1
00:00:06,000 --> 00:00:06,840
இத்தொடர் பொழுதுபோக்கிற்கு,
கற்பனையே.

2
00:00:06,920 --> 00:00:07,760
பெயர்கள், இடங்கள்
எழுத்தாளர் கற்பனையே.

3
00:00:07,840 --> 00:00:08,680
ஒற்றுமை தற்செயலானது.
எந்த டயலாக்கிற்கும் யாரையும்

4
00:00:08,760 --> 00:00:09,600
புண்படுத்தும் நோக்கமில்லை.
எல்ஜிபிடிக்யூஐஏ+

5
00:00:09,680 --> 00:00:10,520
சமூக போராட்டங்களை
காட்டுகிறது.

6
00:00:10,600 --> 00:00:11,440
எல்ஜிபிடிக்யூஐஏ+ சமூகத்தை அவமதிக்கும்
எண்ணமில்லை.

7
00:00:11,520 --> 00:00:12,360
கடினமான மொழி உண்டு.

8
00:00:12,440 --> 00:00:13,280
போதை பொருட்களை, அமானுஷ்யத்தை
ஆதரிக்கப்படவில்லை.

9
00:00:13,360 --> 00:00:14,520
விலங்குகளுக்கு தீங்கிழைக்கவில்லை.
அமேசான் கருத்துகளை ஆதரிக்கவில்லை.

10
00:00:14,600 --> 00:00:15,880
குழந்தை நட்சத்திரங்கள் புண்படவில்லை.
பார்வையாளர்களுக்கு விவேகம் பரிந்துரை.

11
00:00:27,480 --> 00:00:28,720
ஹேய்! சத்தத்தை நிறுத்து.

12
00:00:29,680 --> 00:00:34,200
-பெரிய ட்ரக் வேணும்னு சொன்னேனே.
-உங்கப்பா பணம் தருவாரா?

13
00:00:34,280 --> 00:00:35,120
நகரு!

14
00:00:39,080 --> 00:00:41,360
நிறைய இடமிருக்கு. ஃப்ளாஷ்லைட்டை எடு.

15
00:00:44,160 --> 00:00:45,000
இங்கே.

16
00:00:47,080 --> 00:00:48,000
முட்டாள்,

17
00:00:53,920 --> 00:00:57,400
-தேவி பிரசாத் ஜி!
-விக்கி, கதவை திற!

18
00:00:58,000 --> 00:01:01,240
-என்னாச்சு?
-கதவை திறங்க.

19
00:01:01,320 --> 00:01:02,240
நீங்க நலமா?

20
00:01:58,360 --> 00:01:59,200
சார்!

21
00:01:59,280 --> 00:02:02,000
உள்ளே மாட்டிக்கிட்டீங்களா?
அதை திறக்க பாக்குறோம்

22
00:02:06,360 --> 00:02:08,400
என்னாச்சு, தேவி பிரசாத் ஜி?

23
00:02:08,480 --> 00:02:10,400
இருட்டுக்கு பயப்படறார் போல.

24
00:02:52,920 --> 00:02:56,520
அதுரா

25
00:02:59,680 --> 00:03:01,440
அங்கே எதையோ பாத்தேன்...

26
00:03:01,560 --> 00:03:04,160
பாருங்க, சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.

27
00:03:13,600 --> 00:03:14,920
-ரஜத்.
-ரொம்ப மோசமா...

28
00:03:15,400 --> 00:03:16,480
சைஃப், கவனமா இரு.

29
00:03:17,280 --> 00:03:19,320
கவனமா.

30
00:03:21,680 --> 00:03:24,440
இந்த பக்கம் திரும்பு. அங்கிருந்து
தொடரு.

31
00:03:29,600 --> 00:03:31,800
-மன்னிச்சிடு!
-ரஜத், உனக்கு பைத்தியமா?

32
00:03:31,880 --> 00:03:33,480
என்னை மன்னிச்சிடு!

33
00:03:33,560 --> 00:03:35,360
ரஜத், நீ என்ன பண்ணிட்டு இருக்கே?

34
00:03:41,720 --> 00:03:42,760
திரு. ஜெய்சிங்?

35
00:03:45,120 --> 00:03:47,480
உங்க சக பணியாளரிடம் எல்லாம்
சொல்லிட்டேன், சார்.

36
00:03:48,200 --> 00:03:51,480
உங்களையும் ரஜத்தையும் தவிர வேறு
யாராவது இருந்தாங்களா?

37
00:03:55,560 --> 00:03:56,840
யாரையாவது பாத்தீங்களா?

38
00:03:58,120 --> 00:03:59,200
இருட்டா இருந்தது.

39
00:04:00,120 --> 00:04:01,880
-ஏதோ கேட்டிருக்கலாம்..
-என்ன இது?

40
00:04:01,960 --> 00:04:03,920
ரஜத்தை காப்பாத்த முயற்சிக்கலையா?

41
00:04:04,000 --> 00:04:06,240
நிச்சயமா! என்ன கேள்வி இது?

42
00:04:06,320 --> 00:04:09,280
ப்ளீஸ் அதை திருப்பி குடுங்க.
முக்கியமா அழைக்கணும்.

43
00:04:09,960 --> 00:04:11,720
பதட்ட மருந்து
சாப்பிடறீங்கலே?

44
00:04:13,720 --> 00:04:18,080
உங்களையும் உங்க பேட்ச்மேட்ஸ்
பத்தியும் எல்லாம் தெரியும்.

45
00:04:18,600 --> 00:04:20,960
எனக்கு தெரியாததை கண்டுபிடிப்பேன்.

46
00:04:21,480 --> 00:04:23,000
ரஜத் எப்படி செத்தார்னு.

47
00:04:23,680 --> 00:04:28,200
அல்லது சுயாஷ் பையில் இருந்த
சீட்டுகளை யார் எழுதினாங்கன்னு.

48
00:04:30,920 --> 00:04:33,360
நீங்களே என்னிடம் சொல்ல
விரும்பினாலே ஒழிய.

49
00:04:35,240 --> 00:04:37,080
ஆஃபீஸர் பேடி, மன்னிக்கணும்.

50
00:04:37,160 --> 00:04:41,240
இது விக்காஸ் விர்மாணி, நீலகிரி
வேலி ஸ்கூலின் சட்ட ஆலோசகர்.

51
00:04:41,360 --> 00:04:45,360
உங்களுக்கு நினைவூட்டணும், அதிகாரி பேடி,
நாங்க முழுசா ஒத்துழைக்கிறோம்.

52
00:04:45,880 --> 00:04:49,440
உங்க கோரிக்கையின்படி, இன்று
மதியம், ஒவ்வொரு ஆசிரியரும்

53
00:04:49,520 --> 00:04:52,120
ஓல்ட் பாயும் உங்களிடம்
தனித்தனியா பேசுவாங்க.

54
00:04:52,200 --> 00:04:55,520
ஆனால் எங்க க்ளையன்ட்ஸை
இப்படி தொந்தரவு செய்யக் கூடாது...

55
00:04:55,600 --> 00:04:56,440
சார்!

56
00:04:56,520 --> 00:04:58,360
இன்னொரு உடல் இருக்கு. இங்கே வாங்க!

57
00:04:58,720 --> 00:05:02,760
-சரி, சார்.
-கபீர், மனோஜ், இங்கே வாங்க.

58
00:05:02,800 --> 00:05:04,080
அபுக்கு உதவுங்க.

59
00:05:06,640 --> 00:05:08,640
-அபு, இங்கே தோண்டு.
-சரி, சார்.

60
00:05:08,720 --> 00:05:10,080
தோண்ட ஆரம்பி.

61
00:05:12,160 --> 00:05:13,040
வெளியே எடு.

62
00:05:14,480 --> 00:05:15,560
தோண்டு, தோண்டு.

63
00:05:18,200 --> 00:05:19,080
சரி.

64
00:05:19,720 --> 00:05:21,080
வெளியே எடு.

65
00:05:21,160 --> 00:05:22,680
நீங்க இந்த ஸ்லாபை நீக்குங்க.

66
00:05:23,360 --> 00:05:24,360
வெளியே எடு.

67
00:05:25,360 --> 00:05:28,400
தோண்டு. அந்த பக்கமும்.
ஆமாம், பின்னாலையும்.

68
00:05:32,200 --> 00:05:33,360
கயிற்றை வெளியே எடு.

69
00:05:39,000 --> 00:05:40,600
இது பள்ளி சீருடை.

70
00:05:40,680 --> 00:05:42,400
மாணவரின் உடலா இருக்கலாம்.

71
00:05:44,600 --> 00:05:46,240
உடலை மெதுவா வெளியே எடு.

72
00:05:47,280 --> 00:05:48,760
ஆதார பையை எடுத்துட்டு வா.

73
00:05:50,480 --> 00:05:53,240
கவனமா. கவனமா.

74
00:05:56,640 --> 00:05:58,000
மண்ணை தட்டு.

75
00:06:11,000 --> 00:06:11,920
மண்ணை அகற்று.

76
00:06:47,720 --> 00:06:51,520
சார்! புது கட்டடத்தில் ஏதோ நடந்திருக்கு.

77
00:06:51,600 --> 00:06:53,360
ஒரு மாணவனோட உடலை கண்டிருக்காங்க.

78
00:06:55,760 --> 00:06:58,680
யார் உடல்னு தெரியலை,
ஆனால் ஒரு உடல் இருக்கு.

79
00:07:38,400 --> 00:07:39,240
ஆது!

80
00:07:48,320 --> 00:07:49,160
நினாத்!

81
00:08:19,960 --> 00:08:23,760
நரம்பியல் நிபுணரிடம் ஆலோசிக்கணும்.
டாக்டர் கோம்ஸிடம் பேசினேன்.

82
00:08:24,320 --> 00:08:26,160
மருத்துவமனை மார்கெட் ரோடில் இருக்கு.

83
00:08:26,640 --> 00:08:28,640
இன்றே வேதாந்தை கூட்டி போகணும்.

84
00:08:29,120 --> 00:08:33,920
-நான் டீனிடம் பேசறேன்.
-சுப்ரியா, டீனிடம் வேதாந்துக்கு நேரமில்லை.

85
00:08:34,760 --> 00:08:36,400
நீங்கதான் முடிவெடுக்கணும்.

86
00:08:37,520 --> 00:08:41,000
இங்கே என்ன நடக்குதுன்னே புரியலை.

87
00:08:41,760 --> 00:08:44,320
இன்று ஒரு மாணவனோட உடல்
கிடைச்சதா சொல்றாங்க.

88
00:08:44,400 --> 00:08:47,240
ஒரு மாணவனை பல வருஷமா காணும்னா,

89
00:08:48,080 --> 00:08:50,240
ஏன் யாரும் அதைப்பத்தி பேசலை?

90
00:08:52,880 --> 00:08:56,640
எப்படியும், நான் கேட் பாஸ், காருக்கு
ஏற்பாடு செய்யறேன்.

91
00:08:57,160 --> 00:08:58,520
-இன்ஸ்பெக்டர்.
-சொல்லுங்க.

92
00:08:58,600 --> 00:09:01,280
ப்ளீஸ் என்னோட வாங்க,
நான் ஆவணங்களை தர்றேன்.

93
00:09:31,640 --> 00:09:32,480
என்ன ஆச்சு?

94
00:09:34,720 --> 00:09:35,520
நீ நலமா?

95
00:09:49,160 --> 00:09:51,840
-டீன் பெற்றோரிடம் பேசுவார்.
-எனக்கு புரியுது.

96
00:09:51,880 --> 00:09:53,360
எங்களுக்கு நேரம் குடுங்க.

97
00:09:53,440 --> 00:09:55,520
ஆமா, குழந்தைகள் பாதுகாப்பா இருக்காங்க.

98
00:09:55,640 --> 00:09:57,880
ப்ளீஸ், ஆஃபீஸர் பேடி, புரிஞ்சுக்கோங்க.

99
00:09:58,000 --> 00:09:59,880
பசங்களை அனுப்பறதுதான் முக்கியம்.

100
00:10:00,000 --> 00:10:02,640
பெற்றோர், இயக்குனர் குழுன்னு
எனக்கு அழுத்தம்.

101
00:10:02,760 --> 00:10:05,520
பசங்க, ஓல்ட் பாய்ஸை
எப்படி வெச்கிருக்கிறது?

102
00:10:05,600 --> 00:10:07,840
திரு. சுவாமி, நீங்க எல்லாரும்தான்
பொறுப்பு.

103
00:10:08,400 --> 00:10:12,320
என் விசாரணை முடியும்வரை யாரும்
போக முடியாது. புரியுதா?

104
00:10:12,400 --> 00:10:13,760
-ஆமாம்.
-சார்.

105
00:10:15,320 --> 00:10:16,160
திருமதி சின்ஹா?

106
00:10:16,240 --> 00:10:20,520
14 லிருந்து 20 வயதுவரை காணாமல்
போன ஆண்களின் பட்டியல் வேணும்,

107
00:10:20,600 --> 00:10:25,000
நீலகிரியின் 100 கிலோமீட்டர் சுற்று
வட்டத்தில், கடந்த 10, 15 ஆண்டுகளில்.

108
00:10:25,080 --> 00:10:26,000
சார்.

109
00:10:28,040 --> 00:10:30,960
-ஓல்ட் பாய்ஸை விசாரிக்கறீங்களா?
-ஆமாம், சார்.

110
00:10:31,080 --> 00:10:33,200
நான்
வீட்டுக்கு போகணும்.

111
00:10:33,280 --> 00:10:35,200
அறுவை சிகிச்சை இருக்கு.
அங்கிருக்கணும்.

112
00:10:35,280 --> 00:10:38,240
அது ரொம்ப முக்கியம்.
ஏற்கனவே சொல்லியிருக்கேன்.

113
00:10:38,320 --> 00:10:41,120
அப்பாவிடம் பேசினேன். கார் அனுப்பறார்.

114
00:10:42,720 --> 00:10:45,160
-சரி, சார்.
-ஆஃபீஸர் பேடி, என்ன நடக்குது?

115
00:10:45,240 --> 00:10:47,880
பசங்க, ஓல்ட் பாய்ஸை அங்கே
நிறுத்தி வைக்க முடியாது.

116
00:10:48,000 --> 00:10:50,520
சார், இரண்டு தற்கொலைகள், இப்ப
ஒரு உடல்.

117
00:10:51,880 --> 00:10:54,720
விசாரணை செயல்முறை
உங்களுக்கு தெரிந்தது தானே.

118
00:10:54,760 --> 00:10:56,880
நம்ம வக்கீல் வர்றார். கவலை படாதே.

119
00:10:56,960 --> 00:10:58,520
மாலையில் கிளம்புவோம்.

120
00:10:58,600 --> 00:10:59,960
பசங்க போகலாம்.

121
00:11:00,920 --> 00:11:05,000
ஊழியர்கள், ஓல்ட் பாய்ஸை
கிளம்ப அனுமதிச்சா,

122
00:11:06,240 --> 00:11:08,480
இந்த வழக்கு அவ்வளவுதான், சார்.

123
00:11:09,200 --> 00:11:10,760
மாள்விகா ஜாம்வால். வாங்க.

124
00:11:10,840 --> 00:11:13,960
டீன், நீங்க மாணவர்களை அனுப்ப
ஏற்பாடு செய்யலாம்.

125
00:11:14,680 --> 00:11:15,520
இரு.

126
00:11:15,600 --> 00:11:17,000
மிக்க நன்றி, ஆபீசர்.

127
00:11:17,080 --> 00:11:18,920
ஓல்ட் பாய்ஸும், ஊழியர்களும் கூடாது.

128
00:11:20,480 --> 00:11:22,280
திரு. ஐயர், மிஸ். நேஹா, வாங்க.

129
00:11:22,360 --> 00:11:24,720
எங்க நண்பனை இழந்து 12 மணி நேரம் கூட ஆகலை.

130
00:11:25,320 --> 00:11:30,000
யாரும் உங்க கேள்விகளுக்கு பதில்
சொல்லும் மனநிலையில் இல்லை.

131
00:11:30,560 --> 00:11:32,880
உங்களுக்கு உங்க விசாரணை பத்திதான் கவலை.

132
00:11:33,640 --> 00:11:36,840
குழந்தையோட உடல் வளாகத்தில்
கிடைக்கிறதுக்கு அர்த்தம் தெரியுமா?

133
00:11:36,920 --> 00:11:38,200
நீங்க சொல்லுங்க.

134
00:11:39,640 --> 00:11:41,600
ஜாம்வால்களுக்கு ஆசை,
பிறருக்கு

135
00:11:42,400 --> 00:11:44,080
அவங்க வேலை கத்து தர.

136
00:11:44,560 --> 00:11:45,920
சரியா?

137
00:11:46,000 --> 00:11:48,120
எங்க குடும்ப பெயர் மீது வெறி.

138
00:11:49,160 --> 00:11:54,200
நிச்சயமா, இந்த வழக்கில் ஜாம்வால்
பெயரை இணைச்சா அது பெரிசாகும்.

139
00:11:54,280 --> 00:11:57,640
அதனாலத்தான் ஒரு குழந்தையின்
மரணத்தில் கவனம் செலுத்துவதற்கு

140
00:11:57,720 --> 00:12:00,760
பதிலா, தற்கொலையை கொலைன்னு
மாத்த் முயற்சி செய்யறீங்க.

141
00:12:00,840 --> 00:12:02,200
திரு. ஜாம்வால்.

142
00:12:02,280 --> 00:12:06,440
என் குடும்ப பெயரை நீங்க மறந்தா,
உங்களுக்கு நினைவு வரும்

143
00:12:07,000 --> 00:12:09,760
இந்த பிள்ளைங்களை பாதுகாக்கறது
உங்க கடமைன்னு.

144
00:12:11,680 --> 00:12:13,760
-திரு. ஜாம்வால்.
-விசாரணையை நிறுத்துங்க.

145
00:12:13,840 --> 00:12:15,960
ஆஃபீஸர் பேடி இந்த பிள்ளைங்களை அனுப்ப

146
00:12:16,040 --> 00:12:18,640
அனுமதி தந்தார்னு சொல்ல முயற்சித்தேன்.

147
00:12:23,360 --> 00:12:24,840
நீங்க மறந்திடுறீங்க

148
00:12:24,920 --> 00:12:26,680
நாங்க முட்டாள்கள் இல்லைன்னு.

149
00:12:28,080 --> 00:12:29,840
நான் நீதிபதியிடம் பேசியாச்சு.

150
00:12:30,520 --> 00:12:31,720
நீதிமன்ற ஆணை இருக்கு.

151
00:12:33,240 --> 00:12:34,320
ஊழியர்கள்...

152
00:12:35,440 --> 00:12:36,600
மற்றும் ஓல்ட் பாய்ஸ்

153
00:12:38,320 --> 00:12:40,480
வளாகத்தை விட்டுப் போக முடியாது.

154
00:12:42,960 --> 00:12:45,160
முடிஞ்சதை செய்ங்க.

155
00:12:45,240 --> 00:12:47,000
விசாரணை இருக்காது.

156
00:12:54,280 --> 00:12:56,080
நல்ல செய்தி. அனுமதி இருக்கு.

157
00:13:00,160 --> 00:13:01,000
சுப்ரியா.

158
00:13:04,160 --> 00:13:05,600
கண்டெடுக்கப்பட்ட உடல்

159
00:13:06,720 --> 00:13:07,800
நினாதோடதா இருக்கும்.

160
00:13:08,560 --> 00:13:12,520
அப்படி நினைப்பீங்கன்னு தெரியும். அவன்
பஸ்ஸிலிருந்து காணாமல் போனானீங்க.

161
00:13:12,600 --> 00:13:14,920
-பள்ளியில் எப்படி?
-யார் பார்த்தது?

162
00:13:15,000 --> 00:13:15,840
வியாஸ்?

163
00:13:17,160 --> 00:13:18,800
இவ்விஷயத்தில் நான் சரி.

164
00:13:19,480 --> 00:13:20,720
வேதாந்த் நிஜமா...

165
00:13:23,000 --> 00:13:23,920
நினாத்தான்.

166
00:13:24,840 --> 00:13:26,160
ஆதிராஜ்!

167
00:13:27,680 --> 00:13:29,560
நீங்களும் பேய்களை பத்தி பேசறீங்களா?

168
00:13:30,480 --> 00:13:31,840
தெரியலையா, சுப்ரியா?

169
00:13:33,800 --> 00:13:34,920
விஷயம் தெரியுது.

170
00:13:35,720 --> 00:13:36,760
நிறைய செய்யறான்.

171
00:13:37,360 --> 00:13:38,560
நீங்க அதை உணரலையா?

172
00:13:44,520 --> 00:13:46,480
அவனை நிபுணரிடம் கூட்டி
போறேன்.

173
00:13:46,560 --> 00:13:47,400
சுப்ரியா.

174
00:13:48,160 --> 00:13:49,880
இப்படி அவனை காப்பாத்த
முடியாது.

175
00:13:57,600 --> 00:13:59,480
நீந்தும் போதும் எனக்கு
காயப்படலை.

176
00:13:59,560 --> 00:14:01,960
நினாத் என்னிடம் தொடர்பு கொள்ள
முயன்றான்.

177
00:14:02,480 --> 00:14:04,480
நினாதுக்கு இப்படி மச்சம் உண்டு.

178
00:14:19,000 --> 00:14:20,520
அவனுக்கும் இருக்கு, இல்ல?

179
00:14:23,240 --> 00:14:24,800
இதை எப்படி விளக்குவீங்க?

180
00:14:25,320 --> 00:14:27,600
வேதாந்துக்கும் எனக்கும் நினாதோட மச்சம்.

181
00:14:28,120 --> 00:14:30,160
-அது தற்செயல்.
-அப்ப ஷேடோ பாய்?

182
00:14:30,240 --> 00:14:32,360
வேதாந்துக்கு நாவல் எப்படி கிடைச்சுது?

183
00:14:32,440 --> 00:14:33,400
நீங்க சொல்லுங்க.

184
00:14:33,480 --> 00:14:36,000
ஏன்னா அது என் கதையில்ல, நினாதோடது!

185
00:14:37,360 --> 00:14:40,320
நினாத் அவனுக்காக போராடறதால
வேதாந்த் அதை நம்பறான்!

186
00:14:45,800 --> 00:14:48,840
உலகில் சில விஷயங்களை விளக்க
முடியாது, சுப்ரியா.

187
00:14:52,200 --> 00:14:54,320
ஒரு முறை நினாதை தனியா விட்டேன்.

188
00:14:55,240 --> 00:14:58,600
இந்த முறை தனியா விட மாட்டேன்.
அவனுக்காக போராடுவேன்.

189
00:15:00,200 --> 00:15:01,120
ஆதிராஜ், இருங்க!

190
00:15:01,200 --> 00:15:02,040
நினாத்!

191
00:15:02,480 --> 00:15:04,080
-ஆதிராஜ், நில்லுங்க!
-நினாத்!

192
00:15:04,840 --> 00:15:06,000
நினாத்!

193
00:15:06,080 --> 00:15:08,440
-நீங்க மேலே போக முடியாது.
-ப்ளீஸ், சார்.

194
00:15:08,520 --> 00:15:11,080
-நீங்க போக முடியாது, சார். ஒரு நிமிஷம்.
-நினாத்!

195
00:15:11,160 --> 00:15:12,960
-கேளுங்க. சார்!
-என்னை விடுங்க!

196
00:15:13,760 --> 00:15:14,720
நினாத்!

197
00:15:16,520 --> 00:15:17,480
நான் இருக்கேன்!

198
00:15:17,560 --> 00:15:20,000
இந்த முறை உன்னை தனியா விட மாட்டேன்.

199
00:15:20,080 --> 00:15:22,840
உனக்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்கிறவரை
விட மாட்டேன்.

200
00:15:29,840 --> 00:15:30,680
நீ நலமா?

201
00:15:35,520 --> 00:15:38,400
மிஸ், அபி யாரு?

202
00:15:43,160 --> 00:15:45,400
என் வீட்டு படத்தில் அவன் பெயரை பாத்தியா?

203
00:15:46,040 --> 00:15:46,920
அவன் என் மகன்.

204
00:15:50,480 --> 00:15:53,200
நான் உங்களை நம்ப கூடாதுன்னு சொல்றான் ஏன்னா

205
00:15:53,720 --> 00:15:57,440
நீங்க அபியை நடத்தின மாதிரி
என்னையும் நடத்துவீங்கன்னு.

206
00:15:58,720 --> 00:15:59,600
என்ன செய்தீங்க?

207
00:16:06,760 --> 00:16:08,680
திரு. சௌஹானின் புத்தக கடை தெரியுமா?

208
00:16:08,760 --> 00:16:11,640
30 நிமிஷத்தில் போய்
பஸ் டிக்கட்டை வாங்கி வா.

209
00:16:13,480 --> 00:16:16,680
அனுமதி சீட்டு வாங்கிக்கோ. பள்ளியை
விட்டுப் போக அது தேவைப்படும்.

210
00:16:16,760 --> 00:16:17,600
சரி, மேடம்.

211
00:16:17,680 --> 00:16:20,360
திரு. சந்திர ப்ரகாஷ், அவருக்கு
கேட் பாஸ் குடுங்க.

212
00:16:23,480 --> 00:16:24,640
திரு. சந்திர ப்ரகாஷ்?

213
00:16:25,120 --> 00:16:26,440
எங்கே இருக்கீங்க?

214
00:16:26,520 --> 00:16:27,560
என்ன?

215
00:16:28,920 --> 00:16:34,080
நீங்க பார்த்தது டீன் வியாஸ் பேய் இல்லை,
அந்த பையனோடதுன்னு நினைக்கிறேன்.

216
00:16:34,800 --> 00:16:36,240
அது பல வருடங்கள் முன்பு.

217
00:16:36,840 --> 00:16:38,560
பள்ளியில் அப்பத்தான் சேந்தேன்.

218
00:16:38,640 --> 00:16:42,520
ஒரு மாணவனை காணவில்லை. அவன்
பெற்றோர் தினமும் வருவாங்க,

219
00:16:43,040 --> 00:16:46,480
அவனை தேடி. அவன் நம்ம பஸ்ஸில்
ஏறினான், ஆனால் வீட்டுக்கு போகலை.

220
00:16:46,560 --> 00:16:48,680
அவன் பெயர் நினைவில்லை.

221
00:16:51,960 --> 00:16:54,000
திரு. சந்திர ப்ரகாஷ்! நில்லுங்க்!

222
00:17:16,680 --> 00:17:17,560
ஹோமோ!

223
00:17:17,640 --> 00:17:19,960
நீ மாள்விகாவை அழ வெச்சே.

224
00:17:20,520 --> 00:17:22,920
உனக்கு பாடம் கற்பிச்சாகணும்.

225
00:17:25,080 --> 00:17:27,760
உன்னை எல்லாரும் மறந்துடுவாங்க.

226
00:17:28,320 --> 00:17:29,400
போயாச்சு.

227
00:17:45,560 --> 00:17:48,480
ஒரு நாள் என்னைப் போல
சக்தியில்லாம இருப்பே, தேவ்.

228
00:17:49,160 --> 00:17:53,760
நீ, உன் பெயர், உன் குடும்பம், உன்
காவலர்கள் கூட உன்னை காப்பாத்த முடியாது!

229
00:17:56,440 --> 00:17:58,560
அந்த நாளை நீ பாக்க முடியாது.

230
00:18:43,000 --> 00:18:45,720
ஆதிராஜ். ஆதிராஜ், எழுந்திரு.

231
00:18:47,480 --> 00:18:48,320
எழுந்திரு.

232
00:18:49,240 --> 00:18:50,160
வா.

233
00:18:55,760 --> 00:18:57,240
நானும் அவனை தேடறேன்.

234
00:18:57,720 --> 00:18:58,560
நினாதை.

235
00:19:01,240 --> 00:19:02,080
வா.

236
00:19:02,720 --> 00:19:03,760
அட வாங்க!

237
00:19:11,160 --> 00:19:14,560
அன்றிலிருந்து, நான் அந்த பெயரை
யோசிப்பதை நிறுத்தவே இல்லை.

238
00:19:15,320 --> 00:19:16,160
நினாத்.

239
00:19:17,200 --> 00:19:19,920
அவன் ஆவணங்களை தேடினீங்க.

240
00:19:21,040 --> 00:19:22,080
அவன் என் நண்பன்.

241
00:19:23,000 --> 00:19:25,800
எல்லாரும் பள்ளியின் கடைசி
நாளன்று வீட்டுக்கு போனோம்.

242
00:19:29,680 --> 00:19:31,040
அவன் போகலை.

243
00:19:32,240 --> 00:19:34,800
புதிய கட்டடத்தில் கண்டெடுத்த உடல்,

244
00:19:36,400 --> 00:19:37,680
அது அவனோடதென தெரியும்.

245
00:19:39,040 --> 00:19:40,720
இப்ப எல்லாம் புரியுது.

246
00:19:42,440 --> 00:19:46,640
இந்த சம்பவங்கள் எப்படி அந்த
கட்டடத்தோட இணைந்திருக்கென.

247
00:19:48,200 --> 00:19:51,720
ஏன் டீன் வியாஸ் புது கட்டடம்
கட்டுவதை எதிர்த்தாரென.

248
00:19:53,000 --> 00:19:55,320
நினாத் அங்கு புதைந்திருப்பது தெரியும்.

249
00:19:57,000 --> 00:20:01,560
பள்ளி காவலர்கள் அன்று அவர் காட்டில்
உலாவுவதை பார்த்திருக்காங்க.

250
00:20:02,320 --> 00:20:06,720
காலையில், காட்டுக்கு போகும்
வழியில் சேறும் ஃப்ளாஷ்லைட்டும் இருந்தது.

251
00:20:07,280 --> 00:20:08,400
அவர் பயந்திருந்தார்.

252
00:20:09,640 --> 00:20:12,000
புதிய கட்டட வேலை மறுநாள்
தொடங்க இருந்தது.

253
00:20:13,080 --> 00:20:15,080
நினாத் உடலை நகர்த்த பாத்திருக்கார்.

254
00:20:16,160 --> 00:20:19,040
ஆனால் நினாத் ஆவியை தூண்டி விட்டார்.

255
00:20:20,160 --> 00:20:22,880
கோபம் கொண்ட ஆவி,

256
00:20:23,480 --> 00:20:27,280
15 வருடங்களாக பழிவாங்க காத்திருந்தது.

257
00:20:28,800 --> 00:20:31,400
நினாத் அவனை கொடுமை
படுத்தினவங்களை தண்டிக்கிறான்.

258
00:20:31,920 --> 00:20:37,080
டீன், சுயாஷ், ரஜத், எல்லாரும் இதில்
எப்படியோ ஈடுபட்டிருக்காங்க.

259
00:20:38,320 --> 00:20:41,000
இதைப்பற்றி சொன்னால்
என்னை பைத்தியமென நினைப்பாங்க.

260
00:20:42,560 --> 00:20:44,080
மகாபாரதம் படிச்சிருக்கியா?

261
00:20:45,080 --> 00:20:48,640
நமக்கு வாழ்க்கையில் இரு தேர்வுகள் இருக்கு.

262
00:20:50,680 --> 00:20:54,320
ஒன்று உங்க சூழ்நிலைகளை ஏற்கணும், அல்லது...

263
00:20:54,400 --> 00:20:57,040
சூழலை மாற்ற பொறுப்பு எடுத்துக்கணும்.

264
00:20:58,640 --> 00:21:01,760
உங்களுக்கு மட்டும்தான் நினாதை
புரியும், ஆதிராஜ்.

265
00:21:03,480 --> 00:21:04,320
அதை யோசிங்க.

266
00:21:05,200 --> 00:21:08,920
அன்று நினாதுக்கு என்ன ஆச்சு?

267
00:21:11,080 --> 00:21:13,240
வியாஸ் அவனை பஸ் ஸ்டாபுக்கு
கூட்டி போகலை.

268
00:21:16,320 --> 00:21:20,440
நினாத் டிக்கட்டை வாங்கினவருக்கு
அவன் ஏற மாட்டான்னு தெரிந்திருக்கு.

269
00:21:21,320 --> 00:21:24,680
இப்ப இந்த உண்மையை வெளியே
கொண்டு வருவது உங்க பொறுப்பு.

270
00:21:28,160 --> 00:21:29,640
நான் இங்கிருந்து போகணும்.

271
00:21:33,560 --> 00:21:34,400
கேட் பாஸ்

272
00:21:34,480 --> 00:21:37,480
சார், நான் பசங்களுக்கு டிக்கட்டை
வாங்க வந்தேன்.

273
00:21:38,160 --> 00:21:39,000
கடையிலிருந்து.

274
00:21:39,560 --> 00:21:41,320
இது என்னது?

275
00:21:41,400 --> 00:21:43,880
இறக்க நேரமில்லை.

276
00:21:44,400 --> 00:21:45,640
திற.

277
00:21:47,520 --> 00:21:48,760
ஓட்டு. போலாம்.

278
00:21:50,080 --> 00:21:52,280
போலீஸ்

279
00:21:58,760 --> 00:22:02,360
தேவி பிரசாத், பள்ளியில் ஏதோ நடந்தது.

280
00:22:02,440 --> 00:22:04,480
இன்னொரு ஓல்ட் பாய் தற்கொலை.

281
00:22:04,560 --> 00:22:07,680
அது மட்டுமில்லை. பள்ளிக்குள்
ஒரு உடலும் கண்டெடுத்தாங்க.

282
00:22:07,760 --> 00:22:10,920
அது ஒரு மாணவனோடது என்கிறாங்க.

283
00:22:11,040 --> 00:22:14,920
வளாகத்திற்கு யாரும் வந்து போவதற்கு
நீதிமன்றம் தடை.

284
00:22:15,720 --> 00:22:16,560
தேவி பிரசாத்

285
00:22:16,640 --> 00:22:19,800
நீதிமன்ற ஆணையில் 25 ஓல்ட் பாய்ஸின்
பெயர்களும் இருக்கும்லே

286
00:22:19,880 --> 00:22:21,440
ஆமாம், பாத்துக்கறோம், சார்.

287
00:22:21,520 --> 00:22:22,360
திரு. ஜாம்வால்...

288
00:22:26,160 --> 00:22:27,000
திரு. ஜாம்வால்?

289
00:22:27,920 --> 00:22:31,880
உங்களை வளாகத்திலிருந்து எப்படியாவது வெளியே
அனுப்பறோம். கவலை படாதீங்க.

290
00:22:33,920 --> 00:22:37,920
டீன் சுவாமி, எனக்கு கவலை இல்லை.
நான் பயந்து ஓட மாட்டேன்.

291
00:22:38,440 --> 00:22:40,480
ஆஃபீஸர் பேடி முன்னாலேயே கிளம்புவேன்.

292
00:22:41,720 --> 00:22:43,160
அவர் எங்களை நிறுத்தட்டுமே.

293
00:22:48,640 --> 00:22:51,560
எதுவும் நடக்காது, நான் உறுதியளிக்கிறேன்.

294
00:22:51,640 --> 00:22:53,760
இது பாதுகாப்பான அனுபவம்.

295
00:22:54,280 --> 00:22:57,720
எல்லாம் நல்லா இருக்கும்னு நம்ப
வேண்டியது ரொம்ப முக்கியம்.

296
00:22:57,800 --> 00:23:00,280
உட்காருங்க. கொஞ்ச நேரத்தில்
பாக்கிறேன்.

297
00:23:12,400 --> 00:23:15,320
"மோர்ஸ் நான் எஸ்ட் ஃபினிஸ். "

298
00:23:18,080 --> 00:23:19,760
மரணம் முடிவல்ல.

299
00:23:20,720 --> 00:23:22,800
என் மகள் இறந்த பிறகு,

300
00:23:23,440 --> 00:23:24,960
நானும் தொலைந்தேன்.

301
00:23:26,680 --> 00:23:28,520
அப்ப எனக்கு புரியலை,

302
00:23:29,640 --> 00:23:31,360
ஆனா இப்ப நம்பறேன்.

303
00:23:32,920 --> 00:23:34,800
"மரணம் முடிவல்ல. "

304
00:23:42,920 --> 00:23:45,280
பேசணும்போல இருந்தா...

305
00:23:49,720 --> 00:23:50,640
என்னிடம் இல்லை.

306
00:23:51,840 --> 00:23:54,400
ஆனா நீ இழந்தவர்களிடம்.

307
00:23:56,120 --> 00:23:58,960
உன் செய்தியை நான் சொல்ல முடியும்.

308
00:24:09,440 --> 00:24:10,280
சுப்ரியா?

309
00:24:11,000 --> 00:24:11,920
சுப்ரியா.

310
00:24:13,960 --> 00:24:14,800
சுப்ரியா.

311
00:24:15,600 --> 00:24:19,520
ஆச்சு. நம்ம நர்சரி முடிஞ்சாச்சு.

312
00:24:19,600 --> 00:24:23,080
-பிரமாதம். இது உனக்கு.
-நன்றி.

313
00:24:26,760 --> 00:24:28,480
சுப்ரியா கோஷ்
அனிருத் சேன் - அபி

314
00:24:28,560 --> 00:24:30,440
ஓ, என் குழந்தை.

315
00:24:30,520 --> 00:24:32,320
அடடே!

316
00:24:32,400 --> 00:24:34,600
உனக்கு சின்ன கைகள், கண்ணு.

317
00:24:35,520 --> 00:24:37,000
கேமராவை பாரு.

318
00:24:37,080 --> 00:24:40,840
தயாரா? மூன்று, இரண்டு, ஒன்று.
சிரிங்க!

319
00:24:41,600 --> 00:24:43,040
ரொம்ப நல்லது.

320
00:24:43,720 --> 00:24:44,560
சுப்ரியா.

321
00:24:48,680 --> 00:24:49,680
சுப்ரியா?

322
00:24:52,680 --> 00:24:53,520
சுப்ரியா!

323
00:24:56,760 --> 00:24:58,320
என்ன ஆச்சு?

324
00:25:01,040 --> 00:25:01,960
வாயை மூடு!

325
00:25:02,960 --> 00:25:04,000
ஏன் கத்தறே?

326
00:25:13,720 --> 00:25:15,800
உன்னையும் அபியும் பத்தி
ரொம்ப கவலை.

327
00:25:16,200 --> 00:25:19,040
இவை பிரசவத்திற்கு பிறகான
மனஅழுத்தத்தின் அறிகுறிகள்.

328
00:25:19,120 --> 00:25:21,600
-நீ உளவியலாளரை பாக்கணும்.
-நான் அவன் தாய்!

329
00:25:21,680 --> 00:25:23,240
தெரிஞ்சுதான் செய்யறேன், சரியா?

330
00:25:47,080 --> 00:25:51,200
சுப்ரியா, அபி எங்கே? தூங்கறானா?

331
00:25:51,280 --> 00:25:52,880
அபி, மகனே?

332
00:25:53,280 --> 00:25:55,240
ஹேய், என் குழந்தை.

333
00:25:56,160 --> 00:25:57,640
அபி, மகனே!

334
00:26:01,040 --> 00:26:01,880
அபி?

335
00:26:05,400 --> 00:26:06,240
அபி?

336
00:26:11,800 --> 00:26:13,160
அபி.

337
00:26:14,840 --> 00:26:16,000
அபி...

338
00:26:18,960 --> 00:26:19,800
அபி!

339
00:26:20,920 --> 00:26:21,760
சுப்ரியா!

340
00:26:22,840 --> 00:26:24,280
நீ என்ன செஞ்சிருக்கே?

341
00:26:24,360 --> 00:26:25,240
அபி, மகனே!

342
00:26:34,560 --> 00:26:35,400
அபி!

343
00:26:36,000 --> 00:26:36,840
அபி!

344
00:26:38,160 --> 00:26:40,080
என்ன ஆச்சு? சே!

345
00:26:40,680 --> 00:26:41,520
சே!

346
00:26:44,920 --> 00:26:46,240
அபி!

347
00:26:52,280 --> 00:26:56,000
அனி, சார்! அனி, சார்! அனி, சார்!

348
00:26:56,080 --> 00:26:58,800
-யாரையாவது கூப்பிடு! சீக்கிரம்!
-சுப்ரியா மேடம்!

349
00:26:58,880 --> 00:27:00,240
சுப்ரியா மேடம்!

350
00:27:29,840 --> 00:27:31,560
நன்றி, மேடம்.

351
00:27:31,640 --> 00:27:33,040
சௌஹான்

352
00:27:33,120 --> 00:27:34,040
திரு. சௌஹான்.

353
00:27:34,120 --> 00:27:36,960
-ஆமாம்.
-ஆதிராஜ் ஜெய்சிங், 2007 பேட்ச்.

354
00:27:37,440 --> 00:27:39,120
-கர்னல் ஜெய்சிங் பேரன்?
-ஆமாம்.

355
00:27:39,680 --> 00:27:42,840
உங்களை ஒன்னு கேட்கணும்.
நினாத் ராமனை நினைவிருக்கா?

356
00:27:43,480 --> 00:27:44,600
என் பேட்ச்.

357
00:27:45,160 --> 00:27:46,480
-ராமனின் மகன்.
-ஆமாம்.

358
00:27:47,240 --> 00:27:49,920
அவன் செய்தது தப்பு, வீட்டிலிருந்து
ஓடி போனது.

359
00:27:50,680 --> 00:27:55,120
கடைசி நாளன்று, என் கடைக்கு வந்து
ரிப்பனெல்லாம் வாங்கிட்டு போனான்.

360
00:27:55,920 --> 00:27:57,440
இன்னும் அதுக்கு பணம் தரலை.

361
00:27:58,200 --> 00:28:01,520
திரு. ராமன் தரேன்னார், ஆனா
நான் மறுத்துட்டேன்.

362
00:28:02,040 --> 00:28:03,440
நினாத்தான் தரணும்.

363
00:28:04,840 --> 00:28:08,640
திரு. சௌஹான், அப்ப உங்களிடமிருந்து
டிக்கட் வாங்கினாங்களா?

364
00:28:08,720 --> 00:28:09,560
ஆமா.

365
00:28:09,640 --> 00:28:12,040
நினாத் டிக்கட்டும் இங்கே
வாங்கினாங்களா?

366
00:28:12,120 --> 00:28:14,640
ஆமாம். தேவி பிரசாத்
வாங்க வந்தார்.

367
00:28:15,400 --> 00:28:18,800
நினைவிருக்கு ஏன்னா அன்னிக்கி
அவருக்கு விபத்து.

368
00:28:19,520 --> 00:28:20,920
அவர் மீதெல்லாம் சேறு,

369
00:28:21,000 --> 00:28:22,640
நொண்டிக்கிட்டே வந்தார்.

370
00:28:23,360 --> 00:28:25,480
நான் வாங்கலை.
கோச் வியாஸ் கூட்டி போனார்.

371
00:28:25,560 --> 00:28:29,080
யாரோ வாங்கினாங்க. கோச் வியாஸ் வேலையா
என்னை அனுப்பியிருந்தார்.

372
00:28:29,160 --> 00:28:31,560
திரும்ப வரும்போது எனக்கு விபத்தாச்சு.

373
00:28:31,640 --> 00:28:35,080
டீன் வியாஸ் அவரோட அதிர்ஷ்ட
பேட்ச் என்பார்,

374
00:28:35,160 --> 00:28:37,800
ஏன்னா நீங்க பட்டம் பெற்றதும்
டீனாக தேர்வானார்.

375
00:28:37,880 --> 00:28:40,280
தேவி பிரசாதை பாத்தியா?
அவர் இப்ப சமையல்காரர்.

376
00:28:40,360 --> 00:28:43,960
டீன், சுயாஷ், ரஜத், எல்லாரும் இதில்
எப்படியோ ஈடுபட்டிருக்காங்க.

377
00:28:44,040 --> 00:28:46,880
நீ ஸோர்ட் ஆஃப் ஆனர்.
அவ ஆசிரியர் மகள்.

378
00:28:46,960 --> 00:28:50,080
நீ, தேவ் ப்ரதாப் ஜாம்வால்
எங்களை பார்த்து பொறாமையா?

379
00:28:50,160 --> 00:28:52,040
தேவ் பட்டம் பெற்றான்.

380
00:28:52,120 --> 00:28:55,080
யார் சின்ன வேலைக்கு பெரிய
டிப்ஸ் தருவாங்க?

381
00:28:56,240 --> 00:28:58,800
யாரும் இன்று ஷூஸை சோதிக்க
மாட்டாங்க, மை பாய்!

382
00:28:58,880 --> 00:29:00,280
இன்றும் மட்டமா?

383
00:29:02,120 --> 00:29:05,560
அன்று நினாதுக்கு என்ன ஆச்சு?

384
00:29:05,640 --> 00:29:07,320
உனக்கு எப்பவுமே மாள்விகா வேணும்.

385
00:29:07,400 --> 00:29:09,840
ஆனால் மாள்விகாவுக்கு ஆதிராஜ் தேவை.

386
00:29:10,400 --> 00:29:13,080
அப்படித்தான் மனமுடைந்த
மாள்விகாவை மயக்கினே.

387
00:29:13,160 --> 00:29:16,920
கடைசி நாளன்று பாத்தோமே.
தேவ் மாள்விகா கண்ணீரை துடைச்சானே.

388
00:29:17,000 --> 00:29:20,120
"மாள்விகாவை அழ வெச்சதுக்கு
நினாதை பாத்துக்கறேன்!"

389
00:29:20,800 --> 00:29:23,080
நீ மாள்விகாவை அழ வெச்சே.

390
00:29:23,160 --> 00:29:25,560
உனக்கு பாடம் கற்பிச்சாகணும்.

391
00:30:03,160 --> 00:30:04,320
சீக்கிரம்!

392
00:30:04,400 --> 00:30:07,800
இங்கிருந்து வெளியே போ!

393
00:30:55,720 --> 00:31:00,320
நாய்க்கு பாடம் கற்பிக்கிறதுக்காக
குட்டிகள் சாக வேண்டியிருந்தது, மிஸ்.

394
00:31:04,560 --> 00:31:05,400
வேதாந்த்?

395
00:31:06,560 --> 00:31:09,560
எல்லாருக்கும் பாடம் கற்பிச்சாகணும்.

396
00:31:14,160 --> 00:31:16,680
வேதாந்திடமிருந்து தள்ளி இருங்க.

397
00:32:09,880 --> 00:32:11,000
படிக்கும் அறை

398
00:32:25,920 --> 00:32:28,400
நீங்க எல்லாரும் நாளை காலை
வீட்டுக்கு போகலாம்.

399
00:32:28,840 --> 00:32:29,960
இவங்களை தவிர.

400
00:32:30,760 --> 00:32:35,080
பார்த், இமாத், டென்சிங்,
ஆதிராஜ், தேவ், மாள்விகா.

401
00:32:35,160 --> 00:32:36,640
ஆனா சார், எந்த அடிப்படையில்?

402
00:32:37,360 --> 00:32:39,320
உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டேன்.

403
00:32:39,400 --> 00:32:42,240
-மாள்விகா! நாம கிளம்பணும்.
-என்ன பிரச்சினை, தேவ்?

404
00:32:42,320 --> 00:32:43,560
டூட், நீ எங்கே போறே?

405
00:32:43,640 --> 00:32:45,680
-உன் பேர் பட்டியலிலிருக்கு.
-கவலை இல்லை.

406
00:32:45,760 --> 00:32:46,640
ஜாம்வால்,

407
00:32:47,320 --> 00:32:48,440
உங்களை கைது செய்வேன்.

408
00:32:48,920 --> 00:32:50,720
எதுக்கு? நான் என்ன செய்தேன்?

409
00:32:51,240 --> 00:32:52,760
இங்கே யார் என்ன செய்தாங்க?

410
00:32:53,600 --> 00:32:58,440
சாதாரண அதிகாரியோட மிரட்டலுக்கெல்லாம்
நீங்க பயப்பட வேண்டியதில்லை.

411
00:32:58,960 --> 00:33:03,000
கார் ஐந்து நிமிடத்தில் வரும்.
ஒரு வார்த்தை சொல்லாம ஏறு.

412
00:33:04,400 --> 00:33:06,160
நம்ம வக்கீல் இவரை சமாளிப்பார்.

413
00:33:11,840 --> 00:33:16,160
போலீஸ் கேட்லே கார்களை சோதிக்கிறாங்க.
இந்த வழி நிர்வாக கட்டடம் போகும்.

414
00:33:16,720 --> 00:33:18,680
-போ. கவனமா இரு.
-நன்றி.

415
00:33:21,720 --> 00:33:24,000
-எல்லா அதிகாரிகளும் கேட்டுக்கு வாங்க.
-சார்.

416
00:33:25,640 --> 00:33:27,000
எங்களை நிறுத்த முடியாது.

417
00:33:28,240 --> 00:33:31,120
நான் கார் எடுத்துட்டு வரேன்.
இங்கே காத்திரு, சரியா?

418
00:33:36,200 --> 00:33:37,040
ஆஃபீசர்,

419
00:33:37,720 --> 00:33:40,640
யாரும் கேட்டுக்குள்ள வந்து
போகாதபடி உறுதி செய்ங்க.

420
00:33:41,520 --> 00:33:43,960
தேவைன்னா, அவங்களை கைது செய்ங்க.

421
00:33:50,640 --> 00:33:51,560
ஹலோ, சுப்ரியா?

422
00:33:52,840 --> 00:33:54,360
சுப்ரியா. சுப்ரியா?

423
00:33:56,120 --> 00:34:00,800
தேவ் ப்ரதாப் ஜாம்வால் பள்ளியிலிருந்து
வெளியே போக முடியாது.

424
00:34:00,880 --> 00:34:03,640
அவருடைய ட்ரைவர் கொஞ்ச நேரத்தில்
வருவதாக தகவல்.

425
00:34:03,720 --> 00:34:05,840
கார்களை பள்ளி வளாகத்துக்குள் விடாதீங்க.

426
00:34:05,920 --> 00:34:08,840
மீண்டும், கார்களை பள்ளி
வளாகத்துக்குள் விடாதீங்க.

427
00:34:09,840 --> 00:34:11,840
தேவ்! நில்லு, தேவ்!

428
00:34:13,600 --> 00:34:14,640
நில்லு, தேவ்!

429
00:34:16,120 --> 00:34:18,840
நீ அந்த கேட்டை விட்டு போனேன்னா செத்துருவே.

430
00:34:19,920 --> 00:34:22,600
நீயும் அவனை பார்த்தே. அதனாலத்தான் ஓடறே.

431
00:34:24,040 --> 00:34:28,320
சுயாஷ், ரஜத், நீயும் அன்று அவனை தாக்க
மட்டுமில்லை, கொன்னிருக்கீங்க.

432
00:34:28,840 --> 00:34:31,080
அதனாலத்தான் வியாஸிடம் ஓடி வந்தியா?

433
00:34:31,560 --> 00:34:33,160
போலி சீட்டில் கையெழுத்துக்கல்ல,

434
00:34:33,680 --> 00:34:35,800
ஆனா நீ பண்ண குழப்பத்தை
சரி செய்ய உதவ!

435
00:34:37,280 --> 00:34:39,520
தேவ், எல்லார் முன்னாலும் ஒப்புக்கொள்.

436
00:34:40,000 --> 00:34:41,440
இல்ல இன்று உன்னை
கொல்லுவான்.

437
00:34:46,320 --> 00:34:47,560
நான் எதுவும் செய்யலை.

438
00:34:48,840 --> 00:34:50,320
உனக்கு பைத்தியம்.

439
00:34:51,560 --> 00:34:52,920
எனக்கு பைத்தியம்னா, தேவ்,

440
00:34:54,680 --> 00:34:57,440
இன்று பள்ளி கேட்டிலிருந்து
வெளியே போய் காட்டு.

441
00:34:58,120 --> 00:34:58,960
அதோ!

442
00:35:00,040 --> 00:35:01,200
என் கார்கள் வந்தாச்சு.

443
00:35:01,800 --> 00:35:02,640
என்னை பாரு.

444
00:35:18,360 --> 00:35:20,640
என்ன இது?

445
00:36:13,640 --> 00:36:15,840
சார், ப்ளீஸ் உடனே கேட்டுக்கு வாங்க.

446
00:36:49,480 --> 00:36:52,400
திரு. மனோஹர். பசங்களிடம் போங்க.
எல்லாரும் உள்ளே. போங்க.

447
00:36:57,440 --> 00:36:58,280
தேவ்!

448
00:37:04,160 --> 00:37:05,040
தேவ்!

449
00:39:06,160 --> 00:39:08,160
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்

450
00:39:08,200 --> 00:39:10,200
படைப்பு மேற்பார்வையாளர்
நந்தினி ஸ்ரீதர்

