல்லணும்...

357
00:26:38,389 --> 00:26:39,640
-ஆரம்பமாகுது.
-சரி.

358
00:26:41,559 --> 00:26:42,560
இதோ தொடங்குது.

359
00:26:43,144 --> 00:26:44,854
ஜெரமையா எங்கேன்னு தெரியலயே.

360
00:26:44,937 --> 00:26:47,440
இதோ வந்துடுவான், நிச்சயமா. போ. தயாராகு.

361
00:27:00,077 --> 00:27:02,747
உனக்கு லீயமுடன் உள்ளதை ஏன் சொல்லல?

362
00:27:02,830 --> 00:27:03,789
உடனில்லாததால்.

363
00:27:03,873 --> 00:27:06,917
ப்ராம்க்கு கூட்டிப் போய்,
ஒட்டிக்கிறான், அது சரிவரல.

364
00:27:07,001 --> 00:27:09,170
-ஏன் இப்படி இருக்க?
-எப்படி இருக்கேன்?

365
00:27:09,253 --> 00:27:13,049
வினோதமா, தவிப்பா இருக்கியே.
டேய்லர் பத்தி நான் அப்படி இல்லயே.

366
00:27:13,132 --> 00:27:14,925
எனக்குத் தெரியல, சும்மா...

367
00:27:16,635 --> 00:27:20,264
நீ சரியா கவனிச்சியா தெரியல,
நான் இங்கே சரிவர மாட்டேன்.

368
00:27:20,348 --> 00:27:23,976
-ஸ்டீவன்.
-இல்ல, நான் ஃபிலடெல்ஃபியா புறநகர் ஆள்.

369
00:27:24,060 --> 00:27:27,104
நல்ல புறநகர் கூட இல்ல.
நான் ஓட்டுவது ஹோண்டா சிவிக்.

370
00:27:27,188 --> 00:27:30,274
நான் நிதி திரட்டல் விழா,
நடனவிழா எல்லாம் போனதில்லை.

371
00:27:34,445 --> 00:27:35,988
நான் அவன் அளவுலாம் இல்ல.

372
00:27:37,990 --> 00:27:39,867
அது நல்லதுதான்.

373
00:27:41,285 --> 00:27:43,412
நீ என்னோடதான் இருக்கே. அவனோட இல்லயே.

374
00:27:45,623 --> 00:27:46,749
உன்னை தேர்ந்தேன்.

375
00:27:50,044 --> 00:27:52,755
ஆம், தேர்ந்தெடுத்தே, இல்லையா?

376
00:27:57,051 --> 00:27:58,260
உன்னை காதலிக்கிறேனோ.

377
00:27:59,762 --> 00:28:00,930
ஆம். அது சரி.

378
00:28:09,355 --> 00:28:12,233
-ஹேய், ஜெரமையாவை பார்த்தீங்களா?
-வெளியே இருந்தானே.

379
00:28:13,275 --> 00:28:16,570
ஜெரமையா எங்கே? கானி,
நீ உன் தம்பியை பார்த்தாயா?

380
00:28:17,029 --> 00:28:18,823
இப்பதானே இங்க இருந்தான்.

381
00:28:26,622 --> 00:28:28,749
சிபி புற்றுநோய் சிகிச்சை மையம்
சூஸானா ஃபிஷருக்கு

382
00:28:28,833 --> 00:28:30,459
மறு: எதிர்வரும் புற்றுநோய் சோதனைகள்

383
00:29:00,656 --> 00:29:04,535
வகுப்பறையில நாம நிர்வாணமா
நின்னு, எல்லோரும் வேடிக்கை

384
00:29:04,618 --> 00:29:06,704
பார்க்கும் கனவு கண்டதுண்டா?

385
00:29:07,621 --> 00:29:09,582
அந்த கனவு இப்ப எனக்கு.

386
00:29:09,665 --> 00:29:11,917
-ஹை.
-ஹேய், ஜெரமையாவை பார்த்தீங்களா?

387
00:29:12,001 --> 00:29:13,127
-இல்ல.
-இல்ல.

388
00:29:57,505 --> 00:29:59,715
அனேகமா எல்லா ஜதிகளும் கவனமிருக்கு.

389
00:30:42,216 --> 00:30:43,425
அவங்களை பார்.

390
00:30:44,468 --> 00:30:45,803
மின்னறா.

391
00:30:46,720 --> 00:30:50,182
பெல்லிக்கு, கான்ராட்தான் சூரியன்,
அந்த சூரியன் வர்றப்போ...

392
00:30:50,975 --> 00:30:52,309
நட்சத்திரங்கள் மங்கிடும்.

393
00:31:36,145 --> 00:31:38,063
ஜெரமையா செல்லம், எங்க போயிட்டே?

394
00:31:38,147 --> 00:31:40,858
ஏதோ சாப்பிட்டது ஒத்துக்கல.
இறால் மட்டம் போல.

395
00:31:41,275 --> 00:31:42,860
அடப் பாவமே, செல்லம்.

396
00:31:42,943 --> 00:31:45,779
-உணவுக்கடையை தட்டிக் கேட்கிறேன்.
-சரி, எஜமானி.

397
00:31:45,863 --> 00:31:48,157
கொஞ்ச ஜிஞ்சர் ஏல் கொண்டு வரேன். பொறு!

398
00:32:24,401 --> 00:32:25,319
நன்றி.

399
00:32:26,028 --> 00:32:27,738
சில ஜதிகளை சொதப்பினேனோ.

400
00:32:28,322 --> 00:32:29,365
அருமையா ஆடினே.

401
00:32:31,450 --> 00:32:32,493
மகிழ்ச்சி எனக்கு.

402
00:32:34,411 --> 00:32:36,246
இது நானாக இருந்ததில் மகிழ்ச்சி.

403
00:32:43,837 --> 00:32:45,255
இதோ வர்றேன்.

404
00:32:45,339 --> 00:32:48,634
கண்ணு, உனக்கு மறுபடி சுகமில்லயா?
இதோ, ஜிஞ்சர் ஏல் எங்கே?

405
00:32:48,717 --> 00:32:50,803
ஒண்ணு பார்லருந்து கொண்டு வர்றேன்.

406
00:32:52,638 --> 00:32:54,139
என்ன சொல்ல வந்தே?

407
00:32:57,226 --> 00:32:59,061
சூஸானா புற்றுநோய் பத்தி தெரியும்.

408
00:33:00,562 --> 00:33:01,814
கான்ராட் சொன்னான்.

409
00:33:03,023 --> 00:33:05,150
-ஹேய்.
-ஹேய், ஜெரமையா, எங்கே போனே?

410
00:33:05,234 --> 00:33:08,237
கான்ராட், நாம் பேசணும்.
முக்கியம் இது. அம்மா பத்தி.

411
00:33:08,320 --> 00:33:09,905
ஒண்ணு தெரிய வந்தது.

412
00:33:12,116 --> 00:33:13,826
அதைப் பத்தி அப்புறம் பேசலாமே?

413
00:33:13,909 --> 00:33:15,744
-இல்ல, முக்கியம்.
-பரவாயில்ல.

414
00:33:20,958 --> 00:33:23,085
-முன்பே தெரியுமா?
-கான்ராடுக்கு தெரியுமா?

415
00:33:24,670 --> 00:33:25,879
அடக் கடவுளே.

416
00:33:26,839 --> 00:33:28,257
எப்படி தெரியும் அவனுக்கு?

417
00:33:28,340 --> 00:33:31,093
இத்தனை நாளா தெரிஞ்சிருந்தும், சொல்லலயே நீ?

418
00:33:31,176 --> 00:33:32,094
ஜெர்...

419
00:33:45,399 --> 00:33:48,277
நிறுத்துங்க! ரெண்டு பேரும் நிறுத்துங்க!

420
00:33:56,952 --> 00:33:59,329
என்ன நடக்குது?

421
00:34:03,959 --> 00:34:04,793
அம்மா...

422
00:34:09,297 --> 00:34:10,215
தெரியும்மா.

423
00:34:12,342 --> 00:34:13,635
இருவருக்கும் தெரியும்.

424
00:34:18,806 --> 00:34:19,808
என்ன தெரியும்?

425
00:34:32,112 --> 00:34:33,655
ரொம்ப முட்டாள் தனமா உணரறேன்.

426
00:34:35,616 --> 00:34:38,284
கண்ணு, ஏன் முட்டாள்தனம்ன்றே?

427
00:34:39,453 --> 00:34:43,498
கோடை முழுதும்,
என்னைப் பத்தியே நினைச்சுட்டுருந்ததால்.

428
00:34:43,581 --> 00:34:46,001
சூஸானாக்கு உடல்நிலை
சரியில்ல. தெரியவேயில்ல.

429
00:34:46,083 --> 00:34:47,043
இருக்கட்டும்.

430
00:34:47,503 --> 00:34:49,129
இப்படிதான் இருக்கணும்னா அவ.

431
00:34:49,880 --> 00:34:53,007
இப்படியேதான் அவ விருப்பம்.

432
00:34:54,967 --> 00:34:56,428
எவ்ளோ நாளா தெரியும்?

433
00:34:58,096 --> 00:34:59,181
வசந்த காலம் முதல்.

434
00:35:00,599 --> 00:35:03,644
சின்ன பசங்க உங்களுக்கு
கவலை தரவேணாம்னு இருந்தா.

435
00:35:04,102 --> 00:35:06,980
உங்க கூட கடைசி கோடையை கழிக்க விரும்பினா.

436
00:35:10,150 --> 00:35:11,276
ஆனா, நீங்க?

437
00:35:12,653 --> 00:35:13,779
எனக்கு என்ன?

438
00:35:15,405 --> 00:35:17,533
உங்களுக்குள்ளயே போட்டு உழப்பினீங்க.

439
00:35:38,762 --> 00:35:40,848
அவங்களுக்கு குணமாகாது இல்லயா?

440
00:35:42,224 --> 00:35:43,141
ஆகாது.

441
00:36:25,976 --> 00:36:28,520
இந்த இரவு இப்படி மாறினது
ரொம்ப வருத்தமானது.

442
00:36:30,647 --> 00:36:32,941
இப்படி உங்களுக்கு தெரியணும்னு நினைக்கல.

443
00:36:34,067 --> 00:36:36,320
அம்மா, சோதனைக்குப் போறீங்க இல்லையா?

444
00:36:41,199 --> 00:36:42,409
இல்ல, கண்ணு.

445
00:36:43,285 --> 00:36:44,369
நான் போகலை.

446
00:36:45,454 --> 00:36:46,496
போக முடியாது.

447
00:36:48,916 --> 00:36:50,584
பிழைக்க வாய்ப்பு ரொம்ப கம்மி.

448
00:36:51,793 --> 00:36:53,086
வழியே இல்லை. உண்மைல.

449
00:36:55,005 --> 00:36:57,090
மறுபடி அந்த அவதியை தாங்க முடியாது.

450
00:36:58,383 --> 00:37:00,260
முதல் முறை ரொம்ப கஷ்டமா இருந்தது.

451
00:37:00,344 --> 00:37:01,845
அம்மா, முயற்சி செய்யலாமே.

452
00:37:02,721 --> 00:37:03,764
முயற்சி செய்யணும்.

453
00:37:05,307 --> 00:37:07,059
போகும் போது நான் நானா இருக்கணும்.

454
00:37:09,561 --> 00:37:11,063
-புரியுதா?
-இல்ல.

455
00:37:11,146 --> 00:37:14,066
-இதில எதுவுமே புரியல.
-தெரியுது.

456
00:37:15,692 --> 00:37:17,694
எனக்கு திறமை இல்ல. சரியா?

457
00:37:18,737 --> 00:37:20,322
அம்மாக்கு இதில திறமை இல்ல.

458
00:37:26,828 --> 00:37:28,872
தெரிந்துட்டது எனக்கு தெரிஞ்சிருக்கணும்.

459
00:37:31,375 --> 00:37:33,210
அதை நம்பாமலிருக்க நினைத்தேன்.

460
00:37:35,379 --> 00:37:38,715
அம்மா, ஏதேனும்
வாய்ப்பிருந்தா, விடக் கூடாது.

461
00:37:39,049 --> 00:37:40,717
பாரு, சொல், கான்ராட்.

462
00:37:42,678 --> 00:37:44,513
ஏன் எதுவும் சொல்லமாட்டேங்கறே?

463
00:37:44,888 --> 00:37:47,808
அம்மா, அபத்தம். முயற்சிக்கணும்.
கைவிடக் கூடாது.

464
00:37:47,891 --> 00:37:51,144
அம்மா. நீங்க கொஞ்சம்...

465
00:37:53,522 --> 00:37:54,815
முயற்சி பண்ணக் கூடாதா?

466
00:37:57,025 --> 00:37:58,151
எங்களுக்காக, அம்மா?

467
00:38:01,405 --> 00:38:02,447
பார்த்துக்கணும்.

468
00:38:04,408 --> 00:38:05,325
இங்கே வாங்க.

469
00:38:28,098 --> 00:38:31,268
-நீ சமைத்தா, முடிவு நெருங்கியதா பொருள்.
-வாயை மூடு!

470
00:38:34,021 --> 00:38:35,564
பசங்களோட எப்படி போனது?

471
00:38:36,648 --> 00:38:38,608
நான் சோதனைக்குப் போறேன்னேன்.

472
00:38:41,028 --> 00:38:42,237
வேணாம்னு சொல்ல முடியல.

473
00:38:45,198 --> 00:38:49,244
-கஷ்டமாக போகுதுன்னு தெரியும்--
-டாக்டர்ங்க எது வேணும்னாலும் சொல்லட்டும்.

474
00:38:49,327 --> 00:38:50,662
இது நலமாகும்.

475
00:38:53,081 --> 00:38:54,374
நீ அற்புதமானவ.

476
00:38:56,084 --> 00:38:57,919
அற்புதத்தில எப்ப நம்பிக்கை வந்தது?

477
00:38:59,129 --> 00:39:00,297
உன் மேல் நம்பிக்கை.

478
00:39:07,387 --> 00:39:10,474
சரி, எல்லாம் கீழே வாங்க! நாம் சாப்பிடணும்.

479
00:39:17,105 --> 00:39:21,193
இந்த கோடையில் என் இதயத்தையே எனக்கு
புரியாததா தோணிய தருணங்கள் வந்தன.

480
00:39:21,276 --> 00:39:23,737
ஆனா, ஒண்ணு மட்டும் எனக்குத் தெரியும்,

481
00:39:23,820 --> 00:39:26,073
அது, அடுத்து என்ன நடந்தாலும் சரி,

482
00:39:26,156 --> 00:39:28,700
நான் இதே எப்பவும் இடத்தில்,
இதே மக்களிடத்தில்

483
00:39:29,284 --> 00:39:30,827
மறுபடி வருவேன்.

484
00:39:43,173 --> 00:39:44,758
சரின்னு சொன்னது வியப்பு.

485
00:39:46,093 --> 00:39:47,761
நீ சாதித்தே. அவங்க மனசை மாத்தினே.

486
00:39:47,844 --> 00:39:50,764
இல்ல. நான் இல்ல. அது ஜெர். அவன் சாதனை.

487
00:39:58,271 --> 00:40:01,066
கோடை முழுதும் மட்டமா
நடந்துகிட்டதுக்கு வருந்தறேன்.

488
00:40:04,820 --> 00:40:07,364
நீ தனியா இதை உன்னோடு வைத்து குமைந்தாய்.

489
00:40:07,447 --> 00:40:09,699
என்கிட்ட சொல்லியிருந்தா, அப்படி வேணாமே.

490
00:40:09,783 --> 00:40:11,034
சொல்ல விரும்பினேன்.

491
00:40:12,285 --> 00:40:14,162
ஒரிருமுறை, சொல்லியிருப்பேன்.

492
00:40:20,794 --> 00:40:22,087
நாம் மனசுவிட்டு பேசணும்.

493
00:40:22,170 --> 00:40:24,256
நான் உன்கிட்ட சொல்ல எவ்வளவோ இருக்கு.

494
00:40:24,339 --> 00:40:26,466
-வேணாம். இப்ப வேணாம்.
-ஏன்?

495
00:40:29,928 --> 00:40:32,430
உனக்கு இப்ப யாருடைய ஆதரவாவது வேணும்.

496
00:40:33,390 --> 00:40:35,600
அதை நான் சாதகமாக்கிக்க வேணாம்.

497
00:40:35,684 --> 00:40:37,435
யாரோல்லாம் வேணாம்.

498
00:40:40,564 --> 00:40:41,648
எனக்கு நீ வேணும்.

499
00:40:43,942 --> 00:40:45,652
நான் ஒரு தேவையா இருக்க வேணாம்.

500
00:40:46,361 --> 00:40:47,696
என்னை இயல்பா நாடணும்.

501
00:40:51,449 --> 00:40:52,576
உன்ன நாடுகிறேன்தான்.

502
00:41:34,075 --> 00:41:36,870
இந்த தருணத்தில் உணர்ந்தேன்,

503
00:41:36,953 --> 00:41:38,788
இது நடக்கும்னா,

504
00:41:38,872 --> 00:41:40,457
எதுவும் நடக்கும்.

505
00:43:29,107 --> 00:43:31,109
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

506
00:43:31,192 --> 00:43:33,194
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்

