1
00:00:12,012 --> 00:00:14,181
த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டியில்
இதுவரை நடந்தது…

2
00:00:14,265 --> 00:00:17,143
நான் அவளோடு தனியா இருக்க முடியாதே.
அந்த உணர்வை நான் மறைக்க முடியாது.

3
00:00:17,226 --> 00:00:18,352
எதை மறைக்க முடியாது?

4
00:00:18,436 --> 00:00:19,895
அவளை… காதலித்ததை.

5
00:00:19,979 --> 00:00:22,356
நாம் செய்யறதையே தொடர்ந்து செய்வோம்.
அவங்க மனம் மாறுவாங்க.

6
00:00:22,440 --> 00:00:23,607
ரெண்டு வாரமாகிவிட்டது, ஜெர்.

7
00:00:23,691 --> 00:00:25,359
திருமணத்துக்கு இன்னும் ஆறு வாரமே இருக்கு.

8
00:00:25,443 --> 00:00:28,320
ஏதோ ஃகாபி குடிக்க போவது போலல்ல
உன் அப்பா திருமணத்துக்கு ஒத்து போவது.

9
00:00:28,404 --> 00:00:31,073
நான் உடை எடுத்துட்டேன்.
ஆனா, எங்கம்மா வரலயே.

10
00:00:31,157 --> 00:00:33,284
அதை செய்ய உடன் படமாட்டேன்.
திருமணத்துக்கு வரமாட்டேன்!

11
00:00:33,367 --> 00:00:36,454
நல்லது! போறேன், ஆகவே நான்
செய்யும் எதையும் நீங்க இனி பார்க்க வேணாம்!

12
00:00:36,537 --> 00:00:37,371
கான்ராட்?

13
00:00:37,455 --> 00:00:39,415
நீங்க வார இறுதிக்காகத்தானே இங்கே வந்தீங்க?

14
00:00:39,498 --> 00:00:42,126
இங்க கொஞ்ச நாள்
தங்கியிருக்க எனக்கு எண்ணம்.

15
00:00:42,209 --> 00:00:44,211
ஆக, நீ என் மாப்பிள்ளை
தோழனா இருப்பியா, மாட்டாயா?

16
00:00:45,087 --> 00:00:46,005
ஓஹோ, அப்படியா?

17
00:00:46,088 --> 00:00:48,007
கண்மூடி திறப்பதற்குள்
திரும்பி வந்துடுவேன். உறுதி.

18
00:00:48,090 --> 00:00:50,968
நம்ம ரெண்டு பேரோட அம்மாக்களும்
இல்லாம இதை எப்படி நடத்தறது?

19
00:00:51,761 --> 00:00:53,220
உன் அம்மாக்கு மாத கடைசில 10,000 தேவை.

20
00:00:53,304 --> 00:00:55,222
நான் இனி நியூ யார்க் போகப் போறதில்ல.

21
00:00:55,306 --> 00:00:57,433
ஜெர்ருக்கு இப்ப ரெண்டாவது
மாப்பிள்ளைத் தோழனாமே.

22
00:00:57,516 --> 00:00:58,684
பிறந்த நாள் வாழ்த்து.

23
00:00:58,768 --> 00:01:00,519
-நன்றி!
-இருக்கட்டும்!

24
00:01:00,603 --> 00:01:01,562
நான் என்ன செய்துட்டேன்?

25
00:01:04,899 --> 00:01:10,571
த சம்மர்
ஐ டெர்ன்ட் ப்ரிட்டி

26
00:01:54,740 --> 00:01:57,201
ஒரு வாரம் ஆச்சு, அதை திரும்ப
நினைப்பதை தடுக்க முடியலை,

27
00:01:58,953 --> 00:02:00,955
அவளோட மறுபடி அவ்ளோ நெருக்கமா இருப்பதை.

28
00:02:04,291 --> 00:02:06,877
ஒரு இடி தாக்கியது போல இருந்தது.

29
00:02:08,671 --> 00:02:10,923
அவளை பாக்காம இருந்தாதான்
அது ரொம்ப சுலபம்.

30
00:02:21,976 --> 00:02:23,561
மார்னிங்.

31
00:02:23,644 --> 00:02:24,979
-ஹே.
-மேலே என்ன பண்றே?

32
00:02:25,062 --> 00:02:26,188
நான் கொஞ்சம்--

33
00:02:26,272 --> 00:02:27,481
-ஐயோ! மன்னி.
-பரவாயில்ல.

34
00:02:27,565 --> 00:02:29,024
பரவாயில்ல. வேறொன்னு இருக்கு.

35
00:02:29,108 --> 00:02:30,568
-சரி.
-நன்றி, நான் இப்ப--

36
00:02:33,571 --> 00:02:34,572
அப்பா, எப்படி போகுது?

37
00:02:35,155 --> 00:02:37,116
கான், வீட்டில எப்படி போயிட்டிருக்கு?

38
00:02:37,199 --> 00:02:39,451
நான் கூரைல கொஞ்சம்
பழுது பாக்கறேன். என்ன விஷயம்?

39
00:02:39,535 --> 00:02:42,246
கூரைல என்ன வேலை?
அங்கே யாரையாவது அனுப்பட்டுமா, இல்ல…

40
00:02:42,329 --> 00:02:45,207
-இல்ல. என்னால் முடியும், அப்பா.
-சரி. ஆகட்டும்.

41
00:02:45,291 --> 00:02:48,794
பெல்லி, ஜெர் திருமண நிலைமை எல்லாம்
பத்திதான் உன்னிடம் கேட்க நினைச்சேன்.

42
00:02:48,878 --> 00:02:50,754
அவங்க யாரும் எதனா சொன்னாங்களா?

43
00:02:50,838 --> 00:02:52,464
இல்ல. அது பத்தி எனக்கென்ன.

44
00:02:52,965 --> 00:02:54,758
ஆனா, நாம அது கொஞ்சம்
அபத்தம்தான்.

45
00:02:54,842 --> 00:02:57,845
அது "அபத்தமா" தெரியலப்பா.
அதான் பரஸ்பரம் காதலிக்கறாங்களே.

46
00:02:58,387 --> 00:03:01,015
கானி, அதை நீ சரியான
விஷயமா நினைக்கறியா என்ன.

47
00:03:02,474 --> 00:03:05,603
நான் நல்ல விஷயமா நினைப்பதோ
நீங்க நல்ல விஷயமா நினைப்பதோ பொருட்டல்ல.

48
00:03:05,686 --> 00:03:06,812
இது அவங்க முடிவு.

49
00:03:08,397 --> 00:03:11,317
அவங்களை தடுத்து நிறுத்த
நான் ஏதும் செய்ய முடியாதுன்னா நினைக்கிறே?

50
00:03:11,400 --> 00:03:12,776
அப்படி பண்ணா அவனை
இழப்பீங்க.

51
00:03:13,485 --> 00:03:14,570
உன்னை இழந்த மாதிரியா?

52
00:03:14,653 --> 00:03:16,322
அவனை மாதிரிதான் இருக்கப் பார்த்தேன்.

53
00:03:16,405 --> 00:03:18,157
கால்பந்து, பள்ளி…

54
00:03:18,240 --> 00:03:21,201
அவர் பெருமையா நினைக்கும்
விதத்தில் இருக்க, கடுமையா உழைத்தேன்.

55
00:03:21,285 --> 00:03:24,705
அவர் எனக்கு கதாநாயகனா இருந்தார்,
எனக்கு அவர் உண்மையான ரூபம் தெரியும் வரை.

56
00:03:24,788 --> 00:03:25,623
கான்ராட்?

57
00:03:25,706 --> 00:03:27,166
சரி, நான் போகணும், அப்பா.

58
00:03:37,426 --> 00:03:39,929
திருமணம் வரை நான்
அவளிடமிருந்து விலகித்தான் இருக்கணும்,

59
00:03:41,013 --> 00:03:44,016
பிறகு என் தம்பியின் மனைவியாவாள்,
அப்புறம் அப்படி நினைக்க மாட்டேன்.

60
00:03:49,605 --> 00:03:53,817
மன்னி. இன்னக்கி
எங்கப்பா அலுவலகம் வருவது தெரியாது.

61
00:03:53,901 --> 00:03:55,569
இது சுதந்தர தினம், ஆனா இங்கயே
இருக்காரே.

62
00:03:55,653 --> 00:03:58,113
ஆக, இங்க ஒரு மணி நேரமாவது
இருக்கணும் நான்.

63
00:03:58,197 --> 00:03:59,031
நிஜமாவா சொல்றே?

64
00:03:59,114 --> 00:04:01,617
விடிய ஒரு மணி நேரம் முன் எழுந்தேன்,
சாலை நெரிசலை தவிர்க்க.

65
00:04:02,826 --> 00:04:04,370
உன்னை பஸ்ல போக விட்டிருக்கணும்.

66
00:04:07,957 --> 00:04:11,168
ஸ்டீவன் வரல. அவன் வார இறுதிக்கு
நியூ யார்க் போயிட்டுருக்கான்.

67
00:04:11,251 --> 00:04:12,795
சரி. அவன் எங்கே போனா எனக்கென்ன.

68
00:04:13,337 --> 00:04:15,255
-நீ அழகா உடுத்தியது வீணாச்சு. வருந்தறேன்.
-சரி.

69
00:04:15,339 --> 00:04:16,882
இப்ப கூட பஸ்லயே போகலாமே?
போறியா?

70
00:04:16,966 --> 00:04:19,051
உண்மைல நன்றிதான், சரியா?

71
00:04:19,134 --> 00:04:22,054
உன் காதலியின்
மகிழ்ச்சிக்காக செய்யறேன், ஆக…

72
00:04:22,137 --> 00:04:24,974
அவ கிட்ட பேசினாயா?
அரண்டு போயிருக்காளா?

73
00:04:25,057 --> 00:04:26,475
செலவிட திட்டமிடுவது, படுத்தும்.

74
00:04:27,601 --> 00:04:29,770
ஃபிஷர்லாம் செலவு திட்டத்தை
பேசுவாங்கனு நினைக்கல.

75
00:04:29,853 --> 00:04:30,813
அது ஜாலியானது.

76
00:04:31,563 --> 00:04:34,441
பார், அவளுக்கு இப்ப
தலைக்கு மேல வேலைகள் இருக்கு,

77
00:04:34,525 --> 00:04:36,819
ஆனா நாம் கசின்ஸ் போன உடனே அது சரியாயிடும்.

78
00:04:38,404 --> 00:04:41,824
ஆனா, நீயும் இந்த வாரம் எங்க அடிமை.
உனக்கே தெரியும்லே.

79
00:04:48,747 --> 00:04:51,750
ஸ்டீவன் ஊரைவிட்டுப் போனான்,
நியூ யார்க்ல இருக்கான்னு சொன்னே.

80
00:04:51,834 --> 00:04:54,628
எங்கப்பா அலுவலகத்துக்கு வருவது
அவனுக்கு தெரிஞ்சிருக்கும் போல.

81
00:04:55,504 --> 00:04:57,381
யாரிங்கே ஷிவ் ராய் பிரதி?

82
00:04:58,799 --> 00:05:02,678
டினீஸ், அவளும் ஸ்டீவனும் எப்பவும் யார்
பெரிய ஆள்னு சண்டை போட்டுகிட்டிருப்பாங்க.

83
00:05:02,761 --> 00:05:04,054
நமக்கு தெரியுமே, அது நீ இல்லன்னு.

84
00:05:04,138 --> 00:05:04,972
அதான் டேய்லர்.

85
00:05:05,055 --> 00:05:08,934
இது எப்படி போனாலும்,
நான் தூரம் தூரமா விலகிப் போயிடுவேன்.

86
00:05:12,521 --> 00:05:13,772
நீ இங்க என்ன பண்றே?

87
00:05:13,856 --> 00:05:15,733
கசின்ஸ்க்கு இவ வண்டியில போறேன்.

88
00:05:16,859 --> 00:05:17,860
பிறகு செய்தி அனுப்பறேன்.

89
00:05:17,943 --> 00:05:19,778
-சரி, நான் டன்கின்ல இருப்பேன்.
-சரி.

90
00:05:23,365 --> 00:05:25,534
அப்ப, நீங்க கசின்ஸ் போறீங்களா?

91
00:05:25,617 --> 00:05:28,370
ஆம். பெல்லியும் நானும்
திருமண திட்டங்கள் சிலதை முடிக்கணும்.

92
00:05:29,079 --> 00:05:30,622
அருமை. அருமை.

93
00:05:33,167 --> 00:05:35,377
எப்படி… எப்படி போனது உனக்கு?

94
00:05:35,461 --> 00:05:36,712
எனக்கு நல்லா போனது.

95
00:05:36,795 --> 00:05:37,838
-நல்லது.
-நான் பரவாயில்ல…

96
00:05:38,464 --> 00:05:42,092
எங்கம்மாவுக்கு உதவினதுக்கு நன்றி.

97
00:05:42,801 --> 00:05:46,221
அது எப்படி முடியும்?
பணத்துக்கு என்ன பண்ணுவீங்க?

98
00:05:46,305 --> 00:05:47,848
கவர்ச்சி சினிமால நடிப்பேன்.

99
00:05:50,100 --> 00:05:51,143
வேடிக்கைக்கு சொன்னேன்.

100
00:05:52,394 --> 00:05:54,396
-நான் உங்களுக்கு உதவியிருக்கலாமே.
-வேடிக்கைக்கு.

101
00:05:54,480 --> 00:05:57,024
…அப்படியும். உன் ரசிகன் நான்.
படத்தில் மட்டுமல்ல--

102
00:06:01,862 --> 00:06:04,490
நியூ யார்க்குக்காக சேமித்து
வைத்த பணத்தை பயன்படுத்திகிட்டேதானே?

103
00:06:10,329 --> 00:06:11,455
வந்துட்டாய்யா.

104
00:06:15,626 --> 00:06:17,503
உன்னை பெல்லி மணப் பெண்
சீதன விழாவில் சந்திக்கவா?

105
00:06:18,212 --> 00:06:19,421
அடடே. சரி வரணுமா என்ன?

106
00:06:20,798 --> 00:06:21,882
மடத்தனமா பேசாதே.

107
00:06:22,466 --> 00:06:23,842
நான் மடையன் இல்ல.

108
00:06:37,231 --> 00:06:38,857
வந்துட்டிருக்கீங்களா?

109
00:06:38,941 --> 00:06:42,277
சரி, கொன்னுடாதே, ஆனா,
இந்த வார இறுதியில கசின்ஸ்க்கு வர முடியாது.

110
00:06:43,278 --> 00:06:45,280
டேய்லர்! நீ வேணும்.
என்ன செய்யறேன்னே தெரியாது.

111
00:06:45,364 --> 00:06:49,952
தெரியுது, தெரியுது. மன்னிச்சிடு.
சலோன் ஆய்வை, இன்னக்கி வெச்சுட்டாங்க.

112
00:06:50,035 --> 00:06:52,955
எங்கம்மா, தானே செஞ்சுக்கறேன்னுதான்
சொன்னாங்க, ஆனா கொஞ்சம்--

113
00:06:53,038 --> 00:06:55,124
வேற வழி இல்ல.
விண்ணப்பத்தில என் பேரும் இருக்கே.

114
00:06:57,417 --> 00:06:58,252
அப்ப பரவாயில்ல.

115
00:06:58,794 --> 00:06:59,711
என் கவலை வேணாம்.

116
00:06:59,795 --> 00:07:04,550
உண்மைல மன்னி.
சீதன விழாவை பிரமாதமா கலக்கிடுவேன்.

117
00:07:05,175 --> 00:07:07,344
மறந்துட்டேனே, ஸ்டீவன் கூட வர்றான்.

118
00:07:08,428 --> 00:07:11,431
அவனோட இங்கே உனக்கு
ஒத்துப் போகும்னா சொல்றே?

119
00:07:11,515 --> 00:07:15,477
ஆம், அதாவது, அவன்
இணை மாப்பிள்ளைத் தோழனாச்சே.

120
00:07:15,561 --> 00:07:18,063
நான் உன மணப்பெண் தோழி.
ரெண்டு பேருக்கும் தொடர்பு வருமே.

121
00:07:18,647 --> 00:07:21,275
இரு, ஸ்டீவனும் நானும் இல்லன்னா,

122
00:07:21,358 --> 00:07:24,153
சுதந்தர தினத்துக்கு ஜெரமையா,
கான்ராட், நீ மட்டும்தானா?

123
00:07:24,236 --> 00:07:26,196
ஆமாம். அப்படித்தான் இருக்கும்.

124
00:07:28,657 --> 00:07:30,075
கான்ராட் கூட எப்படி போகுது?

125
00:07:33,036 --> 00:07:34,288
வாரம் முழுக்க அவனை பாக்கல.

126
00:07:35,581 --> 00:07:38,458
நான் என் ஃபோன் பேங்கிங்
வேலையிலேயே தொடர்ந்து முழுகிட்டேன்,

127
00:07:39,293 --> 00:07:42,045
அவனோ திருமணத்துக்காக,
வீட்டை சுத்தி பழுது பார்த்திட்டுருக்கான்.

128
00:07:42,129 --> 00:07:43,755
-அப்படியா?
-ஆம்.

129
00:07:44,381 --> 00:07:46,466
வினோதம். எப்போ கிளம்பறான்?

130
00:07:46,550 --> 00:07:47,718
அவன் சொல்லல.

131
00:07:49,803 --> 00:07:52,556
கொஞ்சம் இரு. நான் போகணும்,
என் அம்மா துளைச்சு எடுக்கறாங்க.

132
00:07:52,639 --> 00:07:54,266
உனக்கு ஏதும் வேணும்னா கூப்பிடு.

133
00:07:54,349 --> 00:07:55,976
சரி. பை.

134
00:08:04,401 --> 00:08:06,111
எதிர்கால மைத்துனனே.

135
00:08:06,195 --> 00:08:07,905
-பயந்தே போனேன்.
-மன்னி.

136
00:08:07,988 --> 00:08:10,032
உன்னைப் பார்த்தா… மும்முரமா
இருக்க போல.

137
00:08:10,115 --> 00:08:11,116
ஆம், நான்…

138
00:08:15,287 --> 00:08:16,330
அதுதான் உன் காலை உணவா?

139
00:08:16,914 --> 00:08:20,250
ஆம். இதோட காலி. மன்னி.

140
00:08:20,334 --> 00:08:26,340
இல்ல. நான்-- சீரியல் இருக்கு சாப்பிட,
பழக் கூடைல பழமும் இருக்கே.

141
00:08:27,174 --> 00:08:31,637
ஆமாம். உன்னை கேட்காம
எடுத்துக்க வேணாமேன்னுதான், எடுத்துக்கல.

142
00:08:31,720 --> 00:08:32,930
அப்போ கேட்க வேண்டியதுதானே?

143
00:08:36,099 --> 00:08:37,476
கேட்க வாய்ப்பே கிடைக்கலியே.

144
00:08:37,559 --> 00:08:39,811
இந்த வீட்டு வேலையிலெல்லாம்
மும்முரமா இருந்தே.

145
00:08:40,646 --> 00:08:42,522
அதுவும், அதை நாங்க பாராட்டியே ஆகணும்.

146
00:08:42,606 --> 00:08:44,983
அதாவது, நான்-- இவ்ளோ
உதவியாயிருப்பேன்னே நினைக்கல.

147
00:08:46,443 --> 00:08:48,028
அதாவது, நான் ஆச்சரியப்படக் கூடாது,

148
00:08:48,111 --> 00:08:52,032
நீ விஷயங்களை ஆய்ந்து பார்த்து,
எப்படி செய்யணுமோ அப்படி செய்வே.

149
00:08:53,158 --> 00:08:56,161
நான் ரொம்ப எதும் செய்யல, அனேகமா, வீட்டை
இருப்பதைவிட மோசமாக்கறேனோ

150
00:08:56,245 --> 00:08:57,788
என்னமோனுதான் நினைக்கிறேன். ஆக…

151
00:08:57,871 --> 00:08:59,665
எதுவோ, அப்படிலாம் தோணல.

152
00:09:01,208 --> 00:09:04,002
அப்ப, நீ எப்போ
காலஃபோர்னியா திரும்பப் போறே?

153
00:09:04,086 --> 00:09:06,880
அதான், திருமணம் வரை
நீ இருக்க முடியாதது, ஒரு மாதிரி கடுப்பு.

154
00:09:06,964 --> 00:09:10,050
ஆம், சொல்லவா, என் வேலை
திரும்ப அழைப்பதால்தான். நான் போக--

155
00:09:10,133 --> 00:09:13,637
உண்மைதான், ஜெர் சொல்லிகிட்டிருந்தான்
அதை பத்தி. உனக்கு உற்சாகமா இருக்குமே.

156
00:09:15,681 --> 00:09:16,598
ஆமாம்…

157
00:09:18,308 --> 00:09:21,770
கூரையில் வேலை செய்யப் போகணும். பாரு, நான்
எது வாங்கி வந்தாலும், நீ எடுத்துக்கலாம்.

158
00:09:23,605 --> 00:09:24,690
சரி.

159
00:09:28,777 --> 00:09:30,779
ஏண்டா, எப்போ உங்கப்பா
போவார்?

160
00:09:32,114 --> 00:09:33,782
எனக்கு தெரியல, ஸ்டீவன். அவரையே கேள்.

161
00:09:36,076 --> 00:09:38,203
இரு, நீயும் சீக்கிரமா கிளம்பணும்
போல?

162
00:09:38,287 --> 00:09:41,665
கசின்ஸ் ரயில் இன்னும் 45 நிமிடத்தில
கிளம்புது. நெறைய நேரமிருக்கே.

163
00:09:41,748 --> 00:09:44,584
அடடே. போர்டிங் ஆரம்பிக்கும்
போது விமான நிலையத்தில்

164
00:09:44,668 --> 00:09:46,211
இருப்பவன் அல்லவா, நீ? அப்படிதானே?

165
00:09:46,295 --> 00:09:48,588
ரெண்டு மணி நேரம்
முன்னதாகவே போகும் ஆளா நீ?

166
00:09:49,798 --> 00:09:52,259
விதி, உள்நாடுனா ரெண்டு,
வெளிநாடுனா மூணு மணி நேரம் ஆக…

167
00:09:52,342 --> 00:09:54,636
அடடே, நல்ல விமான நிலைய பாட்டியா இருக்கியே.

168
00:09:54,720 --> 00:09:57,431
அது சரி, அதுவும்?
விமானத்துக்கு எப்பவுமே தாமதமா போனதில்ல.

169
00:09:58,223 --> 00:09:59,266
எனக்கு பசிக்குது.

170
00:10:08,275 --> 00:10:11,153
உனக்கும் டினீஸுக்கும் வரும்
பணி இட சண்டை எல்லாமே,

171
00:10:11,236 --> 00:10:12,279
ஒரு மாதிரி கவர்ச்சிதானே?

172
00:10:13,030 --> 00:10:15,073
இல்ல, உனக்கு-- உனக்கு கிறுக்கு. இல்லல்ல.

173
00:10:15,157 --> 00:10:16,158
-கிறுக்குத்தனமா?
-ஆம்.

174
00:10:16,241 --> 00:10:19,661
பார். அவ அழகி. உன் மேல
நாட்டமிருக்கு. உனக்கு அது புரியலயா?

175
00:10:19,745 --> 00:10:24,499
ஏன்னா, இதில புரிஞ்சுக்கறதுக்குலாம்
ஒண்ணும் இல்ல. இல்ல.

176
00:10:28,628 --> 00:10:29,504
ஏன்னு நம்ப முடியல.

177
00:10:31,548 --> 00:10:33,258
நீ சொல்ல வருவது, எனக்கு
பிடிக்கல.

178
00:10:34,092 --> 00:10:38,680
சரி, இதைக் கேள், டேய்லரும் நானும்,
இப்போ நண்பர்கள்தான். சரியா?

179
00:10:40,015 --> 00:10:41,767
டேய்லர் பத்தி நான் ஏதுமே
சொல்லலியே, ஆனா…

180
00:10:43,518 --> 00:10:45,604
-நீ கிறுக்கு.
-அப்ப, டினீஸை வெளியே அழைத்து போகலாமே?

181
00:10:45,687 --> 00:10:46,563
டேய்.

182
00:10:48,607 --> 00:10:50,108
அது அபத்தம்னு தெரியும்தான்.

183
00:10:50,692 --> 00:10:52,027
எது அபத்தம்?

184
00:10:52,110 --> 00:10:54,029
ஸ்டீவன் இருக்கானே…

185
00:10:54,112 --> 00:10:55,739
அதான், ஸ்டார்கேட்எக்ஸ் உடன் இந்த பேரம்.

186
00:10:57,032 --> 00:10:59,659
ஆம். இது மடத்தனமானது.
அதை அவங்க கிட்ட சொல்லப் பார்த்தோமே.

187
00:11:00,369 --> 00:11:03,330
சரி, யாரும் நாம் சொல்றத
கேட்கலன்னா, நம் தப்பல்ல.

188
00:11:03,413 --> 00:11:05,582
வயதானதால காது கேட்கலயோ
என்னவோ-- ஆடம்!

189
00:11:05,665 --> 00:11:07,834
அந்த சட்டை அருமை.
ரொம்ப மொடமொடப்பா இருக்கே. ஆஹா.

190
00:11:07,918 --> 00:11:11,880
எல்லோரும் போறீங்க, தெரியும், ஆனா
ஒருத்தர், கடைசியா ஒரு விஷயம் செய்யணுமே.

191
00:11:11,963 --> 00:11:13,632
-சரி, கண்டிப்பா செய்றேன்.
-புரியுது.

192
00:11:13,715 --> 00:11:15,467
சரி. ஸ்லாக்கை பாருங்க. ரொம்ப நேரமாகாது.

193
00:11:16,802 --> 00:11:19,721
நல்லது, அவருக்கு, மிக சமீபத்திய
பண வரவு அறிக்கையை பார்க்கணும்…

194
00:11:21,681 --> 00:11:23,767
வேறென்ன, ஸ்டார்கேட்எக்ஸ்
உடையது.

195
00:11:23,850 --> 00:11:26,645
அது சரி. பார்க்க சுலபமா
தெரியுது. இது புரியுதா?

196
00:11:26,728 --> 00:11:28,271
கூடுதல் வேலையை வேணாம்ன்றியா?

197
00:11:28,355 --> 00:11:30,982
-ஆம். நான் சில இடங்களுக்கு போகணும்.
-சரி, நானும் போகணும்.

198
00:11:31,775 --> 00:11:34,861
ஐயோ! இப்படியா செய்வே. சரி,
நான் செய்யறேன்.

199
00:11:34,945 --> 00:11:37,614
இல்ல. இப்ப எனக்கு சங்கடம். பாரேன்.

200
00:11:37,697 --> 00:11:39,408
சரி, பசங்களா, கவனிங்க,
நான் பாத்துக்கறேன்.

201
00:11:39,950 --> 00:11:41,535
கணக்கை ரெண்டு வாட்டி பாத்தாச்சே. போங்க.

202
00:11:43,328 --> 00:11:45,205
-நிஜமா சொல்றியா?
-ஆமாம்.

203
00:11:45,288 --> 00:11:46,665
அடுத்த ரயிலில் போயிக்கறேன்,

204
00:11:47,582 --> 00:11:51,920
அதோட, அவர் கிட்ட நல்ல பேர் வாங்கணுமே,
ஆக, நீங்க எனக்கு நல்லதே செய்யறீங்க.

205
00:11:53,130 --> 00:11:54,548
அப்போ, சரிதான்.

206
00:11:55,215 --> 00:11:59,052
ஃபிஷர், அதை ஒரு மணி நேரத்துக்குள் முடிக்க
முடியலன்னா, ஏதோ தப்பு செய்யறேனு அர்த்தம்.

207
00:11:59,928 --> 00:12:01,054
ரொம்ப சரி, தலைவியே.

208
00:12:01,138 --> 00:12:02,889
எதனா பிரச்சினைன்னா ஃபோன் பண்ணு.

209
00:12:02,973 --> 00:12:04,057
இல்ல, பரவாயில்ல.

210
00:12:09,229 --> 00:12:11,857
பெல்லி - ஜெர் சீக்கிரம்!!!
கூடுதல் 25% கூப்பன் இன்று முடியுது!!

211
00:12:18,947 --> 00:12:19,781
அழைப்புகள்!
காலணிகள்

212
00:12:19,865 --> 00:12:22,367
ஜெரமையா
வேலைல மாட்டினேன், நான் இல்லாமலே நீ ஆரம்பி

213
00:12:37,632 --> 00:12:39,718
-ஏம்பா, கான்ராட்?
-சொல்.

214
00:12:39,801 --> 00:12:41,803
கார் சாவியை பார்த்தாயா? எனக்கு
வேணுமே…

215
00:12:42,888 --> 00:12:44,139
இதோ வெளியே போக இருந்தேனே.

216
00:12:44,222 --> 00:12:45,348
நாம் உன்னோட வரவா?

217
00:12:45,432 --> 00:12:47,726
திருமணத்துக்கு சில
பொருட்களை வாங்கணுமே, பிறகு…

218
00:12:48,268 --> 00:12:51,188
டேய்லர் வந்திருக்கணும், இப்ப வரல,
ஜெர்ருக்கும் வேலை முடியலயாம்.

219
00:12:51,271 --> 00:12:54,065
அது, நான் சீக்கிரம் வந்துடுவேன்.
திரும்பின பிறகு எடுத்துக்கோ.

220
00:12:54,149 --> 00:12:56,026
நான் உன் கூட வர முடியாதா?

221
00:12:57,611 --> 00:13:00,030
பரவாயில்ல. நல்லது.
என் சைக்கிளை எடுத்துப் போறேன்.

222
00:13:06,203 --> 00:13:07,120
அடச்சே.

223
00:13:10,373 --> 00:13:12,250
பெல்லிக்கு ஏதும் தேவையானா,

224
00:13:12,334 --> 00:13:15,754
அப்பல்லாம் நான் நினைச்சது,
"எப்படி அதை செய்யலாம்?"னு.

225
00:13:31,853 --> 00:13:35,815
இரு! இருங்க! எனக்காக இருங்க.

226
00:13:37,192 --> 00:13:38,360
கான்ராட்!

227
00:13:42,447 --> 00:13:44,199
-கான்ராட்.
-கான்ராட், நம் பாட்டுக்கு போகலாமே.

228
00:13:44,282 --> 00:13:45,200
அவ ரொம்ப மெதுவா வர்றா.

229
00:13:45,283 --> 00:13:47,827
டேய், அவளுக்காக ஒரு நொடி இருப்போமே, சரியா?

230
00:13:47,911 --> 00:13:49,871
இல்ல. கான்ராட், வா போவோம்.

231
00:13:49,955 --> 00:13:50,997
பார்க்கலாம்.

232
00:13:51,081 --> 00:13:52,999
இந்தா, இங்கே வா. என் சைக்கிளை
நீ ஓட்டலாம்.

233
00:13:53,917 --> 00:13:56,211
இல்ல, பரவாயில்ல.

234
00:13:56,294 --> 00:13:58,380
இல்ல, நிஜமா. உன்னால
முடியும். உன்னை நம்பறேன்.

235
00:13:58,463 --> 00:13:59,506
அப்படியா சொல்றே?

236
00:13:59,589 --> 00:14:03,218
கண்டிப்பா. நீ ரொம்ப சீக்கிரமா போயிடலாம்,
நான் பின்னாடியே ஓடி வர்றேன்.

237
00:14:03,301 --> 00:14:04,386
சரிதான்.

238
00:14:05,887 --> 00:14:07,430
விட்டுட மாட்டேன்னு சத்தியம்
பண்ணு.

239
00:14:07,514 --> 00:14:08,598
சத்தியம்.

240
00:14:27,242 --> 00:14:28,660
இப்ப என்னை விட்டுடு.

241
00:14:44,259 --> 00:14:45,135
ஏம்பா, பெல்லி…

242
00:14:46,720 --> 00:14:47,554
இரு.

243
00:14:48,597 --> 00:14:50,432
அவளுக்கு உதவுவது என் வேலை அல்ல இனி.

244
00:15:00,942 --> 00:15:02,694
-கொஞ்சம் எடுக்கறீங்களா?
-எதுவோ.

245
00:15:10,285 --> 00:15:13,204
சரி, சர், உங்க தலையை
என் தோளில் சாய்க்காதீங்களேன்?

246
00:15:13,288 --> 00:15:15,040
நன்றி. நன்றி.

247
00:15:15,123 --> 00:15:16,166
டினீஸ்?

248
00:15:17,709 --> 00:15:18,877
-கான்க்லின்.
-ஹை.

249
00:15:19,669 --> 00:15:20,795
எங்கே போறே?

250
00:15:20,879 --> 00:15:22,130
நியூ யார்க்.

251
00:15:22,213 --> 00:15:23,298
அட, நானும்தான்.

252
00:15:24,507 --> 00:15:27,385
அடுத்த அறிவிப்பு வரும் வரை,
இந்த ரயில் வெஸ்டர்லியில் நிற்கும்.

253
00:15:27,469 --> 00:15:30,555
ஐய்யய்யோ! ஏற்கனவே
நாம் ஒரு மணி நேரம் தாமதம்.

254
00:15:31,598 --> 00:15:34,100
சரி. என்ன… நியூ யார்க்ல என்ன விஷயம்?

255
00:15:34,184 --> 00:15:36,519
அது எதுக்கு உனக்கு.

256
00:15:37,020 --> 00:15:38,521
-சரி. விடு.
-ஐயோ.

257
00:15:38,605 --> 00:15:41,941
சிக்னல் வரமாட்டேங்குதே.
ஜெர் ஏதாவது சொன்னானா?

258
00:15:42,734 --> 00:15:44,402
இல்ல. அவன் நலம்னுதான் நினைக்கிறேன்.

259
00:15:44,986 --> 00:15:46,404
அவனை விட்டு வந்திருக்கக் கூடாது நீ.

260
00:15:46,488 --> 00:15:49,491
சரி, நீயும்தானே விட்டு வந்துட்டே, ஆக…

261
00:15:49,574 --> 00:15:51,284
சரி, நாம் விட்டு வந்திருக்கக் கூடாது.

262
00:15:51,368 --> 00:15:53,161
"நாம்." மறுபடி சொல்லு,
முதல்ல "நீ"ன்னு சொன்னே.

263
00:15:53,244 --> 00:15:55,622
-"நீ வந்திருக்கக் கூடாது," ஆக அதான்…
-அடடே, எதுவோ.

264
00:15:56,665 --> 00:15:57,749
சரி. விடு.

265
00:16:08,510 --> 00:16:10,679
அந்த கேக்கை பில்லி
70ம் பிறந்த நாளுக்கு வாங்கினார்.

266
00:16:11,596 --> 00:16:12,681
-ஓஹோ.
-சொல்லவா…

267
00:16:12,764 --> 00:16:15,558
எங்களுக்கு தனிப்பட்ட
வாடிக்கையாளர்கள் இருக்காங்க.

268
00:16:15,642 --> 00:16:17,185
யாருக்காக வாங்கறீங்க?

269
00:16:18,395 --> 00:16:19,312
எனக்காகதான்.

270
00:16:21,106 --> 00:16:24,359
கேக்கணும், நீங்க
மிர்ரர் க்ளேஸ் கேக்குகளை செய்வீங்களா?

271
00:16:24,442 --> 00:16:25,527
செய்வோமே.

272
00:16:26,569 --> 00:16:32,826
நல்லது. எனது காதலனுக்கு அதுதான் விருப்பம்,
ரெண்டடுக்கு டார்க் சாக்லேட் கேக்,

273
00:16:32,909 --> 00:16:36,496
ராஸ்ப்பெர்ரி கூலி ஃபில்லிங்கோட
மேல மிர்ரர் கிளேஸும்.

274
00:16:37,247 --> 00:16:41,584
கோகோ எவ்ளோ டார்கா
இருக்கணும்? 70 சதம்? 80 சதம்?

275
00:16:41,668 --> 00:16:43,378
70 சதம் போதுமே.

276
00:16:43,461 --> 00:16:45,672
அது எத்தனை பேருக்கு?

277
00:16:45,755 --> 00:16:49,426
அவ்ளோ அதிகமில்ல. ஒரு 30 பேரைத்தான்
திருமணத்துக்கு அழைத்திருக்கோம். ஆக…

278
00:16:49,509 --> 00:16:50,844
அதுக்கு எவ்ளோ ஆகும்?

279
00:16:50,927 --> 00:16:55,056
மிர்ரர் கிளேஸ்க்கான கூடுதல்
விலையோடு, டெலிவரியுடன் 750 டாலர்.

280
00:17:01,479 --> 00:17:03,356
அது பிறந்த நாள். பிறந்த நாள்.

281
00:17:04,107 --> 00:17:07,485
நான்… ஏன் திருமணம்னு சொன்னேனோ. அது--

282
00:17:07,569 --> 00:17:11,322
பிறந்த நாளுக்காக. அப்போ, அது… எவ்ளோ ஆகும்?

283
00:17:11,406 --> 00:17:13,074
750 டாலர்.

284
00:17:13,158 --> 00:17:14,576
சரிதான். ஆம்.

285
00:17:16,119 --> 00:17:17,412
நன்றி.

286
00:17:17,495 --> 00:17:22,500
நான்… இதோ நண்பரிடம் உடனே பேசிட்டு--
இதப் பத்தி அவரிடம் பேசணும்.

287
00:17:22,584 --> 00:17:24,377
-மெதுவா வாங்க.
-சரி.

288
00:17:30,967 --> 00:17:36,514
பேக்கரில இருக்கேன். இந்த
கேக் வாங்கறத பத்தி பேச நேரமிருக்கா?

289
00:17:43,521 --> 00:17:44,606
இது நல்ல கடை.

290
00:17:48,902 --> 00:17:50,737
முடியாதே. அப்பா சொன்ன
வேலைய பாத்துட்டிருக்கேன்.

291
00:17:54,824 --> 00:17:57,327
ஒன்னு கேட்கவா,
சாக்லேட் கப் கேக் எல்லாம் எவ்ளோ?

292
00:18:01,456 --> 00:18:02,290
சரி, சிறப்பு.

293
00:18:10,924 --> 00:18:12,550
நீயும். பிறகு பேசறேன். பை.

294
00:18:16,304 --> 00:18:19,265
ஏற்கனவே கசின்ஸ்க்கு அவசரமா
போயிருப்பேன்னு நினைச்சேன்.

295
00:18:19,349 --> 00:18:22,477
ஆம், முடிச்ச உடனே நான்
இங்கருந்து கிளம்ப இருந்தேன், ஆனா…

296
00:18:23,895 --> 00:18:25,230
கணக்கு சரி வரலை,

297
00:18:25,313 --> 00:18:28,233
எல்லா ஃபார்முலாவும் போட்டு
பார்த்துட்டேன், ஆனா என்னால… ஏதோ…

298
00:18:28,316 --> 00:18:29,901
-முடியல.
-விடு. பரவாயில்ல.

299
00:18:29,984 --> 00:18:30,985
நான் பார்க்கிறேன்.

300
00:18:34,072 --> 00:18:37,784
இது உன் தப்பல்ல. டினீஸ்
போகும் முன் இத கவனிச்சிருக்கணும்.

301
00:18:39,160 --> 00:18:40,161
ஆம். ஆம்.

302
00:18:52,882 --> 00:18:53,883
அடச்சே.

303
00:19:05,687 --> 00:19:07,188
வா. வண்டியில் போகலாம்.

304
00:19:07,689 --> 00:19:09,524
வேலையா இருக்கேன்னியே? சைக்கிள்ல வர்றேன்.

305
00:19:10,233 --> 00:19:12,068
எல்லாத்தையும் வெச்சுகிட்டு ஓட்ட முடியாது.

306
00:19:15,905 --> 00:19:18,908
தேவையில்லாத சிரமம்.
சைக்கிளை காரில் வைக்க முடியாதே.

307
00:19:18,992 --> 00:19:19,993
சீட்டை மடிச்சிடலாம்.

308
00:19:22,620 --> 00:19:25,498
சரி. நான் ஓட்டறேன். பையை எடுத்துக்க,
நான் சைக்கிளை எடுக்கிறேன்.

309
00:19:44,934 --> 00:19:46,144
சரி.

310
00:20:18,968 --> 00:20:20,887
இதெல்லாம் திருமண அழைப்பிதழ்களுக்காகவா?

311
00:20:26,351 --> 00:20:27,352
ஆமாம்.

312
00:20:28,519 --> 00:20:32,273
டேய்லர் அதை கையில் முத்திரை குத்த
வைக்கணும்னு என்னை சொல்லச் சொன்னா.

313
00:20:33,107 --> 00:20:34,484
அப்படீன்னா என்ன தெரியல.

314
00:20:37,028 --> 00:20:40,031
அது போஸ்ட் ஆஃபீஸ்ல ஸ்டாம்புகளின்
மீது கையால் முத்திரை குத்தி,

315
00:20:40,114 --> 00:20:43,242
அதை மறுபடி பயன் படுத்தறதை தவிர்ப்பது.
கையால் முத்திரை குத்தினா,

316
00:20:44,786 --> 00:20:46,788
அது கடித உறையை சிதிலமாக்காது.

317
00:20:47,747 --> 00:20:48,831
உனக்கு அது எப்படி தெரியும்?

318
00:20:50,792 --> 00:20:53,336
நான் ஸ்டாம்புகளை
சேகரிப்பேனே, நினைவில்லையா?

319
00:20:54,837 --> 00:20:56,214
ஆம். அத மறந்துட்டேன்.

320
00:20:58,216 --> 00:21:00,093
அதில் ரொம்ப தீவிரமா இருப்பியே.

321
00:21:02,178 --> 00:21:04,722
ஜெர் ஒரு முறை ஸ்டாம்பை திருடி
போஸ்ட் கார்டை அனுப்ப,

322
00:21:04,806 --> 00:21:06,516
நீ அவ்ளோ கோபமா அழுதாயே, நினைவிருக்கா?

323
00:21:06,599 --> 00:21:09,560
அது ஒட்டப் படாத
ஜார்ஜ் வாஷிங்டன் சிவப்பு ஸ்டாம்ப்.

324
00:21:09,644 --> 00:21:12,063
கிடைக்கா-- ரொம்ப அபூர்வமான ஸ்டாம்ப்.

325
00:21:13,481 --> 00:21:14,691
அட. மேதாவியா இருந்தேன்.

326
00:21:15,441 --> 00:21:17,652
-இல்ல, நீ மேதாவி அல்ல.
-மேதாவிதான்.

327
00:21:18,569 --> 00:21:23,908
நான் ஸ்டாம்ப் சேகரித்தேன். எனக்கு ஒரு
பழங்கால என்சைக்ளோபீடியா வெறி இருந்தது.

328
00:21:24,617 --> 00:21:27,620
இடைநிலை பள்ளியில, நான் ஒரு
ரிங் பேரர் துணைக் குழுவை நிர்வகித்தேன்.

329
00:21:28,579 --> 00:21:29,914
என்ன குழு?

330
00:21:30,832 --> 00:21:32,583
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படம் பத்திய குழு.

331
00:21:32,667 --> 00:21:35,586
சரி. சரி. நீ நிஜமாவே மேதாவிதான்.
சொன்னதை வாபஸ் வாங்கிக்கறேன்.

332
00:21:35,670 --> 00:21:36,671
ஆமாம்…

333
00:21:40,508 --> 00:21:42,427
இன்னொரு இடத்தில நின்னு போனா பரவாயில்லதானே?

334
00:21:42,510 --> 00:21:45,054
அனுமதி கேட்காதே. நீ நிறுத்தலாம்.

335
00:21:45,138 --> 00:21:46,848
மித மிஞ்சி போனா பத்து நிமிஷம்தான்.

336
00:21:47,932 --> 00:21:49,183
தயவு செய்து?

337
00:21:49,267 --> 00:21:51,686
சரி. பிரச்சினை இல்ல.

338
00:21:51,769 --> 00:21:53,229
சரி. ஆகட்டும். நன்றி.

339
00:21:53,312 --> 00:21:54,605
கோழை.

340
00:22:04,574 --> 00:22:05,575
நல்வரவு.

341
00:22:06,534 --> 00:22:07,368
ஹை.

342
00:22:21,716 --> 00:22:23,718
ஆஹா, எல்லாம் ரொம்ப அழகு.

343
00:22:24,635 --> 00:22:26,095
அவை இந்த வார இறுதி
திருமணத்துக்கு.

344
00:22:27,055 --> 00:22:28,556
அப்ப… உங்களுக்கு என்ன வேணும்?

345
00:22:29,432 --> 00:22:30,933
எனக்கு ஒரு விசேஷ நிகழ்ச்சி.

346
00:22:31,017 --> 00:22:34,020
சரி. அந்த நிகழ்ச்சியின்
விதம் பத்தி சொல்லுங்களேன்?

347
00:22:34,854 --> 00:22:37,565
பந்தாவா இல்ல. கடற்கரைல ஒரு
விருந்து.

348
00:22:37,648 --> 00:22:40,902
ஆர்கிட்ஸ் தரவா?
ஹவாயில் இருந்து தருவித்தது.

349
00:22:40,985 --> 00:22:43,279
அந்த அளவுக்கு செலவு செய்ய முடியாதே.

350
00:22:43,362 --> 00:22:44,697
எவ்ளோ செலவு பண்ணுவீங்க?

351
00:22:44,781 --> 00:22:47,116
கொஞ்சம். ரொம்ப கொஞ்சம்தான்.

352
00:22:47,992 --> 00:22:48,826
சரி.

353
00:22:49,702 --> 00:22:52,455
செவ்வந்திப்பூ பரவாயில்லையா?
ரொம்ப செலவாகுமா?

354
00:22:52,538 --> 00:22:56,167
எனக்கு செவ்வந்தி பிடிக்கும். என் அம்மா
திருமணத்துக்கு அதுத்தான் பூங்கொத்து.

355
00:22:56,250 --> 00:22:57,460
அப்ப, திருமணமா.

356
00:22:59,629 --> 00:23:00,630
மன்னி.

357
00:23:01,380 --> 00:23:04,175
ஆம். ரொம்ப எளிமையா, ரொம்ப
சாதாரண திருமணம்.

358
00:23:04,258 --> 00:23:07,845
நீங்க இன்னும் கொஞ்சம் தகவல் தந்தாதான்,
நான் சரியான விலைப் பட்டியல் தர முடியும்.

359
00:23:07,929 --> 00:23:10,973
ஆம், கண்டிப்பா. அது…

360
00:23:11,057 --> 00:23:15,394
எங்களுக்கு நாலு மலர் அலங்காரங்கள்,
அதோட ரெண்டு பூங்கொத்துக்கள் வேணும்.

361
00:23:15,478 --> 00:23:17,897
ஒன்னு எனக்கு, இன்னொன்னு
என் மணப்பெண் தோழிக்கு.

362
00:23:17,980 --> 00:23:20,858
மணப் பெண், மண மகன்களின் அம்மாக்களுக்கு
மலர்ச்செண்டு வளையல்கள் வேணுமா?

363
00:23:21,734 --> 00:23:23,236
இல்ல, எங்களுக்குத் தேவைப் படாது.

364
00:23:24,070 --> 00:23:25,279
நீங்க என்ன சொல்றீங்க?

365
00:23:25,363 --> 00:23:27,782
உங்களுக்கு, மாப்பிள்ளை தோழருக்கு,
சட்டைப் பூங்கொடிகள் தேவையா?

366
00:23:27,865 --> 00:23:29,283
-இல்ல.
-இல்லல்ல.

367
00:23:29,367 --> 00:23:30,827
நான் மாப்பிள்ளை அல்ல.

368
00:23:30,910 --> 00:23:33,246
ஆம், இவர்… மாப்பிள்ளையின்
அண்ணன்.

369
00:23:34,622 --> 00:23:36,749
நாங்க குறைந்தது 5,000 டாலர்ல
திருமண தொகுப்பு தரலாம்.

370
00:23:36,833 --> 00:23:38,876
அஞ்சு… 5,000 டாலரா?

371
00:23:38,960 --> 00:23:41,587
கண்டிப்பா சொல்வேன், எங்க விலை ரொம்ப கம்மி.

372
00:23:43,172 --> 00:23:44,966
ஒரு ரெண்டு நொடி தாங்களேன்?

373
00:23:50,346 --> 00:23:54,433
சரி, ஒருவேளை… நீ ஒருவேளை… என் அம்மாவின்
வண்ண சாமந்திகளை பயன்படுத்தினா என்ன?

374
00:23:56,269 --> 00:23:58,938
இவங்ககிட்ட இருப்பதைவிட அவை
சிறப்பானவை.

375
00:23:59,021 --> 00:24:02,692
இன்னும் அழகுன்னும் சொல்லலாம்.
அதோட 5,000 டாலர் தேவையில்ல.

376
00:24:02,775 --> 00:24:03,985
ஆமாம். சரி.

377
00:24:05,278 --> 00:24:07,363
-பரவாயில்லையா?
-உங்க நேரத்துக்கு நன்றி.

378
00:24:07,446 --> 00:24:09,407
-இங்கிருந்து போகலாம்.
-நன்றி.

379
00:24:20,168 --> 00:24:21,460
ஒன்னு சாப்பிட்டு பாரேன்?

380
00:24:25,339 --> 00:24:27,175
இதோ. சாப்பிடறேன்.

381
00:24:27,258 --> 00:24:28,342
என்ன இது?

382
00:24:29,468 --> 00:24:32,096
இசபெல் கான்க்லினுக்கு,
கப் கேக் சாப்பிட ஆர்வமில்லையா? யார் நீ?

383
00:24:47,695 --> 00:24:48,905
பரவாயில்ல.

384
00:24:56,329 --> 00:24:57,330
அப்போ?

385
00:25:00,249 --> 00:25:04,378
இது 70% கோகோ, அது 80% கோகோ.

386
00:25:04,462 --> 00:25:05,588
என்ன வித்தியாசம்?

387
00:25:07,381 --> 00:25:08,799
சொல்லிடறேன், தெரியாது.

388
00:25:10,801 --> 00:25:14,055
எனக்கு மில்க் சாக்லேட் பிடிக்கும்.
எதுவோ பரவாயில்ல,

389
00:25:14,138 --> 00:25:17,725
அந்த கடை கேக்குகளை நம்மால் வாங்க முடியாதே.

390
00:25:17,808 --> 00:25:22,772
ஆக, நாம் ஸ்டாப் & ஷாப்ல
ஷீட் கேக்கையே வாங்கிப்போம்.

391
00:25:22,855 --> 00:25:26,567
சரி, அப்ப… அப்படி செய்யாதே.
ஒருவேளை நீ…

392
00:25:27,944 --> 00:25:29,487
ஒரு அடுக்கு கேக் செய்து,

393
00:25:30,988 --> 00:25:32,365
மிர்ரர் க்ளேஸை விட்டுட்டு,

394
00:25:33,366 --> 00:25:34,367
சாதாரண…

395
00:25:35,618 --> 00:25:37,703
மில்க் சாக்லேட் ஃப்ராஸ்டிங் போடு.

396
00:25:37,787 --> 00:25:41,207
இவங்க விற்கும் கோகோ
குப்பையை விட அது ரொம்ப மலிவா இருக்கும்.

397
00:25:42,208 --> 00:25:44,710
அதோட, டெலிவரி தேவையில்ல,
நானே கொண்டு வருவேன்.

398
00:25:45,878 --> 00:25:48,589
ஜெரமையா

399
00:25:49,757 --> 00:25:51,008
ஹே! வந்துட்டு இருக்கியா?

400
00:25:51,092 --> 00:25:53,135
ஹே, பெல்ஸ், இல்ல.

401
00:25:53,219 --> 00:25:54,470
கெட்ட செய்தி.

402
00:25:54,553 --> 00:25:57,723
நான் அலுவலகத்திலே மாட்டினேன்,
கசின்ஸ் வர அனேகமா தாமதமாகும்.

403
00:25:57,807 --> 00:25:59,225
நிஜமாவா?

404
00:25:59,308 --> 00:26:01,143
தெரியுது, தெரியுது. கடுப்படிக்கிறேன்.

405
00:26:02,103 --> 00:26:04,021
ஜெர், நாம இன்னக்கி மைகெல்ஸ்
கடை போகணுமே.

406
00:26:04,105 --> 00:26:06,691
இந்த வார இறுதில கட்டாயமா
போகலாம்.

407
00:26:06,774 --> 00:26:09,568
எங்கப்பாவின் இந்த விஷயம், ரொம்ப படுத்துது.

408
00:26:09,652 --> 00:26:12,488
நான்காம் தேதிக்கு முன்னான விளம்பரம்,
இன்றோடு முடியுது.

409
00:26:13,322 --> 00:26:14,949
நான்… வர முடியாதே.

410
00:26:19,620 --> 00:26:24,292
நல்ல செய்தி. இருந்தாலும், உனக்கு பிடித்த
அடுமனையிலருந்து கேக்கை பெறலாம்னு தோணுது.

411
00:26:24,375 --> 00:26:25,793
அருமை. இரண்டடுக்கு மிர்ரர்
க்ளேசா?

412
00:26:26,836 --> 00:26:28,587
திட்டம் கொஞ்சம் மாறிடுச்சு.

413
00:26:28,671 --> 00:26:33,301
ஒரு அடுக்கு சாக்லேட் கேக்,
மில்க் சாக்லெட் ஃப்ராஸ்டிங்கோட,

414
00:26:33,384 --> 00:26:36,595
கோகோ இல்லாம,
ஆனா ராஸ்ப்பெர்ரி கூலியோட.

415
00:26:36,679 --> 00:26:40,308
பெல்லி, கோகோதான் பருப்பு.
அதிலதான் சாக்லேட் செய்வாங்க.

416
00:26:40,391 --> 00:26:43,769
பார், சுவையின் மொத்த சூட்சுமமும், கசப்பு
சாக்லேட்டின் சுவையில்தான் அடங்கியிருக்கு,

417
00:26:43,853 --> 00:26:46,188
அதோட இனிப்பு கலந்த
புளிப்பான ராஸ்ப்பெர்ரியில்.

418
00:26:46,272 --> 00:26:49,150
கேக்தான் எனக்கு பிடிச்ச ஒன்று,
ஆளுக்கு ஒன்று கிடைக்கும்னே.

419
00:26:49,233 --> 00:26:53,279
ஆம், தெரியுது, அப்படிதான் சொன்னேன்,
ஆனா, நடக்கறதை பார்க்கணும்.

420
00:26:53,362 --> 00:26:57,199
அதாவது, கேக்குக்காக
750 டாலர் செலவு பண்ண முடியாதே.

421
00:26:57,283 --> 00:26:59,327
அப்போ என் கார்ட்ல வாங்கி,
பிறகு செலுத்துவேன்.

422
00:26:59,410 --> 00:27:01,203
-ஜெர்…
-ஹே.

423
00:27:01,287 --> 00:27:02,663
நான் போகணும். சரியா?

424
00:27:16,552 --> 00:27:18,971
இங்கே வர முடியாதது நிச்சயமா
ஜெர்ருக்கு கஷ்டமா இருக்கும்.

425
00:27:23,893 --> 00:27:27,313
மைகெல் கடைக்கு போகாததுக்கு
இடிஞ்சு போவது மடத்தனம்தான், தெரியுது…

426
00:27:30,441 --> 00:27:33,235
அவன், உங்கப்பா நிறுவனத்தில்
படாத பாடு படறானே…

427
00:27:38,824 --> 00:27:44,622
ஆனா, நானோ… இங்கே இது வரை
நான் தெரிஞ்சுக்க கவலைப் பட்டிராத…

428
00:27:46,248 --> 00:27:50,002
அதுக்கு செலவு கூட செய்ய முடியாத
முடிவுகளை செய்ய வேண்டியிருக்கே.

429
00:27:52,004 --> 00:27:53,255
வேண்டாம்.

430
00:27:53,339 --> 00:27:54,340
அதோட நான்…

431
00:27:55,758 --> 00:28:00,554
மொத்தத்தில எனக்கு எது முக்கியம்னா,
நம்மை நேசிக்கும் அனைவர் முன்னும்,

432
00:28:00,638 --> 00:28:02,515
ஒருத்தருக்கொருத்தர் விசுவாசத்த
காட்டறது.

433
00:28:03,849 --> 00:28:05,059
பெரும்பாலானோர்.

434
00:28:07,061 --> 00:28:08,104
வேண்டாம்டா.

435
00:28:08,187 --> 00:28:09,522
என்ன தோணுதுன்னா…

436
00:28:12,066 --> 00:28:14,276
நானே எல்லாத்தையும் சுமக்கற
மாதிரி.

437
00:28:14,360 --> 00:28:17,279
அதுவும் எல்லாமே தனியா செய்ய
வேண்டி இருக்கு.

438
00:28:24,578 --> 00:28:26,622
அப்ப, அதை விட்டுத் தள்ளு,
மைகெல்ஸ் கடை போறோம்.

439
00:28:27,665 --> 00:28:30,543
நிஜமாவா? நீ வீட்டுக்குப்
போகணும்னு சொன்னியே.

440
00:28:30,626 --> 00:28:33,754
சொன்னேன், ஆனா
வீட்டுக் கூரை நாளை எங்கும் போயிடாது.

441
00:28:33,838 --> 00:28:37,425
ஆனா இந்த கூப்பன்கள் காலாவதி ஆகும். போவோம்.
கார்பரேட் அமெரிக்காவை கொள்ளை அடிப்போம்.

442
00:28:39,885 --> 00:28:41,887
சரி. சரி.

443
00:28:42,930 --> 00:28:44,765
வகையா மாட்டினேன்.

444
00:28:45,349 --> 00:28:46,976
யாருமே இதை பாக்காதது அதிசயம்.

445
00:28:47,059 --> 00:28:50,479
இந்த கணக்கீடுகள்,
அவங்க தந்த அறிக்கைக்கு மாறா இருக்கு.

446
00:28:51,313 --> 00:28:53,023
தம் வருமானம் பத்தி பொய் சொன்னாங்களா?

447
00:28:53,732 --> 00:28:56,402
நான் இந்த கணக்குகளை
இன்னும் ஆய்வு செய்து துப்பறியணும்,

448
00:28:56,485 --> 00:28:58,571
ஆனா இது நல்லதுக்கில்ல.

449
00:28:58,654 --> 00:29:00,656
கணக்கியலாளர் குழுவை
கூப்பிடணுமா? கூப்பிடறேன்.

450
00:29:00,739 --> 00:29:04,285
இல்ல, எல்லோரும் விடுமுறைல இருக்காங்க.
அவங்களிடம் திங்களன்று பேசறேன்.

451
00:29:04,368 --> 00:29:05,369
நல்ல வேலை, மகனே.

452
00:29:05,453 --> 00:29:08,998
இப்போ கிளம்பி, கசின்ஸ் போ,
பெல்லி உனக்காக அங்கே காத்திருப்பாளே.

453
00:29:09,081 --> 00:29:11,959
அவளுக்கு என் மேல
கோபமில்லாம இருந்தா நல்லா இருக்கும்.

454
00:29:12,042 --> 00:29:14,753
சொல்லவா, இப்பல்லாம்
நீ செய்றது, எனக்கு பிடிச்சிருக்கு.

455
00:29:14,837 --> 00:29:16,964
இங்கே வேலையிலும், வீட்டிலும்.

456
00:29:17,047 --> 00:29:19,550
சமைக்கிறே, உன் பங்கை நல்லாவே நிறைவேத்தறே.

457
00:29:20,384 --> 00:29:21,802
பெல்லி அதிர்ஷ்டசாலிப் பெண்.

458
00:29:24,430 --> 00:29:27,308
நன்றி, அப்பா. உங்க
கருத்து எனக்கு ரொம்ப முக்கியம்.

459
00:29:31,020 --> 00:29:35,691
லாரலுக்கு உங்க திருமண விஷயம்
பிடிக்கல, ஆனா நீங்க

460
00:29:35,774 --> 00:29:37,234
ரொம்ப பிடிவாதமா இருக்கீங்கன்னா,

461
00:29:38,194 --> 00:29:40,446
உனக்கும், பெல்லிக்கும் என் ஆதரவு உண்டு.

462
00:29:43,574 --> 00:29:44,700
நன்றி, அப்பா.

463
00:29:45,743 --> 00:29:47,912
ஆம். திருமணத்தை கிளப்பில்
வெச்சுப்போம்.

464
00:29:47,995 --> 00:29:50,331
ஒருவழியா உறுப்பினராக செலவு
செய்வதன் பலனை அனுபவிப்போம்.

465
00:29:51,165 --> 00:29:53,792
உண்மைல, பெல்லி, வீட்டில
நடத்துவதாதான் யோசிச்சிட்டிருக்கா.

466
00:29:53,876 --> 00:29:55,878
இல்ல, வேணாம், இப்ப நான் செலவு
செய்யறேன்,

467
00:29:55,961 --> 00:29:58,005
ஆக, உனக்கு அந்த செலவு வேணாம்.

468
00:29:58,088 --> 00:29:59,548
அவளுக்கு கண்டிப்பா உற்சாகமாகும்.

469
00:30:01,133 --> 00:30:02,468
ஆம். ஆம்.

470
00:30:03,969 --> 00:30:05,971
நான்… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.

471
00:30:06,055 --> 00:30:09,600
நீங்க ரொம்ப பட்டுட்டீங்க,
ஆனா மகிழ்ச்சியா இருக்க தகுதியானவங்க.

472
00:30:10,351 --> 00:30:11,352
நாமெல்லோரும் கூட.

473
00:30:12,603 --> 00:30:13,604
நன்றி.

474
00:30:15,397 --> 00:30:19,235
கிளம்பும் முன் அறிக்கையில்
இதை சேர்த்துட்டு, போறேன்.

475
00:30:19,318 --> 00:30:20,319
அருமைடா.

476
00:30:34,208 --> 00:30:35,209
அப்போ, அந்த ஜிஆர்இ…

477
00:30:36,252 --> 00:30:37,419
அதுக்கு என்ன?

478
00:30:37,503 --> 00:30:40,256
உனது தயாரிப்பு புத்தகத்தை பார்த்தேன்.

479
00:30:41,382 --> 00:30:42,758
போன கிறிஸ்துமஸ் அப்ப

480
00:30:42,841 --> 00:30:45,511
உளவியல் பட்டப் படிப்பு
படிக்கனும்னியே அது நினைவு வந்தது.

481
00:30:46,136 --> 00:30:48,472
எதைப் படிக்கணும்னு முடிவு பண்ணிட்டியா?

482
00:30:49,390 --> 00:30:50,683
விளையாட்டு உளவியல்.

483
00:30:53,352 --> 00:30:57,273
ஆம். அதப் பத்தி
சுத்தி வளைச்சு தெரிஞ்சுகிட்டேன்.

484
00:30:57,356 --> 00:31:00,818
போன வருடம், என் முட்டியில அடி பட்டு,
அணியை விட்டு விலக வேண்டி ஆனதால்…

485
00:31:02,736 --> 00:31:05,030
என் கோச் என்னை
அணி உளவியலாளரிடம் அனுப்பினார்.

486
00:31:05,114 --> 00:31:09,535
அது ரொம்ப உதவியா இருந்தது,
ஆகவே இதை நாம் படிக்கலாமேன்னு நினைத்தேன்.

487
00:31:09,618 --> 00:31:10,703
பிரமாதம்.

488
00:31:13,414 --> 00:31:14,582
உன் முட்டி எப்படி இருக்கு?

489
00:31:15,666 --> 00:31:17,918
இப்ப பராவாயில்ல. ரொம்ப மேல்.

490
00:31:22,923 --> 00:31:26,302
நானும் ஒரு மன நல சிகிச்சையாளரை
பார்க்க ஆரம்பித்திருக்கேன்.

491
00:31:28,762 --> 00:31:31,807
எனது பதட்ட தாக்குதல்களை
சமாளிக்க அவர் உதவறார்.

492
00:31:32,683 --> 00:31:33,684
அடடே. அது…

493
00:31:33,767 --> 00:31:35,644
பெரிய விஷயம். அருமை.

494
00:31:37,146 --> 00:31:40,357
ஆனா… உன்னை பார்த்தா, எல்லாத்தையும்
திட்டமிட்டு செய்வதா தெரியுது.

495
00:31:41,358 --> 00:31:45,738
அதான், காலஃபோர்னியாவில்
உன் வாழ்க்கை, உன் தொழில்.

496
00:31:47,323 --> 00:31:48,866
நல்லா வளர்ந்துட்டே.

497
00:31:54,121 --> 00:31:55,956
நீயும்தான் ரொம்ப மாறிட்டே.

498
00:31:56,999 --> 00:31:58,500
-மாறினேனா?
-ஆமாம்.

499
00:31:59,627 --> 00:32:00,753
எப்படி?

500
00:32:00,836 --> 00:32:02,880
இப்பலாம்
நீ மோசமா ஓட்டறதில்ல.

501
00:32:02,963 --> 00:32:05,090
நான் எப்பவுமே மோசமா ஓட்டினதில்லையே.

502
00:32:05,674 --> 00:32:06,717
அது தவறு.

503
00:32:13,807 --> 00:32:15,517
இப்போ ஹீல்ஸ் செருப்பு போடறே.

504
00:32:16,226 --> 00:32:18,687
அர்ப்பணிப்பு விழால ஹீல்ஸ் போட்டிருந்தியே.

505
00:32:18,771 --> 00:32:20,105
இப்போ நிஜ பெண்மணியாயிட்டேன்.

506
00:32:22,232 --> 00:32:23,442
இன்னும் நகம் கடிப்பதைதான் விடல.

507
00:32:27,237 --> 00:32:28,489
எதையும் கவனிக்காம விடமாட்ட.

508
00:32:34,286 --> 00:32:35,496
ஆமாம்!

509
00:32:36,830 --> 00:32:37,956
அட.

510
00:32:38,040 --> 00:32:39,458
கேம் ஆடறியா என்ன?

511
00:32:39,541 --> 00:32:41,251
அதைப் பத்தி உனக்கென்ன.

512
00:32:44,963 --> 00:32:46,799
நீ உனதை காட்டினா, நான் எனதை
காட்டுவேன்.

513
00:32:49,593 --> 00:32:50,594
அந்த அர்த்தத்திலே சொல்லல…

514
00:32:51,679 --> 00:32:53,722
மன்னியுங்க, தப்பா எடுத்துக்காதீங்க…

515
00:32:53,806 --> 00:32:54,848
தயார்.

516
00:32:55,849 --> 00:32:57,309
சரி. இதோ.

517
00:32:59,436 --> 00:33:00,896
சரிதான். இதோ பார்.

518
00:33:03,565 --> 00:33:07,319
ஐயோ. என்ன சொதப்பல் இது?
தேனீ சிமுலேட்டரா? ஒரு மேதாவிக்கு இப்படியா.

519
00:33:07,403 --> 00:33:09,363
-குற்றம் சொல்வது சுலபம்.
-ஓஹோ.

520
00:33:09,446 --> 00:33:12,366
இதை ஸ்டீம் கேம்லருந்து பதிவிறக்கினாயா?
கிராஃபிக்ஸ் நல்லா இருக்கு.

521
00:33:12,449 --> 00:33:13,492
இது, நான் உருவாக்கினது.

522
00:33:14,243 --> 00:33:15,327
நீ உருவாக்கினாயா?

523
00:33:16,161 --> 00:33:17,496
ஆமாம்.

524
00:33:17,579 --> 00:33:19,707
ஆம். என் மூத்த வகுப்பு
ஆய்வறிகை அது, உண்மைல.

525
00:33:19,790 --> 00:33:22,000
அத ஒரு மாதிரி மறுபடி நோண்டினேன்,

526
00:33:22,084 --> 00:33:23,168
விபத்துக்குப் பிறகு…

527
00:33:25,003 --> 00:33:29,591
தெரியல, ஒண்ணுமில்லாததில்
இருந்து எதையோ எடுப்பது போல.

528
00:33:29,675 --> 00:33:32,928
கொஞ்சம்… வித்தியாசமானது, தெரியுதா?

529
00:33:35,222 --> 00:33:37,558
ஆம். ஆம். உண்மைல தெரியுது.

530
00:33:40,310 --> 00:33:45,983
மைகெல்ஸ்

531
00:33:54,450 --> 00:33:56,910
இந்த இரண்டு ஹரிக்கேன் வேஸும் தள்ளுபடியில்.

532
00:33:57,745 --> 00:33:59,955
எது பிடிக்குது? பெரிசா, அளவானதா?

533
00:34:01,457 --> 00:34:02,458
பெரிசுதான்னு சொல்வேன்.

534
00:34:02,541 --> 00:34:05,544
சரி. அருமை. நானும்
அதைதான் வாங்க இருந்தேன். பொருத்தம்.

535
00:34:06,378 --> 00:34:10,174
ஒரு நொடி, நான்…அவளை
மணப்பது நானல்லன்றதை மறந்தேன்.

536
00:34:11,216 --> 00:34:13,093
ஏம்பா, முடிக்க உனக்கு எவ்ளோ நேரமாகும்?

537
00:34:16,889 --> 00:34:18,056
ரொம்ப நேரமாகாது.

538
00:34:22,227 --> 00:34:25,105
இதில என்னோட வந்து மாட்டிக்கிட்டே, பாவம்.
அனாவசியம்னு தெரியும்.

539
00:34:25,189 --> 00:34:28,984
இல்ல. இல்ல. அப்படியல்ல.
இது அனாவசியம்னுலாம் இல்ல.

540
00:34:32,654 --> 00:34:35,324
அப்போ, முடிச்சுகிட்டு, இதுக்கெல்லாம்.
பணத்தை தந்துடுவோமா.

541
00:34:35,407 --> 00:34:39,244
என்னது? அதான், இவ்ளோ தூரம் வந்தோமே,
பெரிய தள்ளுபடி கிடைக்குது.

542
00:34:39,328 --> 00:34:41,872
ஒரு சுத்து சுத்தி பார்ப்போமே.
என்ன கிடைக்குதுனு பார்ப்போம்.

543
00:34:41,955 --> 00:34:43,165
சரி.

544
00:34:43,248 --> 00:34:44,458
இதோ, இதைப் பாரேன்.

545
00:34:44,541 --> 00:34:47,377
சின்ன செயற்கை மலர்கள்,
மாலைகள். நல்லா இருக்கே.

546
00:34:48,170 --> 00:34:51,131
உண்மைல, இதெல்லாம் அழகு.
முற்றத்தில வைக்கலாமா?

547
00:34:53,509 --> 00:34:56,553
-நீ… நீ நிஜமாவா சொல்றே?
-ஆமாம்.

548
00:34:57,346 --> 00:35:02,184
ஆம். அதான், சொல்லவா? அவை… பரவாயில்ல.

549
00:35:02,267 --> 00:35:05,229
சரியா? பிரமாதமில்ல, ஆனா போதும்.

550
00:35:05,312 --> 00:35:10,692
8.99 டாலர், 20% தள்ளுபடி.

551
00:35:10,776 --> 00:35:15,614
ஆம். சரி, அதானே,
ஹவாய் ஆர்கிட் யாருக்கு வேணும்?

552
00:35:15,697 --> 00:35:17,282
அதைத்தான் சொல்றேன்.

553
00:35:18,951 --> 00:35:21,954
சரிதான். சில சூரியகாந்தி பூக்களும்.

554
00:35:22,037 --> 00:35:24,748
-நீ சொன்னா சரியா இருக்கும்.
-பார்க்கறேன், பார்க்கறேன்…

555
00:35:29,086 --> 00:35:31,088
அருமை, இல்ல?

556
00:35:33,882 --> 00:35:34,883
கச்சிதம்.

557
00:35:37,719 --> 00:35:38,720
சரிதான்.

558
00:35:41,723 --> 00:35:44,977
பரவாயில்ல, இது வேலை செய்யுது. நல்லதுதான்.

559
00:35:45,894 --> 00:35:47,062
எனக்கு ஒத்து வருது.

560
00:36:17,676 --> 00:36:19,177
என்னோட இன்னக்கி வந்ததுக்கு நன்றி.

561
00:36:21,889 --> 00:36:25,100
நீ கோடைக்கு விடுமுறை எடுத்து வந்து,
கசின்ஸ்ல தங்குவது, உண்மைல எனக்கு

562
00:36:25,183 --> 00:36:26,268
ரொம்ப மகிழ்ச்சி.

563
00:36:28,103 --> 00:36:29,438
பெல்லியை தெரிந்த நாளில் இருந்து,

564
00:36:29,521 --> 00:36:31,732
பெல்லி முன்னால, பலவீனமாக
தெரியாமலிருக்க பாடாய் படுவேன்.

565
00:36:33,150 --> 00:36:36,737
நாங்க குழந்தையா இருந்தப்போ, அவ என்னை
அசாதாரணமானவனா பார்ப்பதா அம்மா சொல்வாங்க.

566
00:36:36,820 --> 00:36:39,489
அது அபத்தம், ஆனா,
நான் அவள் முன் அப்படி இருக்க பார்த்தேன்.

567
00:36:40,824 --> 00:36:42,367
அதுதான் நான் செய்த தப்பு போலிருக்கு.

568
00:36:44,453 --> 00:36:50,626
நான்… நான் இந்த கோடைக்கு விடுமுறை எடுக்க
முடிவு செய்யல. என்னை தூக்கிட்டாங்க.

569
00:36:50,709 --> 00:36:51,710
என்னது?

570
00:36:53,337 --> 00:36:54,338
ஆமாம்.

571
00:36:56,298 --> 00:37:01,929
ஸ்டீவன் விபத்தன்னிக்கி, நான் கொஞ்சம்
குழம்பி, தடுமாறியதால், சொதப்பிட்டேன்.

572
00:37:03,013 --> 00:37:07,059
ஐயோ. நான் டேய்லரிடம் உன்னை
அழைத்து சொல்லச் சொல்லியிருக்கக் கூடாதோ?

573
00:37:07,142 --> 00:37:10,270
இல்லல்ல, அது… நீ சொன்னது மகிழ்ச்சிதான்.

574
00:37:11,438 --> 00:37:12,940
நீ செஞ்சது சரியும் கூட.

575
00:37:13,023 --> 00:37:15,400
டாக்டர் நமாஸி என்னை
வேலையை விட்டு நீக்கியதும் சரியே.

576
00:37:20,072 --> 00:37:23,742
யாருமே கச்சிதமா இருக்க முடியாதல்லவா?
உன்னையும் சேர்த்துதான்.

577
00:37:23,825 --> 00:37:25,160
சொல்றேனே, தெரியும்.

578
00:37:28,830 --> 00:37:34,252
அன்னக்கி வேலையின் போது,
சொதப்பப் பொறேன்னு அவ்ளோ பயந்தேன்.

579
00:37:37,714 --> 00:37:38,715
அதே போல பண்ணிட்டேன்.

580
00:37:41,927 --> 00:37:44,763
யாருக்குத் தெரியும்?
ஒரு வேளை நான் டாக்டர் ஆக தகுதி இல்லாதவனோ.

581
00:37:46,932 --> 00:37:47,933
தகுதி இல்ல போல.

582
00:37:52,062 --> 00:37:55,065
இப்படி கோழையா இருக்கறத விட்டு,
தைரியமா இதை கையாள தெரியணுமோ என்னமோ.

583
00:37:57,275 --> 00:38:00,320
நிஜமா, உன்னை வேலையை
நீக்கும் சூழ்நிலை ஒண்ணு இருக்குதுன்னா,

584
00:38:00,404 --> 00:38:02,698
அது உனக்கு நல்லதுதான்.

585
00:38:02,781 --> 00:38:04,491
அதப் பத்திலாம் எனக்குத் தெரியாது.

586
00:38:04,574 --> 00:38:08,245
பெரும்பாலும், முதலாண்டு மாணவர்கள்,
கோடைல விடுமுறை எடுத்து ஊருக்கு போவாங்கனு

587
00:38:08,328 --> 00:38:10,205
உன் ஆலோசகர் சொன்னதா, ஜெர் சொன்னான்.

588
00:38:10,288 --> 00:38:12,082
-உண்மைதான். இல்ல, நான்--
-அதே, அப்போ,

589
00:38:12,165 --> 00:38:14,543
உனக்கு இப்போ இருக்கும் நிலை சரியானதுதான்.

590
00:38:16,044 --> 00:38:20,215
எப்போதும் சில தவறுகள் நேரத்தான் செய்யும்.
அது நாம் துடிப்போடு இருப்பதன் அறிகுறி.

591
00:38:23,719 --> 00:38:26,054
எப்பவுமே வீரனாவே
இருக்கணும்னும் அவசியம் இல்ல.

592
00:38:27,014 --> 00:38:29,683
உன் சிகிச்சையாளரோடு
இந்த பிரச்சினையை தீர்க்க பார்க்கலாமோ.

593
00:38:29,766 --> 00:38:32,185
-உன் வீரன்போல நினைப்பு.
-எனக்கு வீரன்போல நினைப்பு இல்ல.

594
00:38:42,195 --> 00:38:45,323
சரி, அதுக்கு கொஞ்ச நேரம் ஒதுக்கறேன்.

595
00:38:47,951 --> 00:38:50,787
ஒருவேளை வியப்பை தருவேனோ.
மருத்துவ கல்லூரியை படிப்பை முடிக்காதவனாக.

596
00:38:51,413 --> 00:38:55,542
இல்ல. மேசசூஸட்ஸ் பொது மருத்துவ மனையின்
புற்றுநோய் துறையை ஒரு நாள் நடத்துவே பார்.

597
00:38:58,795 --> 00:39:01,965
சொல்லிடறேனே, எனக்கு பாஸ்டனுக்கு
திரும்பி வர ஆசை வருமான்னே தெரியல.

598
00:39:03,091 --> 00:39:04,885
காலஃபோர்னியாவை அவ்ளோ பிடித்துவிட்டதா?

599
00:39:04,968 --> 00:39:07,220
இல்ல. அது தூரமா
இருப்பதுதான் பிடிச்சிருக்கு.

600
00:39:07,304 --> 00:39:09,181
ஆம். அது அருமை. எனக்குப் பிடிக்கும்.

601
00:39:09,806 --> 00:39:14,186
அவ்ளோ தூரம் போய், மறுபடி
புதுசா ஆரம்பிக்கறது எப்படி இருந்தது?

602
00:39:19,649 --> 00:39:20,901
அது அச்சுறுத்தியது.

603
00:39:22,778 --> 00:39:25,989
சில சமயங்களில் தனிமையா உணர்ந்தேன்.

604
00:39:26,698 --> 00:39:31,995
ஆனா, முதல் தடவையா பசிஃபிக் கடலில் சூரிய
அஸ்தமனத்தை பார்த்தது மறக்க முடியாதது.

605
00:39:33,580 --> 00:39:35,373
எனக்கு அது வினோதமா பட்டது.

606
00:39:36,374 --> 00:39:40,337
கிழக்கில் பார்த்திருந்ததை
மேற்கில் பார்ப்பது ரொம்ப வினோதமா இருந்தது.

607
00:39:42,339 --> 00:39:43,882
ஏதோ… வேற கிரகம் போய்விட்டது போல.

608
00:39:45,425 --> 00:39:48,762
ஏதோ எல்லாமே சாத்தியம்தான் என்பது போல்.

609
00:39:51,973 --> 00:39:54,101
எனக்கு அதைப் போல அனுபவம் கிடைத்ததில்லை.

610
00:39:55,185 --> 00:40:01,233
நான்… வீட்டை விட்டு போனதே இல்லயே.

611
00:40:01,316 --> 00:40:02,400
நீ போய்ப் பார்க்கலாமே.

612
00:40:06,905 --> 00:40:09,741
கொஞ்ச காலம், வெளிநாட்டில,
பாரிஸில படிக்கலாம்னு நினைப்பேன்.

613
00:40:09,825 --> 00:40:13,161
அட, நீ பள்ளியை முடிச்ச பிறகு கூட,
பாரிஸ் எங்கும் போயிடாதே.

614
00:40:15,580 --> 00:40:16,540
ஆமாம்.

615
00:40:19,835 --> 00:40:22,129
ஜெர்ரும் நானும், தேனிலவுக்கு
அடுத்த கோடைல போகலாம்.

616
00:40:25,507 --> 00:40:28,552
எனக்கு பசிக்குது.
சாப்பிட எங்கனா நிறுத்தலாமா?

617
00:40:28,635 --> 00:40:31,179
-நான் கோழிக் கறியை ஆற வைத்திருக்கேன்.
-கோழிக் கறி. சரி.

618
00:40:32,180 --> 00:40:33,473
தெரியும். பார்த்தேனே.

619
00:40:39,354 --> 00:40:40,897
பீச்சஸ்

620
00:40:42,691 --> 00:40:43,900
நிறுத்தவா?

621
00:40:43,984 --> 00:40:45,986
பரவாயில்ல. தாண்டி வந்துட்டோமே.

622
00:41:14,806 --> 00:41:16,933
தயவுசெய்து
பணத்தை கூடையில் வைக்கவும்

623
00:41:17,017 --> 00:41:17,851
ஆகட்டும்.

624
00:41:21,646 --> 00:41:23,148
நீ ஒண்ணு சாப்பிடேன்?

625
00:41:23,231 --> 00:41:24,482
பீச் பழம் எனக்கு ஒவ்வாது.

626
00:41:24,566 --> 00:41:26,234
என்னது? எப்பத்திலருந்து?

627
00:41:26,318 --> 00:41:29,070
நான் நீ பீச் சாப்பிடுவதை
பார்த்திருக்கேனே. நிச்சயம்.

628
00:41:29,654 --> 00:41:30,780
பீச் பய் ஆவது.

629
00:41:30,864 --> 00:41:34,075
முன்பெல்லாம் சாப்பிட்டேன்தான்,
ஆனா அவை என் வாயில் எரிச்சல் தரும்.

630
00:41:35,493 --> 00:41:37,329
விடு. பாவம் நீ.

631
00:41:44,169 --> 00:41:45,295
அடேங்கப்பா.

632
00:42:03,021 --> 00:42:05,023
இது சரியான பீச்.

633
00:42:06,316 --> 00:42:07,400
அடடே.

634
00:42:08,610 --> 00:42:09,986
இன்னொன்னு சாப்பிட தேவையில்ல.

635
00:42:10,070 --> 00:42:12,489
இதைப் போல இன்னொன்னு
இருக்க வழி இல்லன்றதால்.

636
00:42:13,573 --> 00:42:14,616
சோதித்துப் பார்ப்போம்.

637
00:42:19,329 --> 00:42:20,163
சரி.

638
00:42:22,374 --> 00:42:23,208
சரிதான்.

639
00:42:29,339 --> 00:42:30,423
இது நல்லா இருக்கா?

640
00:42:30,507 --> 00:42:32,050
ஆம். நல்லா இருந்தது.

641
00:43:14,926 --> 00:43:16,511
ஜெர்க்கு இன்னும் ரெண்டு எடுத்துக்கலாம்.

642
00:43:21,725 --> 00:43:23,601
நான் காருக்குப் போய் காத்திருக்கேன்.

643
00:43:25,603 --> 00:43:28,815
நான் நினைப்பது எல்லாம்
என் மனதின் உள்ளே மட்டும்தான்.

644
00:43:28,898 --> 00:43:32,027
அவளும் ஜெர்ரும்தான் நிதர்சனம்.

645
00:43:38,533 --> 00:43:40,535
-அரக்கன். அடேங்கப்பா.
-சிலந்தி மேல் குதி.

646
00:43:40,618 --> 00:43:42,787
-சரி, இல்ல. பார்க்கிறேன்.
-செய்.

647
00:43:42,871 --> 00:43:45,707
-அதே! அருமை.
-பார். சரியா? சரியா?

648
00:43:45,790 --> 00:43:47,625
ஆமாம். இல்ல, அது செம.

649
00:43:49,836 --> 00:43:51,046
இரு. என்னது?

650
00:43:52,213 --> 00:43:54,049
-மன்னி. என்னை மன்னி.
-இல்ல, பரவாயில்ல.

651
00:43:55,300 --> 00:43:57,344
ஸ்டார்கேட்எக்ஸ் பேரம்
சறுக்கப் போகுது போல.

652
00:43:57,427 --> 00:44:00,096
அட. அழகு பையன் உண்மைல
கண்டுபிடிச்சான் போலிருக்கே?

653
00:44:00,180 --> 00:44:01,806
இரு… பார்ப்பதைவிட சூட்டிகை அவன்.

654
00:44:01,890 --> 00:44:05,435
சரி, குருவி உட்கார,
பனம் பழம் விழுந்த கதையா கூட இருக்கலாம்.

655
00:44:06,061 --> 00:44:09,647
ஆஹா. தெரியும், எனக்கு தெரியும்.
அவங்க ரொம்ப பூடகம். ஐயோ.

656
00:44:09,731 --> 00:44:12,275
சரி. நமக்கு இது தெரியுமே. நாம, அதை கவனி.

657
00:44:13,610 --> 00:44:15,487
-ஆம். ஆம்.
-ஆம்.

658
00:44:15,570 --> 00:44:16,863
மன்னி. என்னை மன்னி. நீ சரி.

659
00:44:16,946 --> 00:44:18,490
-ஆம்.
-அடிப்படைல, நாம்.

660
00:44:18,573 --> 00:44:21,826
அடுத்த நிறுத்தம் இதோ. நியூ யார்க் நகரின்
பென் நிலையத்தில் இருப்போம்.

661
00:44:21,910 --> 00:44:23,995
இப்போதே உங்க உடைமைகளை
எடுத்துக் கொண்டு தயாராகுங்கள்.

662
00:44:24,079 --> 00:44:25,205
மீண்டும், நியூ யார்க்…

663
00:44:25,288 --> 00:44:28,291
ஆக, நான் வடகிழக்கு
கேமிங் மாநாட்டுக்குப் போறேன்.

664
00:44:29,209 --> 00:44:33,630
நீயும் அங்கேதான் போறேன்னு நினைக்கிறேன்.

665
00:44:34,631 --> 00:44:36,466
எப்படி உனக்கு தெரிந்துவிட்டது?

666
00:44:36,549 --> 00:44:39,052
என்னோட அசத்தும்
புரோக்ராம் திறமைகளாலா… அது நிஜமா…

667
00:44:39,135 --> 00:44:43,139
ஆம். அதோட, நான் உன் ஃபோன்ல
அறிவிப்புகளை இப்போ

668
00:44:43,223 --> 00:44:44,891
சில மணி நேரமா தொடர்ந்து பார்த்தேனே.

669
00:44:47,477 --> 00:44:50,647
நீ விலகப் பார்க்கிறே இல்லையா?
இனியும் பிரேக்கர் வேணாம்னு.

670
00:44:52,649 --> 00:44:56,486
என்னை நக்கல் எல்லாம் பண்ணாதே…

671
00:44:56,569 --> 00:44:58,071
பண்ணல.

672
00:45:06,871 --> 00:45:08,289
ரெண்டு வாரம் முன் செத்தே போனேன்.

673
00:45:11,793 --> 00:45:14,462
அதான், இப்போ ஏன் எனக்கு தேவையில்லாத ஒண்ணை…

674
00:45:15,755 --> 00:45:19,259
செய்து கொண்டிருக்கேன்னு
நினைக்க வைக்குது, தெரியுமா?

675
00:45:22,178 --> 00:45:25,223
சரி, சரி, உன்னை புரியுது.

676
00:45:26,516 --> 00:45:28,643
இங்கே வர படாத பாடு பட்டேன்.

677
00:45:29,269 --> 00:45:31,604
தெரியுமா, குடும்பத்திலயே நான்தான்
முதலில் கல்லூரில படித்தவ.

678
00:45:31,688 --> 00:45:36,985
ஆக, இதுக்காகதான் இத்தனை நாளா உழைத்துக்
கொண்டிருந்தேன், ஆனா. சே… வெறுக்கிறேன்.

679
00:45:37,569 --> 00:45:38,820
ஏன் தெரியுமா?

680
00:45:40,113 --> 00:45:41,489
இது போதாததால்.

681
00:45:42,740 --> 00:45:44,659
என்னால இன்னும் அதிகமா செய்ய முடியும்.

682
00:45:44,742 --> 00:45:47,078
வந்துள்ளது, நியூ யார்க், பென் நிலையம்.

683
00:45:47,162 --> 00:45:49,914
இந்த ரயிலின் கடைசி நிலையம் இதுதான்.

684
00:45:49,998 --> 00:45:52,125
உங்கள் பாதுகாப்பு கருதி, ரயில் முழுமையாக…

685
00:45:52,208 --> 00:45:53,585
-கண்டிப்பா.
-…நிற்கும் வரை

686
00:45:53,668 --> 00:45:55,003
பெட்டியின் உள்ளே இருக்கவும்.

687
00:45:55,086 --> 00:45:58,256
இந்த ரயிலின் கடைசி நிலையம் இது
என்பதை மீண்டும் அறிவிக்கிறோம்.

688
00:45:59,591 --> 00:46:04,137
அப்ப, நாம ஜாவிட்ஸ் சென்டருக்கு
ஒரே டாக்சில போவோமா?

689
00:46:04,220 --> 00:46:07,140
சரி. நல்லதா போச்சு. ஆம்.

690
00:46:07,223 --> 00:46:08,975
அருமை. வா.

691
00:46:35,752 --> 00:46:36,920
என் குட்டு உடைந்திருக்கும்.

692
00:46:38,129 --> 00:46:40,298
அவ்ளோ நெருக்கமா போயிருக்கவே கூடாது.

693
00:46:45,553 --> 00:46:47,764
இது மறுபடி நடக்கக் கூடாது.

694
00:46:49,516 --> 00:46:50,725
நான் படுக்கப் போறேன்.

695
00:46:54,604 --> 00:46:55,939
எவ்ளோ அழகான இரவு.

696
00:47:02,445 --> 00:47:03,780
ஏம்பா, இன்னும் பசியா இருக்கா?

697
00:47:05,156 --> 00:47:06,157
ஆமாம்.

698
00:47:07,825 --> 00:47:08,868
நான் சாப்பிடுவேன்.

699
00:47:38,815 --> 00:47:39,816
ஏம்பா…

700
00:47:41,526 --> 00:47:42,735
நான் ஒண்ணு கேட்கலாமா?

701
00:47:43,820 --> 00:47:44,904
ஐயோ.

702
00:47:47,657 --> 00:47:48,658
கேள்.

703
00:47:54,539 --> 00:48:00,295
வாட்டிய கோழிக்கறி தவிர
வேறெதையும் நீ சாப்பிடுவாயா?

704
00:48:02,255 --> 00:48:03,339
இல்ல.

705
00:48:04,382 --> 00:48:07,552
எனக்கு சமைக்கத் தெரிந்தது
அது மட்டும்தான்.

706
00:48:09,012 --> 00:48:11,889
சரி, விடு, நீ அவ்ளோ அதிகமா
கோழிக் கறி சாப்பிடுவதானா,

707
00:48:11,973 --> 00:48:14,892
-நான் அதை மசாலா போட்டு தர்றேனே.
-மசாலா போடு.

708
00:48:14,976 --> 00:48:17,103
உன்னை நம்பவே முடியல.

709
00:48:17,979 --> 00:48:19,731
ஆனா ரொம்ப சீமைத் தினை சேர்க்காதேயேன்?

710
00:48:19,814 --> 00:48:21,399
சீமைத் தினைக்கு என்ன?

711
00:48:21,482 --> 00:48:24,027
இன்றிரவு, வறுவலா செய்யறோம்.

712
00:48:24,110 --> 00:48:25,820
-சரி, செஃப்.
-சரியா?

713
00:48:26,321 --> 00:48:27,739
நல்லது. சரி.

714
00:48:27,822 --> 00:48:29,616
-ஆரம்பிப்போம்.
-ஏப்ரன் போட்டுக்கறேன்.

715
00:48:31,159 --> 00:48:32,619
அம்மாடி.

716
00:48:34,912 --> 00:48:38,124
-தள்ளி இரு. சொல்லியாகணும்.
-"தள்ளி இரு"ன்னு சொல்ல தேவையில்ல.

717
00:48:38,207 --> 00:48:39,292
தள்ளியிருக்கும் போது.

718
00:48:39,375 --> 00:48:42,337
-இல்ல, சொல்லணும்.
-நீ சமையல் ஷோ பார்த்ததே இல்லயா?

719
00:48:44,088 --> 00:48:46,132
எதுவோ. போய் ஆலிவ் எண்ணெய் எடுத்து வா.

720
00:48:46,215 --> 00:48:47,717
-ஆலிவ் எண்ணெய்.
-நல்ல வேலை.

721
00:48:47,800 --> 00:48:49,594
சரி, கோழிக்கறியை நீ பார்த்துக்கோ.

722
00:48:49,677 --> 00:48:51,054
-பிடி.
-உப்பும், மிளகும் குறை--

723
00:48:51,137 --> 00:48:51,971
வேணாம்.

724
00:48:54,766 --> 00:48:55,600
நன்றி.

725
00:48:59,854 --> 00:49:02,565
அடேங்கப்பா. எப்போ கடைசியா நீ…

726
00:49:04,567 --> 00:49:08,279
-5,000 டாலர் பூக்களுக்கு.
-ஒரு ஆர்கிடுக்கு.

727
00:49:08,363 --> 00:49:10,823
-ஒரு-- ஏதோ பூவுக்கு.
-சரி.

728
00:49:13,076 --> 00:49:14,535
இல்ல, அது கிறுக்குத் தனம்.

729
00:49:16,162 --> 00:49:17,080
எனக்குத் தெரியல.

730
00:49:17,163 --> 00:49:19,499
-கிறுக்குத்தனம்.
-கேவலம்பா. மன்னி.

731
00:49:20,416 --> 00:49:22,418
-ஆனா, நீ--
-அவ 5,000 டாலர்ன்னா.

732
00:49:22,502 --> 00:49:25,505
-இரு, இல்லல்ல, அதை கெடுத்தே.
-நான் என்ன செய்தேன்?

733
00:49:25,588 --> 00:49:27,298
-ஒரேடியா கவிழ்த்துட்டே.
-எப்படி கவிழ்த்தேன்?

734
00:49:27,382 --> 00:49:30,051
-"என் அம்மா திருமணத்துக்கு செம்பருத்தி."
-என்ன?

735
00:49:30,134 --> 00:49:31,844
-சரி. முதல்ல…
-இது திருமணம்.

736
00:49:31,928 --> 00:49:34,013
போட்டுக் கொடுத்ததுக்கு மன்னி…

737
00:49:34,097 --> 00:49:35,306
-ஒழி.
-எதுவோ.

738
00:49:36,015 --> 00:49:38,810
-வாயை மூடு.
-மன்னி. மன்னி. அப்படி சொல்லல.

739
00:49:45,817 --> 00:49:48,820
அதை துடைக்காதது உனக்கு கொஞ்சமும் பிடிக்கல.

740
00:49:48,903 --> 00:49:49,904
எதை துடைக்காதது?

741
00:49:50,780 --> 00:49:54,117
நான் சிந்திய வைனை.
அதைத் துடைக்க எவ்ளோ ஆசைப் பட்டே.

742
00:49:56,661 --> 00:49:57,745
நான் கவனிக்கவே இல்ல.

743
00:50:00,081 --> 00:50:01,916
விடு. விடு. யாருக்கு எல்லா--

744
00:50:02,500 --> 00:50:04,544
காலஃபோர்னியாவின் ஜாலியும் கிடைக்குது.

745
00:50:04,627 --> 00:50:06,671
ஆம். நான் ரொம்ப அமைதியாகிவிட்டேன், இல்ல?

746
00:50:08,506 --> 00:50:10,967
நினைவிருக்கு, நினைவிருக்கு, நீ அப்பல்லாம்…

747
00:50:13,428 --> 00:50:15,430
-"மாலைகள்."
-நீ ரொம்ப மோசம்.

748
00:50:15,513 --> 00:50:17,640
"மாலை…" அப்படீன்னு வேற…

749
00:50:17,724 --> 00:50:19,976
எனக்கு எப்படித் தெரியும்?
எனக்கு எப்படி தெரியும்?

750
00:50:20,059 --> 00:50:23,187
நான் எப்போதும் தாவரவியல் வகுப்புக்குப்
போனதில்ல. மருத்துவம் படிக்கிறேன்.

751
00:50:23,271 --> 00:50:25,940
கான்ராட். கான்ராட். ஐயோ, கான்ராட்!

752
00:50:26,023 --> 00:50:30,027
நீ எடுத்தியே, செயற்கை மலர்கள்,

753
00:50:30,111 --> 00:50:34,490
எங்க வீட்டு விருந்தினர் படுக்கை அறைல
இருந்ததை போலவே அப்படியே இருந்தது,

754
00:50:34,574 --> 00:50:37,326
எங்கம்மா கிட்ட அதை
தூக்கிப் போட எப்பவும் கெஞ்சுவேன்.

755
00:50:38,828 --> 00:50:39,829
அடச்சே!

756
00:50:41,205 --> 00:50:42,498
அவை அப்படிதான் இருந்தன.

757
00:50:42,582 --> 00:50:44,375
தெரியும். தெரியும்.

758
00:50:45,543 --> 00:50:47,044
நினைவு வருது.

759
00:50:54,177 --> 00:50:58,055
அது போன மார்சுக்கு நாலு வருடம் முன்.
கடைசியா நான் பெல்லி வீட்டில் இருந்தப்போ,

760
00:50:59,557 --> 00:51:00,892
நாங்க பிரிவதற்கு முன்.

761
00:51:03,644 --> 00:51:05,480
அம்மாவின் நிலைமை மோசமாகிட்டிருந்தது.

762
00:51:06,773 --> 00:51:08,775
எங்களுக்கு சொல்ல மறுத்தாங்க,
ஆனா எனக்கு தெரியும்.

763
00:51:09,609 --> 00:51:13,154
நான் அதைப் பேச விரும்பல,
அது உண்மையாயிடுமோன்ற பயத்தால்.

764
00:51:16,741 --> 00:51:18,117
இங்கே எதுக்கு வந்தே?

765
00:51:18,201 --> 00:51:20,912
பெல்லி, நீ இங்கே உள்ளே
வரக் கூடாது. உன் அம்மா கத்துவாங்க.

766
00:51:20,995 --> 00:51:24,248
சரி, அப்போ அமைதியா இரு,
அவங்களுக்கு கேட்கக் கூடாது.

767
00:51:25,416 --> 00:51:26,584
இதுவா அமைதியா இருப்பது?

768
00:51:28,044 --> 00:51:29,128
என்ன செய்யறே, நீ?

769
00:51:31,047 --> 00:51:32,548
-குளிருது.
-போர்த்திக்கோ.

770
00:51:38,638 --> 00:51:40,556
-உனக்கு ஒண்ணுமில்லயே?
-இல்ல.

771
00:51:48,981 --> 00:51:50,399
பள்ளி இறுதி நடனம் பத்தி கவலை வேணாம்.

772
00:51:51,818 --> 00:51:53,528
எல்லாம் நான் பார்த்துக்கறேன்.

773
00:51:55,238 --> 00:51:56,614
எனக்கு உற்சாகம்.

774
00:51:58,032 --> 00:51:59,158
தெரியும்.

775
00:52:06,332 --> 00:52:08,000
சூஸானா சரியாயிடுவாங்க.

776
00:52:10,211 --> 00:52:11,420
தெரியும்.

777
00:52:11,504 --> 00:52:14,799
அப்பல்லாம், நாம் நல்லவங்களா இருந்தா,
நமக்கு கெட்டது ஏதும் நடக்காதுன்ற

778
00:52:14,882 --> 00:52:16,801
நம்பிக்கை கொண்டவளா இருந்தா பெல்லி.

779
00:52:16,884 --> 00:52:20,263
அவகிட்ட பேசி, அம்மாவுக்கு
என்ன நடக்குதுன்னு சொல்லப் பார்த்தேன்,

780
00:52:20,346 --> 00:52:23,641
ஆனா எல்லாமே நல்லதா நடக்கும்ன்ற
அவ நம்பிக்கையை குலைக்க விரும்பல.

781
00:52:23,724 --> 00:52:26,519
எனக்குப் பரவாயில்ல. உன்னோட
இங்கே எனக்கு நல்லா இருக்கு.

782
00:52:27,353 --> 00:52:29,063
அவ அப்படியே இருக்க விரும்பினேன்.

783
00:53:10,104 --> 00:53:11,105
கான்ராட்.

784
00:54:12,375 --> 00:54:16,462
அந்த இரவு… அதுதான்
நாங்க அப்படி ஒண்ணா இருந்த கடைசி இரவு.

785
00:54:17,004 --> 00:54:19,548
நாலு வருடம் முன் நான்
அப்படி சொதப்பாம இருந்திருந்தா?

786
00:54:19,632 --> 00:54:22,927
நான் எப்பவும் செய்வது போல
அவளை நெருக்காம இருந்திருந்தா?

787
00:54:23,010 --> 00:54:26,263
எத்தனை முறை இப்படி
நாங்க இரவு உணவை உண்டிருப்போம்?

788
00:54:26,347 --> 00:54:27,431
கண்ணு, வந்துட்டேன்!

789
00:54:30,017 --> 00:54:31,060
ஜெர், வந்துட்டாயா?

790
00:54:34,647 --> 00:54:37,066
ஆஹா. கோபமில்லாம இருக்கே.

791
00:54:37,858 --> 00:54:39,568
-நீங்களே சமைத்தீர்களா?
-ஆமாம்.

792
00:54:39,652 --> 00:54:41,487
-பசிக்குதா? உனக்கு ஒரு தட்டில் தரேன்.
-அழகு.

793
00:54:41,570 --> 00:54:43,114
நான் உன்னையே சாப்பிடணும் போல.

794
00:54:44,073 --> 00:54:45,616
உண்மைல உணவு மீதமில்ல.

795
00:54:45,700 --> 00:54:47,952
ஐயோ, போச்சு. ஆனா
நம்மிடம் பீச் பழங்கள் இருக்கே.

796
00:54:48,995 --> 00:54:52,206
ஸ்ட்ராபெர்ரி இருக்கா?
இப்ப பீச் சாப்பிடற மாதிரி இல்ல.

797
00:54:52,289 --> 00:54:53,374
இல்லடா.

798
00:54:54,625 --> 00:54:55,710
பரவாயில்ல.

799
00:54:58,212 --> 00:55:00,631
பெல்ஸ், நாளைக்கு மைகல் கடை போகலாம்னேனே.

800
00:55:00,715 --> 00:55:03,426
இல்ல, நல்லா போச்சு,
கான்ராடோட போய், கூப்பன்ல வாங்கினோம்.

801
00:55:04,301 --> 00:55:10,016
ஆஹா. ஏண்டா நீதான் சிறந்த
மாப்பிள்ளை இணைத் தோழன்.

802
00:55:11,017 --> 00:55:12,685
வேணும்னா, என் உணவையும் எடுத்துக்கோ.

803
00:55:12,768 --> 00:55:16,480
இல்ல. சொல்லவா? பெல்ஸ் கூட சாப்பிடறேன்.

804
00:55:19,150 --> 00:55:20,568
வறுவல் இப்பவே வேணும்.

805
00:55:20,651 --> 00:55:24,238
இல்ல. வேணாம். என் வறுவலை எடுக்காதே,
திருடா. கோழிக்கறி எடுத்துக்கோ.

806
00:55:27,074 --> 00:55:27,908
வேலை எப்படி போகுது?

807
00:55:28,534 --> 00:55:30,745
நம்பற்கரியதா. ஆம். ஆம். எல்லோரும்…

808
00:55:31,537 --> 00:55:33,998
வார இறுதி விடுமுறைக்கு போயிட்டாங்க. அதனால…

809
00:55:34,081 --> 00:55:36,250
நாங்க பேரம் மேற்கொள்ள
இருந்த நிறுவனத்தை பத்தி

810
00:55:36,333 --> 00:55:37,752
அறிக்கையை நான் முடிக்க வேண்டி

811
00:55:37,835 --> 00:55:40,046
இருந்துச்சு, அவங்க கணக்கீடு,
போலின்றதை கண்டுபிடிச்சேன்.

812
00:55:40,129 --> 00:55:41,547
-ஆஹா!
-ஆமாம்.

813
00:55:41,630 --> 00:55:46,093
ஆம். அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு,
நான் கிளம்பும் முன், நிஜமா அவர் சொன்னது…

814
00:55:47,553 --> 00:55:49,680
நம்ம கல்யாணத்துக்கு ஆதரவா இருப்பதை.

815
00:55:50,723 --> 00:55:51,766
-நிஜமாவா சொல்றே?
-ஆம்.

816
00:55:51,849 --> 00:55:54,060
-அட்டகாசம்! அற்புதம்!
-பாராட்டுகள்டா.

817
00:55:54,143 --> 00:55:55,144
நன்றிடா.

818
00:55:55,227 --> 00:55:57,605
நான் குளிக்கப் போறேன்.

819
00:55:57,688 --> 00:55:59,231
சரி, ஆனா ரொம்ப நேரமாக்காதே,

820
00:55:59,315 --> 00:56:01,609
ஏன்னா இன்னக்கி இரவு வாண
வேடிக்கை இருக்கும் போல.

821
00:56:01,692 --> 00:56:03,069
-ஆமாம்.
-அதான்.

822
00:56:06,947 --> 00:56:10,117
யாராவது, என்னை மீண்டும் மீண்டும்
என் தலையில் சுட்டால் நல்லா இருக்கும்,

823
00:56:10,201 --> 00:56:12,578
அவன் அவளை இப்படியெல்லாம்
தொடறத பார்க்கறதுக்கு பதில்.

824
00:56:13,412 --> 00:56:14,663
என்னை எனக்கே பிடிக்கல, அதனால.

825
00:56:14,747 --> 00:56:16,415
-உன்னை பத்தி பெருமையா இருக்கு.
-நன்றி.

826
00:56:18,834 --> 00:56:21,378
இந்த வாரம் முழுக்க உனக்காக
எப்படி ஏங்கினேன்னு உனக்கு புரியாது.

827
00:56:30,429 --> 00:56:31,931
உங்கப்பா ஒத்துக்கிட்டத நம்பவே முடியல.

828
00:56:33,516 --> 00:56:35,559
அதாவது, என் அம்மா இதை கேட்டா…

829
00:56:36,894 --> 00:56:39,313
ஆம். நான்… நானும் கூட
அப்படியேதான் எதிர்பார்க்கிறேன்.

830
00:56:44,902 --> 00:56:46,904
செலவைக் கூட அவரே ஏத்துக்கறேன்னார்.

831
00:56:54,370 --> 00:56:56,914
என்னாச்சு? இதைச் சொன்னா
நீ துள்ளுவேனு நினைச்சேனே.

832
00:56:57,790 --> 00:56:58,916
இல்ல, இது பிரமாதம்தான்.

833
00:57:00,209 --> 00:57:02,837
நான் இதை நாமே நடத்திக்கப்
போறோம்னு நினைத்திருந்தேன்.

834
00:57:03,671 --> 00:57:06,632
ஆம், இப்பவும் நாம் திட்டமிட்ட
எல்லாத்தையுமே செய்யலாமே.

835
00:57:06,715 --> 00:57:08,134
பணம் மட்டும்தானே அவர் தரப் போறார்.

836
00:57:08,843 --> 00:57:11,971
அப்ப, நம்ம வீட்டிலேயே நடத்த அவர் தயாரா?

837
00:57:13,973 --> 00:57:16,934
உண்மைல அவருக்கு அதை கிளப்ல நடத்தணுமாம்,

838
00:57:17,017 --> 00:57:19,270
பிரேக்கர் நிறுவன நபர்கள்
சிலரை அவர் அழைப்பார்.

839
00:57:20,521 --> 00:57:23,774
அந்த-- அவருக்காக பணி செய்யறவங்களையா?

840
00:57:23,858 --> 00:57:27,528
ஆம். சில பங்குதாரர்கள் மட்டும், சில
சகாக்கள், அதோட ஒரிரண்டு வாடிக்கையாளர்கள்.

841
00:57:27,611 --> 00:57:30,531
ஜெர், அவங்க யாருன்னு கூட
நமக்கு அறிமுகமில்லயே.

842
00:57:30,614 --> 00:57:32,867
கோடை முழுக்க அவங்களோட வேலை செய்தேனே.

843
00:57:32,950 --> 00:57:35,327
சொல்லவா, வணிகத்
தொடர்புள்ளவங்களை அழைப்பது, ஒரு வகைல,

844
00:57:35,411 --> 00:57:37,163
கார்ப்பரேட்காரர்கள் வழக்கமா செய்வது.

845
00:57:37,246 --> 00:57:42,001
சரி, நம்ம திருமணம், உங்க அப்பா
வணிகத்தை பத்தி அல்லவே. இது நம்மைப் பத்தி.

846
00:57:47,673 --> 00:57:50,176
உனக்குப் பிடிக்கலன்னா
இப்படி செய்ய வேண்டியதில்ல.

847
00:57:50,259 --> 00:57:51,927
அவர் என்னிடம் சொல்லும் போது அப்படியே

848
00:57:52,011 --> 00:57:54,597
மகிழ்ச்சியானது, ஏன்னா அவர்
என்னோட நெருங்கிட்டார்னு தோணிச்சு.

849
00:57:58,601 --> 00:58:01,312
கண்டிப்பா. கண்டிப்பா. அப்படியே செய்வோம்.

850
00:58:02,688 --> 00:58:03,522
ஆமாம்.

851
00:58:04,690 --> 00:58:07,026
யோசித்துப் பார்த்தா,

852
00:58:09,570 --> 00:58:12,156
உங்க அம்மாவுக்கு திருமணத்தை
இப்படி செய்யறதுதான் பிடிக்கும்.

853
00:58:16,118 --> 00:58:17,119
ஆம். அப்படிதான்.

854
00:58:20,289 --> 00:58:23,918
எங்க அப்பா, அவரது செயலாளர், கேலீகை
திருமணத்தை நடத்தி வைக்க அனுப்பறேன்னார்.

855
00:58:24,001 --> 00:58:26,003
அவளுக்கு இந்த மாதிரி வேலைதான் உயிர்.

856
00:58:27,087 --> 00:58:30,174
அதனால, நீயும் உன் ஃபோன்
பேங்கிங் வேலைலருந்து விடுபட்டு,

857
00:58:30,257 --> 00:58:31,675
ஜிஆர்இல கவனம் செலுத்தலாம்.

858
00:58:31,759 --> 00:58:34,178
-ஆம். அது நல்ல யோசனையா தெரியுது.
-ஆம்.

859
00:58:34,845 --> 00:58:37,723
அதோட, நான் நமக்காக
அடுக்ககங்களையும் தேட தொடங்கலாம்.

860
00:58:38,641 --> 00:58:40,809
என்ன நடக்கப் போகுது,
யாருக்கு தெரியும், ஆனா…

861
00:58:42,061 --> 00:58:45,773
ஆம், நீ என்னை எங்கப்பா வீட்ல
வந்து பார்க்கலாம், அது சங்கடமா இருக்காது,

862
00:58:46,815 --> 00:58:50,027
என் அண்ணன் கூட, இங்கே
சிக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்ல.

863
00:58:54,782 --> 00:58:58,744
நான் உன்னோட திங்களன்று கூடவே வந்து
ஒரு ரெண்டு நாள் தங்கட்டுமா?

864
00:58:59,578 --> 00:59:01,163
சரி. சரி.

865
00:59:02,915 --> 00:59:04,250
உனக்கு ஒரு ஆச்சரியம் இருத்கு.

866
00:59:05,417 --> 00:59:06,418
என்னது?

867
00:59:08,587 --> 00:59:10,839
உனக்கு என் திருமணப் பரிசு.

868
00:59:11,423 --> 00:59:13,801
-நமது முதல் நடனப் பாட்டு.
-நிஜமாவா சொல்றே?

869
00:59:13,884 --> 00:59:15,844
பல வாரமா, இந்த யோசனை பிடிக்கலன்னு
சொன்னே.

870
00:59:15,928 --> 00:59:18,138
ஆம், ஆனா நான் உன்னை
காதலிக்கிறேனே, அதனாலதான்…

871
01:00:03,225 --> 01:00:07,062
நான் இன்னக்கி தடுமாறிட்டேன்,
ஆனா இப்படி இனி நடக்கக் கூடாது.

872
01:00:07,146 --> 01:00:10,566
ஏன்னா, தாயின் மரணப் படுக்கையில்
தரப்பட்ட சத்தியங்கள், புனிதமானவை.

873
01:00:11,400 --> 01:00:12,484
அவை மதிப்பு மிக்கவை.

874
01:00:24,079 --> 01:00:25,331
ஜெர் செல்லம் எங்கே?

875
01:00:27,374 --> 01:00:29,710
ஏதோ சாப்பிட வெளியே
போயிருக்கான். நான் போய்…

876
01:00:30,586 --> 01:00:32,004
அவனை கூப்பிட்டு வரவா?

877
01:00:33,130 --> 01:00:36,175
நாம உட்கார்ந்து பேசுவோம்,
நாம ரெண்டு பேர் மட்டும்.

878
01:00:38,385 --> 01:00:40,637
நானும் என் பெரிய குழந்தையும். இங்க வா.

879
01:00:43,807 --> 01:00:46,018
என் அழகிய பையனைப் பார்க்கணும்.

880
01:00:48,187 --> 01:00:49,521
இதோ பார்றா.

881
01:00:51,440 --> 01:00:53,108
உனக்குத் தெரியுமா, நீ பிறந்தப்போ,

882
01:00:54,318 --> 01:00:58,739
நீதான் உலகிலேயே ரொம்ப
முழுநிறைவான குழந்தைன்னு நினைச்சேனே?

883
01:01:01,909 --> 01:01:04,328
நான் குழந்தை மாடலிங் நிறுவனங்களை தேடினேன்.

884
01:01:06,830 --> 01:01:10,292
உலகுக்கு உன் அழகை
எடுத்துச் சொல்லாம விட்டா, அது வீண்.

885
01:01:13,337 --> 01:01:17,800
ஆனா, உன் குழந்தைப் பருவ படங்களை
பார்த்த பின்னர்தான், உண்மைல நீ கொஞ்சம்…

886
01:01:19,676 --> 01:01:21,261
அந்நியன் போலிருந்தது தெரிந்தது.

887
01:01:26,266 --> 01:01:28,143
ஆம். ஜெர் எப்பவுமே ரொம்ப அழகு.

888
01:01:28,227 --> 01:01:29,561
அவனுக்கும் தெரியும்.

889
01:01:31,438 --> 01:01:33,440
அதை அவன்
தொடக்கத்திலிருந்தே வளர்த்துகிட்டான்.

890
01:01:37,528 --> 01:01:39,279
ஜெர்ரை கூட்டி வரவா? போய் கூட்டி வர்றேனே?

891
01:01:39,363 --> 01:01:40,531
என்னோடவே இரு.

892
01:01:42,658 --> 01:01:45,661
கானி, உனக்குத் தெரியணும்…

893
01:01:47,788 --> 01:01:49,456
நான் சாக கவலைப் படல.

894
01:01:52,918 --> 01:01:57,506
நான் கவலைப் படாதது ஏன்னா,
நீங்க நல்லா இருப்பீங்கன்றதால.

895
01:01:58,257 --> 01:02:02,094
ஜெரமையாவுக்கு நீ இருப்பதால்,
நல்லதுதான்னு எனக்குத் தெரியுமே.

896
01:02:04,847 --> 01:02:08,684
உன்னை அண்ணனா பெற அவன்
கொடுத்து வெச்சிருக்கணும். அதிர்ஷ்டக்காரன்.

897
01:02:08,767 --> 01:02:09,852
அம்மா…

898
01:02:11,395 --> 01:02:13,272
நான் அவ்ளோ சிறப்பான அண்ணன் அல்ல.

899
01:02:13,355 --> 01:02:14,940
இல்ல. சிறப்பானவன்தான்.

900
01:02:15,858 --> 01:02:17,860
நீ எப்பவும் அவனைப் பார்த்துகிட்டே.

901
01:02:21,196 --> 01:02:23,615
கானி, இனியும்
தொடர்ந்து பார்த்துக்குவேதானே?

902
01:02:23,699 --> 01:02:24,908
சரி, கண்டிப்பா.

903
01:02:26,493 --> 01:02:28,370
-நன்றி.
-கண்டிப்பா. சத்தியமா.

904
01:02:32,708 --> 01:02:33,834
என் செல்லம் நீ.

905
01:02:33,917 --> 01:02:35,002
நீங்களும் என் செல்லம்.

906
01:02:38,714 --> 01:02:39,715
அம்மா…

907
01:02:40,716 --> 01:02:41,758
நான் உங்களை இழக்க தயாராகல.

908
01:02:53,937 --> 01:02:55,522
நான் என் வாக்கை காப்பாத்தினேன்.

909
01:02:55,606 --> 01:02:57,816
என்னால முடிந்த வழியில செய்தேன்,
கிளம்பி போய்.

910
01:02:58,358 --> 01:03:02,404
நான் ஒரு வேளை சொதப்பியிருக்கலாம்,
தோத்தாங்குளி, ஏமாத்தமா இருந்திருக்கலாம்,

911
01:03:02,488 --> 01:03:03,655
ஆனால் நான் பொய்யனல்ல.

912
01:03:05,115 --> 01:03:06,241
அந்த பொருளில் சொல்லல.

913
01:03:08,911 --> 01:03:10,829
நான் முன்னே சொன்னதை, அப்படி சொல்லல.

914
01:03:14,541 --> 01:03:15,751
இன்னும் நீ வேணும்.

915
01:03:17,920 --> 01:03:18,921
கண்டிப்பா, வேணும்.

916
01:03:21,048 --> 01:03:23,509
மோட்டலில், அந்த இரவு,
என்னால் தூங்க முடியல.

917
01:03:23,592 --> 01:03:25,636
அதையே திரும்ப திரும்ப
நினைச்சுகிட்டிருந்தேன், மனதில்.

918
01:03:26,261 --> 01:03:29,389
என் அம்மாவுக்கு நான் தந்த,
ஜெர்ரை பார்த்துக்குவேன்ற சத்தியத்தை.

919
01:03:30,307 --> 01:03:32,976
நீ தெரிஞ்சுக்க வேண்டியது,
நான் சொன்னதெல்லாம் சொன்னதல்ல.

920
01:03:34,520 --> 01:03:35,521
நல்லா இருக்கோம்.

921
01:03:37,439 --> 01:03:38,440
நாம் நண்பர்கள்.

922
01:03:40,025 --> 01:03:41,401
பெல்லியிடம் பொய்தான் சொன்னேன்.

923
01:03:42,861 --> 01:03:44,071
அந்த ஒரு முறை மட்டும்.

924
01:03:45,322 --> 01:03:46,573
நான் அப்படி சொல்லலன்னா?

925
01:03:47,616 --> 01:03:49,451
ஒருவேளை இப்போ எல்லாமே மாறியிருக்கும்,

926
01:03:50,953 --> 01:03:52,079
ஆனா அதப் பத்தி கவலையில்ல.

927
01:03:52,829 --> 01:03:55,040
இது இப்படிதான் இருக்கணும்.

928
01:03:55,123 --> 01:03:57,292
என்னால் கொடுக்க முடியாத
அனைத்தையும் அவன் தரலாம்.

929
01:03:57,834 --> 01:04:00,921
அவ அதுக்கு தகுதியானவ.
அவளுக்கு உலகையே தரலாம்.

930
01:05:55,452 --> 01:05:57,454
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்

