1
00:00:30,365 --> 00:00:31,866
நாம்தான் முன்னே செல்கிறோம்.

2
00:00:37,956 --> 00:00:39,833
ஹாய். என் பெயர் ஃபிராங்க்ளின்.

3
00:00:39,916 --> 00:00:42,586
முறையாகச் சொல்ல வேண்டுமென்றால்,
ஃபிராங்க்ளின் ஆர்ம்ஸ்ட்ராங்.

4
00:00:42,669 --> 00:00:47,132
எப்போதாவது “எப்படி இந்த இடத்திற்கு வந்தோம்?”
என்று உங்களுக்குள்ளேயே கேட்டிருக்கிறீர்களா?

5
00:00:47,215 --> 00:00:51,469
நான் எப்படி இங்கு வந்தேன் என்று தெரிந்துகொள்ள,
உங்களைக் கொஞ்சம் பின்னோக்கி அழைத்துப் போகிறேன்.

6
00:00:52,637 --> 00:00:54,264
ஃபிராங்க்ளின்

7
00:00:54,347 --> 00:00:57,309
வந்து, என் அப்பா ராணுவத்தில் பணியாற்றுகிறார்.

8
00:00:57,392 --> 00:00:59,936
அதனால் எங்கள் குடும்பம் எப்போதும்
இடம் மாறிக்கொண்டே இருக்கும்.

9
00:01:01,438 --> 00:01:03,064
இந்த நோட்டு உங்கள் பயணங்களில்
உபயோகமாக இருக்குமென நம்புகிறேன்

10
00:01:03,148 --> 00:01:05,150
தாத்தா எப்போதும்,
“மாற்றங்களை எதிர்க்காதே, ஏனென்றால்

11
00:01:05,233 --> 00:01:06,818
அது தோற்கடிக்க முடியாதது”
என்று சொல்வார்.

12
00:01:09,529 --> 00:01:10,530
இதோ வருகிறேன்.

13
00:01:15,368 --> 00:01:19,539
நான் பல இடங்களில் வசித்துள்ளேன்,
ஆனால், எதையும் வீடு என்று சொல்ல முடியாது.

14
00:01:21,958 --> 00:01:24,669
என்னுடைய எல்லா நண்பர்களிடமும்
குட்பை சொல்வதுதான் மிகவும் கஷ்டமான விஷயம்.

15
00:01:25,170 --> 00:01:26,338
ஹே, ஃபிராங்க்ளின்.

16
00:01:26,421 --> 00:01:29,007
ஹே. நீங்கள் குட்பை சொல்ல வந்தீர்களா?

17
00:01:30,425 --> 00:01:31,426
நீ கிளம்புகிறாயா?

18
00:01:32,177 --> 00:01:34,054
என் கூடைப்பந்து இன்னமும்
உன்னிடம்தான் இருக்கா?

19
00:01:37,265 --> 00:01:38,433
மன்னித்துவிடு.

20
00:01:38,516 --> 00:01:40,185
நன்றி, பிறகு பார்ப்போம்.

21
00:01:41,102 --> 00:01:43,563
சரி, பார்ப்போம்.

22
00:01:55,784 --> 00:01:58,536
கான்ஸாஸ், சூரியகாந்திப்பூ மாநிலம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது

23
00:02:03,291 --> 00:02:05,710
டைனர்

24
00:02:23,019 --> 00:02:26,189
சரி, இது அதுதான். எங்களுடைய புதிய நகரம்.

25
00:02:26,273 --> 00:02:27,774
இப்போதைக்குத்தான்.

26
00:02:37,826 --> 00:02:42,122
ஒன்று மட்டும் நிச்சயம்.
இங்கு எல்லோரும் ஒரே வகையறாதான்.

27
00:02:58,847 --> 00:03:02,350
ஒரே இடத்தில் நீண்ட காலம் இல்லாதிருப்பதில் உள்ள
மற்றொரு விஷயம் என்னவென்றால்,

28
00:03:02,434 --> 00:03:05,478
நம் பெட்டியை என்றுமே
முழுமையாக எடுத்துவைக்க மாட்டோம்.

29
00:03:06,605 --> 00:03:08,857
இது ஜாலியாக இருக்கிறது. நாளை இதே நேரம்?

30
00:03:08,940 --> 00:03:10,317
நிச்சயமாக.

31
00:03:10,400 --> 00:03:13,862
புது நண்பர்களை உருவாக்குவது
எளிதல்ல என்று சிலர் சொல்வார்கள்.

32
00:03:13,945 --> 00:03:18,241
ஆனால், என் தாத்தாவின் இந்தச் சின்ன, கைக்கு
அடக்கமான குறிப்பேட்டினால், அது சுலபமாகிறது.

33
00:03:18,325 --> 00:03:21,828
இதில் முதலில் எப்படிப் பேசுவது என்பதற்கான
அவருக்குப் பிடித்த குறிப்புகள் உள்ளன.

34
00:03:22,662 --> 00:03:26,708
நான் இதைப் பலமுறை செய்திருக்கிறேன்,
இது மிகவும் சுலபம்.

35
00:03:40,347 --> 00:03:43,683
“ஒரு நல்ல நகைச்சுவையோடு தொடங்கினால்,
எதுவும் தப்பாகாது.

36
00:03:43,767 --> 00:03:46,978
நினைவில் வைத்துக்கொள், அதிக உற்சாகமாகவும்,
புத்துணர்ச்சியாகவும் இருக்க மறக்காதே.”

37
00:03:48,772 --> 00:03:49,981
திரும்பவும் செய்வோம்.

38
00:03:59,199 --> 00:04:02,285
ஹாய். என் பெயர் ஃபிராங்க்ளின் ஆர்ம்ஸ்ட்ராங்.

39
00:04:03,578 --> 00:04:05,538
ஹலோ. என் பெயர் லைனஸ்.

40
00:04:06,039 --> 00:04:07,415
உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.

41
00:04:07,499 --> 00:04:09,334
ஒரு வேடிக்கையான நகைச்சுவை சொல்லட்டுமா?

42
00:04:09,417 --> 00:04:10,627
சொல், கேட்போம்.

43
00:04:10,710 --> 00:04:13,088
ஆழ்கடல் எப்படி ஹலோ என்று சொல்லும்?

44
00:04:15,715 --> 00:04:17,384
சத்தியமாகத் தெரியாது.

45
00:04:19,009 --> 00:04:20,595
அது வேவ் செய்யும்.

46
00:04:23,223 --> 00:04:24,224
புரிந்ததா?

47
00:04:25,809 --> 00:04:28,144
வார்த்தை விளையாட்டு. சிரிப்பாக இருக்கிறது.

48
00:04:30,105 --> 00:04:33,692
இங்கு என்ன செய்கிறாய்?
பூசணிக்காய் மிட்டாய் செய்யப் போகிறாயா?

49
00:04:34,192 --> 00:04:37,946
இல்லவே இல்லை. நான் என்
பூசணித் தோட்டத்தைப் பராமரிக்கிறேன்.

50
00:04:38,029 --> 00:04:41,074
முன்னெப்பொழுதும் இருந்ததை விட, இந்த வருடத்தில்
ரொம்ப அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும்.

51
00:04:41,866 --> 00:04:44,452
எனக்கும் தோட்டக்கலையில்
கொஞ்சம் அனுபவம் இருக்கிறது.

52
00:04:44,536 --> 00:04:45,745
நான் உதவட்டுமா?

53
00:04:45,829 --> 00:04:47,664
நிச்சயமாக. அது நன்றாக இருக்கும்.

54
00:04:47,747 --> 00:04:49,583
இலையுதிர் காலம் சீக்கிரம் வந்துவிடும்,

55
00:04:49,666 --> 00:04:52,377
கிரேட் பம்ப்கினுக்காகத் தயார் ஆக,
இந்தப் பூசனிக்காய்களுக்கு

56
00:04:52,460 --> 00:04:54,462
நிறையவே வேலை செய்ய வேண்டும்.

57
00:04:54,546 --> 00:04:56,172
என்ன கிரேட்?

58
00:04:56,256 --> 00:04:57,424
கிரேட் பம்ப்கின்.

59
00:04:57,507 --> 00:05:01,636
அர்ப்பணிப்போடு உழைக்கும் பூசணி தோட்டத்தில்தான்
கிரேட் பம்ப்கின் தோன்றும்

60
00:05:01,720 --> 00:05:04,389
அது அருமையான சிறுவர்களுக்குப்
பரிசுப் பொருட்களைப் பெற்றுத் தரும்.

61
00:05:05,682 --> 00:05:08,351
இந்த வருடம், அது என்னுடையதைத்
தேர்ந்தெடுத்தாக வேண்டும்.

62
00:05:08,435 --> 00:05:11,479
உன்னால் உண்மையான அர்ப்பணிப்பை
இங்கு உணர முடிகிறது அல்லவா?

63
00:05:11,563 --> 00:05:12,606
டமால்!

64
00:05:12,689 --> 00:05:14,566
இது மிகவும் அர்ப்பணிப்பு
கொண்டதாகத் தோன்றுகிறது.

65
00:05:15,400 --> 00:05:17,694
நீ கொடியில் இருந்து
இதைப் பிடுங்கக் கூடாது.

66
00:05:17,777 --> 00:05:20,780
இதன் பிறகு கிரேட் பம்ப்கின்
என்னைத் தேர்ந்தெடுக்காது.

67
00:05:20,864 --> 00:05:22,824
எல்லாம் நாசமாய் போய்விட்டது!

68
00:05:24,492 --> 00:05:26,494
கிரேட் பம்ப்கின்னிடம் மன்னிப்பு கேள்.

69
00:05:31,583 --> 00:05:36,171
பக்கம் 14.
“நண்பர்கள் கிடைக்க, புன்னகைக்க மறக்காதே.

70
00:05:36,671 --> 00:05:40,133
நினைவில்கொள், ஒரு சரியான நேரத்தில் சொல்லப்படும்
பாராட்டு ரொம்ப உபயோகமாக இருக்கும்.”

71
00:05:40,217 --> 00:05:42,219
மருத்துவர் உள்ளே இருக்கிறார்

72
00:05:46,306 --> 00:05:49,392
எலுமிச்சை ஜூஸ். ரொம்ப அருமையானது.

73
00:05:56,524 --> 00:05:57,692
மிகச் சுவையானது.

74
00:05:59,110 --> 00:06:00,862
அதை மீண்டும் நிரப்ப என்ன விலையாகும்?

75
00:06:00,946 --> 00:06:04,366
ஹே! நீ என்ன செய்கிறாய்?

76
00:06:04,449 --> 00:06:09,371
இந்த எலுமிச்சைகளைப் பிழிய எனக்கு
எவ்வளவு நேரம் ஆனது என்று உனக்குத் தெரியுமா?

77
00:06:09,454 --> 00:06:12,624
மன்னிக்கவும்.
இது உன் வேலையில் ஒரு பகுதி தானே?

78
00:06:13,124 --> 00:06:14,751
குறியீட்டைப் படி.

79
00:06:14,834 --> 00:06:16,002
மன உளைச்சலுக்கான உதவி 5 செண்ட்

80
00:06:16,086 --> 00:06:17,921
நான் மனநலனைக் கவனிக்கிறேன்,
எலுமிச்சை ஜூஸை விற்கவில்லை.

81
00:06:18,922 --> 00:06:20,924
சிரி. பாராட்டு.

82
00:06:22,050 --> 00:06:24,678
மனநலமா? ஆர்வமாக உள்ளது.

83
00:06:24,761 --> 00:06:27,514
உனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளார்களா?
நீ எதைப்பற்றிப் பேசுவாய்?

84
00:06:28,014 --> 00:06:32,435
அதையெல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது.
மருத்துவர்-நோயாளிகளுக்கு இடையே இரகசியக் காப்பு.

85
00:06:34,437 --> 00:06:36,856
ஆழ்கடல் எவ்வாறு
ஹலோ என்று சொல்லும் என்று தெரியுமா?

86
00:06:38,900 --> 00:06:41,611
ஆமாம், தெரியும். அது வேவ் செய்யும்.
இது ஒரு பழைய ஜோக்.

87
00:06:41,695 --> 00:06:45,657
கேள், குட்டி. உனக்குத் தொழில்முறை உதவி
வேண்டுமென்றால், டோக்கன் வாங்கிக்கொள்.

88
00:06:45,740 --> 00:06:47,325
அது எனக்குப் பழக்கப்பட்டது.

89
00:06:47,409 --> 00:06:52,038
பதட்டம், பயம், நம்பிக்கையின்மை,
உன்னிடம் வேறு என்ன பிரச்சினை இருந்தாலும்.

90
00:06:52,122 --> 00:06:55,542
இப்போது, என்னை விடு, என்னை பதினோரு மணிக்கு
சந்திக்க வேண்டியவர் வந்து விட்டார்.

91
00:06:56,209 --> 00:06:57,294
கிருமி விரும்பியோடு.

92
00:06:58,795 --> 00:07:00,797
ஹலோ, பிக்பென். உட்காரு.

93
00:07:00,881 --> 00:07:02,048
பிக்பென்?

94
00:07:07,971 --> 00:07:09,681
எனக்குப் புரியவில்லை.

95
00:07:09,764 --> 00:07:12,601
முன்பெல்லாம் நண்பர்கள் கிடைப்பது
இவ்வளவு கடினமாக இருந்ததில்லை.

96
00:07:12,684 --> 00:07:16,354
எப்போதும், என் நோட்டு
என்னிடம் சரியானவற்றையே சொல்லும்.

97
00:07:16,438 --> 00:07:17,939
ஆனால் இந்தக் கூட்டத்திற்கு
அது எடுபடவில்லை.

98
00:07:18,023 --> 00:07:20,233
ஒரு ஏமாற்று அரை-வைத்தியர்,

99
00:07:20,317 --> 00:07:23,778
கிரேட் பம்ப்கின் என்னும்
ஏதோ ஒன்றின் விரும்பி,

100
00:07:23,862 --> 00:07:26,489
பிக்பென் என்று
பெற்றோர்கள் பெயரிட்ட ஒரு சிறுவன்?

101
00:07:28,408 --> 00:07:31,828
அட, உன்னைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு.

102
00:07:31,912 --> 00:07:34,623
நிச்சயமாக நாய்கள் இந்த உலகை
மேன்மை பெறச் செய்கின்றன.

103
00:07:34,706 --> 00:07:38,168
ஒருவழியாக, இந்த இடத்தில்
கொஞ்சம் யதார்த்தம் இருக்கிறது.

104
00:07:43,673 --> 00:07:45,759
அப்பாடா!

105
00:07:48,595 --> 00:07:52,515
எனக்கு நல்லது கெட்டது தெரிந்திருக்கவில்லை என்றால்,
நான் வானில் மிதந்துக் கொண்டிருப்பேன்.

106
00:08:57,372 --> 00:08:58,790
இது உன்னுடைய பீச் பால்-ஆ?

107
00:08:59,291 --> 00:09:01,835
அதற்கென்று ஒரு மனம் இருக்கிறது.

108
00:09:01,918 --> 00:09:03,253
அதைப் பிடித்ததற்கு நன்றி.

109
00:09:03,962 --> 00:09:05,130
பரவாயில்லை.

110
00:09:05,213 --> 00:09:07,716
என் பெயர் ஃபிராங்க்ளின்.
ஃபிராங்க்ளின் ஆர்ம்ஸ்ட்ராங்.

111
00:09:07,799 --> 00:09:09,593
என் பெயர் சார்லி பிரவுன்.

112
00:09:09,676 --> 00:09:10,677
மறுபடியும் நன்றி.

113
00:09:13,680 --> 00:09:15,682
என் மண் கோட்டையைப் பார்க்க
விரும்புகிறாயா, ஃபிராங்க்ளின்?

114
00:09:17,934 --> 00:09:20,312
உன் குடும்பத்துடன்
இங்கு விடுமுறைக்காக இருக்கிறாயா?

115
00:09:20,395 --> 00:09:22,814
உண்மையில்,
நாங்கள் இப்போதுதான் இங்கு வந்தோம்.

116
00:09:22,898 --> 00:09:26,234
என் அப்பா ராணுவத்தில் வேலை செய்கிறார்,
இப்போதுதான் பணியிடம் மாற்றப்பட்டுள்ளார்.

117
00:09:26,318 --> 00:09:29,237
ஓ, அப்படியா? என் அப்பாவும்
இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

118
00:09:29,321 --> 00:09:30,655
இப்போது பார்பராக உள்ளார்.

119
00:09:30,739 --> 00:09:33,658
புத்திசாலி.
முடி வெட்டும் வேலைக்கு முடிவே இல்லை.

120
00:09:35,577 --> 00:09:36,870
இது எப்படி இருக்கு, ஃபிராங்க்ளின்?

121
00:09:44,628 --> 00:09:46,630
ஆழ்கடல் எப்படி ஹலோ என்று சொல்லும் தெரியுமா?

122
00:09:47,631 --> 00:09:48,965
அது வேவ் செய்யும்.

123
00:09:52,677 --> 00:09:55,680
என் அம்மா என்னைக் கூப்பிடுறாங்க.
நான் இப்போது கிளம்பணும்.

124
00:09:56,389 --> 00:09:58,516
நாளைக்கு உனக்கு
வேலை ஏதுமில்லை என்றால், நாம்…

125
00:10:06,983 --> 00:10:08,610
போய் வருகிறேன், அம்மா.

126
00:10:08,693 --> 00:10:10,779
இன்றும் நல்ல நாளாக இருக்குமென நம்புகிறேன்.

127
00:10:13,490 --> 00:10:18,286
“உன் புதிய நண்பர்களைச் சந்திக்க, வழக்கமாக அவர்கள்
எங்குச் சந்திக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்.”

128
00:10:22,958 --> 00:10:27,128
பீட்ஸா. நிச்சயம்.
யாருக்குத்தான் பீட்ஸா பிடிக்காது?

129
00:10:48,942 --> 00:10:50,944
நீ அவனைப் பார்த்திருக்க வேண்டும்.

130
00:10:51,027 --> 00:10:53,363
ஹலோ என்றுகூட சொல்லாமல்,

131
00:10:53,863 --> 00:10:56,908
நேராக வந்து என் எலுமிச்சை ஜூஸ்
முழுவதையும் குடித்துவிட்டான்.

132
00:10:57,617 --> 00:10:59,286
யார் அப்படிச் செய்வார்கள்?

133
00:11:00,287 --> 00:11:02,914
என்னால் உள்ளே போக முடியாது.

134
00:11:02,998 --> 00:11:05,292
நான் என்ன சொல்வது? நான் என்ன சொல்வது?

135
00:11:05,917 --> 00:11:07,294
ஹே, தம்பி, இங்கே பாரு!

136
00:11:07,377 --> 00:11:08,587
பாதையிலிருந்து நகரு!

137
00:11:11,590 --> 00:11:12,424
டமால்!!!

138
00:11:14,676 --> 00:11:15,760
இங்கு என்ன நடக்கிறது?

139
00:11:15,844 --> 00:11:18,013
-என்ன நடந்தது என்று பார்த்தாயா?
-அது என்னது?

140
00:11:18,096 --> 00:11:20,348
என்ன நடந்தது, ஷெர்மி?

141
00:11:21,892 --> 00:11:25,270
எங்கள் சோப்புடப்பா டெர்பி காரை ஓட்டி,
பயிற்சி செய்கிறோம், அவ்வளவுதான்.

142
00:11:25,353 --> 00:11:27,105
ஸ்டீயரிங்கை கொஞ்சம் பழுது பார்க்க வேண்டும்.

143
00:11:27,188 --> 00:11:28,064
என்ன?

144
00:11:28,148 --> 00:11:32,235
நீ எங்கு சென்றாய்? அந்தப் பெரிய சோப்புடப்பா டெர்பி
பந்தயம் நம் ஊருக்கு வரப்போகிறது.

145
00:11:32,319 --> 00:11:37,574
ஜெயிக்கும் குழுவிற்குக் கேடயமும்,
ஆண்டு முழுவதும் இலவச பீட்ஸாவும் தருகிறார்கள்.

146
00:11:37,657 --> 00:11:39,868
சோப்புடப்பா டெர்பி பந்தயமா?

147
00:11:39,951 --> 00:11:41,119
கேடயமா?

148
00:11:41,202 --> 00:11:42,537
இலவச பீட்ஸா!

149
00:11:47,459 --> 00:11:51,713
“ஃபிராங்க்ளின், நீ வெற்றியாளர் என்று காட்டிக்கொள்வது
நண்பர்கள் கிடைக்க ஒரு நிச்சயமான வழி.

150
00:11:51,796 --> 00:11:53,548
அனைவருக்கும் வெற்றியாளரைப் பிடிக்கும்.”

151
00:11:54,341 --> 00:11:56,551
எனக்கு ஒரு கூட்டாளி கிடைத்துவிட்டால் போதும்.

152
00:11:57,052 --> 00:11:58,970
-இது வந்து…
-என் கூட்டாளியாக விரும்புகிறாயா?

153
00:11:59,054 --> 00:12:01,181
-நிச்சயமாக.
-அந்தக் கேடயம் நமதாகப் போகிறது.

154
00:12:01,264 --> 00:12:02,307
உனக்கு…

155
00:12:03,058 --> 00:12:04,351
நீ என்னுடைய கூட்டாளியாக…

156
00:12:04,434 --> 00:12:05,435
மார்ஸி!

157
00:12:07,312 --> 00:12:09,981
மன்னிக்கவும். நீ என்னுடைய கூட்டாளியாக…

158
00:12:10,565 --> 00:12:13,485
-உன்னிடம் இருக்கிறதா…
-ஓ, ஷ்ரோடெர்!

159
00:12:15,237 --> 00:12:17,697
என்ன சொல்கிறாய், ஸ்நூப்பி?
கூட்டாளிகள் ஆவோமா?

160
00:12:25,121 --> 00:12:27,290
நேரத்தை வீணடித்தால், நீ தோற்றுவிடுவாய், சக்.

161
00:12:27,958 --> 00:12:31,253
உன்னால் சார்லி பிரவுன் ஓட்டுவதைக்
கற்பனை செய்ய முடிகிறதா?

162
00:12:31,336 --> 00:12:33,838
அவனால் புல்லைக்கூட நேராக வெட்ட முடியாது.

163
00:12:40,595 --> 00:12:43,223
ஹே, ஹலோ.
கடற்கரையில் சந்தித்தோம் நினைவிருக்கிறதா?

164
00:12:43,848 --> 00:12:45,517
நிச்சயமாக, ஃபிராங்க்ளின்.

165
00:12:45,600 --> 00:12:48,687
சரி, என்ன சொல்கிறாய்?
நாம் கூட்டாளிகள் ஆவோமா?

166
00:12:50,564 --> 00:12:51,731
கூட்டாளிகள்.

167
00:12:55,026 --> 00:12:56,695
உடனே தொடங்க ஆவலாக இருக்கிறேன்.

168
00:12:58,405 --> 00:12:59,406
ஹே!

169
00:13:00,865 --> 00:13:04,786
நம் காரைக் கட்டமைக்க,
நமக்குப் பல பொருட்கள் தேவைப்படும்.

170
00:13:04,869 --> 00:13:07,872
ஆணிகள், மரப்பலகை, கோந்து.

171
00:13:16,423 --> 00:13:17,340
டமால்!

172
00:13:30,562 --> 00:13:33,064
நிச்சயமாக, இது தர்மசங்கடம்தான்.

173
00:13:33,148 --> 00:13:35,025
நீ அந்த எலுமிச்சை ஜூஸ் விற்ற பெண் தானே.

174
00:13:36,526 --> 00:13:37,819
மன்னித்துவிடு,

175
00:13:37,903 --> 00:13:40,614
என் சோப்புடப்பா டெர்பி காருக்காக
எனக்கு இந்த ஸ்டீயரிங் வீல் வேண்டும்.

176
00:13:40,697 --> 00:13:43,867
உனக்கு விதிகள் தெரியுமல்லவா?
பெண்களுக்குத்தான் முன்னுரிமை.

177
00:13:43,950 --> 00:13:45,327
எனவே, அதை என்னிடம் கொடு.

178
00:13:45,410 --> 00:13:48,622
ஆனால், குறிப்பாக இதுதான் வேண்டும்
என்று என் கூட்டாளி சொன்னான்.

179
00:13:48,705 --> 00:13:51,249
ஓ, அப்படியா? அந்தக் கூட்டாளி யாரு?

180
00:13:51,333 --> 00:13:53,084
சார்லி பிரவுன் என்ற பையன்.

181
00:13:53,168 --> 00:13:57,547
சார்லி பிரவுன்-ஆ? உனக்கு ஜாலிதான்.

182
00:13:57,631 --> 00:13:59,049
என்ன சொல்ல வருகிறாய்?

183
00:13:59,132 --> 00:14:00,634
உனக்கே தெரியும்.

184
00:14:00,717 --> 00:14:02,093
அது இருக்கட்டும், அவன் எங்கே?

185
00:14:02,177 --> 00:14:04,262
இப்போதே தோல்வியை ஒப்புக்கொண்டானா?

186
00:14:04,346 --> 00:14:08,767
இல்லை. அவன் காயலாங்கடையில் எங்கள் காருக்குப்
பொருட்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறான்.

187
00:14:08,850 --> 00:14:09,976
சரி, வெற்றி பெற வாழ்த்துகள்,

188
00:14:10,060 --> 00:14:12,646
ஏனென்றால் சார்லி பிரவுனைக் கூட்டாளியாகக்
கொண்டு வெற்றி பெற,

189
00:14:12,729 --> 00:14:15,065
ஸ்டீயரிங் வீலையும் தாண்டி,
உனக்குப் பலவும் தேவைப்படும்.

190
00:14:15,148 --> 00:14:17,692
போதும் நிறுத்து.
எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவையில்லை.

191
00:14:17,776 --> 00:14:20,612
உண்மைதான். உங்களுக்கு அதிசயம்தான் தேவை.

192
00:14:21,571 --> 00:14:23,698
அதை நீயே வைத்துக்கொள், புதியவனே.

193
00:14:25,951 --> 00:14:29,913
இது என் விசிட்டிங்கார்ட். பந்தயத்திற்குப் பிறகு
நீ ஆலோசனை செய்ய யாரேனும் தேவைப்படலாம்.

194
00:14:49,766 --> 00:14:51,768
உங்கள் கருவிகளைக்
கடன் கொடுத்ததற்கு நன்றி, அப்பா.

195
00:14:53,228 --> 00:14:54,563
ஹாய், ஃபிராங்க்ளின்.

196
00:14:54,646 --> 00:14:57,274
இதோ வந்துவிட்டான். ஹாய், சார்லி பிரவுன்.

197
00:15:01,361 --> 00:15:03,697
பழைய தண்ணீர் குழாய் எதற்கு?

198
00:15:03,780 --> 00:15:06,241
நான் புதுப்பிக்கப்பட்ட
பழைய வாகனங்களைப் பார்த்தேன்

199
00:15:06,324 --> 00:15:09,536
அவை எல்லாவற்றிலும், இதுபோன்ற கம்பிகள்
பக்கவாட்டிலிருந்து வெளிவரும் படி இருந்தன.

200
00:15:09,619 --> 00:15:11,371
இது புத்திசாலித்தனமானது.

201
00:15:11,454 --> 00:15:15,250
இது நாம் வேகமாகச் செல்ல உதவாது, ஆனால்,
நிச்சயம் போட்டியின் ஆர்வத்தைக் குறைக்கும்.

202
00:15:17,377 --> 00:15:21,131
இப்படி இருக்கும் என்று நினைத்து நான்
சக்கரங்களைக் கொண்டு வரச் சொல்லவில்லை.

203
00:15:21,214 --> 00:15:23,633
நாம் வெற்றி பெற வேண்டுமென்றால்,
இது வேலைக்கு ஆகாது.

204
00:15:24,843 --> 00:15:28,179
ஆனால், உன் தள்ளு வண்டியின்
சக்கரங்கள் சரியாக இருக்கும்.

205
00:15:28,263 --> 00:15:29,264
உண்மையாகவா?

206
00:15:29,890 --> 00:15:32,684
எனக்குத் தெரியாது.
இது என் தங்கையின் தள்ளு வண்டி.

207
00:15:32,767 --> 00:15:37,022
சொல்லப்போனால், நீ கொஞ்ச நாட்களுக்காக மட்டுமே
இந்தச் சக்கரங்களை கடனுக்கு வாங்குகிறாய்.

208
00:15:37,105 --> 00:15:39,190
நமக்கு இது கண்டிப்பாகத் தேவை.

209
00:15:39,691 --> 00:15:43,278
பந்தயத்திற்குப் பிறகு அதைத் திரும்ப வைத்துவிடலாம்,
அவள் வண்டி புதிது போல நன்றாகவே இருக்கும்.

210
00:15:44,905 --> 00:15:46,948
நமக்கு சக்கரங்கள் கிடைத்துவிட்டது.

211
00:15:47,449 --> 00:15:49,159
நல்லது. நாம் வேலையைத் தொடங்குவோம்.

212
00:15:53,872 --> 00:15:57,292
“பொதுவான ஆர்வங்களைக் கண்டறிவதுதான்
நட்பை வளர்க்கச் சிறந்த வழி.”

213
00:15:58,251 --> 00:16:00,170
உனக்கு பேஸ்பால் பிடிக்கும் என்று
சொன்னாய் அல்லவா?

214
00:16:00,253 --> 00:16:02,547
நிச்சயமாக. உனக்கு?

215
00:16:03,131 --> 00:16:05,717
நான் பேஸ்பால் வம்சாவளியைச் சேர்ந்தவன்.

216
00:16:06,343 --> 00:16:09,596
என் பெரிய மாமா யூஜீன் பென்சன்,
நீக்ரோ லீகில் விளையாடினார்.

217
00:16:10,096 --> 00:16:11,514
அது என்னது?

218
00:16:11,598 --> 00:16:13,099
ஒரு காலக்கட்டத்தில்

219
00:16:13,183 --> 00:16:17,145
கறுப்பர்களும், வெள்ளைக்காரர்களும் ஒன்றாக
விளையாடுவதற்கு அனுமதியில்லாமல் இருந்தது.

220
00:16:17,229 --> 00:16:20,190
எனவே, கறுப்பின விளையாட்டு வீரர்கள்
தங்களுக்கான லீகை உருவாக்கினார்கள்.

221
00:16:20,273 --> 00:16:22,525
அங்கு தான் ஜாக்கி ராபின்சன் விளையாடுவார்.

222
00:16:23,777 --> 00:16:27,989
அடடே. உன்னுடன் இருந்தால் ஒரு குழந்தையால்கூட
பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும், ஃபிராங்க்ளின்.

223
00:16:30,700 --> 00:16:34,496
கேள், நானே என் பேஸ்பால்
அணியை ஒருங்கிணைக்கிறேன்.

224
00:16:34,579 --> 00:16:36,498
அப்படியா? நீங்கள் சிறந்த அணியா?

225
00:16:36,581 --> 00:16:40,377
என் குறிக்கோள், “முதலில் முடிப்பதற்கு
நாம் வெற்றி பெறத் தேவையில்லை.”

226
00:16:41,836 --> 00:16:43,547
இதை நான் கேள்விப்பட்டதே இல்லை.

227
00:16:45,215 --> 00:16:46,841
என் தாத்தா என்னிடம்,

228
00:16:46,925 --> 00:16:50,387
“ஃபிராங்க்ளின், வாங்குவதைவிடச்
அதை உருவாக்குவது நல்லது” என்று சொல்வார்.

229
00:16:50,470 --> 00:16:54,599
என் தாத்தாவும் அப்படிச் சொல்வார். பொதுவாக
கிறிஸ்துமஸின் போதும், பிறந்தநாளின் போதும்.

230
00:16:57,352 --> 00:16:58,353
இடுக்கி கொடுக்க முடியுமா?

231
00:16:58,937 --> 00:17:01,356
ஹே, ஃபிராங்க்ளின்,
உனக்கு எப்படிப்பட்ட இசை பிடிக்கும்?

232
00:17:01,439 --> 00:17:05,901
ஸ்டீவி வொண்டர், லிட்டில் ரிச்சர்ட்,
ஆகியோரின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்,

233
00:17:05,986 --> 00:17:08,697
ஆனால், உயிருக்கு உயிராக
ஜேம்ஸ் பிரவுனின் பாடல் பிடிக்கும்.

234
00:17:09,738 --> 00:17:11,241
நீ அவரின் சொந்தக்காரன் இல்லை தானே?

235
00:17:12,117 --> 00:17:13,368
எனக்கு அப்படித் தோன்றவில்லை.

236
00:17:15,536 --> 00:17:17,497
ஆனால், இப்போது இதுதான் பிடிச்சிருக்கு.

237
00:17:18,081 --> 00:17:19,373
இது ஜான் கோல்ட்ரேனின் பாடல்.

238
00:17:20,542 --> 00:17:22,544
கவனமாகக் கேள், சார்லி பிரவுன்.

239
00:17:22,627 --> 00:17:25,380
ஜாஸ் இசையில்
நிதானமான இணக்கங்கள் இருக்கும்.

240
00:17:25,881 --> 00:17:26,923
ஆனால், கூர்ந்து கவனி.

241
00:17:27,007 --> 00:17:30,051
மெருகேறும் பகுதிகளும் அதில் இருக்கும்.

242
00:17:30,135 --> 00:17:31,177
உன்னால் அதை உணர முடிகிறதா?

243
00:17:34,806 --> 00:17:35,891
எனக்குப் பிடிச்சிருக்கு.

244
00:17:51,573 --> 00:17:52,490
க்ளிங்!

245
00:18:05,545 --> 00:18:06,546
நன்றி.

246
00:18:08,924 --> 00:18:13,094
நீ வளர்ந்த உடன், நீ என்னவாக வேண்டும்
என்று யோசித்திருக்கிறாயா?

247
00:18:13,178 --> 00:18:16,973
நிச்சயமாக சொல்ல முடியவில்லை, சார்லி பிரவுன்.
எனக்கு விண்வெளி மிகவும் பிடிக்கும்.

248
00:18:17,474 --> 00:18:21,561
ஒருவேளை என்றாவது ஒருநாள், நான் மேலே
விண்வெளியில் பறக்கலாம். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் போல.

249
00:18:22,270 --> 00:18:25,148
ஆர்ம்ஸ்ட்ராங்கா? அவர் உன் உறவினரா?

250
00:18:26,191 --> 00:18:27,525
நல்ல நகைச்சுவை.

251
00:18:27,609 --> 00:18:29,861
நீ யோசித்து இருக்கிறாயா, சார்லி பிரவுன்?

252
00:18:29,945 --> 00:18:32,739
நல்ல ப்ரொஃபஷனல் பேஸ்பால் வீரனாக வேண்டும்
என்று அடிக்கடி நினைப்பேன்.

253
00:18:32,822 --> 00:18:35,408
அடிக்கடி பல புது ஊர்களுக்குச் செல்லலாம்.

254
00:18:35,492 --> 00:18:38,411
எப்போதும் பயணித்துக்கொண்டே இருப்போம்.
அற்புதமான வாழ்க்கை.

255
00:18:39,621 --> 00:18:41,248
நான் நிறைய பயணித்துள்ளேன்.

256
00:18:41,331 --> 00:18:45,544
என்னை நம்பு, பயணம் செய்துக்கொண்டே வாழ்வது
நன்றாக இருப்பது போலத் தோன்றலாம், சார்லி பிரவுன்,

257
00:18:45,627 --> 00:18:47,963
ஆனால் அது அவ்வளவு சிறந்தது அல்ல.

258
00:18:49,381 --> 00:18:53,093
ஹே, நமக்கு என்ன வேண்டும் தெரியுமா?
ஒரு ரகசிய உடன்பாடு.

259
00:18:55,095 --> 00:18:56,096
அப்படியல்ல.

260
00:19:16,908 --> 00:19:20,161
நம் காரை உருமறைப்பு செய்வது
ஒரு நல்ல யுக்தி, ஃபிராங்க்ளின்.

261
00:19:20,245 --> 00:19:22,956
ஆம். நம் சோதனையின் போது,
யாரும் நம் அருமையான வடிவமைப்பை

262
00:19:23,039 --> 00:19:24,666
திருடிவிடக் கூடாது.

263
00:19:29,087 --> 00:19:32,757
சார், வேகத்தை விட இரண்டு மடங்காக
இழுப்பு அதிகரிக்கிறது.

264
00:19:32,841 --> 00:19:36,052
இயற்பியல் அறிவைச் சார்ந்துதான்
நம் வடிவமைப்பின் வெற்றி உள்ளது.

265
00:19:36,136 --> 00:19:40,599
அதெல்லாம் சரி, மார்ஸி, ஆனால்,
அந்த “ராட்சச டிரக்”-ஐ பற்றி யோசி.

266
00:19:43,184 --> 00:19:45,395
பாய்மரத்தை உயர்த்து, பிக்பென்.

267
00:19:45,478 --> 00:19:49,524
மெகெல்லானுடைய நம்பிக்கையான கப்பலான
விக்டோரியா, உலகைச் சுற்றி வந்தது போல,

268
00:19:49,608 --> 00:19:53,612
நாமும் பந்தயத்தில் வெற்றி பெற
அக்கம் பக்கம் சுற்றுவோம்.

269
00:19:54,279 --> 00:19:55,906
நான் ஒரு கேள்வி கேட்கலாமா?

270
00:19:56,531 --> 00:19:59,451
அந்தச் சிறுவன் மற்றும் அவனது பூசணித்
தோட்டத்தின் கதைதான் என்ன?

271
00:19:59,534 --> 00:20:01,202
யார்? லைனஸ்-ஆ?

272
00:20:01,286 --> 00:20:02,746
அவனுக்குக் கொஞ்சம் கோளாறு இருக்கிறது.

273
00:20:02,829 --> 00:20:06,499
அவனைப் புரிந்துகொண்டால், அவனைப் போல
சிறந்தவன் ஒருத்தனைப் பார்க்க முடியாது.

274
00:20:06,583 --> 00:20:08,209
அவனும் என்னுடைய நெருங்கிய நண்பன்.

275
00:20:09,711 --> 00:20:11,713
நீ உன் நெருங்கிய நண்பனை மிஸ் பண்ணுவாய்.

276
00:20:11,796 --> 00:20:15,717
யார் நெருங்கிய நண்பன் என்று
யாரால் சொல்ல முடியும்?

277
00:20:15,800 --> 00:20:22,307
சரி, என் பார்வையில், நெருங்கிய நண்பன் என்றால்,
வித்தியாசமானவன், விசேஷமானவன்.

278
00:20:22,849 --> 00:20:27,145
அவனை முழுவதும் நம்பலாம்,
உனக்கு எப்போதும் துணை நிற்பான்.

279
00:20:28,021 --> 00:20:32,359
ஒரு விதத்தில், உன்னைப்பற்றி உன்னைவிட
உன் நெருங்கிய நண்பனுக்கு நன்றாகத் தெரியும்.

280
00:20:48,833 --> 00:20:51,586
நீ வைத்திருக்கும் நாய் மிகவும்
வித்தியாசமானது, சார்லி பிரவுன்.

281
00:20:52,170 --> 00:20:53,463
ஆமாம்.

282
00:20:59,261 --> 00:21:01,638
இது ஒரு விசேஷத் தருணம், நண்பா.

283
00:21:01,721 --> 00:21:05,100
அன்ஸ்டாப்பபிள்-இன்
முதல் உண்மையான சோதனை.

284
00:21:07,310 --> 00:21:09,437
அன்ஸ்டாப்பபிள்

285
00:21:10,730 --> 00:21:12,315
அமைப்புகள்: சரிபார்க்கப்படுகின்றன

286
00:21:12,399 --> 00:21:13,400
தலைக்கவசம்?

287
00:21:14,484 --> 00:21:15,485
இருக்கிறது.

288
00:21:15,569 --> 00:21:16,611
சீட் பெல்ட்?

289
00:21:16,695 --> 00:21:18,488
போட்டாச்சு. ஸ்டீயரிங்?

290
00:21:20,782 --> 00:21:21,616
-வேலை செய்கிறது.
-வேலை செய்கிறது.

291
00:21:21,700 --> 00:21:27,163
சரி. நாம் லாஞ்ச் செய்யப் போகிறோம்,
மூன்று, இரண்டு, ஒன்று.

292
00:21:42,554 --> 00:21:43,972
நாம் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

293
00:21:49,019 --> 00:21:51,688
நாம் பிரேக் பிடித்துக்கொண்டே
இருந்தால் நம்மால் ஜெயிக்க முடியாது.

294
00:21:51,771 --> 00:21:54,107
அன்ஸ்டாப்பபிளால் என்னதான் முடியும்
என்று பார்ப்போம்.

295
00:22:02,949 --> 00:22:03,950
என்ன செய்கிறாய்?

296
00:22:04,034 --> 00:22:06,995
ஞாபகம் வைத்துக்கொள், பிரேக்கை அழுத்தாதே.

297
00:22:07,078 --> 00:22:08,246
மன்னித்துவிடு.

298
00:22:15,170 --> 00:22:18,006
உன் தைரியத்தைக் காட்டாதே! பிரேக்கை அழுத்தாதே.

299
00:22:18,798 --> 00:22:20,217
இதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

300
00:22:51,039 --> 00:22:52,040
ஃபிராங்க்ளின்?

301
00:22:55,460 --> 00:22:56,753
நீ என்ன செய்திருக்கிறாய் என்று பார்.

302
00:22:56,836 --> 00:22:58,672
“பிரேக் பிடிக்காதே”என்று சொன்னேனே.

303
00:22:58,755 --> 00:23:01,925
என்ன? நம் கார் நொறுங்குவதைத்
தடுக்கவே முயன்றேன்.

304
00:23:02,008 --> 00:23:03,802
நான் சொல்வதை நீ ஏன் கேட்க மறுக்கிறாய்?

305
00:23:03,885 --> 00:23:07,514
அப்பா, அந்த எலுமிச்சை ஜூஸ் விற்ற பெண்,
உன்னைப் பற்றி சரியாகத்தான் சொன்னாள்.

306
00:23:07,597 --> 00:23:08,974
அதற்கு என்ன அர்த்தம்?

307
00:23:12,602 --> 00:23:13,603
அதை விடு.

308
00:23:15,939 --> 00:23:19,150
நேரமாகிறது. நான் வீட்டுக்குப் போவதே
நல்லது என்று நினைக்கிறேன்.

309
00:23:39,212 --> 00:23:41,339
ஸ்நூப்பி

310
00:24:00,150 --> 00:24:03,737
இங்கு ஒரு துளி மதிநுட்பம்கூட
இந்த சமயத்தில் இல்லை.

311
00:24:22,255 --> 00:24:24,507
அன் ஸ்டாப்பபிள்

312
00:24:25,300 --> 00:24:28,970
அட, இனி இந்த ஊரில் எனக்கு எப்படி
நண்பர்கள் கிடைப்பார்கள்?

313
00:24:31,306 --> 00:24:32,724
யார் அது?

314
00:24:36,561 --> 00:24:37,687
-அது என்ன…
-நான் இல்லை…

315
00:24:38,438 --> 00:24:40,774
இல்லை, இல்லை. நீயே சொல்.

316
00:24:42,859 --> 00:24:45,904
உன்னை மீண்டும் பார்ப்பது
ஆச்சரியமாக இருக்கு, சார்லி பிரவுன்.

317
00:24:46,821 --> 00:24:50,492
நான் பாதியில் விட்டுக்கொடுப்பவன் இல்லை,
நான் இப்போது தொடங்கப் போவதுமில்லை.

318
00:24:51,201 --> 00:24:53,620
இதுவரை நான் எதிலும் ஜெயித்ததே இல்லை,

319
00:24:53,703 --> 00:24:57,040
இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயிக்க
நிறைய வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

320
00:24:57,791 --> 00:24:58,792
உண்மையாகவா?

321
00:24:59,918 --> 00:25:01,461
ஆனால், நம் காரை என்ன செய்வது?

322
00:25:01,545 --> 00:25:03,755
உண்மையில், அது மோசமான நிலையில் இல்லை.

323
00:25:04,631 --> 00:25:07,634
நாம் ஒன்றாக வேலை செய்தால்,
நாளை பந்தயத்தில் பங்குபெற

324
00:25:08,134 --> 00:25:09,678
நமக்கு இப்பவும் வாய்ப்பு இருக்கிறது.

325
00:25:10,679 --> 00:25:13,598
இப்போதும் நீ என்னுடைய
கூட்டாளியாக இருக்க விரும்புகிறாயா?

326
00:25:14,182 --> 00:25:15,225
நிச்சயமாக.

327
00:25:22,566 --> 00:25:24,776
-சீக்கிரம் இதைக் காரில் போடு.
-சரி.

328
00:25:24,859 --> 00:25:27,862
-நான் இதைப் போடுகிறேன்.
-இந்தா. இதை எடுத்துக்கொள்.

329
00:25:27,946 --> 00:25:30,156
இது நீண்ட இரவாக இருக்கப் போகிறது.

330
00:25:33,493 --> 00:25:36,621
சாம்பியன் சோப்புடப்பா டெர்பி
பந்தயத்திற்கு வரவேற்கிறேன்.

331
00:25:38,415 --> 00:25:43,628
இதுதான் இன்று நம் வீரர்களை சோதிக்கக் கூடிய
வளைவுகளும், திருப்பங்களும், மேடு பள்ளங்களும்

332
00:25:43,712 --> 00:25:45,297
நிறைந்த அருமையான கலவை.

333
00:25:45,380 --> 00:25:50,093
நம் இளம் ஓட்டுனர்களை, 100 அடி
மலையின் உச்சியில் சோதிக்கும் இந்தப் போட்டி,

334
00:25:50,176 --> 00:25:54,389
அறுசுவை உணவைவிட மேலான பீட்ஸாவை,
ஒரு வருட காலத்திற்குப் பரிசாகப் பெற்றுத்தரும்.

335
00:25:54,472 --> 00:25:57,684
வெற்றியோடு திரும்பி வா, என் செல்ல பப்பூ.

336
00:26:13,700 --> 00:26:17,203
அட, சீக்கிரம். நமக்கு நேரம் இல்லை.

337
00:26:18,204 --> 00:26:22,042
30 நொடிகள்தான் உள்ளன.
போட்டி தொடங்கப் போகிறது.

338
00:26:22,125 --> 00:26:26,129
“ஒன்று உனக்குக் கிடைக்க வேண்டும் என்றால், நீ அதை
விரும்ப வேண்டும்” என்று என் தாத்தா சொல்வார்.

339
00:26:26,213 --> 00:26:27,214
நட்பு

340
00:26:27,297 --> 00:26:29,633
உனக்கு இது வேண்டுமா, சார்லி பிரவுன்?

341
00:26:30,383 --> 00:26:31,718
வா, போய் வெற்றி வாகையை சூடுவோம்.

342
00:26:38,767 --> 00:26:40,310
இதோ தொடங்குகிறது!

343
00:26:46,858 --> 00:26:48,818
மிகவும் ஆர்ப்பாட்டமான துவக்கம்.

344
00:26:48,902 --> 00:26:50,820
லூசியும், ஷ்ரோடெரும் முன்னனியில் உள்ளனர்.

345
00:26:52,280 --> 00:26:53,782
உடனே, வலது பிரேக்கை அழுத்து!

346
00:27:00,330 --> 00:27:03,166
சார்லி பிரவுன் மற்றும் ஃபிராங்க்ளின்
மிகவும் துணிச்சலாக ஓட்டுகின்றனர்.

347
00:27:03,959 --> 00:27:05,293
இடது பக்கம்!

348
00:27:07,087 --> 00:27:08,213
இது வேலை செய்கிறது.

349
00:27:19,975 --> 00:27:21,935
ஸ்டீயரிங் உடைந்துவிட்டது, பேட்டி.

350
00:27:22,018 --> 00:27:24,062
அது நம் திட்டத்திலேயே இல்லை.

351
00:27:36,992 --> 00:27:38,535
தோற்றுப்போ.

352
00:28:03,768 --> 00:28:06,313
லூசியும் ஷ்ரோடெரும் முன்னிலையில் உள்ளனர்,

353
00:28:07,397 --> 00:28:10,525
ஆனால், சார்லி பிரவுனும் ஃபிராங்க்ளினும்
முன்னேறுகிறார்கள்.

354
00:28:10,609 --> 00:28:14,446
ஹே, நாம் பிரேக்கை விட்டுவிட்டு,
வளைவில் செல்வோம்.

355
00:28:14,529 --> 00:28:16,156
நிச்சயமாகவா, சார்லி பிரவுன்?

356
00:28:16,239 --> 00:28:17,449
என்னை நம்பு.

357
00:28:26,875 --> 00:28:28,001
நாம்தான் முன்னிலையில் உள்ளோம்.

358
00:28:32,464 --> 00:28:33,715
என்னால் பார்க்க முடியவில்லை.

359
00:28:37,844 --> 00:28:42,057
ஹே! யார் இந்தக் கயிற்றை இங்கே போட்டது?
இது ஆபத்தானது.

360
00:28:43,350 --> 00:28:44,392
ஊப்ஸ்.

361
00:28:50,565 --> 00:28:52,484
நம்மால் முடியும்.

362
00:28:54,110 --> 00:28:56,196
ஆனால், மற்றவர்களால் முடியாது.

363
00:28:56,279 --> 00:28:58,949
நான் சொல்லும்போது, பிரேக்கை லாக் செய்.

364
00:28:59,032 --> 00:29:02,369
என்ன? இல்லை, நம்மால் ஜெயிக்க முடியும்.

365
00:29:03,703 --> 00:29:05,372
இப்போது பிரேக்கைப் போடு!

366
00:29:09,376 --> 00:29:10,502
அடக் கடவுளே!

367
00:29:23,431 --> 00:29:24,683
வெற்றி!

368
00:29:28,270 --> 00:29:32,983
கேடயத்திற்கான முதலிடம்
லூசி மற்றும் ஷ்ரோ…

369
00:29:33,066 --> 00:29:34,943
நன்றி. நான் இதை ஏற்றுக்கொள்கிறேன்.

370
00:29:35,026 --> 00:29:38,321
இப்போது நான் தயாரித்த சிறிய உரையை
பேசப் போகிறேன்.

371
00:29:49,040 --> 00:29:53,253
என்னால் நம்பமுடியவில்லை.
நாம் கிட்டத்தட்ட ஜெயிக்கவிருந்தோம்.

372
00:29:54,421 --> 00:29:56,339
நாம் கடந்து வந்ததையெல்லாம் தாண்டி,

373
00:29:56,423 --> 00:29:59,509
ஒரு முட்டாள் சிற்றுண்டி வண்டியால்
நாம் தோற்றுவிட்டோம்.

374
00:30:00,010 --> 00:30:01,928
ஐயோ மோசம்.

375
00:30:03,388 --> 00:30:06,099
உன்னால் எப்படி அங்கு நிற்க முடிகிறது?

376
00:30:06,182 --> 00:30:08,101
நீ எதுவும் சொல்ல மாட்டாயா?

377
00:30:08,184 --> 00:30:11,021
போட்டியில் வெல்வது பற்றியாவது
அக்கறையாக இருந்தாயா?

378
00:30:11,104 --> 00:30:13,440
இந்தப் போட்டிதான் எனக்கு எல்லாமாக இருந்தது.

379
00:30:13,523 --> 00:30:16,943
என்னால் ஜெயிக்க முடிந்திருந்தால், அது...

380
00:30:18,111 --> 00:30:19,571
அது என்ன?

381
00:30:21,615 --> 00:30:25,452
இங்கு நான் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், இந்த ஊரில்
எனக்கு நண்பர்கள் கிடைக்கவும் உதவியாக இருக்கும்.

382
00:30:26,286 --> 00:30:29,372
உங்கள் குழுவில் சேர வேண்டும் என்பதற்காக
உங்களை எல்லாம் ஈர்க்க விரும்பினேன்.

383
00:30:29,456 --> 00:30:32,626
பின்பு ஏன் அந்த வாய்ப்பைத் தூக்கி எறிந்தாய்?

384
00:30:34,085 --> 00:30:36,755
மற்றவர்கள் பாதிக்கப்படுவதை
என்னால் ஏற்க முடியவில்லை.

385
00:30:37,589 --> 00:30:39,799
ஜெயிப்பதைவிடவும்
வேறு சில விஷயங்கள் முக்கியம்.

386
00:30:41,343 --> 00:30:44,804
நீ என்னைக் கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்ததற்கு
வருந்த மாட்டாய் என்று நினைக்கிறேன்.

387
00:30:44,888 --> 00:30:46,723
இல்லவே இல்லை, ஃபிராங்க்ளின்.

388
00:30:47,724 --> 00:30:52,479
உன்னைப் பற்றித் தெரிந்துகொண்டதுதான் இந்த வருடத்தில்
எனக்கு நடந்த மிகச் சிறந்த விஷயம்.

389
00:30:53,980 --> 00:30:56,900
மன்னித்துவிடு,
எப்போதும் புது நண்பர்கள் கிடைப்பது

390
00:30:56,983 --> 00:30:59,194
இவ்வளவு கடினம் என்று நான் உணரவே இல்லை.

391
00:30:59,277 --> 00:31:00,737
அது கடினமானது.

392
00:31:00,820 --> 00:31:03,240
நம்மைப் பற்றி மக்கள் என்ன
நினைப்பார்கள் என்று தெரியாமல் இருப்பது,

393
00:31:03,740 --> 00:31:06,534
நாம் ஏற்றுக்கொள்ளப்படுவோமா என்று
தெரியாமல் இருப்பது,

394
00:31:07,369 --> 00:31:10,997
எனக்கு யாரையும் நன்றாகத் தெரிந்துகொள்ள
நேரமே கிடைப்பதில்லை.

395
00:31:11,081 --> 00:31:13,583
மேலும், யாரும் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள
அக்கறை கொள்வதும் இல்லை.

396
00:31:14,626 --> 00:31:18,588
எனக்கு அக்கறை இருக்கிறது, ஃபிராங்க்ளின்.
நீ என் நண்பன் என்பதில் நான் பெருமையடைகிறேன்.

397
00:31:21,258 --> 00:31:22,968
நாம் ஜெயிக்காவிட்டாலும்,

398
00:31:23,593 --> 00:31:25,679
நாம் முடித்தாவது இருக்கலாம்.

399
00:31:31,685 --> 00:31:34,604
சிலர் வெற்றியாளர்களாகவே பிறக்கிறார்கள்.

400
00:31:34,688 --> 00:31:37,274
பெருமைக்காகச் சொல்லவில்லை...

401
00:31:37,357 --> 00:31:39,943
சார்லி பிரவுனும், அந்தப் புதுச் சிறுவனும்
செய்ததைப் பார்த்தாயா?

402
00:31:40,527 --> 00:31:42,070
அவர்களுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது.

403
00:31:42,153 --> 00:31:43,822
நாம் போய் விசாரிக்க வேண்டுமா?

404
00:31:44,656 --> 00:31:46,324
பாருங்கள், அதோ அவர்கள் வருகிறார்கள்.

405
00:31:46,408 --> 00:31:47,659
என்ன?

406
00:31:57,419 --> 00:31:59,129
-அங்கே பார்.
-ஒரு நிமிடம் பொறு.

407
00:31:59,212 --> 00:32:01,548
-என்ன நடக்கிறது?
-எல்லோரும் எங்கே போறீங்க?

408
00:32:01,631 --> 00:32:03,717
அனைவரும் எதை வெறித்துப் பார்க்கிறீர்கள்?

409
00:32:03,800 --> 00:32:05,343
நான்தான் வெற்றியாளர்.

410
00:32:11,057 --> 00:32:12,183
ஐயோ.

411
00:32:15,729 --> 00:32:16,730
முயற்சியை விட்டுவிடாதீர்கள்.

412
00:32:18,189 --> 00:32:19,274
உங்களால் முடியும்.

413
00:32:24,738 --> 00:32:27,449
அவர்கள் நமக்காகவா ஆரவாரம் செய்கிறார்கள்,
சார்லி பிரவுன்?

414
00:32:27,532 --> 00:32:28,742
-உங்களால் முடியும்!
-முயற்சியை விடாதீங்க!

415
00:32:28,825 --> 00:32:30,285
-அப்படித்தான், சார்லி பிரவுன்.
-முன்னேறி வா!

416
00:32:30,368 --> 00:32:31,620
-வா!
-ஃபிராங்க்ளின்!

417
00:32:31,703 --> 00:32:33,288
நமக்குத்தான் என்று நினைக்கிறேன்,
ஃபிராங்க்ளின்.

418
00:32:39,711 --> 00:32:41,630
கிட்டத்தட்ட நெருங்கிவிட்டிர்கள்!

419
00:32:45,175 --> 00:32:46,843
இன்னும் கொஞ்சம்தான்.

420
00:32:55,435 --> 00:32:56,853
நீ சாதித்துவிட்டாய், ஃபிராங்க்ளின்.

421
00:32:57,437 --> 00:33:00,398
இல்லை, நாம் சாதித்துவிட்டோம், சார்லி பிரவுன்.

422
00:33:00,482 --> 00:33:03,860
நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. முதலில்
முடிப்பதற்கு நாம் வெற்றி பெறத் தேவையில்லை.

423
00:33:07,239 --> 00:33:10,408
-நீங்கள் அங்குச் செய்ததை நாங்கள் அனைவரும் பார்த்தோம்.
-ஆமாம்.

424
00:33:10,492 --> 00:33:12,244
அது ஃபிராங்க்ளினின் யோசனைதான்.

425
00:33:12,327 --> 00:33:13,787
அவன் அப்படிச் செய்யவில்லை என்றால்,

426
00:33:13,870 --> 00:33:16,665
உங்கள் அனைவரின் மீதும் இப்போது
ஐஸ்கிரீம் கொட்டி இருக்கும்.

427
00:33:17,290 --> 00:33:20,293
-சூப்பர், ஃபிராங்க்ளின்.
-அருமை, சார்லி பிரவுன்.

428
00:33:20,377 --> 00:33:21,545
ஹேய்!

429
00:33:22,754 --> 00:33:25,465
நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

430
00:33:26,550 --> 00:33:29,469
நீ செய்தது ஒரு தைரியமான விஷயம்,
ஃபிராங்க்ளின்.

431
00:33:29,553 --> 00:33:31,638
நீதான் இந்த நாளைக் காப்பாற்றியிருக்கிறாய்.

432
00:33:32,138 --> 00:33:34,975
இன்று நானே பீட்ஸா வாங்கித் தருகிறேன்.

433
00:33:35,058 --> 00:33:36,810
நாம் என்று சொன்னேன்.

434
00:33:42,816 --> 00:33:44,234
நான் அங்கு வருகிறேன்.

435
00:33:44,317 --> 00:33:46,236
என் பெற்றோர் என்னை அழைக்கிறார்கள்.

436
00:33:47,070 --> 00:33:48,196
இன்றிரவு உன்னைச் சந்திக்கிறேன்.

437
00:33:49,114 --> 00:33:52,158
நானும் என் நண்பன் சார்லி பிரவுனும்
என்ன செய்தோம் என்று பார்த்தீர்களா?

438
00:34:19,102 --> 00:34:21,938
ஆமாம், ஆமாம், அங்கு எங்களைக் கொண்டு சேர்த்தாய்.

439
00:34:22,021 --> 00:34:23,106
ஆனால், நாங்கள் விலகிச் சென்றோம்,

440
00:34:23,189 --> 00:34:25,650
உங்களைக் கடந்து சென்றோம்,
உங்களை முந்திச் சென்றோம்.

441
00:34:25,733 --> 00:34:27,777
எல்லாம் அடுத்த கொண்டைஊசி வளைவைத்
தயார் செய்யத்தான்.

442
00:34:28,486 --> 00:34:30,572
இது எல்லாமே எங்கள் திட்டம்தான்.

443
00:34:35,327 --> 00:34:38,663
நீ வந்ததில் எனக்கு
ரொம்ப சந்தோஷம், ஃபிராங்க்ளின்

444
00:34:38,747 --> 00:34:41,041
ஹே, சார்லி பிரவுன். தாமதத்திற்கு மன்னித்துவிடு.

445
00:34:41,124 --> 00:34:43,876
என் பெற்றோர் ஒரு முக்கியமான செய்தியை
என்னிடம் சொல்லவேண்டி இருந்தது.

446
00:34:43,960 --> 00:34:47,172
என் அப்பா புது வேலையில்
சேரவிருக்கிறார். அப்படியானால்...

447
00:34:47,255 --> 00:34:48,882
நீ கிளம்பப் போகிறாய்.

448
00:34:50,675 --> 00:34:53,678
என்ன? கிளம்புகிறானா? ஃபிராங்க்ளினா?
அப்படியல்ல என்று சொல்.

449
00:34:53,762 --> 00:34:57,307
இல்லை, இல்லை. வேலையே இந்த ஊரில்தான்.

450
00:34:57,390 --> 00:34:59,976
எங்களுக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சிருக்கு.
நாங்கள் இங்கேயே தங்குகிறோம்.

451
00:35:09,486 --> 00:35:11,321
ஒரு துண்டு எடுத்துக்கொள், ஃபிராங்க்ளின்.

452
00:35:11,404 --> 00:35:12,405
நன்றி, பிக்பென்.

453
00:35:14,032 --> 00:35:16,243
கோல்ட்ரேன். நல்ல தேர்வு.

454
00:35:21,414 --> 00:35:24,751
ஹே, ஃபிராங்க்ளின்.
நாளை பந்து மைதானத்தில் விளையாடுகிறோம்.

455
00:35:24,834 --> 00:35:27,087
-நீயும் வருகிறாயா?
-வருகிறேன்.

456
00:35:29,839 --> 00:35:32,092
சார்லி பிரவுன் போன்ற
ஒரு கூட்டாளியோடு கலந்துக்கொண்ட

457
00:35:32,175 --> 00:35:34,678
இந்தப் போட்டி, நட்பைப் பற்றி ஓரிரு விஷயம்
எனக்குச் சொல்லிக் கொடுத்தது.

458
00:35:34,761 --> 00:35:36,096
அவர்கள் பரிபூரணமானவர்கள் அல்ல.

459
00:35:36,596 --> 00:35:38,348
நானும் பரிபூரணமானவன் அல்ல.

460
00:35:38,932 --> 00:35:43,144
ஆனால், இது போன்ற கடுமையான ஆட்டங்களை
நண்பர்களோடுச் சேர்ந்து ஜெயிக்கலாம்.

461
00:35:43,895 --> 00:35:47,274
ஹே, ஃபிராங்க்ளின். உனக்கு
ஒரு இருக்கை பிடித்து வைத்துள்ளோம்.

462
00:35:47,941 --> 00:35:49,025
வந்து எங்களுடன் சேர்ந்துகொள்.

463
00:35:50,402 --> 00:35:52,779
நட்பு என்பது இதுதான் அல்லவா?

464
00:36:10,046 --> 00:36:12,048
ஆர்ம்ஸ்ட்ராங்

465
00:36:33,320 --> 00:36:36,948
இனி அந்தப் பெட்டியைக் கொண்டே வாழத்தேவையில்லை
என்பது உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

466
00:36:37,949 --> 00:36:40,035
உண்மைதான், சார்லி பிரவுன்.

467
00:36:47,792 --> 00:36:52,297
“உன்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருந்தால், நீ உன்
வீட்டைக் கண்டுபிடித்துவிட்டாய் என உனக்கே புரியும்.”

468
00:36:52,380 --> 00:36:54,716
உன் தாத்தா எப்போதும் இப்படிச் சொல்வாரா?

469
00:36:54,799 --> 00:36:57,552
இல்லை, அது நான் சொன்னது, சார்லி பிரவுன்.

470
00:37:16,196 --> 00:37:19,074
பூங்காவில் ஒருநாள்
ஜாலியாக இருக்க அனைவரும் தயாரா?

471
00:37:19,658 --> 00:37:20,825
கெட்டியாகப் பிடித்துகொள்ளுங்கள்.

472
00:37:25,538 --> 00:37:27,916
அண்ணா!

473
00:37:30,961 --> 00:37:32,420
சார்லஸ் எம். ஷுல்ஸ் எழுதிய

474
00:37:32,504 --> 00:37:33,505
பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில்

475
00:38:47,954 --> 00:38:49,956
தமிழாக்கம்
மேனகா மணிகண்டன்

476
00:38:59,049 --> 00:39:01,009
நன்றி, ஸ்பார்க்கி.
என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.

